/indian-express-tamil/media/media_files/2025/03/27/K4jy1fvf0z5P6JxYyL0O.jpg)
மேட்டூர் அணை நீர் நிலவரம்: இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 1235 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108.22 அடியாகவும், நீர் இருப்பு 75.905 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
-
Mar 27, 2025 05:41 IST
அ.தி.மு.க-வை உறவாடி கெடுக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வின் நீண்டகால திட்டம் - தமிமுன் அன்சாரி
தஞ்சையில் ம.ஜ.க தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேட்டி: “அ.தி.மு.க-வை உறவாடி கெடுக்க வேண்டும் என்பதுதான் பாஜகவின் நீண்டகால திட்டம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அ.தி.மு.க-வை அழித்துவிட்டு அந்த இடத்துக்கு பா.ஜ.க வரவேண்டும் என்று தொடர்ந்து கங்கனம் கட்டி செயல்படுகிறது. இதனால், அ.தி.மு.க எவ்வளவு பெரிய பாதிப்பை சந்தித்தது என அதன் தலைவர்களுக்கு தெரியும். ட்தெரிந்தபின் அதே பா.ஜ.க-வுடன் அவர்கள் கூட்டணி சேர்கிறார்கள் என்று சொன்னால், அது அ.தி.மு.க தொண்டர்களுடைய மனநிலைக்கு எதிராக இருப்பதாகத்தான் நான் கருதுகிறேன்.” என்று கூறியுள்ளார்.
-
Mar 26, 2025 18:35 IST
10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
இன்று இரவு 7 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, தேனி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
-
Mar 26, 2025 17:40 IST
கராத்தே வீரர் ஹூசைனி உடல் மதுரையில் அடக்கம்
ரத்த புற்றுநோய் காரணமாக உயிரிழந்த கராத்தே வீரரும், நடிகருமான ஷிஹான் ஹூசைனி உடல், மதுரையில் அடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதி ஊர்வலத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
-
Mar 26, 2025 16:36 IST
சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் பெண் பயிற்சி மருத்துவர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர் கைது
சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், இரவு நேரத்தில் பெண் பயிற்சி மருத்துவரின் முகத்தை துணியால் மூடி, தாக்குதல் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்
-
Mar 26, 2025 16:12 IST
அரசு பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு
செங்கல்பட்டு அரசு பள்ளி கட்டிடத்தில் மாணவர்களுக்கு வழங்க இருந்த 53 இலவச மடிக்கணினிகள் திருடப்பட்டுள்ளன. மடிக்கணினிகள் திருடப்பட்டது தொடர்பாக 12ம் வகுப்பு மாணவர்கள் 11 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
-
Mar 26, 2025 15:15 IST
டயாபர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
திருப்பூர் அருகே புதிதாக அமைய உள்ள டயாபர் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சாலையில் தார்பாயை விரித்து நாற்காலிகளை போட்டு மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்
-
Mar 26, 2025 14:29 IST
சாத்தான்குளம் வழக்கு - முன்னாள் எஸ்.ஐ. மனு மீண்டும் தள்ளுபடி
2020ம் ஆண்டில் சாத்தன்குளம் தந்தை - மகன் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில், சிறையில் உள்ள முன்னாள் எஸ்.ஐ. ரகு கணேசனின் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணையை 2 மாதங்களில் முடிக்கவும் கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
-
Mar 26, 2025 13:29 IST
காதல் விவகாரம்- சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த அதிர்ச்சி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே காதல் விவகாரத்தில் சிறுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்த பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் அவரது நண்பர் முத்தையா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 17 வயதான சிறுமி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
Mar 26, 2025 13:25 IST
நாமக்கல்: அ.தி.மு.க. - தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகராட்சியில் நகர மன்ற கூட்டத்தின்போது தி.மு.க.-அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆவரங்காடு நகராட்சி துவக்க பள்ளி 50-வது பொன்விழா அழைப்பி்தழில் முன்னாள் அமைச்சர் தங்கமணி பெயரை ஓரமாக அச்சிட்டதாக கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுக நிர்வாகிகளின் பெயர் வேண்டுமென்றே ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
-
Mar 26, 2025 12:45 IST
பள்ளத்தில் பைக் உடன் விழுந்த இளைஞர் காயம்
நாகர்கோவில் மாநகரட்சிப் பகுதியில் தண்ணீர் கசிவு பிரச்னைக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், பைக் உடன் விழுந்த இளைஞர் காயம். பள்ளங்கள் தோண்டினால் உரிய தடுப்புகள் வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தல்
-
Mar 26, 2025 12:34 IST
போக்சோ வழக்கில் சகோதரர்களுக்கு ஆயுள் சிறை தண்டனை
கடந்த 2023ல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் அண்ணன், தம்பிகளான இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு குற்றவாளிகளான கருப்புசாமி (31), ரங்கநாதன் (26) இருவருக்கும் ஆயுள் தண்டனையுடன் தலா ரூ.1 லட்சம் அபராதமும் விதிப்பு
-
Mar 26, 2025 12:06 IST
பக்தர்கள் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவர் காயம்
திண்டுக்கல்: சேணன்கோட்டை அருகே நேற்றிரவு சாலையில் பழனிக்கு பாத யாத்திரையாக சென்ற பக்தர்கள் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இருவர் காயம். ஆத்திரமடைந்த பாத யாத்திரை பக்தர்கள், இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை கடுமையாக தாக்கியதால் பரபரப்பு
-
Mar 26, 2025 11:32 IST
எஸ்.ஐ. ஜாகீர் உசைன் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி மனு
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஜாகீர் உசைன் கொல்லப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மகன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு. மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு கொலை வழக்கின் விசாரணை நிலையை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு, 8 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
-
Mar 26, 2025 11:31 IST
நெல்லை மாநகராட்சியில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்.
நெல்லை மாநகராட்சியில் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல். வருவாய் ரூ.403.70 கோடியாகவும், செலவினங்கள் ரூ.400.94 கோடியாகவும் மதிப்பீடு செய்து ரூ.2.77 கோடி உபரி நிதியுடன் பட்ஜெட் தாக்கல். வார்டு மேம்பாட்டு நிதி ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்வு. தாமிரபரணி ஆறு மாசுபடுவதைத் தடுக்க ரூ.55 கோடி நிதி ஒதுக்கீடு
-
Mar 26, 2025 11:28 IST
காதல் ஜோடிக்கு வாடகை வீடு எடுத்து பெற்றோரே லிவிங் ரிலேஷன்சிப்பில் இருக்க வைத்த விசித்திரம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில், அஜிலின் ரோமாரியோ என்ற 21 வயது இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இளைஞரை காணவில்லை என அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடிய நிலையில், திருப்பதிசாரம் பகுதியில், வாடகை வீட்டில் 17 வயது சிறுமி ஒருவருடன் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்த போது, இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் காதல் மலர்ந்ததாகவும், சிறுமி 18 வயதை எட்டியதும் திருமணம் செய்து வைப்பதாக கூறி, சிறுமியின் பெற்றோர் வாடகை வீடு எடுத்து இருவரையும் தங்க வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஏற்கனவே இதே சிறுமி அளித்த புகாரின் பேரில் சில மாதங்களுக்கு முன் வேறொரு இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைதானதும் குறிப்பிடத்தக்கது.
-
Mar 26, 2025 11:22 IST
ரயில் பாலத்தை ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
ராமேஸ்வரம் பாம்பனில் புதிய ரயில் பாலத்தை ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி -தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ராமேஸ்வரத்தில் பேட்டி
-
Mar 26, 2025 10:55 IST
கிராணைட் லாரி விபத்து
நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில், ராட்சத கிராணைட் கற்கள் ஏற்றி வந்த லாரியின் முன்பக்க டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்து சாலைத்தடுப்பில் மோதி விபத்து, சாலையிலும், சாலையோர பள்ளத்திலும் கிராணைட் கற்கள் விழுந்தன லாரியின் ஓட்டுநர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். கற்கள் விழுந்ததிலும் யாருக்கும் பாதிப்பு இல்லை
-
Mar 26, 2025 09:42 IST
நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் அதிரடி
சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் சுருக்குமடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்த பூம்புகார் மீனவர்கள் 7 பேரை, நாகை மீன்வளத்துறை அதிகாரிகள் பிடித்தனர். இவ்விவகாரத்தில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது நாகை மீனவர்கள் ஏற்கனவே புகாரளித்திருந்த நிலையில், நாகை துறைமுகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
-
Mar 26, 2025 09:22 IST
நாமக்கல் முட்டை விலை
நாமக்கல் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.15 ஆக நீடிக்கிறது.
-
Mar 26, 2025 09:21 IST
ஒகேனக்கல் நீர் நிலவரம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று விநாடிக்கு 2000 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர் வரத்து அதிகரிப்பால் காவிரி ஆற்றில் உள்ள மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீரின் வேகமும் அதிகரித்துள்ளது.
-
Mar 26, 2025 09:21 IST
தங்கக் கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தீர்ப்பு
கோவையில் கடந்த 2003 ஆம் ஆண்டு நகைக் கடை ஊழியரிடம் 2 கிலோ தங்கக் கட்டிகள் கொள்ளையடித்த சம்பவத்தில் 22 ஆண்டுகளாக நடந்த வழக்கில் மாவட்ட முதன்மை சார்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த 6 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை ஒருவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
Mar 26, 2025 09:17 IST
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 1235 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108.22 அடியாகவும், நீர் இருப்பு 75.905 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.