Coimbatore, Madurai, Trichy News Updates: திருச்சியில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
trichy plastic fire

சிவராத்திரி கொண்டாட்டம்: மகா சிவராத்திரியையொட்டி பல்வேறு சிவன் ஆலயங்களில் இரவு முழுவது பூஜைகள் வேண்டுதல்கள் என கோலகலமாக விழா நடைபெற்றது.

  • Feb 28, 2025 00:08 IST

    சாலை விரிவாக்க பணிக்காக 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம், அகற்றம்

    ஈரோடு மாவட்டம் வெள்ளவேடு அருகே, சாலை விரிவாக்க பணிக்காக 150 ஆண்டுகள் பழமையான ஆலமரம், அகற்றப்பட்டுள்ளது. இதை பார்த்த பல ஆண்டுகளாக இந்த மரத்தின் அடியில் கடை நடத்தி வந்த பெண்மணி துக்கம் தாங்காமல் கண்ணீர்விட்டு அழுதுள்ளார், 



  • Feb 27, 2025 18:41 IST

    திருச்சியில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ; பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்

    திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடோன்களில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது



  • Advertisment
  • Feb 27, 2025 17:50 IST

    திண்டிவனத்தில் ராமதாஸ் வீடு முன் பா.ம.க- வி.சி.க.,வினர் மோதல்

    கோவிலில் கொடி கட்டி ஆடிய விவகாரத்தில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வீடு முன் பா.ம.க- வி.சி.க.,வினர் இடையே மோதல் ஏற்பட்டது



  • Feb 27, 2025 15:49 IST

    கூடலூரில் சிறுத்தை மீது மோதிய இருசக்கர வாகனம்

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் மரப்பாலம் பகுதியில் திடீரென சாலையைக் கடந்த சிறுத்தை மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில், மயங்கிய நிலையில் கிடந்த சிறுத்தை சிறிது நேரம் கழித்து எழுந்து வனப்பகுதிக்குள் சென்றது. இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த ராஜேஸ் என்பவர் மருத்துவமனையில் அனுமதி. சிறுத்தையை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • Feb 27, 2025 15:31 IST

    கன்னியாகுமரி மாவட்டத்தில் 490 திருக்கோயில்களுக்கு அரசு மானியம் ரூ.13 கோடி; காசோலை வழங்கிய ஸ்டாலின்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக உயர்த்தப்பட்ட அரசு மானியம் ₹13 கோடிக்கான காசோலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அதை சுசீந்திரம் - கன்னியாகுமரி தேவஸ்தான திருக்கோயில்கள் அறங்காவலர் குழுத்தலைவர் இராமகிருஷ்ணன் காசோலையை பெற்றார்.



  • Feb 27, 2025 15:10 IST

    பள்ளி மாணவனை தாக்கிய சக மாணவர்கள்

    குமரி மாவட்டத்தில் போதைப் பொருள் பயன்படுத்துவதை தலைமை ஆசிரியரிடம் கூறியதால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் அந்த மாணவனை தாக்கியுள்ளனர். படுகாயமடைந்த மாணவர் பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

     



  • Feb 27, 2025 14:33 IST

    27 ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை 

    இலங்கை கடற்படையால் டிசம்பர் 24 மற்றும் ஜனவரி 26 ஆகிய தினங்களில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 27 பேர் விடுவிக்கப்பட்டு, இன்று சென்னை வந்தடைந்தனர். இந்த மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்த நிலையில், இந்திய அரசின் முயற்சியால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். சென்னை வந்தடைந்த மீனவர்களை அதிகாரிகள் வரவேற்றனர். பின்னர், அவர்கள் சொந்த ஊரான ராமேஸ்வரத்திற்குத் திரும்பும் வகையில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    மீனவர்களின் விடுதலைக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



  • Feb 27, 2025 14:12 IST

    செல்லப்பிராணி, வீட்டு விலங்குகளுக்கு புதிய கட்டணம் – மதுரை மக்கள் அதிர்ச்சி

    மதுரை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் வீடுகளில் விலங்குகள் மற்றும் பறவைகளை வளர்ப்பதற்கு கட்டணம் விதிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கமைய, மாடு வளர்க்க ரூ.500, குதிரை வளர்க்க ரூ.750, ஆடு வளர்க்க ரூ.50, பன்றி வளர்க்க ரூ.500, நாய் மற்றும் பூனை வளர்க்க ரூ.750 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த புதிய கட்டண நிர்ணயம் செல்லப்பிராணி மற்றும் வீட்டு விலங்கு வளர்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     



  • Feb 27, 2025 13:29 IST

    10 மாவட்டங்களில் நாளை கனமழை - வானிலை ஆய்வு மையம்

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தின் குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. 

    புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, மதுரை, குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • Feb 27, 2025 13:15 IST

    நாளையும், நாளை மறுநாளும் கனமழை எச்சரிக்கை

    "புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, மதுரையில் நாளை கனமழை. குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை எச்சரிக்கை" என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 



  • Feb 27, 2025 13:14 IST

    கோடநாடு கொலை வழக்கு - 3 பேரிடம் விசாரணை

    கோடநாடு எஸ்டேட் கணினி பணியாளர் தினேஷ் கொலை வழக்கில் 3 பேரிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. அதிமுக பிரமுகர் சங்கர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் கபீர், மின்வாரியத்தில் பணியாற்றிய சுரேஷிடம் விசாரணை; 3 பேரையும் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தப்படுகிறது. 



  • Feb 27, 2025 12:45 IST

    “மூட உத்தரவிட்டும் டாஸ்மாக் கடையை மூடாதது ஏன்?”

    தஞ்சை - பட்டுக்கோட்டை பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை உடனே மூட மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் மாதமே ஆட்சியர் உத்தரவிட்டும், தற்போது வரை டாஸ்மாக் கடை திறந்திருப்பது ஏன்? என்று மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வியை எழுப்பியுள்ளது. 



  • Feb 27, 2025 12:25 IST

    பள்ளி மாணவன் மர்ம மரணம் - திடீர் திருப்பம்

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பள்ளி கழிவறையில் மாணவன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் வந்துள்ளது. சக மாணவன் தாக்கியதில் தான் மாணவன் உயிரிழந்ததாக தகவல். தகாதவார்த்தையால் திட்டி சண்டையிட்டதால் தாக்கியதாக தகவல் வெளிவந்துள்ளதால் சென்னை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். 



  • Feb 27, 2025 11:44 IST

    பரந்தூரில் விமானநிலையம் - டெல்லியில் ஆலோசனை

    பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அடுத்தவாரம் டெல்லியில் சிறப்புக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் கூறியுள்ளார். பரந்தூர் விமான நிலையத்திற்கான தள அனுமதி (சைட் கிளியரன்ஸ்) வழங்கப்பட்டுள்ளது; சென்னை விமான நிலையத்தை மேம்படுத்த தொடர்ந்து நடவடிக்கை மற்றும் கோவை விமான நிலையம் அதிக பயணிகளை கையாள்வதால் அதையும் விரிவாக்க திட்டம் என்று மத்திய இணை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். 



  • Feb 27, 2025 11:15 IST

    டெல்டா மாவட்டங்களில் மார்ச் 1 வரை கனமழை

    டெல்டா மாவட்டங்களில் மார்ச் 1 வரை கனமழைக்கு வாய்ப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் வருவாய் நிர்வாக ஆணையர் சாய்குமார். மாவட்டத்தின் அனைத்து தறைகளையும் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை செய்துள்ளார். நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை பாதுகாப்பான இடத்தில் வைக்க அறிவுறுத்தியுள்ளார். 



  • Feb 27, 2025 10:49 IST

    மாணவிக்கு பாலியல் தொல்லை- அரசு பள்ளி ஆசிரியர் கைது

    அரியலூர் அருகே 6 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசுப் பள்ளி தமிழ் ஆசிரியர் சுரேஷ் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மாணவிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.



  • Feb 27, 2025 10:27 IST

    சாலையில் கிடந்த செல்போனை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவர்களுக்கு பாராட்டு!

    திருவாரூர் கூத்தாநல்லூர் அருகே சாலையில் கிடந்த ஸ்மார்ட்போனை பத்திரமாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த 5 ஆம் வகுப்பு மாணவர்கள் விகாஷ், கோபிநாத் ஆகியோருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.  



  • Feb 27, 2025 10:24 IST

    மதுரையில் மாமன்ற கூட்டம் உத்தரவு

    மதுரையில் வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் என மாமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டதையடுத்து மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



  • Feb 27, 2025 09:52 IST

    சாலையில் உலா வந்த கரடி

    நெல்லையில் மறுகால் குறிச்சியில் இருந்து நாங்குநேரிக்கு செல்லும் சாலையில் ஒற்றை கரடி ஒன்று உலா வந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படம் பிடித்துள்ளனர்.



  • Feb 27, 2025 09:11 IST

    மின்கம்பியில் அலங்கார ஊர்தி உரசியதில் ஐடி ஊழியர் உயிரிழப்பு

    திருவண்ணாமலையில் சிவராத்திரியை ஒட்டி நடைபெற்ற சேத்துப்பட்டு அங்காளம்மன் சுவாமி வீதி உலாவின்போது மின்கம்பியில் அலங்கார ஊர்தி உரசியதில் ஐடி ஊழியர் கிசோர் என்பவர் உயிரிழந்தார். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Feb 27, 2025 09:08 IST

    ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணி

    தமிழ்நாட்டில் ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரை ஆழ்கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிக்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.



  • Feb 27, 2025 09:08 IST

    கோவையில் தங்கும் விடுதிகளில் போலீஸ் சோதனை

    கோவை சரவணம்பட்டி அருகே ஆண்கள் தங்கும் விடுதிகளில் மாநகர காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 12 விடுதிகளில் உதவி ஆணையர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். விடுதிகளில் போதிப் பொருட்கள் புழக்கம், வெளி ஆட்கள் குறித்து காவல் துறை விசாரணை மேற்கொண்டனர்.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: