Coimbatore, Madurai, Trichy News Updates: திண்டுக்கலில் மகனை வெட்டி கொன்ற தந்தை கைது

tamil news updates, chennai news updates, today news updates, breaking news updates, today weather update, தமிழ் செய்திகள், இன்றைய முக்கிய செய்திகள், தமிழ் செய்திகள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
father burried son

ரமலான்: தமிழ்நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் ரமலான் நோன்பு தொடங்கியது. பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

  • Mar 02, 2025 09:24 IST

    காலையில் தூத்துகுடி சுற்றுவட்டாரங்களில் மழை

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலான மழை பெய்துவருகிறது.



  • Mar 02, 2025 09:23 IST

    மேட்டூர் அணை நிலவரம்

    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 413 கன அடி அளவில் நீர் வருகை. அணையின் நீர் மட்டம் 109.59 அடியாகவும், நீர் இருப்பு 77.829 டி.எம்.சி. ஆகவும் உள்ளது குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றம்.



  • Advertisment
  • Mar 02, 2025 09:23 IST

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம்

    பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழா கொடியேற்றம் தொடங்கியது. மேற்கு வங்க மாநில ஆளுநர் ஆனந்தபோஸ் பங்கேற்ற்னர். வரும் 11ம் தேதி திருவிழாவை ஒட்டி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 02, 2025 09:22 IST

    மகனை வெட்டிகொன்ற தந்தை கைது

    திண்டுக்கல் மாவட்டம் காவிரிசெட்டிபட்டியில் பந்தய சேவலை மாற்று இடத்தில் கட்டியது தொடர்பான பிரச்சனையில் மகனை வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Mar 02, 2025 09:21 IST

    7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

    கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Mar 02, 2025 09:20 IST

    பயிர்கள் சேதம் - இழப்பீடு வழங்க நடவடிக்கை

    திருவாரூரில் 3 நாட்கள் பெய்த கனமழையால் 2000 ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்படைந்தது. உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 



  • Mar 02, 2025 09:19 IST

    ரமலான் நோன்பு தொடக்கம்

    தமிழ்நாடு முழுவது இன்று ரமலான் நோன்பு தொடங்கியது. அதிகாலயிலேயே பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.



news updates Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: