Chennai News Updates: "செங்கோட்டையனின் செயல் அநாகரிகமானது": வைகைசெல்வன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நிகழ்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் நிகழ்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vaigai selvan and Sengottaiyan

வேளாண் பட்ஜெட் தாக்கல்

2025 - 26ஆம் நிதி ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
வேளாண் துறைக்கு ரூ.45,661.44 கோடி ஒதுக்கீடு
தமிழக வேளாண் துறைக்கு ஒட்டுமொத்தமாக ரூ.45,661.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதில், விவசாயிகளுக்கு மானியங்கள், உழவர் நல சேவை மையங்கள், விவசாயிகளுக்கு சுற்றுலா உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
  • Mar 15, 2025 21:19 IST

    "செங்கோட்டையனின் செயல் அநாகரிகமானது": வைகைசெல்வன் குற்றச்சாட்டு

    செங்கோட்டையனின் செயல் குறித்து அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் விமர்சித்துள்ளார். அதன்படி, "தொண்டர்களால் இயங்கும் அ.தி.மு.க-வில் சில கசப்பும், கருத்து வேறுபாடும் இருக்கத் தான் செய்யும். செங்கோட்டையன் பொதுவெளியில் இவ்வாறு செயல்படுவது அநாகரிகமானது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 15, 2025 20:24 IST

    ரன்யா ராவ் வழக்கில் கர்நாடக அரசு அதிரடி

    நடிகை ரன்யா ராவ் தங்க கடத்தல் வழக்கில், அவரது வளர்ப்பு தந்தையை டி.ஜி.பி பதவியில் இருந்து நீக்கி கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மறு உத்தரவு வரும் வரை, கட்டாய விடுப்பில் ராமச்சந்திர ராவ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.



  • Advertisment
  • Mar 15, 2025 19:35 IST

    "தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம்": ஸ்டாலின்

    இந்தியாவிலேயே தலைசிறந்த பாரம்பரியம் கொண்டது சென்னை உயர்நீதிமன்றம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பாக, "அரசமைப்பு என்பது சமூக நீதி, சமத்துவத்தை அடைவதற்கான ஒரு கருவி என அம்பேத்கர் கூறினார். அதனை பாதுகாப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.



  • Mar 15, 2025 18:40 IST

    சபாநாயகரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான்: செங்கோட்டையன்

    “என் தொகுதி பிரச்னை தொடர்பாக சபாநாயகரை சந்தித்தேன். எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்திப்பது வழக்கமான ஒன்றுதான் என்று அதிமுக எம்.எல்.ஏ. செங்கோட்டையன் பேட்டியில் கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Mar 15, 2025 18:38 IST

    மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழா: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

    சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெறும் மெட்ராஸ் பார் அசோசியேசனின் 150வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.  விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன், ஆர்.மகாதேவன், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர்



  • Mar 15, 2025 17:49 IST

    வேளாண் துறை வளர்ச்சியில் தமிழக அரசுக்கு அக்கறை இல்லை: டாக்டர் ராமதாஸ்

    "வேளாண் துறையின் வளர்ச்சியில் தமிழக அரசுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதையே வேளாண் பட்ஜெட் காட்டுகிறது. உழவர் சேவை மையங்கள், கோடை உழவுத் திட்டம் வரவேற்கத்தக்கது. வேளாண் பட்ஜெட்டில் பாசன திட்டங்கள் இல்லாதது, கொள்முதல் விலை உயராதது ஏமாற்றமளிக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.



  • Mar 15, 2025 16:39 IST

    மார்ச் 17-ந் தேதி பத்திரப்பதிவு அலுவலகங்களில், கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு

    பங்குனி மாதத்தில் மங்களகரமான நாளாக கருதப்படும், மார்ச் 17-ந் தேதி அன்று, பத்திரப்பதிவு அலுவலகங்களில், கூடுதல் டோக்கன்கள் வழங்க, பதிவுத்துறை ஏற்பாடு செய்துள்ளது. ஒரு சார்ப்பதிவாளர் அலுவலகங்களில் 50 டோக்கன்களும், 2 சார்ப்பதிவாளர்கள் உள்ள  அலுவலகங்களில் 100 டோக்கன்களும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.



  • Mar 15, 2025 16:02 IST

    டாஸ்மாக் ஊழல் - விரிவான விசாரணை தேவை: சீமான் வலியுறுத்தல் 

    தமிழ்நாடு அரசின் மதுபான விற்பனையில் ரூ.1000 கோடிகள் ஊழல் என்று அமலாக்கத்துறை குறைத்துக் கூறுவது யாரைக் காப்பாற்ற? பல்லாயிரம் கோடிகள் ஊழல் குறித்து விசாரணை விரிவடைய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.

     



  • Mar 15, 2025 15:58 IST

    'தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்' - அமைச்சர் அஸ்வினி

    தமிழ் கலாச்சாரத்தை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், தமிழ் மொழி பாதுகாக்கப்பட வேண்டிய சொத்து. பா.ஜ.க அரசு அனைத்து மொழிகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என ஒன்றிய அமைச்சர் தெரிவித்தார். சென்னையில் தொழில்நுட்ப வளர்ச்சி நன்றாக உள்ளது என்று மத்திய அமைச்சர் அஸ்வினி பாராட்டியுள்ளார்.

     



  • Mar 15, 2025 15:35 IST

    உழவர் வாழ்வு செழிக்கட்டும் - உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

    உழவர் வாழ்வு செழிக்கட்டும்; வேளாண்மைத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைகள் தொடரட்டும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாட்டு வேளாண் பெருங்குடி மக்களையும் – வேளாண்மையும் புதிய உயரங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, வேளாண் நிதிநிலை அறிக்கை 2025- 2026 சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

    கிராமப்புற வேளாண் பட்டதாரி இளைஞர்களை கொண்ட முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள், நெல் சாகுபடி பரப்பளவை உயர்த்த சிறப்புத்திட்டம், மழைவாழ் உழவர்கள் முன்னேற்றம், உழவர் சந்தைகளில் இருந்து ஆன்லைன் முறையில் பொருட்களை டெலிவரி செய்யவும் தனித்திட்டம், உழவரைத் தேடி வேளாண்மைத் திட்டம், கூட்டுறவு பயிர்க்கடன் – குறுகிய காலக்கடன் வழங்க என ரூ.20,500 கோடி இலக்கு, வேளாண் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்க, டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி இப்படி உழவர் பெருமக்கள் மகிழும் வகையில் சுமார் ரூ.45,661 கோடி அளவுக்கு நம் திராவிட மாடல் அரசின் வேளாண்மை பட்ஜெட் அமைந்துள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.

    உழவர் வாழ்வு செழிக்கட்டும். வேளாண்மைத்துறையிலும் தமிழ்நாட்டின் சாதனைகள் தொடரட்டும்!" அவர் என்று தெரிவித்துள்ளார்.



  • Mar 15, 2025 15:20 IST

    பவன் கல்யாணுக்கு கனிமொழி பதிலடி 

    "மொழித் தடைகளைத் தாண்டி திரைப்படங்களை பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது" என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு தி.மு.க நாடாளுமன்றக்குழு தலைவர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். 

     



  • Mar 15, 2025 15:20 IST

    மாசாணி அம்மன் கோயில் நிதி - அரசாணை திரும்பப் பெறப்படும்

    "மாசாணி அம்மன் கோயில் நிதியில் இருந்து ஊட்டியில் ரிசார்ட் கட்ட பிறப்பிக்கப்பட்ட அரசாணை திரும்பப் பெறப்படும்'' என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.



  • Mar 15, 2025 14:50 IST

    தமிழ்நாடு தேர்வர்களுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் 

    ரயில் உதவி ஓட்டுநர் தேர்வுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்வர்கள் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் எஞ்சின் உதவி ஓட்டுநர் பணிக்கு தமிழ்நாட்டில் 493 காலிப் பணியிடங்கள் இருப்பதாக 2024 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது.

    ரயில் உதவி ஓட்டுநர் தேர்வுக்கு தமிழ்நாட்டில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். CBT2 என்ற 2-ம் கட்ட கணினி முறைத் தேர்வு 19-ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தெலுங்கானாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.



  • Mar 15, 2025 14:47 IST

    தாய், குழந்தையை முட்டி தூக்கி வீசிய பசுமாடு - பரபரப்பு சி.சி.டி.வி 

    சென்னை கொளத்தூரில் சாலையில் நடந்து சென்ற தாய் மற்றும் குழந்தையை பசுமாடு முட்டி தூக்கி வீசய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசுமாடு முட்டி தூக்கிய வீசியது தொடர்பான பரபரப்பு சி.சி.டி.வி காட்சிகள் வெளியாக்கியுள்ளன. அருகில் இருந்தவர்கள் மாட்டை விரட்டியதால் அவர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர். 



  • Mar 15, 2025 14:16 IST

    வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு - அண்ணாமலை விமர்சனம் 

    பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டுமாக ஒன்றை தாக்கல் செய்திருக்கிறது திமுக அரசு. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். திமுகவின் பட்ஜெட் மொத்தமுமே பொய்களும் புரட்டுகளுமாகத்தான் இருக்கிறது. இந்தப் பொய்களைப் பொது இடங்களில் ஒளிபரப்பினால், மக்கள் வந்து பார்ப்பார்கள் என்று யார் இவர்களிடத்தில் கூறினார்கள் என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாக, மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததுதான் மிச்சம். 

    கடந்த ஆண்டு வெளியிட்ட வேளாண் பட்ஜெட்டில், 2022 - 2023 ஆம் ஆண்டில், தமிழகத்தில் மொத்த சாகுபடிப் பரப்பு, 155 லட்சம் ஏக்கர் என்று கூறியிருந்தார்கள். இந்த ஆண்டு பட்ஜெட்டில், அது, 151 லட்சம் ஏக்கராக உள்ளது என்று கூறியிருக்கிறார்கள். சாகுபடிப் பரப்பு, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 4 லட்சம் ஏக்கர் குறைந்திருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால், அதை மறைக்க, நான்கு ஆண்டுகளுக்கு முன்புள்ள 2019 – 2020 சாகுபடிப் பரப்பை விட இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏன்? தமிழக மக்களை எத்தனை முட்டாள்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது திமுக?

    பயிர்க்கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று கடந்த பிப்ரவரி மாதம் நாங்கள் கூறியபோது, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு. பெரியகருப்பன் வந்து அம்புலிமாமா கதைகளைக் கூறிச் சென்றார். இன்றைய வேளாண் பட்ஜெட்டில், பயிர்க்கடன் ரூ.1,774 கோடி இன்னும் தள்ளுபடி செய்யப்படவில்லை என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. வெறும் பொய்யிலும் புரட்டிலும் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. திமுக அமைச்சர்களுக்கு, இப்படிக் கூசாமல் பொய் சொல்ல வெட்கமாகவே இருக்காதா?

    நெல்லுக்கு ரூ.2,500, கரும்புக்கு ரூ.4,000 குறைந்தபட்ச ஆதார விலை என்ற வாக்குறுதி எல்லாம் வெறும் பேச்சளவிலேயே போய்விட்டது. விவசாயிகளைத் தொடர்ந்து வஞ்சித்து வருவதையே வேலையாக வைத்திருக்கும் திமுக அரசின் இந்த வேளாண் பட்ஜெட், வெறும் காகிதக் குவியலே தவிர வேறொன்றுமில்லை." என்று அவர் பதிவிட்டுள்ளார். 



  • Mar 15, 2025 14:00 IST

    சென்னையில் பெண் மருத்துவருக்கு கத்திக்குத்து

    சென்னை வளசரவாக்கத்தில் பெண் மருத்துவர், வீட்டில் தனியாக இருந்த நிலையில் கத்தியால் குத்தி தாக்குதல் நடந்துள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்த மருந்தை விற்பனை செய்வதுபோல் நாடகமாடி பெண் மருத்துவரிடம் கொள்ளை முயற்சியில் ஒரு கும்பல் ஈடுபட்டுள்ளது.



  • Mar 15, 2025 13:56 IST

    பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி

    பள்ளிகளில் சமையல் உதவியாளர் காலி பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. 8,997 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை தொகுப்பூதியத்தின் அடிப்படையில் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. சமையல் உதவியாளர் பணியிடங்களை மட்டும் மாதம் ரூ.3000 வீதம் தொகுப்பூதியத்தில் நிரப்பிட அரசு உத்தரவு அளித்துள்ளது.



  • Mar 15, 2025 13:54 IST

    தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும்: வானிலை ஆய்வு மையம்

    தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் வறண்ட வானிலையே நிலவும். 18-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 15, 2025 13:53 IST

    ’’வேளாண் பட்ஜெட் பெயரில் பொய், புரட்டு’’

    வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யையும், புரட்டையும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். சாகுபடி பரப்பு 2022-23-ல் 155 லட்சம் ஏக்கர்; இம்முறை 151 லட்சம் ஏக்கர் என பட்ஜெட்டில் குறிப்பிட்டுள்ளனர். சாகுபடி பரப்பு கடந்த முறையைவிட 4 லட்சம் ஏக்கர் குறைந்துள்ளது.



  • Mar 15, 2025 13:48 IST

    வேளாண்மை பட்ஜெட் நிறைவு: 1 மணி நேரம் 42 நிமிடங்கள் உரை

    இன்று காலை 9.30 மணிக்கு 2-ம் நாள் கூட்டம் தொடங்கியது. 9.31 மணிக்கு உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண்மை பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையை வாசிக்க தொடங்கினார். 11.13 மணிக்கு அவர் உரையை நிறைவு செய்தார். 1 மணி நேரம் 42 நிமிடங்களுக்கு வேளாண்மை பட்ஜெட் உரை வாசிக்கப்பட்டது. 



  • Mar 15, 2025 13:41 IST

    தமிழ்நாட்டின் கடனைப் பற்றி பேச அண்ணாமலைக்கு என்ன உரிமை இருக்கிறது?- செல்வப்பெருந்தகை

    தமிழ்நாட்டின் கடன் பற்றி பேசுகிற அண்ணாமலை மத்திய அரசின் கடனைப் பற்றி பேச மறுக்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 1947 முதல் 2014 வரை இந்தியாவின் மொத்த கடன் 67 ஆண்டுகளில் ரூபாய் 55 லட்சம் கோடிதான். ஆனால், 2025-ல் 11 ஆண்டுகளில் ரூபாய் 185 லட்சம் கோடி கடனாக உயர்ந்திருக்கிறது என்று தனது அறிக்கையில் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.



  • Mar 15, 2025 13:38 IST

    இதுகுறித்து பேச வேண்டாம் - செங்கோட்டையன்

    எடப்பாடி பழனிசாமியின் கருத்து குறித்த கேள்விக்கு, இதுகுறித்து பேச வேண்டாம் என செங்கோட்டையன் பதிலளித்துள்ளார். சந்திப்பைத் தவிர்ப்பது குறித்து செங்கோட்டையனிடமே கேளுங்கள் என எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், செங்கோட்டையன் பதிளித்துள்ளார்.



  • Mar 15, 2025 13:36 IST

    ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடம் சென்று கேளுங்கள்: எடப்பாடி பழனிசாமி

    என்னை சந்திக்காமல் ஏன் தவிர்க்கிறார் என்று செங்கோட்டையனிடம் சென்று கேளுங்கள். அ.தி.மு.க.-வில் நான் தலைவர் அல்ல, சாதாரண தொண்டன் மட்டுமே என செங்கோட்டையன் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.



  • Mar 15, 2025 13:34 IST

    ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு: உயரதிகாரிகளை சந்திக்க தேர்தல் ஆணையம் திட்டம்

    வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைப்பது தொடர்பாக, உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம் மற்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) ஆகியவற்றின் உயர் அதிகாரிகளை தேர்தல் ஆணைய அதிகாரிகள் அடுத்த வாரம் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Mar 15, 2025 13:19 IST

    முத்தான திட்டங்களுடன் வேளாண் பட்ஜெட் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    பல்வேறு முத்தான திட்டங்களுடன் ரூ.45,661 கோடிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்வு மேம்படும் வகையில், பட்ஜெட்டில் திட்டங்கள் உள்ளன. அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வேளாண், உழவர் நலத்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துகள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு



  • Mar 15, 2025 12:56 IST

    "மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் உருவாக்கப்படும்"

    ``100 புதிய மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை உருவாக்க ரூ.2.75 கோடி ஒதுக்கீடு'' - அமைச்சர் எம்.ஆர்.பன்னீர்செல்வம்



  • Mar 15, 2025 12:42 IST

    நுண்ணீர்ப் பாசனத் திட்டம் ரூ.1168 கோடி

    ``நீர் ஆதாரத்தை அதிகரிக்க ரூ.1168 கோடியில் நுண்ணீர்ப் பாசன திட்டம் செயல்படுத்தப்படும்'' - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • Mar 15, 2025 12:38 IST

    துவரை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை

    அரசு மேற்கொண்ட சீரிய முயற்சியால் துவரை உற்பத்தி ஒரு லட்சத்து 59 ஆயிரம் ஏக்கராக உயர்ந்துள்ளது. துவரை உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை. - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்



  • Mar 15, 2025 12:14 IST

    "எண்ணெய் வித்துக்கள் இயக்கம்''

    எண்ணெய் வித்து பயிர்களை அதிகரிக்கும் விதமாக 108 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்காச்சோள உற்பத்தியை அதிகரித்திடும் விதமாக 40 கோடி நிதியில் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு



  • Mar 15, 2025 12:13 IST

    ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப்பயிர் திட்டம்

    தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் ஏக்கரில் மாற்றுப்பயிர் திட்டம். 12.50 கோடி ரூபாய் நிதியில் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Mar 15, 2025 11:55 IST

    கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு

    100 முன்னோடி உழவர்களை ஜப்பான், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு கண்டுணர் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 



  • Mar 15, 2025 11:53 IST

    இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

    வேளாண் பட்ஜெட்டில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டதை வரவேற்று, தஞ்சாவூரில் விவசாய சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்



  • Mar 15, 2025 11:38 IST

    கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்கு ரூ.5.62 கோடி நிதி ஒதுக்கீடு

    மலட்டுத்தன்மையுள்ள கால்நடைகளின் இனப்பெருக்கத்திற்கு ரூ.5.62 கோடி நிதி ஒதுக்கீடு; மின்சாரத்தினால் இயங்கும் 3.000 புல் நறுக்கும் கருவிகளுக்கு மானியம் வழங்கிட ரூ.4.83 கோடி நிதி ஒதுக்கீடு. மாவட்ட கால்நடைப்பண்ணைகளில் மாட்டுச் சாணம் கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு ரூ.3.5 கோடி ஓதுக்கீடு என்று வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 



  • Mar 15, 2025 11:34 IST

    "பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு"

    டெல்டா அல்லாத மாவட்டங்களில் பயிர் சாகுபடி அதிகரிக்க சிறப்பு தொகுப்பு திட்டம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டில் 102 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



  • Mar 15, 2025 11:32 IST

    ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

    பாரம்பரிய மலரான மல்லிகை சாகுபடியை அதிகரிக்க ரூ.1.60 கோடி நிதி ஒதுக்கீடு; நறுமண ரோஜா மலர்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு - வேளாண்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்



  • Mar 15, 2025 11:28 IST

    ரூ.45,661.44 கோடி நிதி ஒதுக்கீடு

    வரும் நிதியாண்டில் வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ.45,661.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



  • Mar 15, 2025 11:16 IST

    ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன்

    உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு (FPO) ரூ.10 லட்சம் வரை பொருளீட்டு கடன் வழங்கப்படும் என அறிவிப்பு



  • Mar 15, 2025 11:16 IST

    5 வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை!

    "நல்லூர் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை செய்யப்படும். இதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு” - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உழவர் நலத்துறை அமைச்சர்



  • Mar 15, 2025 11:09 IST

    ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு

    வேளாண் துறைக்கு 2025-26ஆம் ஆண்டு பட்ஜெட்டில் ரூ. 45,661 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 



  • Mar 15, 2025 11:07 IST

    இதுவரை 54,000 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.

    இதுவரை 54,000 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை 10, 346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழ்நாடு அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 2025-26-ல், ரூ. 1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் மூலம் ரூ. 297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 



  • Mar 15, 2025 10:57 IST

    50 உழவர் சந்தைகளில் 10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு

    50 உழவர் சந்தைகள் தேர்வு செய்யப்பட்டு 10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும். வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும். உழவர்களுக்கு 10 லட்சம் வரை முதலீட்டு கடன் வழங்கப்படும். 



  • Mar 15, 2025 10:56 IST

    4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு

    4 ஆண்டுகளில் 35 வேளாண் விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிதாக 5 விளைபொருளுக்கு புவிசார் குறியீடு பெற ரூ. 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நல்லூர் வரகு, நத்தம் புளி , காரைக்குடி கொய்யா , கப்பல்கட்டி முருங்கை, வேதாரண்யம் முல்லை ஆகிய 5 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறபப்டும். 



  • Mar 15, 2025 10:45 IST

    வெண்ணெய் பழம் சாகுபடி ஊக்குவிப்பு

    500 ஏக்கரில் வெண்ணெய் பழம் சாகுபடி ஊக்குவிக்கப்படும். மின்சாரம் இணைப்பு இல்லாத உழவர்களுக்கு சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகள் வழங்க ரூ. 24 கோடி ஒதுக்கீடு. மின் மேட்டார் பம்பு செட்டுகள் அமைக்க மானியம் வழங்க ரூ. 1.50 கோடி நிதி ஒதுக்கீடு.



  • Mar 15, 2025 10:44 IST

    வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள், இ-வாடகை செயலி மூலம் வழங்கப்படும்

    5,000 வேளாண் இயந்திரம் மற்றும் கருவிகள், இ-வாடகை செயலி மூலம் வழங்கப்படும். உழவர்கள் குறைந்த வாடகையில் இயந்திரம் பெற, ரூ. 17 கோடியில் வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்கப்படும்.



  • Mar 15, 2025 10:38 IST

    பலா சாகுபடியை ஊக்குவிக்க நிதி ஒதுக்கீடு

    பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு. பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு.



  • Mar 15, 2025 10:37 IST

    ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம்

    இந்திய அளவில் முந்திரி ஏற்றுமதியில் தமிழ்நாடு 2ம் இடம். இதனை ஊக்குவிக்க, ரூ. 10 கோடியில் உழவர்கள் மேம்பட முந்திரி வாரியம் அமைக்கப்படும். பனை சாகுபடியை ஊக்குவிக்க பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ. 1.60 கோடி நிதி ஒதுக்கீடு. பலா மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் புதிய பலா சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு.



  • Mar 15, 2025 10:35 IST

    சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை

    2,500 ஏக்கரில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மிளகாய் சாகுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.



  • Mar 15, 2025 10:34 IST

    மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் மல்லி செடி வளர்க்க ஊக்குவிப்பு

    மதுரை மல்லிக்கான சிறப்பு திட்டத்தின் கீழ் 3,000 ஏக்கரில் மல்லி செடி வளர்க்க ஊக்குவிக்கப்படும். ரோஜா மலர் சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு.



  • Mar 15, 2025 10:31 IST

    வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு

    பாரம்பரிய காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க, ரூ. 2.40 கோடியில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். வெங்காயத்தை சேமித்து வைத்து விற்பனை செய்ய கிடங்கு அமைக்க மானியம் வழங்க ரூ. 18 கோடி ஒதுக்கீடு.



  • Mar 15, 2025 10:31 IST

    5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்க திட்டம்

    காய்கறிகள் விதை தொகுப்பு 15 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பழச் செடி தொகுப்பு 9 லட்சம் குடும்பங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். பயிர் வகை விதை தொகுப்பு 1 லட்சம் இல்லங்களுக்கு 75% மானியத்தில் வழங்கப்படும். புரதச்சத்து நிரைந்த காளாண் உற்பத்தியை ஊக்குவிக்க ஊரக பகுதியில் 5 காளாண் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: