Coimbatore, Madurai, Trichy News Updates: தனது இடத்தில் குப்பை கொட்டிய பேரூராட்சி: சொந்த செலவில் சுத்தம் செய்யும் நடிகர் வடிவேலு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vadivelu
  • Mar 20, 2025 21:48 IST

    திருச்செந்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்றி கோரி மனு: 12 வாரத்தில் முடிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

    திருச்செந்தூரில் அனைத்து தெருக்களையும் அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, பெயர் பலகை வைக்கக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தெருவின் நீள, அகல விவரங்களுடன் பெயர் பலகை வைக்க உத்தரவிடக் கோரி தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணையில், தெருக்களை அளந்து, பெயர் பலகை வைக்கும் பணி நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பெயர் பலகை வைக்கும் பணியை 12 வாரத்தில் முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு பொதுநல வழக்கை முடித்துவைத்தது. 



  • Mar 20, 2025 20:33 IST

    நீலகிரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட ஆண் யானை

    நீலகிரி உதகை அருகே சிக்காரா லீக்வுட் எஸ்டேட் பகுதியில் 48 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. உடல்நலக்குறைவால் உயிரிழந்திருக்கலாம் என பிரேதப் பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Advertisment
  • Mar 20, 2025 20:32 IST

    லாரி மோதி கல்லூரி மாணவர் பலி 

    வேலூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் காட்பாடியை சேர்ந்த நகீம் என்ற கல்லூரி மாணவர் மரணமடைந்தார். படுகாயத்துடன் மீட்கப்பட்ட மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,விபத்து குறித்து சத்துவாச்சாரி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Mar 20, 2025 20:28 IST

    தனது இடத்தில் குப்பை கொட்டிய பேரூராட்சி: சொந்த செலவில் சுத்தம் செய்யும் நடிகர் வடிவேலு

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடிகர் வடிவேலுவுக்கு சொந்தமான இடத்தில் பேரூராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி வருவதாக பலமுறை புகார் அளித்தும் பேரூராட்சி செயல் அலுவலர் கண்டுகொள்ளாத நிலையில், குப்பையை அகற்றி தர வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் நடிகர் வடிவேலு தனது சொந்த செலவில் குப்பையை அகற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Mar 20, 2025 19:25 IST

    கன்னியாகுமரி பகுதியில் டாஸ்மாக்கில் இருந்து காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல்

    மார்த்தாண்டம், கன்னியாகுமரி டாஸ்மாக்கில் இருந்து காலாவதியான தண்ணீர் பாட்டில்கள் பறிமுதல் செய்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ள நிலையில், காலாவதியான உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழித்துள்ளனர்.



  • Mar 20, 2025 18:56 IST

    மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது வழக்கு

    தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசுப் பள்ளியில் மாணவனை அடித்ததாக ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு மாணவன் நகம் வெட்டாமல் பள்ளிக்கு வந்ததால் உயிரியல் ஆசிரியர் கருத்தப்பாண்டி, மாணவனை அடித்ததாக புகார். இதனை அடுத்து ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

     



  • Mar 20, 2025 18:28 IST

    சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை - 20 ஆண்டு சிறை தண்டனை விதிப்பு 

    விருதுநகர் மாவட்டம்  ஸ்ரீவில்லிபுத்தூரில் சிறுமியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை அளித்த நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ல் சிறுமியை கடத்திச் சென்று குழந்தை திருமணம் செய்து பாலியல் தொல்லை தந்ததாக அழகு பாண்டி மீது வழக்கு தொடரப்பட்டது. அழகு பாண்டிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.3000 அபராதம் விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.



  • Mar 20, 2025 18:16 IST

    ராமநாதபுரம்: ஃபைபர் படகில் தத்தளித்த 2 இலங்கை மீனவர்கள் மீட்பு 

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே கடலில் ஃபைபர் படகில் தத்தளித்த இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்கள் 2 பேரையும் தேவிபட்டினத்துக்கு அழைத்துச் சென்று கடலோர காவல் குழும போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Mar 20, 2025 16:33 IST

    ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் வேதிப்பொருட்கள் குஜராத் செல்கிறது - தூத்துக்குடி கலெக்டர் தகவல்

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து அகற்றப்படும் வேதிப்பொருட்கள், குஜராத் கொண்டு செல்லப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார். ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் பொருட்கள் குஜராத்தில் உள்ள டாமன் - டையூ பகுதிக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.



  • Mar 20, 2025 15:51 IST

    மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் லாரி மீது கார் மோதி விபத்து; ஒருவர் மரணம், 7 பேர் காயம்

    மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் லாரி மீது கார் மோதி விபத்து ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்



  • Mar 20, 2025 15:32 IST

    செங்கோட்டையில் பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து

    தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் அரசு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது



  • Mar 20, 2025 14:44 IST

    மயிலாடுதுறை: சாலை விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அரசுக் கல்லூரி மாணவர்கள் இருவர், ஒரே பைக்கில் இன்று காலை கல்லூரிக்குச் செல்கையில் எதிரே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Mar 20, 2025 14:27 IST

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் வேதிப்பொருட்கள் அகற்றும் பணி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் விரிவாக்க பணிக்காக ஏற்கனவே கொன்டுவரப்பட்ட வேதிப்பொருட்களை அகற்றும் பணி தொடங்கி உள்ளது. 3 கண்டெய்னர் லாரிகள் ஏற்கனவே ஆலைக்கு சென்ற நிலையில், ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 80 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள பொருட்கள், வேதிப்பொருட்களை அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.



  • Mar 20, 2025 14:23 IST

    வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆய்வு

    வேலூர் சரக டிஐஜி அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் திடீரென ஆய்வு மேற்கொண்டார். பதிவுகள் அறை, நிர்வாகப் பிரிவு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டு, டிஐஜி தேவராணி உடன் ஆலோசனை மேற்கொண்டார்.



  • Mar 20, 2025 13:39 IST

    திருச்செந்தூர்-நெல்லை பயணிகள் ரயில் 25 நாட்களுக்கு ரத்து

    திருச்செந்தூர்- நெல்லை  இடையே இன்று முதல் 25 நாட்களுக்கு ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. ஏப்ரல் 13-ஆம் தேதி வரை ரயில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. மற்ற ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 20, 2025 13:33 IST

    ஜாகிர் உசேன் கொலை வழக்கு - நெல்லை உதவி ஆணையர் சஸ்பெண்ட்

    ஓய்வுபெற்ற எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதற்காக, நெல்லை மாநகர காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இவ்வழக்கில் நேற்று, ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



  • Mar 20, 2025 13:01 IST

    வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு பிறகே அனுமதி

    ரவுடி ஜான் கொலை எதிரொலி - நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு. 2 இடங்களில் தடுப்புகள் அமைத்து சோதனை செய்யும் போலீசார்



  • Mar 20, 2025 12:39 IST

    சேலம் ரவுடி ஜான் கொலை வழக்கு- 2 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண்

    முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜீவகன் உள்பட 2 பேர் ஈரோடு நீதிமன்றத்தில் சரண். ஏற்கனவே நேற்றைய தினம் மூன்று பேரை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீசார். மேலும் ஐந்து பேரை கைது செய்தது காவல்துறை. ரவுடி ஜான் கொலை வழக்கில் தற்போது வரை 11 பேர் கைதாகியுள்ளனர்



  • Mar 20, 2025 12:38 IST

    எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

    எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. சோதனையில் ஈடுபட்டுள்ள 5க்கும் மேற்பட்ட அதிகாரிகள். சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் பாதுகாப்பு உடன் சோதனை நடத்தும் அமலாக்கத்துறை. பழ வியாபாரியிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை



  • Mar 20, 2025 12:12 IST

    ஜாகிர் உசேன் கொலை வழக்கு - நெல்லை உதவி ஆணையர் சஸ்பெண்ட்

    “ஓய்வு பெற்ற SI ஜாகிர் உசேன் கொலை வழக்கில் நடவடிக்கை எடுக்க தவறியதற்காக, நெல்லை மாநகர காவல் உதவி ஆணையராக இருந்த செந்தில்குமார் பணியிடை நீக்கம்! (இவ்வழக்கில் நேற்று, ஆய்வாளர் கோபாலகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.



  • Mar 20, 2025 11:47 IST

    முன்னாள் எம்பி உதவியாளர் கொலை-உடல் தோண்டியெடுப்பு

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே முன்னாள் எம்பியின் உதவியாளர் குமார் கொன்று புதைக்கப்பட்ட சம்பவம் உடல் தோண்டியெடுப்பு; குமாரை கொலை செய்து புதைத்த ஒலக்கூர் கிராமத்தில் செஞ்சி வட்டாட்சியர் ஏழுமலை ஆய்வு குமார் காணாமல்போனதாக தகவல் கிடைத்த நிலையில் அவரை கடத்திக் கொன்றது அம்பலம்; கொலை தொடர்பாக ரவி, விஜய், செந்தில் ஆகியோரை கைது செய்து காவல் துறை விசாரிக்கிறது



  • Mar 20, 2025 11:26 IST

    மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    "மதுரை குற்ற சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஈரோடு கொலை சம்பவம் தொடர்பாக 3 பேரை காவல்துறை கைது செய்ய முயற்சி செய்தபோது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பழிவாங்கும் நோக்கத்தில் ஈரோடு சம்பவம் நடந்துள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல் துறை சுதந்திரமாக செயல்பட்டு யாராக இருந்தாலும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு



  • Mar 20, 2025 11:10 IST

    மருதமலை கோயிலில் ரூ. 37 கோடியில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    மருதமலை கோயிலில் ரூ. 37 கோடியில் பெருந்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மருதமலை கோயிலில் உலகமே வியக்கும் வகையில் பிரமாண்ட முருகன் சிலை அமைக்கப்படவுள்ளது.எதிர்காலத்தில் கோவை வடக்கு தொகுதியில் நிச்சயம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார். 



  • Mar 20, 2025 10:36 IST

    சேலம் ரவுடி ஈரோட்டில் வெட்டி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இதுவரை 9 பேர் கைது

    ஈரோட்டில் ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன். அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவக்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 



  • Mar 20, 2025 09:58 IST

    மதுரையில் அரியவகை உயிரினங்கள் பறிமுதல்

    இலங்கையில் இருந்து மதுரைக்கு விமானத்தில் கடத்தப்பட்ட அரியவகை வன உயிரினங்களான ஆமை, பாம்பு மற்றும் பல்லி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. வேலூரை சேர்ந்த பயணி ஒருவரின் உடைமைகளை சோதனை செய்தபோது 52 ஆமைகள், 4 பல்லி மற்றும் 8 குட்டி பாம்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கடத்திவரப்பட்ட உயிரினங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



  • Mar 20, 2025 09:17 IST

    ரயிலை கவிழ்க்க சதியா? போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது. மங்களூர் செல்லும் பரசுராமன் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று அதிகாலை குமரியில் இருந்து புறப்பட்டது. இரணியல் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை பார்த்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். இது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Mar 20, 2025 09:16 IST

    நள்ளிரவில் அராஜகம்- இருவருக்கு மாவுக்கட்டு

    மதுரை வில்லாபுரத்தில் சாலையில் நிறுததப்பட்டிருந்த வாகனங்களைபோதையில் அடித்து நொருக்கிய 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரிடமிருந்து தப்ப முயன்றபோது வீட்டின் சுவர் ஏறி குதித்ததால் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டுள்ளது. 



  • Mar 20, 2025 09:13 IST

    பாம்பு பிடி வீரர் பலி

    கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாம்புபிடி வீரர் சந்தோஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



  • Mar 20, 2025 09:12 IST

    பாஜகவினர் 5 பேர் கைது

    தமிழ்நாடு அரசுக்கு எதிராக பதாகைகளுடன் காரில் வந்த திருவள்ளூர் மாவட்ட பாஜகவினர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய 5 பேரையும் வரும் ஏப்ரல் 2ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 



  • Mar 20, 2025 09:11 IST

    விஷ சாராய வழக்கு-காவலர்களுக்கு மீண்டும் பணி

    கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவலர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. விருத்தாசலம் காவல் ஆய்வாளராக கவிதா, கடலூர் மங்களம்பேட்டை ஆய்வாளராக பாண்டி செல்வி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.



  • Mar 20, 2025 09:10 IST

    தப்பியோடிய கைதி துப்பாக்கியால் சுட்டுப்பிடிப்பு

     சிதம்பரம் அண்ணாமலை நகரில் தப்பியோடிய கைதி ஸ்டீபன் துப்பாக்கியால் சுட்டிபிடிக்கப்பட்டார். 



  • Mar 20, 2025 09:08 IST

    தமிழகத்தில் மழை

    தமிழகத்தில் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இன்று காலை 10 மணிக்குள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.



Tamil News Live Update news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: