/tamil-ie/media/media_files/uploads/2023/06/appavu-1.webp)
தமிழக சட்டப்பேரசையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் 2025 -26: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025 -26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் காலை 9.30 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். திமுக அரசின் ஐந்தாவது பட்ஜெட் மற்றும் தங்கம் தென்னரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இரண்டாவது பட்ஜெட்டாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட் சின்னமான ‘₹’ மாற்றி 'ரூ' என்ற தமிழ் எழுத்தை தமிழக அரசு போட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த செயல் "பிராந்திய பேரினவாதத்திற்கு" ஒரு எடுத்துக்காட்டு என்றும் தேசிய ஒற்றுமை குறித்த உறுதிப்பாட்டை பலவீனப்படுத்துவதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார். தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனும் திமுக பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கிறது என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
Mar 14, 2025 15:22 IST
சாமானியருக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட் - அண்ணாமலை விமர்சனம்
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை: “இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால், தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது. தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது. ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது. தி.மு.க-வுக்கு வேண்டப்பட்டவர்கள் பயனடையும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், சாமானிய மக்களுக்கு நான்காவது ஆண்டாக, வழக்கம்போல ஏமாற்றத்தையே பரிசளித்திருக்கிறது திமுக.” என்று விமர்சித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழக அரசின் பட்ஜெட்டைக் குறித்துச் சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால்,
— K.Annamalai (@annamalai_k) March 14, 2025
தமிழகத்தில் டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது.
தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது.
ஒதுக்கீடுகள் இல்லாத விளம்பர அறிவிப்புகள் உயர்ந்துள்ளது.
திமுகவுக்கு வேண்டப்பட்டவர்கள்… -
Mar 14, 2025 14:02 IST
மேலும் 2 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை: பட்ஜெட்டில் அறிவிப்பு
வேளச்சேரி வழியாக தாம்பரம் – கிண்டி 21 கி.மீ, கலங்கரை விளக்கம், உச்சநீதிமன்றம் 6 கி.மீ, ஆகிய இரு தடங்களில், மெட்ரோ ரயில் சேவை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
Mar 14, 2025 13:31 IST
சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும்: சபாநாயகர் அறிவிப்பு
தமிழக சட்டப்பேரசையில் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஏப்ரல் 30ம் தேதி வரை நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
-
Mar 14, 2025 13:25 IST
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து சொல்லாதது ஏமாற்றம்: பட்ஜெட் குறித்து பா.ம.க கருத்து
பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு வரவேற்கத்தக்கது. காலை உணவுத் திட்டத்தில் விடுபட்ட பள்ளிகள் சேர்க்கப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்கத்தக்கது. மகளிர் உரிமைத் தொகையில் விடுபட்டவர்கள் சேர்ப்பு, சுய உதவிக் குழுக்களுக்கு கடன் போன்ற அறிவிப்புகளுக்கு வரவேற்பு. எனினும் பள்ளிகளில் கூடுதல் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசு எடுக்க வேண்டும் என சொல்லப்பட்டது ஏமாற்றமளிக்கிறது என பாமக சட்டப்பேரவைக்குழுத் தலைவர் ஜி.கே.மணி கூறியுள்ளார்.
-
Mar 14, 2025 13:01 IST
தற்சார்புத் தொழிலாளர்களுக்கான அறிவிப்பு!
2,000 தற்சார்புத் தொழிலாளர்களுக்கு இருசக்கர மின் வாகனம் வாங்க தலா ச20,000 மானியம் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
Mar 14, 2025 12:50 IST
வெறும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது - ஈபிஎஸ்
திமுக அரசு அறிவித்துள்ள பட்ஜெட் அறிவிப்பு, வெறும் வெற்று அறிவிப்பாகத்தான் உள்ளது. நடைமுறையில் பல திட்டங்களுக்கே கடன் வாங்கித்தான் திட்டத்தை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது. அதிக கடன் வாங்குவதில் முதல் மாநிலமாக தமிழகம் இருக்கும் நிலையில் எப்படி புதிய திட்டங்களை செயல்படுத்துவார்கள்? என்று எதிர்க்கட்சித் தலைவர் ஈபிஎஸ் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
Mar 14, 2025 12:49 IST
ரூ.10 கோடி ஒதுக்கீடு
கல்வராயன் மலையில் வாழும் மக்களின் மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு
-
Mar 14, 2025 12:48 IST
சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி
டாஸ்மாக் பணி நியமனம், போக்குவரத்து தொடர்பான ஒப்பந்தங்களில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை. ஒன்றிய அரசு அமலாக்கத்துறையை ஏவிவிட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் சோதனை என்கிறார்கள் ஆனால் எந்த முதல் தகவல் அறிக்கை என்பதை சொல்லவே இல்லை. அமலாக்கத்துறையின் குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்று - சட்டப்பேரவை வளாகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார்.
-
Mar 14, 2025 12:31 IST
அரசு ஊழியர்களுக்கு அசத்தல் அறிவிப்பு!
அரசு ஊழியர்கள் ஈட்டிய விடுப்பு 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் நடைமுறை மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறது. “கொரோனா காலத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இந்நடைமுறை அடுத்தாண்டு ஏப்ரல் வரை செயல்படுத்தப்படும்” - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
-
Mar 14, 2025 12:27 IST
பட்ஜெட் உரை நிறைவு
2.33 மணி நேர பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
-
Mar 14, 2025 12:21 IST
மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும்!
“அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப கைக்கணினி (அ) மடிக்கணினி வழங்கப்படும்!”- தங்கம் தென்னரசு, தமிழ்நாடு நிதியமைச்சர்
-
Mar 14, 2025 12:19 IST
பெண்கள் பெயரில் பத்திரப் பதிவு செய்தால் பதிவுக் கட்டணம் 1% குறைவு..!
ரூ.10 லட்சம் வரை மதிப்புள்ள வீடு, மனை, விவசாய நிலம் உள்ளிட்ட அனைத்து அசையாச் சொத்துகளின் பத்திரப் பதிவுகளுக்கும் இது பொருந்தும்” -தங்கம் தென்னரசு, தமிழ்நாடு நிதியமைச்சர்
-
Mar 14, 2025 12:14 IST
ஆசிரியர்களுக்கான அறிவிப்பு!
நடப்பாண்டில் 1,721 முதுகலை ஆசிரியர்களும் 841 பட்டதாரி ஆசிரியர்களும் நேரடி நியமனம் மூலம் பணியமர்த்தப்படுவார்கள் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
Mar 14, 2025 12:12 IST
"40,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்"
கடந்த 4 ஆண்டுகளில் 78,000 பேருக்கு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதி ஆண்டில் 40,000 அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்
-
Mar 14, 2025 12:11 IST
ஒன்றிய அரசால் வெகுவான பாதிப்பு
"மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரும் நிதியாண்டில் 14.6%-ஆக, அதாவது ரூ.2.4 லட்சம் கோடியாக வளர்ச்சி பெறும்; நடப்பு ஆண்டில் ஒன்றிய அரசு வரியின் பங்கு ரூ.52,491 கோடியாக இருக்குமென கணிப்பு ஒன்றிய அரசு வழங்காததால் மாநில அரசின் நிதி நிலைமை வெகுவாக பாதித்து வருகிறது” - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
-
Mar 14, 2025 12:02 IST
கலைஞர் கைவினை திட்டம்
கலைஞர் கைவினை திட்டம் மூலம் 19,000 கைவினைஞர்களுக்கு மானிய நிதியாக ரூ.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
-
Mar 14, 2025 12:01 IST
5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா
நடப்பாண்டில் 5 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கத் திட்டம்
-
Mar 14, 2025 12:00 IST
சென்னை ஈசிஆரில் 4 வழித்தட உயர்மட்ட சாலை அமைக்கப்படும்
திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை ரூ.2,100 கோடியில் உயர்மட்ட நான்கு வழிச்சாலை. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 4 வழிச்சாலை அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்
-
Mar 14, 2025 11:58 IST
புதிதாக 3000 பேருந்துகள் கொள்முதல்.. தமிழ்நாடு பட்ஜெட்டில் அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் 3000 பேருந்துகள் புதிதாக கொள்முதல் செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
-
Mar 14, 2025 11:54 IST
வழிபாட்டுத்தலங்களுக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
ஆயிரம் ஆண்டு பழமையான திருக்கோயில்களின் திருப்பணிக்கு ரூ.125 கோடி ஒதுக்கீடு. பழமையான பள்ளிவாசல், தர்காக்கள், தேவாலயங்களை சீரமைக்க ரூ.10 கோடி மானியம் வழங்கப்படும். - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
-
Mar 14, 2025 11:48 IST
வேட்டைப்பறவைகள் ஆராய்ச்சி மையத்திற்கு .1 கோடி ஒதுக்கீடு
கடல்சார் வள அறக்கட்டளைக்கு ரூ.50 கோடி ஒதுக்கீடு. திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி, குலசேகரப்பட்டினம், கீழ்புதுப்பட்டு, சாமியார்பேட்டை கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் பெற முயற்சி; உதகையில் ரூ.70 கோடியில் எழில்மிகு சுற்றுச்சூழல் பூங்கா - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
-
Mar 14, 2025 11:39 IST
சமூக நல்லிணக்க ஊராட்சிக்கான விருதுகள்
10 ஊராட்சிகளுக்கு தலா ரூ.1 கோடி ஊக்கத்தொகை அறிவிப்பு
-
Mar 14, 2025 11:37 IST
சென்னை மெட்ரோ ரயிலின் மூன்றாவது கட்ட திட்டம்
சென்னை மெட்ரோ ரயிலின் மூன்றாவது கட்ட திட்டத்தில், தாம்பரத்தில் இருந்து கிண்டி வரை வேளச்சேரி வழியே மற்றும் கலங்கரை விளக்கத்தில் இருந்து உயர் நீதிமன்றம் வரை புதிய வழித்தடம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு
-
Mar 14, 2025 11:32 IST
மின் பேருந்துகள் அறிமுகம்
தமிழ்நாட்டில் 1,125 புதிய மின் பேருந்துகள் அறிமுகம். மதுரை, 100 கோயம்புத்தூர்: 75 மற்றும் சென்னையில் 650
-
Mar 14, 2025 11:27 IST
அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும்
விரிவான நகரமயமாக்கலைக் கருத்தில் கொண்டு மித அதிவேக ரயில் போக்குவரத்தை (RRTS) தமிழ்நாட்டில் உருவாக்க சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும்.
சென்னை - திண்டிவனம் - விழுப்புரம்
சென்னை - காஞ்சிபுரம் - வேலூர்,
கோவை - திருப்பூர் - ஈரோடு - சேலம்மேற்கண்ட வழித்தடங்களில் இந்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ளும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
-
Mar 14, 2025 11:17 IST
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம்: டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும்
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும். விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ. 9335 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு - பட்டாபிராம் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.9744 கோடியும், பூந்தமல்லி - ஸ்ரீபெரும்புதூர் மெட்ரோ வழித்தட நீட்டிப்புக்கு ரூ.8779 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Mar 14, 2025 11:10 IST
ஓசூர், விருதுநகரில் டைடல் தொழில்நுட்ப பூங்கா
ஓசூர், விருதுநகரில் டைடல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் ஒசூரில் அறிவுசார் தொழில்நுட்பத் தடம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
Mar 14, 2025 11:08 IST
மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் - பட்ஜெட்டில் அறிவிப்பு
கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும். சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும்
-
Mar 14, 2025 10:58 IST
முதல்வர் படைப்பகம் 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும்
சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிப்பு.
-
Mar 14, 2025 10:57 IST
சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கப்படும்
10 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் ரூ. 2.5 லட்சம் கோடி கடன் உதவி வழங்கப்படும். கலைஞர் கைவினை திட்டத்தில் 19,000 கைவினைக் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ரூ.74 கோடி ரூபாய் மானிய நிதி ஒதுக்கீடு.
-
Mar 14, 2025 10:49 IST
காலணி தொழில் பூங்கா - முக்கிய அறிவிப்பு
மதுரை மற்றும் கடலூரில் காலணி தொழில் பூங்கா அமைக்கப்படும். திருச்சியில் பொறியியல் தொழில் பூங்கா அமைக்கப்படும். ஓசூரில் ரூ.400 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும். இங்கு அறிவுசார் தொழில்நுட்ப வழித்தடமும் அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
Mar 14, 2025 10:42 IST
கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் -தென்னரசு
1.50 லட்சம் தொழிலாளர்களுக்கு குழு காப்பீட்டு திட்டம் அறிமுகம் செய்யப்படும். காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மையத்தை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு. 14 வயதுடைய அனைத்து பெண்களுக்கும் கருப்பை புற்றுநோய் தடுப்பூசி செலுத்த படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும். புற்றுநோயை தொடக்க நிலையிலேயே கண்டறியும் கருவிகள் ரூ.110 கோடி செலவில் வாங்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
Mar 14, 2025 10:40 IST
ரூ.83 கோடியில் புதிய குழந்தை மையங்கள் அமைக்கப்படும்
அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்புகளை மேற்கொள்ள ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு; 2,000 அரசுப் பள்ளிகளில் ரூ.160 கோடியில் கணினி ஆய்வகங்கள் தரம் உயர்வு.
-
Mar 14, 2025 10:38 IST
உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைப்பு
பள்ளிக்கல்வியில் சதுரங்க ஆட்டத்தை சேர்த்திடும் வகையில் உடற்கல்வி பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
-
Mar 14, 2025 10:33 IST
புதிய அரசு கலைக் கல்லூரிகள்
நீலகிரி குன்னூர், சென்னை ஆலந்தூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்படும். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
-
Mar 14, 2025 10:28 IST
ஒன்றிய அரசு ரூ.2150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை - தென்னரசு
மும்மொழிக்கொள்கையை ஏற்காததால் ஒன்றிய அரசு ரூ.2150 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்கவில்லை. மாநில அரசே தனது சொந்த நிதி ஆதாரத்தில் இருந்து இதற்காக நிதியை விடுவித்துள்ளது. இருமொழிக் கொள்கையை விட்டுத்தரமாட்டோம் என உறுதியாக உள்ள முதல்வரின் பக்கம் நின்று மக்கள் ஆதரவு அளித்துள்ளனர் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
Mar 14, 2025 10:27 IST
அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும்
பழங்குடி மாணவர்கள் இடைநிற்றலை தடுக்க 14 உயர் நிலைப்பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பல்கலைகழகங்களுக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ.700 கோடியாக உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
Mar 14, 2025 10:12 IST
மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள்
பணிபுரியும் பெண்களின் வசதிக்காக மேலும் 10 இடங்களில் தோழி விடுதிகள் கட்டப்படும். மாவட்டம் தோறும் இவ்வகை விடுதிகள் அமைக்கும் இலக்கை நோக்கி அரசு செல்கிறது. மூன்றாம் பாலினத்தவரின் சமூக மேம்பாட்டை உறுதி செய்ய, உயர்கல்வி செல்லும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் ஊர்க்காவல் படையில் மூன்றாம் பாலினத்தவர்களை இணைக்க நடவடிக்கை.
-
Mar 14, 2025 10:09 IST
மாதம் ரூ. 888 பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை
மகளிர் நலன் சார்ந்த அறிவிப்புகள் விடியல் பயணம் காரணமாக பேருந்து பயணம் செய்யும் பெண்களின் சதவீதம் 60 வரை உயர்ந்துள்ளது. மாதம் 888 ரூபாயை பெண்கள் சேமிப்பதாக திட்டக்குழு அறிக்கை கூறுகிறது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதியவர்கள் விண்ணப்பிக்க உரிய வாய்ப்பு விரைவில் வழங்கப்படும் என்றார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
-
Mar 14, 2025 10:08 IST
நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்து வருகிறது - தென்னரசு
நாட்டிலேயே அதிக நகரமயமாக்கல் சவாலை தமிழ்நாடு சந்தித்துவருகிறது. இதற்கேற்ற, குடிநீர், சாலை, போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்கின்றன. எனினும் புதிய நகரங்கள் அமைக்கும் தேவை உள்ளது. சென்னைக்கு அருகே 2000 ஏக்கரில் புதிய நகரம் அமைக்கப்படும். நவீன வசதிகள் கொண்டதாக இந்நகரம் அமையும். சென்னையை புதிய நகருடன் இணைத்திட போக்குவரத்து, மெட்ரோ வழித்தட நீட்டிப்பு ஆகியவை மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
-
Mar 14, 2025 10:02 IST
புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் - தென்னரசு அறிவிப்பு
சென்னை மாநகரப்பகுதியில் முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் செயல்படுத்தப்படும். இதன்மூலம் ஒரு பகுதியில் உபரியாக உள்ள தண்ணீரை, மற்றொரு பகுதிக்கு கொண்டு செல்லப்படும். புதிதாக 7 மழைநீர் உறிஞ்சு பல்லுயிர் பூங்கா அமைக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
Mar 14, 2025 09:58 IST
8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும்
ஈரோடு மாவட்டத்தில் நொய்யல் அருங்காட்சியகம், ராமநாதபுரத்தில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும் மேலும் 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
Mar 14, 2025 09:57 IST
மத்திய அரசு நிதியை விரைந்து விடுவிக்க கோரிக்கை
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டப்படும் கிராம சாலைகளை மேம்படுத்த ரூ.120 கோடி ஒதுக்கீடு. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.1,087 கோடி ஒதுக்கீடு ஒதுக்கீடு. 100 வேலை திட்டத்திற்கு ரூ.3790 கோடியை நிதி ஒன்றிய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. இந்த நிதியை விரைந்து ஒதுக்க கோரிக்கை விடுக்கிறோம். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரை.
-
Mar 14, 2025 09:52 IST
அமலாக்கத்துறை ரெய்டு பற்றி பேச அனுமதி மறுப்பு - அ.தி.மு.க வெளிநடப்பு
சட்டப்பேரவி தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். அமலாக்கத்துறை ரெய்டு பற்றி பேச அனுமதி மறுக்கப்பட்டதால் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகிறது.
-
Mar 14, 2025 09:50 IST
ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும்
| அகர மொழிகளின் அருங்காட்சியகம் மதுரை உலகத் தமிழ்ச்சங்க வளாகத்தில் அமைக்கப்படும். ஆண்டுதோறும் உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படும். மேலும் பல இடங்களில் அகழ்வாராய்ச்சி நடத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரை.
-
Mar 14, 2025 09:48 IST
AI-உந்துதல் திறன் மேம்பாடு, தொழில்துறை வளர்ச்சி மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கலில் கவனம் செலுத்துங்கள்
தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ளும் வயதில் இளைஞர்களின் திறன் மேம்பாடு, மாவட்டங்களில் பன்முகப்பட்ட தொழில் வளர்ச்சியை உருவாக்குதல், பண்ணை இயந்திரமயமாக்கல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் சில பகுதிகள் என்று பட்டியலிட்டார். பொருளாதார சவால்களை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தீர்வுகள் மூலம் சமாளிக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சியை அதிகரிப்பதற்கான கொள்கை நடவடிக்கைகளில் பட்ஜெட் கவனம் செலுத்தும்.
-
Mar 14, 2025 09:48 IST
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும்
மேலும் 47 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட 500 இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ரூ.1.33 கோடி ஒதுக்கீடு பழம்பெரும் ஓலைச்சுவடிகள், கையெழுத்துப் பிரதிகளை டிஜிட்டல் மயமாக்கப்படும். தமிழர்கள் அதிகம் வசிக்கும் பிற இந்திய பெருநகரங்கள், சிங்கப்பூர், கோலாலம்பூர் நகரங்களிலும் தமிழ்ப்புத்தக கண்காட்சி நடத்தப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.
-
Mar 14, 2025 09:42 IST
அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமிடல் தமிழ்நாட்டுக்கு தேவை - தென்னரசு
நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தொழில்நுட்பத்தின் துணை கொண்டு தீர்வு காணப்பட வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான திட்டமிடல் தமிழ்நாட்டுக்கு தேவைப்படுகிறது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் உரை.
-
Mar 14, 2025 09:40 IST
இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது - தங்கம் தென்னரசு
மகளிருக்கு வாக்குரிமை வழங்கிய சென்னை மாகாணத்தின் வழியில் அவர்களுக்கு சொத்துரிமை வழங்கியது தமிழ்நாடு. இந்தியாவுக்கே முன்னோடியாக தமிழ்நாடு திகழ்கிறது. பன்முக வளர்ச்சியை நோக்கி நடைபோடுகிறது. இருமொழிக்கொள்கையை தொடர்ந்து பின்பற்றுவதால் உலக அளவில் தமிழர்கள் தடம் பதிக்கின்றனர். நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரை
-
Mar 14, 2025 09:37 IST
தமிழ்நாடு பட்ஜெட்: தங்கம் தென்னரசு உரை
இந்தியாவின் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக திகழ்கிறது தமிழ்நாடு எத்தனை தடைகள் வந்தாலும் சமநிலை தவறாது, நம் உரிமைகளைக் காக்கும் முதலமைச்சரை நாடே பாராட்டிக்கொண்டு இருக்கிறது. சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உரை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.