/indian-express-tamil/media/media_files/2025/03/08/EDHeYQqT8dPWdMRgnVa7.jpg)
மணிமுத்தாறு அருவி: நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 12 நாட்களுக்கு பின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்.
-
Mar 08, 2025 20:39 IST
ராணிப்பேட்டையில் பா.ஜ.க நிர்வாகி வெட்டிப் படுகொலை
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே பா.ஜ.க நிர்வாகி சீனு (எ) கிருஷ்ணகுமார் என்பவர் இன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இவர் மீது 4 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் கூறும் நிலையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
Mar 08, 2025 18:54 IST
ஈரோடு, கரூர் பரமத்தி ஆகிய பகுதிகளில் இன்று சதம் அடித்த வெயில்
தமிழ்நாட்டில் ஈரோடு மற்றும் கரூர் பரமத்தி ஆகிய பகுதிகளில் இன்று வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக, ஈரோட்டில் 100.76 °F, கரூர் பரமத்தியில் 100.4 °F வெயில் பதிவாகியுள்ளது.
-
Mar 08, 2025 16:39 IST
மாசிமக தேர்த்திருவிழா: வேதாரண்யம் பகுதிக்கு 10-ந் தேதி உள்ளூர் விடுமுறை
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வர் கோயில் மாசிமக தேர்த்திருவிழாவை ஒட்டி வரும் 10ம் தேதி (திங்கள்) அன்று வேதாரண்யம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
-
Mar 08, 2025 16:00 IST
8 பேரைக் கடித்த வெறிநாய்க்கு வலை!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே இன்று சாலையில் நடந்து சென்ற அதிமுக கவுன்சிலர் உள்பட 8 பேரை கடித்த வெறிநாயை நகராட்சி ஊழியர்கள் தேடி வருகின்றனர். காயமடைந்த அனைவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Mar 08, 2025 15:55 IST
கும்பகோணம் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ98.80 கோடி நிதி ஒதுக்கீடு
2028-ல் கும்பகோணத்தில் நடக்க் உள்ள மகாமக திருவிழாவுக்காக கும்பகோணம் ரயில் நிலையத்தை மேம்படுத்த ரூ98.80 கோடியை ரயில்வே ஒதுக்கியுள்ளதாக திருச்சி கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஜெயந்தி தகவல் தெரிவித்துள்ளார். தஞ்சை - கும்பகோணம் - மயிலாடுதுறை - விழுப்புரம் இடையே இருவழிப்பாதை, நடைமேடைகள் உயர்த்துவது, மேற்கூரைகள் அமைப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.
-
Mar 08, 2025 15:39 IST
கர்ப்பிணி மரணம் - உறவினர்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவாட்டம் சிறுபாடு கிராமத்தை சேர்ந்த ஷாகிரா, பிரசவ வலி ஏற்பட்டு புதுக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள் இல்லாததால் செவிலியர்கள் முறையாக சிகிச்சை அளிக்காத நிலையில், ஷாகிரா உயிரிழந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர். கர்ப்பிணி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து உறவினர்கள் போராட்டத்தில் எடுப்பட்டுள்னர்.
-
Mar 08, 2025 15:24 IST
12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மார்ச் 11-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. குமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளது.
-
Mar 08, 2025 15:07 IST
திண்ணை பிரச்சாரம் - செல்லூர் ராஜூ மீது வழக்கு
மதுரை ஜெய்ஹிந்த்புரம் அரவிந்த் தியேட்டர் முன்பு அ.தி.மு.க அம்மா பேரவை சார்பில் நேற்றிரவு திண்ணை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் ராஜூ உள்ளிட்ட அ.தி.மு.க பிரமுகர்கள் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர். இதில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட 15 பேர் மீது பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட 4 பிரிவில் ஜெய்ஹிந்த்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்
-
Mar 08, 2025 13:46 IST
பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை
ராணிப்பேட்டை அருகே பிரபல ரவுடி சீனிவாசன் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெண்டாடி கிராமத்தில் வயல்வெளியில் மறைந்திருந்து ரவுடியை மர்ம கும்பல் தாக்கியுள்ளது.
சம்பவ இடத்தை டி.எஸ்.பி ஜாஃபர் சித்திக் நேரில் ஆய்வு செய்துள்ளார். 5 தனிப்படை அமைத்து மர்ம கும்பலை தேடும் போலீசார் தேடி வருகிறார்கள். முன்விரோதம் காரணமாக ரவுடி கொலையா? என விசாரணை நடந்து வருகிறது.
-
Mar 08, 2025 13:40 IST
த.வெ.க.வினருக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவினரும் போராட்டம்
நாகை மாவட்டத்தில் தி.மு.க முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி த.வெ.க.வினர் போராட்டம் நடத்திய நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.கவினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். த.வெ.க.வினர் இலவச பட்டா விவகாரத்தில் பெண்ணை மானபங்கப்படுத்தியதாக புகார் தெரிவித்தனர்.
-
Mar 08, 2025 12:31 IST
7 மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
காஞ்சி, ஈரோடு, தருமபுரி, சிவகங்கை, கடலூர், நாகை, ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் 372 கோடியில் 700 படுக்கைகளுடன் புதிய தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும் என்று மகளிர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Mar 08, 2025 12:00 IST
லாரி ஓட்டுனருக்கு தர்மஅடி
திருத்தணி : கே ஜி கண்டிகை பகுதியில் அரசு பேருந்து மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்புக்கு காரணமான டிப்பர் லாரி ஓட்டுநரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. சம்மந்தப்பட்ட டிப்பர் லாரி ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.
-
Mar 08, 2025 11:59 IST
போக்சோ வழக்கு: பாஜக நிர்வாகிக்கு ஜாமின் மறுப்பு
மதுரையில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதியப்பட்ட வழக்கில் பாஜக மாநில நிர்வாகி எம்.எஸ்.ஷாவுக்கு ஜாமின் மறுத்துள்ளது உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
-
Mar 08, 2025 11:39 IST
கல்லால் அடித்து இளைஞர் எரித்து கொலை
நாகர்கோவிலில் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் கல்லால் அடித்து தீ வைத்து எரித்து கொலை. கொலை நடந்த இடத்தில் கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி நேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 08, 2025 11:13 IST
ரூ.80 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு — இழுவைக் கப்பலில் கடத்திச் செல்லப்பட்ட சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல். நடுக்கடலில் கப்பலை மடக்கிய மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள், கப்பலில் இருந்த 9 பேர் உட்பட11 பேரிடம் விசாரணை நடத்துகின்றனர்
-
Mar 08, 2025 11:12 IST
துணை முதல்வரிடம் மனு - டாஸ்மாக் கடை மூடல்
திருவாரூர்: நன்னிலம் அருகே மருதவாஞ்சேரியில் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை மூடல் கள ஆய்விற்காக திருவாரூர் வந்த துணை முதல்வர் உதயநிதியிடம், மருதவாஞ்சேரி டாஸ்மாக்கை மூட அப்பகுதி மாணவர்கள், பொதுமக்கள் மனு அளித்தனர்; துணை முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை
-
Mar 08, 2025 10:58 IST
சாலை விபத்து - போலீசார் விசாரணை
புதுக்கோட்டை அருகே 3 வாகனங்கள் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு. நமண சமுத்திரம் அருகே நடந்த கோர விபத்தில் படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரில் வந்தவர்கள் எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து சடலக்கலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 08, 2025 10:28 IST
மகளிர் தினம் - மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு!
மகளிர் தினத்தையொட்டி மதுரை மாநகர பெண் காவலர்களுக்கு ஒரு நாள் விடுப்பு வழங்கி பெண் காவல் ஆணையர் சோகநாதன் உத்தரவிட்டுள்ளார்.
-
Mar 08, 2025 10:00 IST
நண்பரின் மகளிடம் அத்துமீறல்
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே வீட்டில் தனியாக இருந்த நண்பரின் மகள் பாலியல் வன்கொடுமை . 16 வயது சிறுமியிடம் அத்துமீறிய கூலி தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
Mar 08, 2025 09:59 IST
கோர விபத்து - 4 பேருக்கு நேர்ந்த சோகம்
திருத்தணியில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் தலைமறைவாக இருந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை அரங்கேறிய விபத்தில் 4 பேர் பலி, 29 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Mar 08, 2025 09:36 IST
மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
நெல்லை மணிமுத்தாறு அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 12 நாட்களுக்கு பின் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவியில் நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.