/indian-express-tamil/media/media_files/Rbg9pFzAb9FkeZjqt6l9.jpg)
அணை நீர் நிலவரம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 252 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 109.65 ஆகவும், நீர் இருப்பு 77.914 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
-
Mar 02, 2025 00:02 IST
ஆலய விழாவில் மின்சாரம் தாக்கி 4 பேர் மரணம்: முதல்வர் நிவாரணம் அறிவிப்பு
கன்னியாகுமரியில் புனித அந்தோனியார் ஆலய விழாவின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ5 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
Mar 01, 2025 20:41 IST
ஆலய திருவிழாவுக்கு அலங்காரம் செய்தபோது மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் இனையம்புத்தன்துறை கிராமத்தில் மின்சாரம் தாக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தனர். ஆலய திருவிழாவுக்கு அலங்கார வேலையில் ஈடுபட்டிருந்த போது, இரும்பு ஏணி மின் கம்பியில் உரசியதால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Mar 01, 2025 19:06 IST
ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கண்கானிப்பு கேமரா
கோவை: ஓணாம்பாளையம் பகுதியில் ஆடுகளை வேட்டையாடிய சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்த வனத்துறையினர், சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமாராவும் பொருத்தி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
-
Mar 01, 2025 18:47 IST
போராட்டம் தொடரும்: ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவிப்பு
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்தி வரும் உள்ளிருப்பு மற்றும் காத்திருப்புப் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்கிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களும், படகுகளும் விடுதலையாகும் வரை போராட்டம் தொடரும் என மீனவர்கள் அறிவிப்பு.
-
Mar 01, 2025 17:12 IST
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கைது
திருவள்ளூர் மாவட்டம், கரடிபுத்தூர் பகுதியில் குவாரி அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக திரைப்பட இயக்குநர் கோபி நயினாரும் இதில் கலந்து கொண்டார். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்தனர்.
-
Mar 01, 2025 16:08 IST
மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்
கோவை மாவட்டம், தாராபுரத்தில் சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த தங்கமணி என்ற பெண்ணின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவரது குடும்பத்தினரின் ஒப்புதலின் பேரில் கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தானமாக அளிக்கப்பட்டன.
-
Mar 01, 2025 15:32 IST
செய்தி தாள்களில் உணவு பார்சல்: சிவகங்கையில் கடைக்கு அபராதம்
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலையோர கடைகளில் செய்தி தாள்களில் உணவு பார்சல் வழங்கப்படுவதாக ஆட்சியருக்கு வந்த புகாரை அடுத்து ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு துறையினர் கடைகளுக்கு அபராதம் விதித்தனர். செய்தித்தாளில் உள்ள எழுத்துக்களை அச்சேற்ற பயன்படுத்தப்படும் மையால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
-
Mar 01, 2025 15:26 IST
திருச்சி விமான நிலையத்தில் கஞ்சா பறிமுதல்
திருச்சி: பாங்காங்கில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 1663 கிராம் எடை கொண்ட கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Mar 01, 2025 14:35 IST
கிருஷ்ணகிரி: எருது விடும் விழாவில் - முதியவர் பலி
கிருஷ்ணகிரி அருகே வேப்பனஹல்லி பகுதியில் அனுமதியின்றி நடந்த எருது விடும் விழாவில் காளை முட்டி முதியவர் உயிரிழந்தார். சீறிப்பாய்ந்து வந்த காளை முட்டியதில் அதே ஊரைச் சேர்ந்த இருசன் (65) என்பவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 01, 2025 14:27 IST
கிராவல் குவாரிக்கு எதிர்ப்பு - திருவள்ளூரில் பெரும் பரபரப்பு
திருவள்ளூரில் கிராவல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வி.ஏ.ஓ அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கிராம மக்களிடம், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீசார் பேருந்தில் ஏற்றிய நிலையில், பேருந்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
-
Mar 01, 2025 13:56 IST
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு
குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Mar 01, 2025 12:44 IST
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்
கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஓணாப்பாளையத்தில் உள்ள தோட்டத்தில் புகுந்து 4 ஆடுகளை அடித்துக்கொன்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளனர்.
-
Mar 01, 2025 12:29 IST
முதல்வர் பிறந்தநாள்... குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் பரிசு
திருவாரூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகளுக்கு தங்கமோதிரங்கள் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. திருத்துறைப்பூண்டி நகர திமுக சார்பில் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் தங்க மோதிரங்களை குழந்தைகளுக்கு அணிவித்தார்
-
Mar 01, 2025 12:28 IST
பள்ளி மாணவர்களுக்கு உண்டியல் பரிசு!
புதுக்கோட்டை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு, சந்தைப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், அப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 'உண்டியல்' வழங்கப்பட்டது.
-
Mar 01, 2025 12:12 IST
"சோளம் விற்று ₹77 லட்சம் வருவாய்?”
அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்றிரவு திருச்சி நோக்கிச் சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இறங்கிய பயணியிடம் இருந்து ₹77 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சோளம் விற்ற பணத்தை எடுத்துவருவதாக பிடிபட்ட பெரம்பலூரைச் சேர்ந்த வினோத் குமார் விசாரணையில் கூறியுள்ளார். ஹவாலா பணமா என வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 01, 2025 11:21 IST
வாங்கிய குளிர்பானத்திற்கு பணம் கேட்டதால் ஆத்திரம்
காரை ஏற்றி கடையை சேதப்படுத்தியுள்ளார் உதவி பேராசிரியர். வாங்கிய குளிர்பானத்திற்கு பணம் கேட்டதால் ஆத்திரம் அடைந்துள்ளார். பிரச்சினையில் ஈடுபட்ட உதவி பேராசிரியர் பாலச்சந்தர் காயம் அடைந்துள்ளார். போலீசார் இதை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 01, 2025 11:10 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
"எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கடலுக்குச் செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது" என்று இலங்கை நீதிமன்றம் ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படுவதால் மீனவர்கள் தங்களது வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.
-
Mar 01, 2025 10:52 IST
குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு
குற்றால அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Mar 01, 2025 10:17 IST
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை மிதமான மழை
சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை மிதமான மழைபெய்தது. கோடையில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
-
Mar 01, 2025 09:58 IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Mar 01, 2025 09:15 IST
அணை நீர் நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 252 கன அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 109.65 ஆகவும், நீர் இருப்பு 77.914 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.