/indian-express-tamil/media/media_files/2025/03/31/9hJg4IxiaHGwIxVYzElb.jpg)
-
Mar 31, 2025 21:37 IST
விபத்தில் தந்தை, மகள் உயிரிழப்பு
விருதுநகரில் இருந்து சிவகாசிக்கு சென்ற ஆட்டோ மீது வேன் மோதியதில் ஆட்டோ ஓட்டுநரான செல்வம் மற்றும் அவரது மகள் சுமித்ரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், வேன் ஓட்டுநர் உதயகுமார் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
-
Mar 31, 2025 20:38 IST
மதுரையில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை
மதுரையில் ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். மதுரையில் கடந்த 22-ஆம் தேதி கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இவரது கொலை வழக்கில் தொடர்புடைய நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் தற்போது என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
-
Mar 31, 2025 17:12 IST
ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் - நாளை முதல் அமல்
கோடை விடுமுறைக்கு பொதுமக்கள் அதிகளவில் சுற்றுலா செல்லும் நிலையில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், ஊட்டி, கொடைக்கானலுக்கு இ-பாஸ் - நாளை முதல் அமல் படுத்தப்பட உள்ளது.
-
Mar 31, 2025 17:10 IST
மகளிர் உரிமைத் தொகை - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன தகவல்
"கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற நிறைய பேர் மனு அளித்துள்ளனர், இன்னும் 3 மாதங்களில் இதற்கான விண்ணப்பம் பெறப்பட்டு தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்" என்று விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அருகே அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.
-
Mar 31, 2025 16:10 IST
மோடி தமிழகம் வருகை - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் மோடி ஏப்ரல் 6ல் தமிழகம் வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமானப்படை அதிகாரிகள், மண்டபம் முகாம் அருகே உள்ள ஹெலிபேடில் ஹெலிகாப்டரை இறக்கி சோதனை நடத்தி வருகின்றனர்.
-
Mar 31, 2025 15:32 IST
வீடுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தம்
கூட்டப்புளி கிராமத்தில் கடல் அரிப்பால் பாதிப்பு என வீடுகளில் கருப்பு கொடி கட்டி மீனவர்கள் அடையாள வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 200க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. கூட்டப்புளியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
-
Mar 31, 2025 15:18 IST
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில் படுகாயம் அடைந்த இளைஞர் மரணம்
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற எருதுவிடும் விழாவில் படுகாயம் அடைந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெருமாபட்டு கிராமத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற எருதுவிடும் விழா காளை முட்டியதில் மாடப்பள்ளி பகுதியை சேர்ந்த இளைஞர் ரஞ்சித்குமார் படுகாயம் அடைந்தார். குரிசிலாப்பட்டு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
-
Mar 31, 2025 14:20 IST
வரன் தேடுவோரிடம் ரூ.89 லட்சம் மோசடி : தேனியில் 4 பேர் கைது
தேனியில் வரன் தேடுவோரிடம் பெண்கள் பெயரில் `சாட்டிங்' செய்து 89 லட்சம் ரூபாய் மோசடி செய்த 4 பேர் தேனி மாவட்ட சைபர் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
-
Mar 31, 2025 14:13 IST
இருக்கும் இடத்தை விட்டு 7 கி.மீ. தாண்டி பட்டா: அமைச்சரிடம் பொதுமக்கள் வாக்குவாதம்
விழுப்புரம் அருகே இருக்கும் இடத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தூரத்தில் பட்டா வழங்க எதிர்ப்பு தெரிவித்து, ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா வழங்கும் விழாவிற்காக காத்திருந்த அமைச்சரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். விழுப்புரம் பவர் ஹவுஸ் சாலையில் 80 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்த மக்கள் 44 பேருக்கு 7 கி.மீ. தாண்டி திருப்பாச்சனுர் என்ற இடத்தில் பட்டா வழங்க உள்ளதால் ஏற்க மறுத்து வாக்குவாதம் நடைபெற்றது.
-
Mar 31, 2025 12:44 IST
'எம்புரான்' படத்திற்கு தேனி விவசாயிகள் எதிர்ப்பு
மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படத்திற்கு பெரியாறு - வைகை பாசன விவசாய சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முல்லைப் பெரியாறு அணை குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த காட்சிகளை நீக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
Mar 31, 2025 12:39 IST
பூசணிக்காய் சுற்றுவது எப்படி?
பூசணிக்காய் சுற்றுவது எப்படி என வடமாநில தொழிலாளிக்கு இந்தியில் பூந்தமல்லி எம்எல்ஏ பாடம் எடுத்தார். சென்னை அடுத்த காட்டுப்பாக்கத்தில் சமுதாய நலக்கூடம் அமைக்க பூமி பூஜை நடந்த நிலையில் இந்தியில் சொல்லிக் கொடுத்தார்.
-
Mar 31, 2025 12:38 IST
மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 103 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டுள்ளது. மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
Mar 31, 2025 12:37 IST
திமுகவை நினைக்காமல் யாராலும் இருக்க முடியாது - அமைச்சர் முத்துசாமி
திமுகவை நினைக்காமல் யாராலும் இருக்க முடியாது என்பதற்கு விஜய் பேச்சு உதாரணம். திமுகதான் முதன்மை என அனைத்து தரப்பினரும் கருதுகின்றனர். ஒரு கொள்கையை வகுத்து அதிலிருந்து அடி பிறழாமல் திமுக செல்கிறது. திசை திருப்புவதற்காக செய்கிறார்கள் என பேசுவது மிகுந்த வருத்தத்திற்குரிய ஒன்று என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
-
Mar 31, 2025 12:13 IST
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் உணவு விடுதி நடத்தி வந்த தம்பதி தற்கொலை
பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் உணவு விடுதி நடத்தி வந்த தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டனர். வால்பாறையைச் சேர்ந்த கார்த்தி அவரது மனைவி வினோபா தற்கொலை செய்து கொண்டார். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தம்பதியினர் தற்கொலை செய்துகொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
-
Mar 31, 2025 11:31 IST
அனைவரும் ஒன்றாக இணைந்து ரம்ஜான் சிறப்பு தொழுகை
மயிலாடுதுறையில் ஈகை பெருநாளாம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஆண்கள், பெண்கள் என அனைவரும் ஒன்றாக தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.
-
Mar 31, 2025 11:05 IST
நீர்மோர் பந்தல் திறப்பு
சேலம் சூரமங்கலம் பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
-
Mar 31, 2025 11:04 IST
செங்கோட்டையன் வீட்டில் குவிந்த நிர்வாகிகள்
கோபி அருகே குள்ளம்பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் இல்லத்திற்கு கட்சி நிர்வாகிகள் சென்றனர். மீண்டும் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாக வெளியான தகவலால், வழக்கத்தை விட அதிக அளவிலான நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு வந்து செல்கின்றனர்.
-
Mar 31, 2025 10:32 IST
இருசக்கர வாகனங்கள் மோதல்: கல்லூரி மாணவர் பலி
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர் பாலாஜி சம்பவ இடத்திலேயே பலியானார்.
-
Mar 31, 2025 09:05 IST
போதை மாத்திரைகள் விற்பனை - 22 பேர் அதிரடி கைது
நாமக்கல், குமாரபாளையம் அருகே போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 22 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். வெப்படை பகுதியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட மூவரிடமிருந்து 103 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
-
Mar 31, 2025 09:04 IST
திருப்பத்தூர்: வக்ஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நடந்த ரமலான் சிறப்பு தொழுகையில், வக்ஃபு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கையில் கருப்பு பட்டை அணிந்து இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
-
Mar 31, 2025 09:03 IST
ரமலான்: தி.மலையில் 5,000 இஸ்லாமியர்கள் தொழுகை
திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலையில் அமைந்துள்ள மைதானத்தில் ரமலான் பண்டிகையை ஒட்டி, 5,000-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.
-
Mar 31, 2025 09:02 IST
திருச்சி - யாழ்ப்பாணம் விமான சேவை தொடக்கம்
திருச்சி - யாழ்ப்பாணம் இடையே தினசரி விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்கியது. யாழ்ப்பாணம் சென்றடைந்த விமானத்திற்கு வாட்டர் சல்யூட் உடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
-
Mar 31, 2025 09:00 IST
திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ல் உள்ளூர் விடுமுறை
ஆழித் தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வரும் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.