Coimbatore, Madurai, Trichy News Updates: பள்ளி மாணவன் மீது தாக்குதல்; மாவட்ட ஆட்சியர், எஸ்.பி பதில் அளிக்க உத்தரவு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.tamilnadu news, Tamilnadu City Live Update, Coimbatore Live Update, Trichy News Live Update, Live News Update

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tuticorin collector office

கடல் சீற்றம்: கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் இருப்பதால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • Mar 11, 2025 20:50 IST

    மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி பதில் அளிக்க உத்தரவு

    ஸ்ரீவைகுண்டம் அருகே பிளஸ் 1 மாணவன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, இது குறித்த வழக்கை தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி ஆணையம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்தது. சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி பதில் அளிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Mar 11, 2025 18:21 IST

    கோவையில் பரவலாக மழை; பொதுமக்கள் அவதி

    கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடும் வெயில் வாட்டி வந்த சூழலில் இன்று மாலை மாநகர மற்றும் மாவட்டத்தின் புறநகரப் பகுதிகளில் லேசான இடியுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கோவையில் காலை முதல் மாலை வரை கடும் வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று பிற்பகல் முதல் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. 

    இந்த நிலையில் மாலை 4:30 மணி அளவில் கோவை மாநகரம் மற்றும் புறநகர பகுதிகளில் லேசான இடையுடன் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கோவை மாநகர பகுதிகளான காந்திபுரம், உக்கடம், அவிநாசி சாலை, காளப்பட்டி, சிவானந்தா காலனி, டவுன்ஹால், கணபதி, மணியக்காரன்பாளையம், சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரி முடிந்து வீடு திரும்புபவர்களும், அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்பவர்களும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

    இதேபோல் மாவட்டத்தின் புறநகர பகுதிகளான சூலூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், மதுக்கரை, எட்டிமடை, பொள்ளாச்சி சாலை ஆகிய பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது.



  • Advertisment
  • Mar 11, 2025 17:26 IST

    திண்டுக்கல்லில் பார்சல் சர்வீஸ் அலுவலகங்களில் மதுவிலக்கு டி.எஸ்.பி திடீர் சோதனை

    திண்டுக்கல் மதுவிலக்கு அமலாக்கத்துறை டிஎஸ்பி.முருகன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல்லில் உள்ள பார்சல் சர்வீஸ் அலுவலகங்கள் மற்றும் லாரிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

    இந்த சோதனையின் போது வெளி மாநில மது பாட்டில்கள் கடத்தி வரப்படுகிறதா? கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா என்று சோதனை மேற்கொண்டனர்



  • Mar 11, 2025 15:58 IST

    கோவையில் பிடிபட்ட பெண் சிறுத்தை உயிரிழப்பு

    கோவை ஓணாப்பாளையத்தில் பிடிபட்ட 5 வயது பெண் சிறுத்தை உயிரிழந்தது. கடந்த வாரம் 4 ஆடுகளை வேட்டையாடிய இந்த சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். ஏற்கெனவே காயமடைந்திருந்த சிறுத்தை உடல் மெலிந்து காணப்பட்டடால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.



  • Advertisment
    Advertisements
  • Mar 11, 2025 15:11 IST

    உளுந்தூர்பேட்டையில் மின்னல் தாக்கியதில் 2 பேர் பலி - ஒருவர் படுகாயம்

    உளுந்தூர்பேட்டையில் மின்னல் தாக்கியல் பாலி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் காசிலிங்கம், களமருதூர் விவசாயி ராமர்(65) ஆகியோர் உயிரிழந்தனர். மழை காரணமாக உளுந்தூர்பேட்டை அரசு ஐடிஐ அருகே புளியமரத்தின் கீழ் நின்றிருந்தபோது மின்னல் தாக்கியது. இதில் விவசாயி ராமரின் பேரன் சூர்யா(25) காயமடைந்தார்.



  • Mar 11, 2025 14:17 IST

    மீண்டும் தவறு நடக்காவண்ணம் சரி செய்து கொள்ளுங்கள் - ஸ்டாலின் பேச்சு 

    "உள்ளாட்சி பதவியில் உள்ள சிலர் மீது புகார்கள் வருகிறது, மீண்டும் தவறு நடக்காவண்ணம் சரி செய்து கொள்ளுங்கள்.  தி.மு.க கூட்டணி மிகவும் வலுவாக உள்ளது, கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வரும்" என்று  காஞ்சி வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளுடனான சந்திப்பின் போது முதலமைச்சர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேற்று நடந்த நிர்வாகிகளுடனான கூட்டத்தில் முதலமைச்சர் பேசிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.



  • Mar 11, 2025 13:47 IST

    4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

    தமிழ்நாட்டில் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Mar 11, 2025 12:44 IST

    கரூர் - கடத்தப்பட்ட மாணவி மீட்பு

    கரூரில் நேற்று கடத்தப்பட்ட கல்லூரி மாணவியை காவல்துறையினர் மீட்டனர்; அரவக்குறிச்சி அருகே நந்தன் உறவினர் வீட்டில் இருந்து மாணவியை தனிப்படை போலீசார் மீட்டனர் நந்தனின் தாய், பாட்டி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்



  • Mar 11, 2025 12:25 IST

    சேலத்தில் தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

    "மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க" என்று  ஒப்பந்த பணியாளர்கள் குடும்பத்துடன் தவெக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்



  • Mar 11, 2025 11:48 IST

    தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை

    தஞ்சையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளியான பிரபல ரவுடி குருந்தையன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குருந்தையனை காரில் பின் தொடர்ந்த கும்பல், கொலை செய்துவிட்டு தப்பி ஓட்டம்



  • Mar 11, 2025 11:39 IST

    வதந்தி - மாவட்ட இந்து முன்னணி தலைவர் கைது

    கிருஷ்ணகிரி - சேலம் சாலையில் உள்ள 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீ நவநீத வேணுகோபாலசாமி கோயிலை இடிக்கப்போவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பிய கிருஷ்ணகிரி மாவட்ட இந்து முன்னணி தலைவர் கலை கோபி கைது.



  • Mar 11, 2025 11:20 IST

    வேங்கைவயல் வழக்கு 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்

    வேங்கைவயல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர். குற்றப்பத்திரிக்கையில் குற்றம் சாட்டப்பட்ட காவலர் முரளி ராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் விசாரணைக்காக ஆஜர் ஆகியுள்ளார். 



  • Mar 11, 2025 11:14 IST

    மதம் தாண்டிய மனிதநேயம்!

    கள்ளக்குறிச்சி: சின்னசேலம் பகுதியில் நடைபெற்று வரும் கங்காதீஸ்வரர் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருத்தேரோட்டத்தில் தேரை வடம் பிடித்து இழுத்து வரும் பக்தர்களுக்கு மோர் வழங்கிய இஸ்லாமியர்கள். 



  • Mar 11, 2025 10:48 IST

    முன்னாள் பாதுகாப்பு அதிகாரி ஆஜர்

    கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்த நிலையில் இபிஎஸ்-ன் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் கோவையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர். 



  • Mar 11, 2025 10:43 IST

    தங்கம் விலை சரிவு

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து ரூ. 64,160க்கு விற்பனையாகிறது.



  • Mar 11, 2025 09:59 IST

    பணத்திற்காக குழந்தைகளை விற்ற தந்தை

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ரூ.80,000 பணத்திற்காக 2 சிறுவர்களை வாத்து பண்ணையில் விற்ற தந்தை. சைல்டு ஹெல்ப் லைனுக்கு வந்த தகவலை அடுத்து சிறுவர்களை  அதிகாரிகள் மீட்டனர்.



  • Mar 11, 2025 09:36 IST

    நெல்லையில் கனமழை

    நெல்லை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை காரணமாக தொடர் நீர்வரத்து அதிகரிப்பால் திருக்குறுங்குடி மலைநம்பி கோவிலுக்கு 11.03.2025ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் செல்லவும், சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறை அறிவித்துள்ளது.



  • Mar 11, 2025 09:14 IST

    கடலூரில் வெளுத்து வாங்கும் கனமழை

    கடலூரில் காலை முதலே நல்ல மழை பெய்து வருகிறது.



  • Mar 11, 2025 09:12 IST

    நாகையில் வெளுக்கும் மழை

    நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பதிகளில் அதிகாலை சூறைக் காற்றுடன் கொட்டிய கனமழை..! பூதங்குடி, அம்பல், பொறக்குடி, நடுக்கடை, ஏனங்குடி, கயத்தூர், புத்தகரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது



  • Mar 11, 2025 09:12 IST

    சிறுத்தையை வலைவீசி பிடித்த பொதுமக்கள்

    கோவை பூச்சியூர் பகுதியில் சுற்றித் திரிந்த சிறுத்தையை பொதுமக்களே பிடித்தபோது 2 பேருக்கு காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் வலைவீசி பிடித்த சிறுத்தையை வனத்துறையினர் மீட்டுச் சென்றனர்.



  • Mar 11, 2025 09:10 IST

    குமரியில் கடல்சீற்றம்

    கன்னியாகுமரியில் கடல் சீற்றத்துடன் இருப்பதால் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கான படகு சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: