/tamil-ie/media/media_files/uploads/2021/06/drone-1.jpg)
-
Apr 03, 2025 20:55 IST
பிரதமர் மோடி வருகை: ராமேஸ்வரத்தில் ட்ரோன்கள் பறக்கத் தடை
பிரதமர் மோடி வருகையின் காரணமாக ஏப்.6ல் ராமேஸ்வரம், மண்டபம், பாம்பன் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
Apr 03, 2025 19:51 IST
மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள்: மதுரையில் ஸ்டாலின் பேச்சு
நரேந்திர மோடியின் ஆட்சி தான் மாநிலங்களை அழிக்கிற ஆட்சியாக இருக்கிறது. ஒரே நாடு, ஒரே மதம், மொழி, தேர்தல் என ஒற்றைத் தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு செயல்படுகிறது. பல்வேறு பரிமாணங்களில் வரும் பாசிசத்தை நாம் வீழ்த்தியாக வேண்டும் என மதுரையில், மார்க்சிஸ்ட்
மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். -
Apr 03, 2025 19:21 IST
பள்ளிவாசல் அலங்கார விளக்கு – காவல் துறை விளக்கம்
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ஜாமியா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலில் அலங்கார விளக்கு பலகை அகற்றப்பட்டது குறித்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “பாம்பன் பள்ளிவாசல் மினராவில் ஒளிரும் எழுத்துக்கள், கடற்படை கேட்டுக்கொண்டதை அடுத்து அதனை அகற்ற அறிவுறுத்தப்பட்டு, தார்பாய் கொண்டு மூடப்பட்டது. தற்போது தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. எனினும், உயர் கோபுரங்களில் விளக்குகள் பொருத்தும் போது, கலங்கரை விளக்கம் போல தோற்றமளித்து, கப்பல் மற்றும் படகுகளுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 03, 2025 17:17 IST
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
உத்தரகோசமங்கை ஸ்ரீமங்களநாதசுவாமி கோயில் குடமுழுக்கையொட்டி நாளை (ஏப்ரல் 4) ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மேலும், இதனை ஈடு செய்யும் பொருட்டு ஏப்ரல் 10-ம் தேதி வேலைநாளாக இருக்கும் என்று அறிவித்துள்ளார்.
-
Apr 03, 2025 16:32 IST
கடலூர் போக்குவரத்து போலீசாருக்கு பாராட்டு
கடலூரில் இன்று வி- ஸ்கொயர் மால் அருகில் உள்ள நான்கு முனை சந்திப்பில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் விரைந்து பள்ளிக்கும், வேலைக்கும் செல்வதற்கு கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சாலையில் நின்று போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் சிறப்பாக பணி மேற்கொண்ட பொதுமக்களின் பாராட்டை பெற்ற கடலூர் போக்குவரத்து காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மரிய சார்லஸ் மற்றும் ஜெகதீசன் ஆகியோர் காவல்துறைக்கு நற்பெயரை ஏற்படுத்தி, சிறப்பாக பணிபுரிந்தமைக்காக கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பாராட்டி நற்சான்று மற்றும் பரிசு வழங்கி பாராட்டினார்.
-
Apr 03, 2025 15:58 IST
விவசாயிகள் எதிர்ப்பு - எம்புரான் காட்சிகள் ரத்து
மதுரை உட்பட ஐந்து மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக உள்ள பெரியாறு அணையால் கேரளாவிற்கு ஆபத்து உள்ளதாக பொய்யாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் எதிர்ப்பை தொடர்ந்து கம்பம், கூடலூர் திரையரங்குகளில் எம்புரான் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன
-
Apr 03, 2025 15:46 IST
உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் வாகன கட்டுபபாடு: ஐகோர்ட்டில் நாளை விசாரணை
உதகை, கொடைக்கானலில் இ-பாஸ் வாகன கட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது
-
Apr 03, 2025 15:21 IST
மோடி வருகையை முன்னிட்டு, பாம்பன் மினாரா தார்ப்பாய் கொண்டு மறைப்பு; எஸ்.டி.பி.ஐ கணடனம்
பிரதமர் மோடியின் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, பாம்பன் பள்ளிவாசலில் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் அநாகரிக செயல் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி கணடன அறிக்கை வெளியிட்டுள்ளார்
-
Apr 03, 2025 14:05 IST
லஞ்சம் வாங்கிய கோயில் செயல் அலுவலர் கைது
திருவாரூர்: திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் ஜோதி, எழுத்தர் சசிகுமாரின் பழைய சம்பள பாக்கியை தர ரூ. 1 லட்சம் லஞ்சம் பெற்றபோது கையும் களவுமாக கைது டிஎஸ்பி நந்தகோபால் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மன்னார்குடி ஆனந்த விநாயகர் கோயிலில் ஜோதியை கைது செய்தனர்
-
Apr 03, 2025 13:21 IST
இன்றைய நாளுக்கான மழை அப்டேட்!
நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, குமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய 17 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 03) கனமழை பெய்ய வாய்ப்பு! -சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்! சென்னையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கணிப்பு
-
Apr 03, 2025 13:19 IST
வள்ளலார் சர்வதேச மைய பணிகளுக்கான தடை நீக்கம்
கடலூர் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கியது உச்சநீதிமன்றம். Site -B பகுதிகளில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவு; Site -Aல் கட்டுமானம் மேற்கொள்வது தொடர்பாக சட்டத்துக்கு உட்பட்டு உயர்நீதிமன்றம் முடிவு செய்யலாம் - உச்சநீதிமன்றம்
-
Apr 03, 2025 13:13 IST
பிரதமர் மோடியில் ராமேஸ்வரம் வருகை
பிரதமர் மோடியில் ராமேஸ்வரம் வருகையை முன்னிட்டு, பாம்பன் பள்ளிவாசலில் மினாராவை தார்ப்பாய் கொண்டு மறைத்திருப்பது கண்டிக்கத்தக்கது . இது மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்ட இந்திய அரசியலமைப்பிற்கு எதிரானது மட்டுமல்லாமல், முஸ்லிம் சமூகத்தின் மத உணர்வுகளை புண்படுத்தும் அநாகரிக செயல் என்று எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் அகமது நவவி கணடன அறிக்கை
-
Apr 03, 2025 12:45 IST
கோடையில் டியூசன்
கோடைக் கால விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த உள்ள தடையை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என கேரள மாநில சிறார் உரிமை பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ட்யூசன் மையங்கள் காலை 7.30 முதல் காலை 10.30 மணி வரையில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்ற விதியை மீறினால் காவல்துறை நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Apr 03, 2025 11:43 IST
மாணவிகளுக்கு பாதிரியார் பாலியல் தொல்லை
திருச்சி சமயபுரம் அருகே விடுதியில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட பாதிரியார் சுந்தர்ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார். வார்டனின் நண்பர் என்ற முறையில் சுலபமாக விடுதிக்குள் நுழைந்து அத்துமீறலில் ஈடுபட்டார்.
-
Apr 03, 2025 11:41 IST
திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்
ஏப்ரல் மாதத்தின் முதல் வளர்பிறை சஷ்டி விரதத்தை முன்னிட்டு அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொண்டனர்.
-
Apr 03, 2025 11:23 IST
சேலத்தில் மழை
சேலத்தில் பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நல்ல மழை பெய்தது. வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.
-
Apr 03, 2025 11:19 IST
மருதமலை கோயிலில் வெள்ளிவேல் திருட்டு
நாளை குடமுழக்கு நடைபெறும் நிலையில் ரூ. 4 லட்சம் மதிப்பிலான வெள்ளிவேல் திருடப்பட்டது. சாமியார் வேடத்தில் சென்ற நபர் ஒருவர் வெள்ளிவேலை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியானது.
-
Apr 03, 2025 10:50 IST
ஏப்.15 முதல் வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்க தடை
ஆழ்கடலில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காரணமாக, ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை (61 நாட்கள்) தமிழகத்தின் கிழக்குக் கடற்கரை பகுதியான வங்கக் கடலில் விசைப்படகுகளில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. இதனால், தமிழக கடலோர மீன்பிடி துறைமுகங்களில் உள்ள பத்தாயிரம் விசைப்படகுகள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாது. குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் 350-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் மீன்கள் கிடைக்கும் அளவு குறைவதால், மீன் விலை உயரக்கூடும் வாய்ப்புகள் உருவாகி உள்ளன.
-
Apr 03, 2025 09:59 IST
தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் மீண்டும் மின்உற்பத்தி தொடக்கம்
தீ விபத்து ஏற்பட்ட தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 17 நாட்களுக்கு பிறகு மீண்டும் மின்உற்பத்தி தொடங்கியது. தீ விபத்தில் சேதமான 3-வது அலகு சரிசெய்யப்பட்டு 210 மெகா வாட் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் கடந்த 15-ம் தேதி இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
Apr 03, 2025 09:58 IST
முதல்வர் ஸ்டாலின் வருகை - மதுரையில் ட்ரோன்கள் பறக்க தடை
சி.பி.எம். அகில இந்திய மாநாட்டில் பங்கேற்க இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தருவதால் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் மாவட்ட எல்லைக்குள் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.
-
Apr 03, 2025 09:57 IST
திருவாரூரில் 1-5ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
திருவாரூர் மாவாட்டத்தில் ஏப்.7 அன்று நடக்கவிருந்த 1-5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆழி தேரோட்டத்தையொட்டி திருவாரூர் மாவட்டத்திற்கு வருகிற ஏப்.7இல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ் பாடத் தேர்வு ஏப்.8இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம் போல நடைபெறும் எனவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
Apr 03, 2025 09:38 IST
திருவண்ணாமலை: தமிழில் பெயர் பலகை வைக்க ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி – கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் உத்தரவிட்டுள்ளார். “தமிழில் பெயர்ப்பலகை வைப்பவர்கள் ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் குறிப்பிடப்படும் வார்த்தைகளை தமிழ் எழுத்தை விட சிறிய அளவில் வைக்க வேண்டும்.வருகின்ற மே 15ம் தேதிக்குள் மாவட்டத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் தமிழில் பெயர் பலகை இருக்க வேண்டும். பிற மொழிகளில் பெயர் பலகைகள் இருந்தால் அபராதம் விதிக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.