Coimbatore, Madurai, Trichy News Updates: உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் காவலர் அடித்து கொலை

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
murder police

வெயில் எச்சரிக்கை: வேலூர்,திருப்பத்தூர்,தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் 31 ஆம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.  

  • Mar 27, 2025 23:38 IST

    உசிலம்பட்டி அருகே மதுக்கடையில் காவலர் அடித்து கொலை

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே, மதுக்கடையில் முத்துக்குமார் என்ற காவலர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது அருந்தும் போது கஞ்சா வழக்கில் கைதானவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவலர் முத்துக்குமார் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார். தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே காவலர் முத்துக்குமார் உயிரிழந்தார். அவரது உறவினர் ராஜாராம் படுகாயம் அடைந்துள்ளார்.



  • Mar 27, 2025 19:35 IST

    தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவிப்பு

    கோவையில் ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததையடுத்து, தென் மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் தொடரும் என அறிவித்துள்ளனர்.



  • Advertisment
  • Mar 27, 2025 19:30 IST

    நோயாளிகளிடம் பைபிளைப் பறித்து குப்பைத் தொட்டியில் வீசிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது

    கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் இருந்த பைபிள் புத்தகத்தைப் பறித்து குப்பைத் தொட்டியில் வீசிய இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் குரு மூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



  • Mar 27, 2025 18:57 IST

    வானில் ஒலித்த பலத்த சத்தம் – திருவாரூர் ஆட்சியர் விளக்கம்

    திருவாரூர் அருகே சத்தம் காரணமாக அதிர்வும் ஏற்பட்டதால் மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி அச்சத்துடன் இருந்தனர். இந்தநிலையில் இந்திய விமானப்படை வீரர்கள் மேற்கொண்ட பயிற்சி காரணமாக சத்தம் எழுந்தது. பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரை இந்திய விமானப்படை பயிற்சி நடந்தது என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்



  • Advertisment
    Advertisements
  • Mar 27, 2025 18:09 IST

    வேலூர் மாவட்டத்தில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு

    தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது



  • Mar 27, 2025 17:43 IST

    தூத்துக்குடியில் லைசன்ஸ் புதுப்பிக்காமல் செயல்பட்டு வந்த 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல்

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் லைசன்ஸ் புதுப்பிக்காமல் செயல்பட்டு வந்த 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 20 கிரஷர் ஆலைகள், அனுமதியின்றி இயங்குவது தெரியவரவே, அனைத்திற்கும் சீல் வைக்க நடவடிக்கை என கனிம வளத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Mar 27, 2025 15:58 IST

    மாணவ அமைப்பு - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    மதுரையில் மாணவிகளுக்கான சீருடை தைக்க ஆண் டெய்லர்களை பயன்படுத்திய புகாரில் தனியார் பள்ளியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது, மாணவ அமைப்பு - போலீசார் இடையே தள்ளுமுள்ளு நடந்தது. இதையடுத்து,  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.  

    இதனிடையே, மாணவி புகார் அடிப்படையில் பள்ளி  ஆசிரியை, 2 டெய்லர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 



  • Mar 27, 2025 15:45 IST

    கட்டிடங்கள் இன்றி மரத்தடியில் கல்வி பயிலும் மாணவர்கள்

    புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தில் பொதுமக்கள்  ஒன்று கூடி சுமார் ரூ.12 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் உள்ள கட்டிடம் கட்டினர். மேலும் வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படவில்லை என கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர். 



  • Mar 27, 2025 15:12 IST

    4 கிரஷர் ஆலைகளுக்கு சீல் வைப்பு

     தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் லைசன்ஸ் புதுப்பிக்காமல் செயல்பட்டு வந்த 4 கிரஷர் ஆலைகளுக்கு சீல் வைப்பு. மேலும், மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் மொத்தம் 20 கிரஷர் ஆலைகள், அனுமதியின்றி இயங்குவது தெரியவரவே, அனைத்திற்கும் சீல் வைக்க நடவடிக்கை என கனிம வளத்துறையினர் தகவல்



  • Mar 27, 2025 14:57 IST

    மரத்தடியில் கல்வி பயிலும் மாணவர்கள்

    மணமேல்குடி அருகே பொன்னகரம் மீனவ கிராமத்தில் பொதுமக்கள் ஒன்று கூடி சுமார் ரூ.12 லட்சம் மதிப்பில் 2 வகுப்பறைகள் உள்ள கட்டிடம் கட்டினர். மேலும் வகுப்பறை இல்லாததால் மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அவலம் பெற்றோர் கோரிக்கை. 



  • Mar 27, 2025 14:55 IST

    மாணவ அமைப்பு - போலீசார் இடையே தள்ளுமுள்ளு

    மாணவிகளுக்கான சீருடை தைக்க ஆண் டெய்லர்களை பயன்படுத்திய புகாரில் தனியார் பள்ளியை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம். மாணவி புகார் - ஆசிரியை, 2 டெய்லர்கள் மீது போக்சோ



  • Mar 27, 2025 14:54 IST

    மதுரை மாவட்ட எஸ்பி அலுவலக பணியாளருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் போலி துப்பாக்கியை காட்டி 7 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதுரை மாவட்ட எஸ்.பி. அலுவலக ஊழியருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.



  • Mar 27, 2025 14:35 IST

    மதுபோதையில் வந்தவரை டெஸ்ட் எடுக்க பாடாய்பட்ட போலீசார்

    மதுரை மாநகர் பகுதியில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிவதற்கான வாகன தணிக்கையை போக்குவரத்து காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். திருப்பரங்குன்றத்தில் இருந்து பழங்காநத்தம் நோக்கிவந்த கார் அழகப்பன் நகர் பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தடுப்புக்கம்பிகளை உடைத்தெறிந்தபடி எதிர்ப்புற சாலைக்கு சென்று நின்றது. பின்னர் காரை மீட்டு போக்குவரத்தை சரிசெய்த போலீசார், காரை ஓட்டிவந்த சிவா என்பவரை விசாரித்தனர். மதுபோதையின் அளவீடு குறித்து பார்ப்பதற்காக Breath Analizer மூலமாக நீண்டநேரம் போராடி டெஸ்ட் எடுத்தனர்.



  • Mar 27, 2025 13:33 IST

    திருநெல்வேலியில் அண்ணா நகர் பகுதி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க உகந்ததல்ல

    திருநெல்வேலியில் அண்ணா நகர் பகுதி மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க உகந்ததல்ல என சாத்தியக் கூறு அறிக்கை; சேலத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்குதற்கான அறிக்கை பரிசீலனையில் உள்ளது. நிதி சுமையால் திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை பின்னர் தொடர முடிவு; திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் கொள்கை விளக்க குறிப்பில் தகவல்



  • Mar 27, 2025 13:31 IST

    ஆண் டெய்லரை வைத்து அளவீடு - போக்சோவில் வழக்கு

    மதுரையில் பள்ளி சீருடைக்கு ஆண் டெய்லரை வைத்து மாணவிகளுக்கு அளவீடு எடுத்ததாகப் புகார்; 10ஆம் வகுப்பு மாணவி மறுத்த போதும் ஆசிரியையே கட்டாயப்படுத்தி அளவீடு எடுக்க வைத்ததாக புகார் அடுத்த ஆண்டு இந்தப் பள்ளியில் படிக்கப் போவதில்லை என மாணவி கூறியும் சீருடைக்கு அளவெடுத்துள்ளனர்; இதுதொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காததால் போலீசில் புகார்; ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது போக்சோவில் வழக்குப்பதிவு



  • Mar 27, 2025 13:23 IST

    “மிக விரைவில் திருச்சி - டெல்லி நேரடி விமானப் போக்குவரத்துச் சேவை” -துரை வைகோ எம்.பி., தகவல்

    “மிக விரைவில் திருச்சி - டெல்லி நேரடி விமானப் போக்குவரத்துச் சேவைக்கான அறிவிப்பை Air India Express நிறுவனம் வெளியிடும் என எதிர்நோக்கி உள்ளேன். கடந்த மார்ச் 22 அன்று திருச்சி - சென்னை விமான சேவையை நான் தொடங்கி வைத்தேன். அதேபோல வரும் 30ம் தேதி திருச்சி - மும்பை விமான சேவை தொடங்கப்படவிருக்கிறது”



  • Mar 27, 2025 12:52 IST

    சிங்காநல்லூர் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் - மதிப்பீடு குறிப்புகள் முன்மொழிவு

    கோவை சிங்காநல்லூரில் 28 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச கிரிக்கெட் அரங்கம் அமைக்கும் திட்டத்திற்கான மதிப்பீடு குறிப்புகளை, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் மைதானங்களுடன் ஒப்பிட்டு ஆலோசகர்கள் முன்மொழிந்துள்ளனர். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Mar 27, 2025 12:31 IST

    நீலகிரி: புலி தாக்கி இளைஞர் உயிரிழப்பு

    நீலகிரி மாவட்டம் உதகை அருகே புலி தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார். காணவில்லை என குடும்பத்தினர் தேடி வந்த நிலையில், இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறை தீவிரப்படுத்தி உள்ளனர்.

     

     



  • Mar 27, 2025 11:46 IST

    கொடநாடு வழக்கு - சிபிசிஐடி அலுவலகத்தில் ஜெ. வளர்ப்பு மகன் ஆஜர் 

    கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கோவை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் சுதாகரன் நேரில் ஆஜரானார்.



  • Mar 27, 2025 11:17 IST

    சேலம்: டிராக்டர் மீது லாரி மோதி 2 பேர் பலி

    சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே டிராக்டர் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Mar 27, 2025 10:29 IST

    ஈச்சர் லாரி விபத்து

    கோவை மதுக்கரை பைபாஸில் சாலையில் ஈச்சரும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் அப்பளம் போல் ஈச்சர் நொறுங்கியது. நல்வாய்ப்பாக ஈச்சர் ஓட்டிவந்த ராம்ராஜன் என்பவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். 



  • Mar 27, 2025 09:35 IST

    கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு இபிஎஸ் அஞ்சலி

    நெல்லையில் உள்ள அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளார் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 



  • Mar 27, 2025 09:33 IST

    ஆட்சியர் ஆய்வு - வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்

    நாமக்கல் அருகே, புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்த வேண்டாம் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. 



  • Mar 27, 2025 09:32 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேர் கைது

    எல்லை தாண்டிச் சென்று மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. ஒரு விசைப்படகுடன் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Mar 27, 2025 09:30 IST

    வெயில் எச்சரிக்கை

    வேலூர்,திருப்பத்தூர்,தருமபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று முதல் 31 ஆம் தேதி வரை வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும் என வானிலை ஆர்வலர் ஹேமச்சந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை தேவையின்றி வெளியில் வர வேண்டாம் எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.  



Tamilnadu Live News Udpate news updates

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: