Coimbatore, Madurai, Trichy News Highlights: தமிழில் குடமுழுக்கு; தமிழக அரசுக்கு ஐகோர்ட் அறிவுறுத்தல்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Madras High Court

ஆடு விற்பனை அமோகம்: ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு ஆட்டு சந்தைகளில் நள்ளிரவிலேயே ஆடுகள் விற்றுத் தீர்ந்தன. ஒரு சில இடங்களில் நல்ல விலைக்கு ஆடுகள் விற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். 

  • Mar 28, 2025 17:37 IST

    தமிழில் குடமுழுக்கு; ஐகோர்ட் அறிவுறுத்தல்

    எதிர்காலத்தில் கோயில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்துவது குறித்து அரசு உரிய முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும் என மருதமலை கோயில் குடமுழுக்கு தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது



  • Mar 28, 2025 16:12 IST

    உதகையில் புலி தாக்கி இளைஞர் மரணம்: குடும்பத்தாருக்கு எம்.பி. ஆ.ராசா ஆறுதல்

    உதகை: புலி தாக்கி உயிரிழந்த கேந்தர் குட்டன் என்பவரின் வீட்டுக்குச் சென்ற நீலகிரி எம்.பி. ஆ.ராசா, அவரின் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்து தனது சொந்த நிதியில் இருந்து ரூ.1 லட்சம் நிவாரணமாக வழங்கினார். தமிழ்நாடு அரசு சார்பில் நேற்று ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், கேந்தர் குட்டனின் சகோதரரின் மகள் பெங்களூரில் சட்டம் படித்துவரும் நிலையில், கல்விச் செலவுகளுக்காக மாவட்ட திமுக சார்பில் ரூ.2 லட்சம் வழங்கவும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
  • Mar 28, 2025 14:48 IST

    தஞ்சை மாநகராட்சியில் ரூ.15.38 கோடி உபரி நிதியுடன் பட்ஜெட் தாக்கல்

    தஞ்சை மாநகராட்சியில் ரூ.15.38 கோடி உபரி நிதியுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளிலேயே அதிக உபரி நிதியுடன் பட்ஜெட் தாக்கல் என மேயர் ராமநாதன் பெருமிதம் தெரிவித்தார். பெரிய கோயில் தேரோட்டத்திற்கு தேரோடும் 4 வீதிகளிலும் புதிய சாலைகள் போடப்படும் என மேயர் ராமநாதன் அறிவிப்பு வெளியிட்டார்.



  • Mar 28, 2025 13:58 IST

    உசிலம்பட்டி போலீஸ் கொலை - 4 தனிப்படைகள் அமைப்பு

    உசிலம்பட்டி காவலர் கொலை வழக்கில் மதுரை எஸ்.பி தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. காவலர் கொலை சம்பவத்தில் உசிலம்பட்டி பகுதியில் முகாமிட்டு கொலையாளிகளை பிடிக்க தனிப்படை தேடுதல் வேட்டை நடத்தி வருகிறது. 



  • Advertisment
    Advertisements
  • Mar 28, 2025 12:30 IST

    தஞ்சை மாநகராட்சியில் ரூ.15.38 கோடி உபரி நிதியுடன் பட்ஜெட் தாக்கல்.

    தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளிலேயே அதிக உபரி நிதியுடன் பட்ஜெட் தாக்கல் என மேயர் ராமநாதன் பெருமிதம். பெரிய கோயில் தேரோட்டத்திற்கு தேரோடும் 4 வீதிகளிலும் புதிய சாலைகள் போடப்படும் என மேயர் ராமநாதன் அறிவிப்பு



  • Mar 28, 2025 12:29 IST

    கோவை மாநகராட்சியில் வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல்

    வரவு ரூ.4617 கோடி, செலவினம் ரூ.4757 கோடி என ரூ.139.8 கோடிக்கு பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது



  • Mar 28, 2025 11:58 IST

    உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை - உச்ச நீதிமன்றம்

    ஊட்டி, கொடைக்கானலில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதித்த உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை - உச்ச நீதிமன்றம். அனைத்து சுற்றுச்சூழல் விவகாரங்களையும் கருத்தில் கொண்டே இந்த கட்டுப்பாட்டை உயர் நீதிமன்றம் விதித்திருக்கிறது என நீதிபதிகள் சூரியகாந்த் அமர்வு கருத்து



  • Mar 28, 2025 11:19 IST

    அரசு பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 16 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே கடத்தூர் அரசுப்பள்ளியில் காலை உணவை சாப்பிட்ட 16 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களை உடனடியாக ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் போலீசார் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர்.



  • Mar 28, 2025 10:50 IST

    போதைப்பொருள் கடத்தல்

    கோவையில் உயர் ரக போதைப் பொருட்கள் விற்ற 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுமார் ரூ.70 லட்சம் மதிப்பிலான போதைப் பொருட்கள் மற்றும் 3 கார்கள் பறிமுதல் கைதானவர்களில் மகாவிஷ்ணு என்பவரின் தாயார், பொருளாதார குற்றப்பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியில் உள்ளார். 



  • Mar 28, 2025 10:49 IST

    திருமணஞ்சேரி பரிமேளேஸ்வர் பெரியநாயகி கோயிலில் திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை

    புதுக்கோட்டை திருமணஞ்சேரி பரிமேளேஸ்வர் பெரியநாயகி கோயிலில் திருமண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படுமா? எம்.எல்.ஏ முத்துராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இக்கோயிலில் 10 முதல் 15 திருமணங்கள் நடக்கின்றன. மானியக் கோரிக்கையில் திருமண மண்டபம் கட்டப்படும் அறிவிப்பு வெளியாகும் என அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளார்.



  • Mar 28, 2025 10:04 IST

    மேட்டூர் அணை நீர் நிலவரம்

    மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 1559 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108.31 அடியாகவும், நீர் இருப்பு 76.031 டி.என்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்கான அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 



  • Mar 28, 2025 10:01 IST

    சிறுத்தை பிடிக்க கூண்டு வைப்பு

    கோவை மதுக்கரையை அடுத்த முருகன்பதி அருகே, தங்கராஜ் என்ற விவசாயியின் தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டை, நேற்றிரவு சிறுத்தை தாக்கிக் கொன்ற நிலையில், சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது.



  • Mar 28, 2025 09:59 IST

    ஆடு விற்பனை அமோகம்

    ரமலான் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு ஆட்டு சந்தைகளில் நள்ளிரவிலேயே ஆடுகள் விற்றுத் தீர்ந்தன. ஒரு சில இடங்களில் நல்ல விலைக்கு ஆடுகள் விற்றதாகவும் வியாபாரிகள் தெரிவித்தனர். 



news updates Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: