/indian-express-tamil/media/media_files/2025/03/15/isI8XwPgnAs0McEMnkvH.jpg)
களைகட்டும் கச்சத்தீவு திருவிழா: ராமேஸ்வரத்தில் புகழ்பெற்ற கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், கூட்டு பிரார்த்தனையில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
-
Mar 15, 2025 22:31 IST
ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோயில் திருவிழா
மதுரையில், ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் கோயில் திருவிழா விமரிசையாக நடைபெற்றது. அதன்படி, சொரிக்காம்பட்டியில் கரும்பாறை முத்தையா கோயில் திருவிழாவை முன்னிட்டு, 125 ஆடுகளை பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
-
Mar 15, 2025 18:43 IST
தமிழ்நாட்டில் சேலத்தில் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவு
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக சேலத்தில் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது, தெலுங்கானா அடிலாபாத்தில்,105 டிகிரி ஃபாரன்ஹீட், கேரளா பாலக்கட்டில், 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தாக்கத்தால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
-
Mar 15, 2025 17:50 IST
சாலையில் தீப்பிடித்து எரிந்த பைக்
கோவை மாவட்டம் சூலூர் அருகே வடமாநில இளைஞர்கள் சென்ற இருசக்கர வாகனம் சாலையில் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் படுகாயம்
-
Mar 15, 2025 16:40 IST
127வது ஊட்டி மலர்கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தீவிரம்
நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் வரும் மே மாதம் தொடங்கும், 127வது மலர்கண்காட்சிக்காக 7.5 லட்சம் மலர் நாற்றுக்களும், 40,000 மலர் தொட்டிகளையும் தயார் செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் இன்று தொடங்கியது.
-
Mar 15, 2025 14:50 IST
திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கிய இ-பைக்
கரூரில் இ-பைக் ஒன்றில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியுள்ளது. பல அடி உயரத்திற்கு எழும்பிய புகையால்அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து அணைத்துள்ளனர்.
-
Mar 15, 2025 14:23 IST
லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ
கோவை பேரூரில் லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த வி.ஏ.ஓ-வை கையும் களவுமாக போலீசார் பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
Mar 15, 2025 14:06 IST
மதுரை: அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் மறியல்
மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு உதவிபெறும் கல்லூரி ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 ஆண்டுகளாக தங்களுக்கு அரசு ஊதியம் வழங்க வில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
-
Mar 15, 2025 13:30 IST
த.வெ.க. நிர்வாகி உயிரிழப்பு - விஜய் நேரில் அஞ்சலி
தமிழக வெற்றிக் கழக நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மாரடைப்பால் உயிரிழந்தார். சஜி உடலுக்கு அஞ்சலி செலுத்த தவெக தலைவர் விஜய் ஸ்ரீபெரும்புதூர் செல்கிறார்.
-
Mar 15, 2025 13:24 IST
உதகையில் ரிசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அரசு அறிவிப்பு
மாசாணி அம்மன் கோயில் நிதியிலிருந்து உதகையில் ரிசார்ட் கட்டப்படும் என்ற அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. பொள்ளாச்சி ஆனைமலை மாசாணி அம்மன் கோயில் காணிக்கை தொகை ரூ.100 கோடி வங்கியில் வைப்புத் தொகையாக உள்ளது. ரூ.1.4 கோடி ரூபாய் எடுத்து ஊட்டியில் ரிசார்ட் கட்ட அரசு முடிவு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.
-
Mar 15, 2025 13:23 IST
காஞ்சிபுரத்தில் ரவுடி வசூல் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது
காஞ்சிபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி வசூல் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் திருகாளிமேடு பகுதியில் 11ம் தேதி ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். வழக்கில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தப்ப முயன்று கீழே விழுந்த 4 பேருக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது. கை, கால் முறிவு ஏற்பட்ட 4 பேரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
-
Mar 15, 2025 12:48 IST
திருப்பதியில் பௌர்ணமி கருட சேவை - குவிந்த கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பௌர்ணமி கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி தினத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட வாகன புறப்பாடு நடைபெறுவது வழக்கமாகும். இந்நிலையில் பௌர்ணமியையொட்டி, தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய உற்சவருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களின் பக்தி
கோஷங்களுக்கு இடையே கோவில் மாட வீதிகளில் கருட வாகன புறப்பாடு நடைபெற்றது. அப்போது மாட வீதிகளில் காத்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். -
Mar 15, 2025 12:29 IST
மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கருத்து.. டுடோரியல் கல்லூரி ஆசிரியர் கைது
சேலத்தில், மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்ட தனியார் டுடோரியல் கல்லூரி ஆசிரியரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். கோரிமேட்டை சேர்ந்த ஆசிரியர் ஒருவர், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 10 மொழிகளை கற்று மாணவர்கள் தங்களது திறனை வளர்த்து கொள்ள வேண்டுமென கூறியதையும், மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தும் தனது சமூக வலைதள கணக்குகளில் கருத்து பதிவிட்டார். இதுதொடர்பான அறிக்கை சேலம் மாநகர கமிஷனருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆசிரியரை ஜாமினில் வெளி வரமுடியாத 5 பிரிவுகளின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
-
Mar 15, 2025 12:24 IST
தவெக திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி மாரடைப்பால் மரணம்
நெல்லை வடக்கு: தவெக மாவட்ட செயலாளர் மரணம் தவெக திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளர் சஜி மாரடைப்பால் மரணம். கட்சி பணிகளுக்காக சென்னையில் இருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
-
Mar 15, 2025 12:18 IST
மாணவனை உடற்கல்வி ஆசிரியர் அடித்ததாக உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம்
விழுப்புரம் அருகே வி.அகரம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு மாணவனை உடற்கல்வி ஆசிரியர் அடித்ததாக உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை நடத்தி உடற்கல்வி ஆசிரியர் செங்கேனியை சஸ்பெண்ட் செய்து உத்தரவு. பள்ளி தலைமை ஆசிரியரும் பணியிட மாற்றம்
-
Mar 15, 2025 11:52 IST
ரவுடி வசூல் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது
காஞ்சிபுரம்: திருகாளிமேடு பகுதியில் கடந்த 11ம் தேதி ரவுடி வசூல் ராஜா கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் நான்கு பேருக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி.
-
Mar 15, 2025 11:15 IST
இன்றும், நாளையும் வெப்பம் அதிகரிக்கும்..!
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மார்ச் 17 - 19 வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.