Coimbatore, Madurai, Trichy News Highlights: திருவாரூரில் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவு

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Local Holiday
  • Apr 02, 2025 21:00 IST

    திருவாரூரில் உள்ளூர் விடுமுறை

    திருவாரூரில் 7-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் ஆழித்தேரோட்டம் நடைபெறவுள்ளதால், விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்று நடைபெறவிருந்த 1 - 5ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள், 8-ஆம் தேதி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Apr 02, 2025 17:47 IST

    தருமபுரி அரசு கலைக்கல்லூரி மாணவிகள் குடிநீர், கழிப்பறை வசதி கேட்டு போராட்டம்; சீமான் ஆவேசம்

    நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் தங்களுக்கு முறையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி கேட்டு மாணவ, மாணவிகள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியுள்ளனர். தங்களால்தான் தமிழ்நாடு முன்னேறியது என்றெல்லாம் பெருமை பேசும் 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அடிப்படை தேவையான கழிவறை மற்றும் குடிநீர் வசதிகூட ஏற்படுத்தி தரவில்லை என்பது வெட்கக்கேடானது” என்று ஆவேசமாகக் கூறியுள்ளார்.



  • Advertisment
  • Apr 02, 2025 16:21 IST

    நீலகிரியில் தேனீக்கள் கொட்டி இளைஞர் உயிரிழப்பு

    நீலகிரி மாவட்டம் ஊசிமலை காட்சி முனை அருகே தேனீக்கள் கொட்டி கேரள மாநிலம் கள்ளிக்கோட்டையை சேர்ந்த சுற்றுலா பயணி ஜாபிர் என்பவர் மரணமடைந்துள்ளார்.



  • Apr 02, 2025 15:32 IST

    கடலூர் வழிப்பறி சம்பவம்: புதுச்சேரி ரவுடி சுட்டுக்கொலை

    கடலூரில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி வழிப்பறி செய்த சம்பவத்தில் தொடர்புடைய  புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த பிரபல ரவுடி விஜய், கடலூர் போலீசாரின் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். போலீசார் பிடிக்க முயன்ற போது ரவுடி விஜய் அரிவாளால் தாக்கியதால் தற்காப்புக்காக சுட்டுக்கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Apr 02, 2025 14:57 IST

    கடலூர் மாவட்டத்தில் அதிரடியாக ன்கவுண்டர்

    கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களை அரிவாளால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட விஜய் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சுற்றிவளைத்துப் பிடிக்கும் போது போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓடும் போது சுடப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த விஜய் மீது 30க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 



  • Apr 02, 2025 14:37 IST

    10 மாவட்டங்களில் நாளை(ஏப்.3) கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

    கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் தென்காசி ஆகிய 10 மாவட்டங்களில் நாளை(ஏப்.3) கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 



  • Apr 02, 2025 14:34 IST

    ரூ.5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசர் கைது

    விழுப்புரம்: செஞ்சி அருகே உடைந்தாங்கல் என்ற கிராமத்தில், நிலப் பட்டாவுக்கு பெயர் மாற்றம் செய்ய ரூ.5000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசர் கைது. தனியார் விடுதியில் வைத்து லஞ்சம் வாங்கும் போது, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்



  • Apr 02, 2025 14:10 IST

    தீ மிதிக்கும்போது 6 மாத குழந்தையுடன் தவறி விழுந்த தந்தை

    தீ மிதிக்கும்போது 6 மாத குழந்தையுடன் தவறி விழுந்த தந்தை. நல்வாய்ப்பாக இருவரும் அக்னி குண்டத்திற்கு வெளியே விழுந்ததால் உயிர் தப்பினர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் உள்ள அக்னி மாரியம்மன் கோயிலில் தீ மிதி திருவிழாவின் போது இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. 



  • Apr 02, 2025 12:48 IST

    ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்ததால் விபரீத முடிவு..!

    நாமக்கல் ஆருகே ஆன்லைன் ரம்மியில் ரூ.10 லட்சம் பணத்தை இழந்த தனியார் வங்கி துணை மேலாளர் ஜெயக்குமார் தற்கொலை செய்துள்ளார். உடலை கைப்பற்றி மோகனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Apr 02, 2025 11:42 IST

    பரமகுடியில் பாஜக சார்பில் ஒட்டியுள்ள சுவரொட்டிகள்

    அதிமுக கூட்டணி வேண்டாம் என பாஜக சார்பில் பரமக்குடியில் மோடி மற்றும் அண்ணாமலையின் படம் போட்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.



  • Apr 02, 2025 11:07 IST

    மார்க்சிஸ்ட் கட்சியின் மாநாடு

    மார்க்சிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் தொடங்கியது. கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், பிரகாஷ் காரத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.



  • Apr 02, 2025 10:39 IST

    இ-பாஸ் செயலியில் பிரச்சினை - சுற்றுலா பயணிகள் அவதி

    ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இ-பாஸ் செயலி சர்வர் பிரச்னையால் இ-பாஸ் பெற முடியாமல் நீலகிரி மாவட்ட எல்லையான தொரப்பள்ளி சோதனைச்சாவடியில் பல மணி நேரம் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர்.



  • Apr 02, 2025 09:58 IST

    கடலூர்: ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களுக்கு அரிவாள் வெட்டு

    விழுப்புரம்-நாகை 4 வழிச்சாலையில் ஒரே இரவில் 3 இடங்களில் லாரி ஓட்டுநர்களுக்கு அரிவாள் வெட்டு. லாரிகளை சாலையோரங்களில் நிறுத்திவிட்டு ஓய்வெடுக்கும் ஓட்டுநர்களை அரிவாளால் வெட்டி பணம் மற்றும் செல்போன்கள் பறித்த மர்மநபர்கள். இருசக்கர வாகனத்தில் வரும் இளைஞர்கள் இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Apr 02, 2025 09:54 IST

    மதுரையில் இன்று தொடங்குகிறது மார்க்சிஸ்ட் கம்யூ. மாநாடு

    மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் 24-வது அகில இந்திய மாநாடு இன்று தொடங்குகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பீமன் பாபு செங்கொடியை ஏற்றி மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார்.



  • Apr 02, 2025 09:06 IST

    நீலகிரி உட்பட 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    நீலகிரி, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Apr 02, 2025 09:04 IST

    ஏற்காட்டில் கேம்ப் ஃபயருக்கு 2 மாதம் தடை

    கோடை காலத்தை ஒட்டி காட்டுத் தீ அபாயத்தை தவிர்ப்பதற்காக ஏற்காட்டில் கேம்ப் பயர் அமைக்க 2 மாதங்களுக்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. ட்ரோன் கேமிரா மூலம் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் பிருந்தாதேவி தகவல் அளித்து உள்ளார்.



  • Apr 02, 2025 09:04 IST

    திருப்பூரில் ஆணவக் கொலை - அண்ணன் கைது

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 22 வயது கல்லூரி மாணவி மர்ம மரண விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை தங்கை காதலித்ததால் அண்ணனே ஆணவக்கொலை செய்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது. காதலன் வெண்மணி அளித்த புகாரின் பேரில், மாணவியின் உடலை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

     



  • Apr 02, 2025 09:04 IST

    இ-பாஸ்-க்கு எதிர்ப்பு -முழு கடையடைப்பு போராட்டம்

    இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர். 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடந்து வரும் இந்தப் போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 20,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.



Trichy Madurai Coimbatore Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: