/indian-express-tamil/media/media_files/OgaXKKyM7pmniR7Tgc7b.jpg)
அணை நிலவரம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 251 கன அடியாக குறைந்தது. அணையின் நீர் மட்டம் 109.15 அடியாகவும், நீர் இருப்பு 77.208 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
-
Mar 10, 2025 23:14 IST
எங்களது சந்திப்பு அனைத்தும் கலந்தது - ஒ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்துடன் வி.கே. சசிகலா சந்திப்பு
தஞ்சாவூர், ஒரத்தநாட்டில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய வி.கே. சசிகலா: “எங்களது சந்திப்பு அனைத்தும் கலந்தது; அனைவரும் ஒன்றிணைய வாய்ப்பில்லை என்பது ஒருவர் முடிவு செய்யும் விஷயமில்லை; அடிமட்ட தொண்டர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதுவே கட்சியின் விதிப்படி நடக்கும்” என்று கூறினார்.
-
Mar 10, 2025 23:09 IST
அ.தி.மு.க தொண்டர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் - டி.டி.வி தினகரன் வேண்டுகோள்
தஞ்சாவூர், ஒரத்தநாட்டில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தை தனியே சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்: “எடப்பாடி பழனிசாமியிடம் உள்ள தொண்டர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்; தேர்தலுக்குப் பிறகு, அதிமுக-வை மீட்க வேண்டிய பொறுப்பு எங்களிடம் வரும்; பழனிசாமியிடம் இரட்டை இலை சின்னம் உள்ளதால் அதிமுகவுக்கு மூடுவிழா நடத்திவிடுவார்” என்று கூறினார்.
-
Mar 10, 2025 19:59 IST
ஈரோடு, மதுரையில் வெப்பநிலை பதிவு
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று வெயிலின் தாக்கம் சற்றுக் குறைந்துள்ளது. இன்று அதிகபட்சமாக ஈரோடு மற்றும் மதுரையில் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது.
-
Mar 10, 2025 19:53 IST
நெல்லைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்: கலெக்டர் ஆலோசனை
நெல்லை, தென்காசி, கன்னியாகுமாரி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களுக்கு மார்ச் 11-ம் தேதிக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
-
Mar 10, 2025 19:34 IST
திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு இறந்த தந்தை; உடல் முன் கண்ணீரோடு திருமணம் செய்த மகன்
கிருஷ்ணகிரியில் மனிஷ் (26) என்பவரது திருமணத்துக்கு முந்தைய நாள் இரவு, அவரது தந்தை வரதராஜ் (60) மாரடைப்பில் இறந்துள்ளார்; இருப்பினும் தன் திருமணத்தை காண தந்தை ஆசையாக இருந்தார் என்பதால், அவரது உடல் முன் மகன் மனிஷ் கண்ணீரோடு திருமணம் செய்துள்ளார்.
-
Mar 10, 2025 18:44 IST
கரூரில் கல்லூரி மாணவி கடத்தல் - தனிப்படைகள் அமைப்பு
கரூரில் பட்டப்பகலில் அரசு கல்லூரி மாணவி வேனில் கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், எஸ்.பி. உத்தரவின்பேரில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
-
Mar 10, 2025 17:51 IST
அபராதம் கட்டினால் விடுதலை; காரைக்கால் மீனவர்களுக்கு இலங்கை நீதிபதி உத்தரவு
எல்லை தாண்டி மீன் பிடித்த காரைக்கால் மீனவர்கள் 13 பேர் ரூ.3.25 லட்சம் அபராதம் கட்டினால் விடுதலை செய்யப்படுவார்கள் என இலங்கை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்
-
Mar 10, 2025 16:38 IST
மாசிமகத் திருவிழா - தஞ்சாவூருக்கு நாளை உள்ளூர் விடுமுறை
கும்பகோணம்: கும்பகோணம் மகாமக குளத்தில் நடக்க உள்ள மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு வரும் 12ம் தேதி (புதன்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு அளித்துள்ளார். இதனை ஈடுகட்ட வரும் 29ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார்
-
Mar 10, 2025 15:18 IST
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, கோவையில் தி.மு.க ஆர்ப்பாட்டம்
நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த எம்.பி.க்களை அநாகரிகமானவர்கள் என விமர்சனம் செய்த ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானை கண்டித்து, முன்னாள் எம்.எல்.ஏ கார்த்திக் தலைமையில் கோவை திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
-
Mar 10, 2025 14:30 IST
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டுள்ள பொதுமக்களால் போக்குவரத்து பாதிப்பு
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திரண்டுள்ள இந்திய கம்யூ. கட்சியினர், பொதுமக்கள் இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தல் பொதுமக்களுடன், கூடியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
-
Mar 10, 2025 14:28 IST
திருச்செந்தூர் முருகன் கோவிலில் மாசித்திருவிழா கோலாகலம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வரும் நிலையில், சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்க, அரோகரா... அரோகரா... கோஷமிட்டு பக்தர்கள் பரவசமடைந்தனது. சுவாமி சண்முகருக்கு பச்சை சாத்தி மண்டபத்தில் சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டது.
-
Mar 10, 2025 13:44 IST
அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவனுக்கு தீவிர சிகிச்சை
ஸ்ரீவைகுண்டத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட பள்ளி மாணவன் தேவேந்திரனுக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தலையில் 6 இடத்தில் வெட்டு காயம், கை விரல்கள் துண்டாகியுள்ளது, முதுகு பகுதியிலும் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. மாணவனுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Mar 10, 2025 13:24 IST
ஏடிஎம்மில் தாக்குதல் - போலீசார் விசாரணை
பணம் எடுப்பது போல் வந்து தனியார் வங்கி ஏடிஎம்மில் தாக்குதல் சிசிடிவியில் சிக்கிய இளைஞர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 10, 2025 13:20 IST
மாடியில் இருந்து விழுந்து குழந்தை உயிரிழப்பு
காஞ்சிபுரம்: மணிமங்கலத்தில் 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு 4ஆவது மாடியில் விளையாடிய குழந்தை மாடிப்படியின் கைப்பிடிக் கம்பி வழியாக தவறி விழுந்தது; தவறி விழுந்ததில் படுகாயமடைந்த குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது
-
Mar 10, 2025 13:13 IST
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மழை அப்டேட்!
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (மார்ச் 11) கன முதல் மிக கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் 8 மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு என்று தகவல்
-
Mar 10, 2025 12:44 IST
மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு விடுமுறை அறிவிப்பு
கும்பகோணம் மகாமக குளத்தில் நடக்க உள்ள மாசி மக தீர்த்தவாரியை முன்னிட்டு வரும் 12ம் தேதி (புதன் கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதனை ஈடுகட்ட வரும் 29ம் தேதி சனிக்கிழமை அன்று அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் செயல்படும் எனவும் தெரிவிப்பு
-
Mar 10, 2025 12:11 IST
யானைகளை தடுக்க நவீன வேலி
கோவை, தருமபுரி மாவட்டங்களில் கள ஆய்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பின்படி, யானைகள் - மனித மோதலை தடுக்கும் விதமாக நவீன வேலி அமைக்க 78.5 கோடி ஒதுக்கி அரசாணை தருமபுரி தேன்கனிக்கோட்டை பகுதியில் அமைக்க 53.5 கோடியும், கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் அமைக்க 55 கோடியும் ஒதுக்கீடு. செய்யப்பட்டுள்ளது.
-
Mar 10, 2025 11:43 IST
விபத்தில் சிக்கி குட்டிக்கரணம் அடித்த கார்
பெருமாநல்லூர் சாலை நால் ரோடு பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் குட்டிக்கரணம் அடித்து விழுந்த கார். காரில் பயணம் செய்தவர்கள் படுகாயம் அடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Mar 10, 2025 11:09 IST
பணம் கேட்டு கடத்தப்பட்ட ரவுடி வெட்டிக்கொலை
புதுச்சேரியில் கடத்தப்பட்ட பிரபல ரவுடி ஐயப்பன் திருவண்ணாமலையில் வெட்டிப் படுகொலை ரூ.6 லட்சம் கேட்டு நேற்று கடத்தப்பட்ட நிலையில், கொலை செய்து உடலை நீலந்தாங்கல் பகுதியில் வீசி சென்றனர். உடலை மீட்டு வேட்டவலம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
-
Mar 10, 2025 11:04 IST
11ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்ற 11 ஆம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு. கெட்டியம்மாள்புரத்தில் பேருந்தை மறித்த 3 பேர் மாணவர் தேவேந்திரனை இழுத்து வெளியில் போட்டுள்ளனர்; கையில் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டிய கும்பல் பயணிகள் சத்தம்போட்டதால் தப்பி ஓடியது; வெட்டுக்காயங்களுடன் கிடந்த மாணவரை மீட்டு காவலர்கள் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
Mar 10, 2025 10:04 IST
இரவில் உலா வந்த யானை தாக்கி ஒருவர் பலி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள சேம்பக்கரை வனப்பகுதியில் நேற்றிரவு யானை தாக்கி பழங்குடி இளைஞர் விஜயகுமார் என்பவர் உயிரிழப்பு. அவர் உடன் சென்ற ரவி என்பவர் மாயம். வனத்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை.
-
Mar 10, 2025 10:03 IST
மீன்பிடித் திருவிழா
விராலிமலை அருகே கருங்குளத்தில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த பாரம்பரிய மீன்பிடி திருவிழா நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில், பலருக்கும் மீன்கள் சிக்கவில்லை. மீன் கிடைத்தவர்கள் மகிழ்ச்சியுடனும், கிடைக்காதவர்கள் வருத்தத்துடனும் திரும்பினர்
-
Mar 10, 2025 09:21 IST
விபத்தில் சிக்கிய லாரி - கேஸ் கசிவால் பரபரப்பு
அருப்புக்கோட்டை அருகே மருத்துவ கேஸ் ஏற்றி வந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து. மருத்துவ கேஸ் லாரியில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கேஸ் கசிவை கட்டுப்படுத்தும் பணியில் தீவிரம்.
-
Mar 10, 2025 09:19 IST
சாலை விபத்து
உளுந்தூர்பேட்டை அருகே சேலம் தேசிய நெடுஞ்சாலையில் விற்கு ஏற்றிச் சென்ற டிராக்டரின் பின்பக்கம் ஆம்புலன்ஸ் மோதி விபத்து. ஆம்புலன்ஸ் உள்ளே இருந்த செல்வகுமார் என்ற நோயாளி மற்றும் அவரின் தாயார், மருத்துவ உதவியாளர் மூவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி.
-
Mar 10, 2025 09:13 IST
மேட்டூர் அணை நீர் நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 251 கன அடியாக குறைந்தது அணையின் நீர் மட்டம் 109.15 அடியாகவும், நீர் இருப்பு 77.208 டி.எம்.சி. ஆகவும் உள்ளது குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.