/indian-express-tamil/media/media_files/2025/03/30/8ICCwq5nMg0ZmNb3TXXH.jpg)
படகு போக்குவரத்து: கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள், படகுப் போக்குவரத்து செய்ய திரண்டிருந்த நிலையில் சேவை நிறுத்தப்பட்டது.
-
Mar 30, 2025 18:38 IST
பரமக்குடி: சாலை விபத்தில் தலைமைக் காவலர் பலி
பரமக்குடி அருகே நென்மேனியில் இரு கார்கள் நேருக்குநேர் மோதிய விபத்தில் போலீஸ் ஏட்டு ஆஷிக் அகமது உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
Mar 30, 2025 18:15 IST
தென்காசி - செங்கோட்டை இடையே ரயில்கள் ரத்து
தென்காசி - செங்கோட்டை இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வருகிற 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.
-
Mar 30, 2025 17:23 IST
நீலகிரி வனப்பகுதியில் ராட்சத காட்டுத்தீ
நீலகிரி மாவட்டம் முதுமலை ஒட்டிய ஆச்சக்கரை பகுதியில் ஏராளமான மூங்கில் மரங்களில் இன்று திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. மரங்கள் அனைத்தும் காய்ந்துள்ள நிலையில் சுமார் 50 மீட்டர் உயரத்திற்கு தீ கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
-
Mar 30, 2025 16:47 IST
நாகை: மீன் பெட்டியில் மது பாட்டில்கள் கடத்தல்
நாகையில், நூதன முறையில் மீன் பெட்டிக்குள் வைத்து கடத்திவரப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான புதுச்சேரி மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது
-
Mar 30, 2025 16:43 IST
கோவை: இஸ்லாமியர்களுக்கு அமைச்சர் செந்தில்பாலாஜி நலத்திட்ட உதவி
கோவையில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, 600-க்கும் மேற்பட்ட உலமாக்களுக்கு ரூ.5,000 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி வழங்கினார்.
-
Mar 30, 2025 15:18 IST
வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல்; ஆரணி அருகே பரபரப்பு
ஆரணி அருகே வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெண் உட்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. நிலத்தகராறில் முன்விரோதம் காரணமாக கொலைவெறி தாக்குதல் நடந்ததாக கூறப்படும் நிலையில், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
-
Mar 30, 2025 14:22 IST
ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.65 கோடி மோசடி; பா.ஜ.க முன்னாள் நிர்வாகிகளான கணவன், மனைவி கைது
கள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2.65 கோடி மோசடியில் ஈடுபட்டதாக பா.ஜ.க முன்னாள் நிர்வாகிகளான கணவன், மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர்
-
Mar 30, 2025 13:43 IST
ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்த விக்ரம், துஷாரா
திண்டுக்கல் மாவட்டம், நத்தம்பட்டியில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதனை நடிகர்கள் விக்ரம் மற்றும் துஷாரா ஆகியோர் நேரில் கண்டு ரசித்தனர். இப்போட்டியில் ஏராளமான காளைகள் மற்றும் மாடிபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
-
Mar 30, 2025 12:40 IST
மரம் முறிந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு
கரூர் அருகே புலியூர் பகுதியில், கடந்த 27-ஆம் தேதி 11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவர் மீது சாலையோரம் இருந்த மரம் முறிந்து விழுந்தது. இந்த மாணவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
-
Mar 30, 2025 11:52 IST
விஷ வாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே இரசாயனம் ஏற்றி வந்த லாரியை சுத்தம் செய்த இரண்டு தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். ஹைதராபாத்தில் இருந்து அலுமினியம் குளோரைடு ஏற்றி வந்த லாரி, திருப்பூரில் சரக்கை இறக்கி விட்டு, காலிங்கராயன்பாளையம் பகுதியில் சுத்தம் செய்யப்பட்ட போது இந்த சம்பவம் நிகழ்ந்தது
-
Mar 30, 2025 10:43 IST
ஜெய்ப்பூர் - சென்னை ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்தது
ஜெய்ப்பூரில் இருந்து சென்னை வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
Mar 30, 2025 10:42 IST
7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
போளூர், செங்கம், கன்னியாகுமரி, சங்ககிரி, கோத்தகிரி, அவினாசி, பெருந்துறை ஆகிய 7 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
Mar 30, 2025 09:39 IST
திருச்செந்தூர் கோயிலில் சிறப்பு தரிசனம் ரத்து
கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதியில்லை. ஞாயிறு, செவ்வாய், வியாழக்கிழமைகளில் சிறப்பு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
-
Mar 30, 2025 09:23 IST
சீட்டு நடத்தி ஏமாற்றிய இருவர் கைது
கள்ளக்குறிச்சியில் தீபாவளி சீட்டு மற்றும் ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடிக்கு மேல் பண மோசடி செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சூர்யமகாலட்சுமி - சிவக்குமார் இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பாஜகவைச் சேர்ந்த சூர்யமகாலட்சுமி முன்னாள் நகர்மன்ற தலைவராகவும், சிவக்குமார் மாவட்ட பாஜக தரவு தள மேலாண்மை முன்னாள் துணைத் தலைவராகவும் இருந்தனர்.
-
Mar 30, 2025 09:22 IST
கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கரடி
நெல்லை மாவட்டத்தில் குடியிருப்பு பகுதியில் அச்சுறுத்தி வந்த கரடி, கூண்டில் சிக்கியது.
-
Mar 30, 2025 09:22 IST
ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் களைகட்டிய விற்பனை
ரமலான் பண்டிகையை முன்னிட்டு கோவை பஜாரில் இறுதிநேர விற்பனை தொடங்கியது. கடந்த 5 நாட்களில் சுமார் ரூ.15 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தன.
-
Mar 30, 2025 09:20 IST
குமரி படகு போக்குவரத்து
கன்னியாகுமரியில் கடல் நீர் மட்டம் தாழ்வு காரணமாக திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டபத்திற்கு படகுப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. விடுமுறை தினத்தை ஒட்டி ஏராளமான சுற்றுலாப் பயணிகள், படகுப் போக்குவரத்து செய்ய திரண்டிருந்த நிலையில் சேவை நிறுத்தப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.