/tamil-ie/media/media_files/uploads/2023/01/ganja.jpg)
மாவட்ட ஆட்சியரின் நெகிழ்ச்சி செயல்: ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் பள்ளியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வில், மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து வகுப்பறைகளில் இருந்த சாதிய அடையாளங்களை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அழிக்க வைத்தார். மேலும் சமத்துவம் மற்றும் சமூகநீதி குறித்து உறுதிமொழி எடுக்கவைத்தார்.
-
Mar 13, 2025 20:43 IST
ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய 5 பேர் திருவாரூரில் கைது
ஆந்திராவில் இருந்து 400 கிலோ கஞ்சா கடத்தி வந்து, திருவாரூரில் தனியார் விடுதியில் தங்கியிருந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கைக்கு இந்த கஞ்சாவை கடத்த திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது,
-
Mar 13, 2025 19:48 IST
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு: சேலத்தில் 4 பேருக்கு இரட்டை ஆயுள்
17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட 4 வாலிபர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் தலா 2000 அபராதம் விதித்து சேலம் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
-
Mar 13, 2025 19:39 IST
வீட்டை சுத்தம் செய்தவருக்கு கிடைத்த சொத்து
சண்டிகர் : ரத்தன் தில்லான் என்பவர், வீட்டை சுத்தம் செய்யும்போது ரிலையன்ஸ் நிறுவனத்தின் பழைய பங்கு பத்திரம் கிடைத்தது. அவர் குடும்பத்தினர் கடந்த 1988ல் வெறும் 1 ஷேர் 10 ரூபாய் என ரூ.300க்கு 30 ஷேர்களை வாங்கியுள்ளனர். இதன் தற்போதைய மதிப்பு ரூ.11 லட்சமாக அதிகரித்துள்ளது,
-
Mar 13, 2025 18:47 IST
நாகை அருகே அழுகிய நிலையில் பெண்ணின் எலும்புக்கூடு
நாகப்பட்டினம் அருகே வாய்க்கால் புதரில் அழுகிய நிலையில் பெண்ணின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது. கொலை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டாரா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Mar 13, 2025 18:11 IST
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கொடூர கொலை
அருப்புக்கோட்டை அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரரை கொன்று உடலை, கொதிக்கும் தார் உலையில் கூட்டாளிகளே போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீயணைப்பு துறையினர் ராணுவ வீரரின் உடலை தாரை வெப்பப்படுத்தி வெளியேற்றி அலசி எலும்புகளை மீட்டனர்
-
Mar 13, 2025 17:52 IST
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பாலியல் தொல்லை; 4 பேருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
ஸ்ரீவில்லிபுத்தூரில் மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்ட முருகன், பாண்டியராஜ், ஜவகர், தேவராஜ் ஆகிய 4 பேருக்கு 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Mar 13, 2025 17:32 IST
மதுரை அருகே லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் பெண் மரணம்
மதுரை வீரகனூர் சுற்றுசாலை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்
-
Mar 13, 2025 17:09 IST
குப்பை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் - மதுரை மாநகராட்சி
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குப்பைகளை கொட்டினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். எச்சரிக்கை விடுத்த 24 மணி நேரத்திற்குள் குப்பைகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் மதுரை மாநகராட்சி அறிவித்துள்ளது
-
Mar 13, 2025 17:03 IST
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடு - ஐகோர்ட்
உதகை, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்துள்ளது. வார நாட்களில் உதகைக்கு 6,000 வாகனங்கள், கொடைக்கானலுக்கு 4,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். வார இறுதி நாட்களில் உதகைக்கு 8,000 வாகனங்கள், கொடைக்கானலுக்கு 6,000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.
-
Mar 13, 2025 16:06 IST
உதகை அருகே வனவிலங்கு தாக்கி பெண் உயிரிழப்பு
நீலகிரி மாவட்டம் உதகை அருகே காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த அஞ்சலை என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டார். தேயிலை தோட்டத்தில் சிதறிக் கிடந்த பெண்ணின் உடல் உறுப்புகளை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள், அஞ்சலையை தாக்கி இழுத்து சென்றது சிறுத்தையா? புலியா? என்பதை கண்டறியும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
-
Mar 13, 2025 14:55 IST
திருப்பூர் முதிய தம்பதி கொலை – உறவினர் கைது
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் முதிய தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். கோழி மேய்ந்த பிரச்சனை கொலையில் முடிந்ததாக காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. தோட்டத்து வீட்டில் வசித்து வந்த பழனிச்சாமி (95), பர்வதம் (75) ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
-
Mar 13, 2025 13:20 IST
பொன்.மாணிக்கவேல் மீதான வழக்கு விசாரணைக்கு தடை - மதுரை ஐகோர்ட் உத்தரவு
ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொன்மாணிக்கவேல் மீதான வழக்கு விசாரணைக்கு தடை விதித்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பொன் மாணிக்கவேல் மீது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்யக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
-
Mar 13, 2025 12:50 IST
குற்றவாளியின் உறவினர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு
குற்றவாளி பங்கேற்ற காதணி விழா ஊர்வலத்தில் பரபரப்பு. அஜய்தேவா மீது கொலை, கொள்ளை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கொட்டும் மழையில் குற்றவாளியை கைது செய்த காவல்துறை.
-
Mar 13, 2025 12:47 IST
புதுச்சேரி - புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி
புதுச்சேரி பட்ஜெட்டில் புதிதாக 6 மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி; தண்ணீரை அதிகம் பயன்படுத்தாமல் பாட்லிங் மதுபான தொழிற்சாலைகளுக்கு முதலமைச்சர் அனுமதி. பூரண மதுவிலக்கு என்றால் முதல்ஆதரவு - ஆனால் அது முடியாது; | புதிய மதுபான தொழிற்சாலைகளால் 5000 பேருக்கு வேலை கிடைக்கும் - முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு
-
Mar 13, 2025 12:08 IST
மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் தியாகமூர்த்தி உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவர் தியாகமூர்த்தி உயிரிழப்பு. பைக்கில் சென்ற போது அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த மாணவர். மாணவர் உடல் பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பவானிசாகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 13, 2025 12:07 IST
"தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது"
சிதம்பரம் கோயில் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுத்த தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. நடராஜர் கோயில் தீட்சிதர்களுகளுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்; விசாரணை நிலுவையில் உள்ளதால் வழக்கை ரத்து செய்யக் கூடாது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
-
Mar 13, 2025 12:00 IST
சூரியனார்கோயில் ஆதீனத்தில் சிலைகள் கொள்ளை என புகார்
கும்பகோணம்: சூரியனார் கோயில் ஆதீனத்தில் ரூ.100 கோடி சிலைகள் கொள்ளை என தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் புகார். திருமணம் செய்து கொண்டு ஆதீனத்தை விட்டு வெளியேறிய மகாலிங்க பண்டார சந்நிதி புகார் அளித்தார்; ஐம்பொன் சிலைகளை கொள்ளை என்றும், விசாரணை நடத்த வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரிக்கை; ஆதீனத்தின் சாவியை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் மகாலிங்க பண்டார சந்நிதி கோரிக்கை; 500 ஆண்டுகள் பழமையான சிலைகள், மரகதங்கள் கொள்ளை என குற்றச்சாட்டு
-
Mar 13, 2025 11:43 IST
தெருநாய்கள் கடித்து 9 ஆடுகள் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே பாப்பாங்காட்டூர் கிராமத்தில், கார்த்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடுகளை தெருநாய்கள் கடித்துக் குதறின. இதில் 9 ஆடுகள் உயிரிழந்தன.
-
Mar 13, 2025 11:25 IST
திருப்பூரில் வயதான தம்பதி வெட்டி கொலை
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான விவசாய தம்பதி வெட்டிக் கொலை. தோட்டத்து வீட்டில் தங்கி இருந்த மூத்த தம்பதிக்கு நேர்ந்த கொடுமை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 13, 2025 11:08 IST
கனமழையால் தூக்கி வீசப்பட்ட பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை
தருமபுரி: கம்பைநல்லூரை அடுத்துள்ள க.ஈச்சம்பாடி காலனியில் நேற்று இரவு சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் அங்குள்ள அரசு உயர்நிலைப்பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டது. இரு வகுப்பறை கொண்ட கட்டிடத்தில் இரும்பு தகரத்தாலான மேற்கூரை போடப்பட்டிருந்தது ; இரவில் விபத்து ஏற்பட்டதால் யாருக்கும் பாதிப்பில்லை; விரைவில் சீரமைக்கப்படும் என கல்வித்துறை தகவல்
-
Mar 13, 2025 11:07 IST
எச்சில் இலை விவகாரம் - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்புக்கு தடை
பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்த எச்சில் இலையில் உருளலாம் என தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்புக்கு
தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. தமிழ்நாடு அரசு, அனைத்து சாதி அர்ச்சகர் மாணவர் சங்கத் தலைவர் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல் முறையீடு வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. -
Mar 13, 2025 10:38 IST
திமுக - பாமகவினர் மோதல்
சேலம் - முத்துநாயக்கன்பட்டியில் அரசுபள்ளி அடிக்கல் நாட்டு விழாவிற்கு வந்த பாமக எம்.எல்.ஏ அருளுக்கு திமுகவினர் எதிர்ப்பு. தி.மு.க - பாமகவினர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு மோதல். எம்.எல். ஏவை குண்டுக்கட்டாக தாக்கி அப்புறப்படுத்திய போலீசார்
-
Mar 13, 2025 10:35 IST
மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 18ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது. 16ஆம் தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Mar 13, 2025 10:19 IST
சீமான் பேரணிக்கு அனுமதி மறுப்பு
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வரும் 16 ஆம் தேதி சீமான் தலைமையில் நடக்க இருந்த நாம் தமிழர் கட்சியின் அமைதி பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் முருகன் கோயில் மாசி பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருவதால் அனுமதிக்க இயலாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
-
Mar 13, 2025 09:14 IST
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை
கோவை மாவட்டம் வ.உ.சி. மைதானத்தில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்குப்போட்டு த*கொலை பயங்கரவாத தடுப்பு பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் சொக்கலிங்கம் (54) வ.உ.சி. மைதானத்தில் உள்ள புங்கை மரத்தில் சேலையில் தூக்குப்போட்டு சொக்கலிங்கம் த*கொலை பந்தய சாலை காவல்நிலைய போலீசார் த*கொலைக்கான காரணம் குறித்து விசாரணை
-
Mar 13, 2025 09:13 IST
மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆட்சியர்
ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் பள்ளியில் நடைபெற்ற சமூக நல்லிணக்க விழிப்புணர்வு நிகழ்வில், மாணவர்களிடம் பெயிண்ட் டப்பாவை கொடுத்து வகுப்பறைகளில் இருந்த சாதிய அடையாளங்களை அழிக்க வைத்தார் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத். மேலும் சமத்துவம் மற்றும் சமூகநீதி குறித்து உறுதிமொழி எடுக்கவைத்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.