Coimbatore, Madurai, Trichy News Highlights: நெல்லையில் ஏப்ரல் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Tirunelveli Junction
  • Apr 01, 2025 20:54 IST

    நெல்லையில் ஏப்ரல் 11-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

    நெல்லை மாவட்டத்திற்கு ஏப்ரல் 11-ஆம் தேதியன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 26-ஆம் தேதி வேலை நாளாக கருதப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சுகுமாறன் தெரிவித்துள்ளார்.



  • Apr 01, 2025 19:22 IST

    மோடி வருகை - 3 நாட்கள் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை

    ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தினை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். 6-ம் தேதி நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க ராமேஸ்வரம் வரும் பிரதமரின் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். 

    இந்த நிலையில், பிரதமர் மோடி வருகையை ஒட்டி ஏப்ரல் 4 முதல் 6 ஆம் தேதி வரை பாம்பன், மண்டபம், ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளத. 



  • Advertisment
  • Apr 01, 2025 19:10 IST

    கல்லூரி மாணவியின் மரணத்தில் மர்மம் - காதலன் புகார்

    கல்லூரி மாணவியின் மரணத்தில் மர்மம் உள்ளதாக காதலன் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் இடுகாட்டில் இருந்து உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் அரசு மருத்துவமனையில் மாணவியின் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 



  • Apr 01, 2025 19:03 IST

    நாமக்கல்லில் ஒரே நாளில் 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை - விவசாயிகள் மகிழ்ச்சி

    நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் ரூ. 3.80 கோடிக்கு மஞ்சள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைமையகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

    ஜேடர்பாளையம், சங்ககிரி, எடப்பாடி, கொளத்தூர், கொடுமுடி, துறையூர், தலைவாசல், கெங்கவல்லி ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மஞ்சள் மூட்டைகளை கொண்டு வந்திருந்தனர். விரலி மஞ்சள் ரூ.12,688 முதல் ரூ.16.399 வரையும், கிழங்கு மஞ்சள் ரூ.11,284 முதல் ரூ.13,569 வரையும், பனங்காளி ரூ.23,085 முதல் ரூ.26,599 வரையும் ஏலம் போனது. மொத்தம் 4,820 மூட்டைகள் ரூ.3.80 கோடிக்கு விற்பனையானதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • Apr 01, 2025 18:31 IST

    புதுப்பிக்கப்படும் அரண்மனை

    "திருச்சியில் 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராணி மங்கம்மாள் அரண்மனை ரூ.9 கோடி மதிப்பீட்டிலும், ராணி மங்கம்மாள் கொலு மண்டபம் என்னும் சொக்கநாத நாயக்கர் அரண்மனை ரூ.29
    கோடி மதிப்பீட்டிலும் புதுப்பிக்கப் படுகின்றன" என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 



  • Apr 01, 2025 17:03 IST

    சிசிடிவி கேமராக்களை திருப்பி விட்டு; டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருட்டு

    கிருஷ்ணகிரியில் டாஸ்மாக் கடை சுவரில் துளையிட்டு 16 பெட்டி மதுபானங்கள் திருடப்பட்டுள்ளது. கொள்ளையர்கள் சிசிடிவி கேமராக்களை வெவ்வேறு திசைகளுக்கு திருப்பி விட்டு கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Apr 01, 2025 15:29 IST

    கிருஷ்ணகிரியில் புதிய சுற்றுலா மாளிகை – அமைச்சர் எ.வ.வேலு

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் புதியதாக 1 சுற்றுலா மாளிகை, ரூ. 9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்



  • Apr 01, 2025 14:18 IST

    நீலகிரியில் அமலுக்கு வந்த இ-பாஸ் நடைமுறை

    நீலகிரிக்கு, வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வாரயிறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்ற நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. 



  • Apr 01, 2025 14:16 IST

    இளைஞர்களை தொந்தரவு செய்யாமல், கடைக்குள் சென்று சாப்பிட்ட காட்டு யானை

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே இரவு நேரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்த இளைஞர்களை தொந்தரவு செய்யாமல், கடைக்குள் இருந்து உணவுப் பொருட்களை சாப்பிட்ட காட்டு யானை. இளைஞர்கள்  கண்விழித்து யானையைக் கண்டதும் பதறியடித்து தப்பிச் சென்றனர்



  • Apr 01, 2025 12:29 IST

    திருச்சி நூலகத்திற்கு காமராஜர் பெயர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    திருச்சியில் கட்டப்பட்டு வரும் நூலகத்திற்கு காமராஜர் பெயர் சூட்டப்படும். மதுரை நூலகத்திற்கு கலைஞர் பெயர், கோவை நூலகத்திற்கு பெரியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.



  • Apr 01, 2025 12:03 IST

    கப்பலூரில் கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

    மதுரை கப்பலூர் சுங்கச்சாவடி அருகே பாலத்தின் வளைவில் திரும்பியபோது நிலைத்தடுமாறி கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததால் விபத்து ஏற்பட்டது. காயமடைந்த ஓட்டுநர் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து பாதிப்பை சீர்செய்யும் பணி தீவிரமடைந்துள்ளது.  



  • Apr 01, 2025 11:24 IST

    கோடை விடுமுறை எதிரொலி

    இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை கொடைக்கானல் செல்லும் வாகனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வார நாட்களில் 4000 வாகனங்களுக்கும், வாரயிறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும். சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெற்றுள்ளனரா என அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வாகனங்களை அனுமதிக்கின்றனர்.



  • Apr 01, 2025 11:22 IST

    கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

     புதுக்கோட்டை அடுத்த மாந்தாங்குடி அருகே முதலாம் பராந்தகச்சோழர் காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. 



  • Apr 01, 2025 10:49 IST

    சிவகங்கை: 200 ஆண்டு ஆலமரம் சாய்ந்தது!

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் மதுரை-ராமேஸ்வரம் நான்குவழிச் சாலை நடுவே இருந்த 200 ஆண்டு பழமையான தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயில் ஆலமரம் இரண்டாகப் பிளந்து கீழே விழுந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.



  • Apr 01, 2025 10:17 IST

    இ-பாஸ் இல்லாமல் காத்திருக்கும் வாகனங்கள்!

    ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் நள்ளிரவு முதல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தது. வார நாட்களில் நாள் ஒன்றுக்கு 4 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளன. சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதிக்கப்பட உள்ளன.



  • Apr 01, 2025 09:05 IST

    நீலகிரி, கொடைக்கானலில் இ-பாஸ் நடைமுறை அமல்

    நீலகிரி,கொடைக்கானலில் புதிய கட்டுப்பாடுகளுடன் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்தது. ஒவ்வொரு நாளும் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு அனுமதிக்கப்படுகிறது. இந்த கட்டுப்பாடு நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ் போன்ற அவசரகால வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நீலகிரி மாவட்ட எல்லைகளில் உள்ள கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகாணி உள்பட 14 சோதனைச் சாவடிகளில் இ-பாஸ் சோதனை செய்து வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. நீலகிரி வர விரும்புபவர்கள் https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வரலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    இதேபோல் கொடைக்கானலிலும் இந்த கட்டுப்பாடு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. உள்ளூர் வாகனங்களை தவிர தினமும் 4 ஆயிரம் வாகனங்கள் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட உள்ளன. வார இறுதி நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. எனவே கொடைக்கானல் நுழைவுவாயில் காமக்காபட்டி போலீஸ் சோதனைச்சாவடி, பழனி வழியாக அய்யும்புள்ளி சோதனைச்சாவடி ஆகிய சோதனைச்சாவடிகளில் இன்று முதல் இ-பாஸ் சோதனை தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. 

     



Trichy Madurai Coimbatore Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: