Coimbatore, Madurai, Trichy News Updates: ராணிப்பேட்டையில், 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - இருவர் கைது

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Ration rice seized

இளைஞர்கள் படுகொலை: மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவன் ஹரிசக்தி மற்றும் இளைஞர் ஹரிஷ் ஆகிய இருவரும் சராயா வியாபாரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

  • Feb 15, 2025 21:08 IST

    5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

    ராணிப்பேட்டை, வானாபாடி பகுதியில் இருந்து
    ஆந்திராவுக்கு லாரியில் கடத்த முயன்ற 5 டன்
    ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர்.



  • Feb 15, 2025 18:39 IST

    பட்ஜெட் - முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? அண்ணாமலை கேள்வி

    பட்ஜெட் குறித்து முதலமைச்சர் வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? நாங்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அவர்களுடைய நிதி அமைச்சரிடம் சொல்லி வெள்ளை அறிக்கை வெளியிட தயாரா? காங்கிரஸ் ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது, பா.ஜ.க ஆட்சியில் எவ்வளவு ஒதுக்கப்பட்டது, அதேபோல அவர்களுடன் மேடை போட்டு விவாதிப்பதற்கு பா.ஜ.க தயாராக உள்ளது என கோவையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்



  • Advertisment
  • Feb 15, 2025 17:57 IST

    உடலில் டேப் போட்டு ஒட்டி மது பாட்டில்கள் கடத்தல்

    புதுச்சேரியில் இருந்து நூதன முறையில் 120 மதுபாட்டில்களை கடத்திவந்து விற்பனை செய்த விழுப்புரத்தை சேர்ந்த நாகமணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்



  • Feb 15, 2025 17:17 IST

    இருவர் படுகொலை - உறவினர்கள் மீண்டும் பேராட்டம்

    மயிலாடுதுறை அருகே இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உறவினர்கள் மீண்டும் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்



  • Advertisment
    Advertisements
  • Feb 15, 2025 16:26 IST

    120 மது பாட்டில்களை உடலில் கட்டி கடத்திய நபர் கைது

    120 மது பாட்டில்களை உடலின் பல்வேறு பகுதிகளில் டேப்பால் ஒட்டி புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு கடத்திய நாகமணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மதுபாட்டில்களை பறிமுதல் செய்த செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.



  • Feb 15, 2025 15:18 IST

    மருங்கூர் அகழ்வாராய்ச்சியில் சங்கு பொருள் கண்டுபிடிப்பு

    கடலூர் மாவட்டம் மருங்கூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், 7 செ.மீ நீளம் உள்ள சங்கினால் ஆன பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுவரை செம்பு, இரும்பு போன்ற உலோக பொருட்கள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், தற்போது பாதி உடைந்த சங்கு பொருட்கள் கிடைத்துள்ளது. இதனால் பண்டை காலத்தில் சங்கு அறுக்கும் தொழிலும் நடைபெற்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.



  • Feb 15, 2025 15:02 IST

    ஆம்பூர் 25 சவரன் நகை திருட்டு 

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பத்தில் ராமமூர்த்தி என்பவர் வீட்டில் 25 சவரன் நகை, ரூ.2 லட்சம் திருடப்பட்டுள்ளது. ராமமூர்த்தி வெளியே சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டினர்.



  • Feb 15, 2025 15:01 IST

    மருங்கூர் அகழாய்வு -  சங்கினால் ஆன பொருள் கண்டெடுப்பு 

    பண்ருட்டி அடுத்த மருங்கூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் சங்கினால் ஆன பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் . 360 செ.மீ. ஆழத்தில் 7 செ.மீ. நீளம் கொண்ட சங்கினால் ஆன பொருள் பாதி நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அகழாய்வில் இதுவரை இரும்பு பொருட்கள், காசுகள், அஞ்சனக் கோல் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதிய கண்டுபிடிப்பின் மூலம் மருங்கூரில் சங்கு அறுக்கும் தொழில் நடைபெற்றுள்ளது தெரிகிறது என தெரிவித்தார்.



  • Feb 15, 2025 14:27 IST

    மாணவிகளுக்கு பாலியல் சீண்டல்

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் கொடுத்த  4 சிறார்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  



  • Feb 15, 2025 13:07 IST

    மாணவிக்கு பாலியல் சீண்டல்; மீனவர்கள் போராட்டம்

    புதுச்சேரியில் பள்ளி மாணவிக்கு பாலியல் சீண்டல் கொடுத்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் புதுச்சேரி முழுவதும் போராட்டம் நடத்துவோம். பள்ளி நிர்வாகத்தினர் மீது போக்சோ பிரிவின்கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று மீனவ கிராம மக்கள் எஸ்பி முன்னிலையில் 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தீர்மானம் நிறைவேற்றி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். 



  • Feb 15, 2025 12:47 IST

    "மயிலாடுதுறை கொலை - விரிவான விசாரணை தேவை"

    மயிலாடுதுறை இரட்டைக்கொலை குறித்து விரிவாக விசாரித்து, காரணமானவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை தேவை. வழக்கை விசாரிப்பதற்கு முன்பே காவல் துறை தீர்ப்பை எழுதுவதா? வாய்த் தகராறு, முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததாக பத்திரிகை செய்தி வெளியிடுகிறது காவல் துறை என்று  எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 



  • Feb 15, 2025 12:15 IST

    மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம்

    தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுக நுழைவு வாயில் முன்பு சாலை மறியல்லில் ஈடுபட்டுள்ளனர். ஆழ்கடலில் தங்கி மீன் பிடிக்க அனுமதி அளிக்க கோரி, விசைப்படகு உரிமையாளர்கள், விசைப்படகு மீன்பிடி தொழிலாளர்கள் 6வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 



  • Feb 15, 2025 11:24 IST

    கேரட் கலப்படம் - 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணை

    ஊட்டி கேரட்டுடன் கர்நாடகாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கேரட்டை கலப்படம் செய்த விவகாரத்தில் தோட்டக்கலை இணை இயக்குநர் தலைமையில் 5 பேர் கொண்ட விசாரணை குழு அமைத்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார். விரிவான விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டுள்ளார். 



  • Feb 15, 2025 11:16 IST

    பேருந்துக்காக காத்திருந்தவர்களை திடீரென கடித்த தெரு நாய்

    ராணிப்பேட்டை: சோளிங்கர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த 6 பேரை திடீரென கடித்து குதறிய தெரு நாய்.
    காயமடைந்த 6 பேர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெரு நாயை பிடிக்க நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



  • Feb 15, 2025 10:38 IST

    மதுரையில் பிரியாணி திருவிழா

    மதுரை வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ள முனியாண்டி சாமி கோயிலில் ஆண்டுதோறும் கூடும் முனியாண்டி விலாஸ் உணவக உரிமையாளர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர். நேர்த்திக்கடனாக வழங்கப்பட்ட ஆடு, கோழி உள்ளிட்டவற்றை கொண்டு பிரியாணி சமைத்து கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு வழங்கி மகிழ்ந்தனர்.



  • Feb 15, 2025 10:38 IST

    மயிலாடுதுறை இரட்டை கொலை விவகாரம்

    மயிலாடுதுறை இரட்டை கொலை வழக்கில் இதுவரை 3 பேர் கைது. முட்டம் கிராமத்தில் 2 பேர் கொல்லப்பட்டதற்கு முன்விரோதமே காரணம் என காவல்துறை விளக்கம்! கொலை செய்யப்பட்ட இளைஞர்களின் உறவினர்கள், சாராய வியாபாரிகள் ராஜ்குமார், மூவேந்தன் வீடுகளுக்கு தீ வைத்ததால் பரபரப்பு.



  • Feb 15, 2025 10:37 IST

    சாராய விற்பனை அல்ல- முன்விரோதம்தான்: காவல்துறை

    மயிலாடுதுறையில் இருவர் உயிரிழந்த விவகாரத்திற்கு சாராய விற்பனை காரணம் அல்ல, ஒரே தெரிவில் வசித்த இளைஞர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தகராறே காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.



  • Feb 15, 2025 10:08 IST

    இருண்ட காலத்தைவிட மோசமான நிலை - அண்ணாமலை

    மயிலாடுதுறையில் சாராய வியாபாரிகளால் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்டது அதிரிச்சியளிக்கிறது. தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக் கொண்டிருக்கிறது. கள்ளச்சாராயம் விற்பனை அந்தந்த பகுதி காவல் துறையினருக்கு தெரியாமலா இருக்கும். துருப்பிடித்த இரும்புக்கையை வைத்து தன்னைத்தானே புகழ்ந்து ஷூட்டிங் நடத்துகிறார் முதலமைச்சர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார்.



  • Feb 15, 2025 10:04 IST

    1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

    புதுச்சேரியில் ஒன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை பிடித்து தர்மாடி கொடுத்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். 



  • Feb 15, 2025 09:20 IST

    மாணவிக்கு பாலியல் தொல்லை - 3 மாணவர்கள் மீது போக்ஸோ!

    சேலம் ஆத்தூர் அருகே மல்லியகரையில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதே பள்ளியின் 3 மாணவர்கள் போக்ஸோவில் கைது செய்யப்பட்டு சிறார் கூர்நோக்கு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்.



  • Feb 15, 2025 09:19 IST

    காதலர் தின எதிர்ப்பு - இந்து முன்னணியினர் கைது!

    காதலர் தினத்தையொட்டி சிவகங்கையில் பேக்கரி கடையில் அறிவித்த சலுகையை எதிர்த்து கடைக்கு வருபவர்களுக்கு திருமணம் செய்வோம் என தாலியுடன் வந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் அக்னி பாலா, சுரேஷ், மாரியப்பன், தினேஷ் ராஜா, கார்த்திகேயன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



  • Feb 15, 2025 09:17 IST

    சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பெருந்துறை பகுதியில் வட மாநில நபர்களுடன் சட்ட விரோதமாக குடியேறிய ஏராளமான வங்கதேசத்தினர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 



  • Feb 15, 2025 09:14 IST

    சாராய விற்பனையை தட்டிக்கேட்ட இருவர் படுகொலை

    மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய விற்பனையை தட்டிக்கேட்ட கல்லூரி மாணவன் ஹரிசக்தி மற்றும் இளைஞர் ஹரிஷ் ஆகிய இருவரும் சராயா வியாபாரியால் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.



Tamil News Live Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: