/indian-express-tamil/media/media_files/2025/04/05/epF6J9VmH0v8cnC5V78S.jpg)
அருவியில் குளிக்க அனுமதி: நீர்வரத்து குறைந்துள்ளதால் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குற்றலாம் அருவியில் குளிக்க நேற்று தடை விதிக்கப்பட்டு இருந்தது.
-
Apr 05, 2025 17:56 IST
டி.எஸ்.பி-க்கு ஆயுள் தண்டனை விதிப்பு
தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் விசாரணை கைதி வின்சென்ட் என்பவர் கடந்த 1999-ஆம் ஆண்டு மரணமடைந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, தூத்துக்குடி டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட எட்டு காவலர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
Apr 05, 2025 17:37 IST
பொள்ளாச்சி பாலியல் வழக்கு - மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும், வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி மீண்டும் கோவை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இன்று விசாரணை நிறைவு பெற்ற நிலையில், 9 பேரும் சேலம் மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
-
Apr 05, 2025 15:30 IST
மதுரை இளம் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
மதுரை மண்டேலா நகர் பகுதியில் சாலையில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம் பெண்ணிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு விட்டு தப்பியோடிய நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
Apr 05, 2025 15:17 IST
பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு
தென்காசி மாவட்டம் சுரண்டையில் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 9 ஆம் வகுப்பு மாணவியான மானசா, வகுப்பறையில் மயங்கி விழுந்து உயிரிழந்த சோகம்
மாணவியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்
-
Apr 05, 2025 15:01 IST
பலாப்பழங்களை தேடித்தேடி அகற்று காட்டுயானைகள்
கூடலூரில் பலாப்பழங்களை தேடித்தேடி அகற்றும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குடியிருப்புகள் அருகே உள்ள பலா மரங்களில் காய்கள் அகற்றம் செய்யப்பட்டு வருகிறது.
-
Apr 05, 2025 14:36 IST
கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
கோவை, நீலகிரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு ஆகிய 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Apr 05, 2025 14:21 IST
2026 சட்டமன்ற தேர்தல்: நாம் தமிழர் கட்சியின் வேதாரண்யம் தொகுதி வேட்பாளர் அறிவிப்பு
சட்டசபையில் தேர்தலில் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சி, வேதாரண்யம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்துள்ளது. அதன்படி, வேதாரண்யம் தொகுதியில் இடும்பாவனம் கார்த்தி போட்டியிடுகிறார். இவர் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை சேர்ந்தவர். நாளைய தினம் நடைபெற உள்ள வேட்பாளர் அறிமுக கலந்தாய்வு கூட்டத்தில் இடும்பாவனம் கார்த்தி அறிமுகப்படுத்தப்பட உள்ளார்.
-
Apr 05, 2025 13:33 IST
பாலியல் தொல்லை கொடுத்த கோயில் ஊழியர் சதீஷ் தற்காலிக பணியிடை நீக்கம்
கோயில் ஊழியர் சஸ்பெண்ட் தி.மலை அண்ணாமலையார் கோயிலில் பணிபுரியும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோயில் ஊழியர் சதீஷ் தற்காலிக பணியிடை நீக்கம் அண்ணாமலையார் கோயிலில் பெண் பணியாளர்களுக்கு சதீஷ் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்; ஆடியோ வெளியான நிலையில் கோயில் ஊழியர் சதீஷை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து அறங்காவலர் குழுத்தலைவர் ஜீவானந்தம் உத்தரவு
-
Apr 05, 2025 13:29 IST
தாதுமணல் ஆலைகளில் சிபிஐ சோதனை
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதிகளில் தாதுமணல் ஆலைகள், ஆலைகள், அலுவலகங்களில் 20-க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சோதனை என தகவல். விதிமீறலில் தொடர்புடைய நபர்கள் அரசு அதிகாரிகளை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது
-
Apr 05, 2025 13:21 IST
கனமழை காரணமாக இடிந்து விழுந்த 5 வீடுகளின் சுவர்கள்
கனமழை காரணமாக இடிந்து விழுந்த 5 வீடுகளின் சுவர்கள். நல்வாய்ப்பாக வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. கம்பம் நகராட்சி ஆணையர், எம்.எல்.ஏ உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். மழைநீர் புகுந்ததால் நகராட்சி பள்ளி வகுப்பறைகள் சேதம் அடைந்துள்ளன.
-
Apr 05, 2025 12:53 IST
பாபநாசம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அதிர்ச்சி.. மீண்டும் பின்னே வந்த ரயில்
பாபநாசம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அதிர்ச்சி.. மீண்டும் பின்னே வந்த ரயில். பாபநாசம் ரயில் நிலையத்தில் 100-மீட்டர் தூரம் நிற்காமல் சென்ற மயிலாடுதுறை திருச்சிராப்பள்ளி விரைவு வண்டி. அதிர்ச்சியில் பயணிகள். மீண்டும் திரும்பி வந்து, பயணிகளை ஏற்றிச் சென்ற ரயில்.
-
Apr 05, 2025 12:45 IST
வாய்க்காலில் கவிழ்ந்த கார்
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து காளிங்கராயன் வாய்க்காலில் கவிழ்ந்த கார் உடனடியாக காரில் இருந்து வெளியேறி உயிர் தப்பிய மருத்துவர்
-
Apr 05, 2025 12:16 IST
அண்ணா சிலை மீது போர்த்தப்பட்ட பா.ஜ.க, தி.மு.க கொடிகள் - தஞ்சையில் பரபரப்பு
தஞ்சாவூரில் அண்ணா சிலை மீது போர்த்தப்பட்ட பாஜக, திமுக கொடிகள். பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே இன்று திமுக மகளிர் அணி கூட்டம்; அண்ணா சிலை மீது பாஜக, திமுக கொடிகளை இணைத்து போர்த்தியுள்ள மர்ம நபர்கள்; தகவல் அறிந்து வந்து கொடிகளை அகற்றியுள்ளனர் தஞ்சை மேற்கு காவல் நிலைய காவலர்கள்
-
Apr 05, 2025 12:13 IST
பள்ளத்தில் கவிழ்ந்த கார் - தாய், மகன் பலி
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் தாய் - மகன் உயிரிழப்பு. ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது
-
Apr 05, 2025 11:58 IST
பிரதமர் வருகை: மதுரையில் பாதுகாப்பு அதிகரிப்பு
பாம்பன் புதிய ரயில் பால திறப்பு விழாவில் பங்கேற்ற பிறகு மதுரை வழியாக டெல்லி திரும்பும் பிரதமர் மோடி. மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் 5 அடுக்கு பாதுகாப்பு; மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் விமான நிலையத்துக்கு வெளியே 3 அடுக்கு பாதுகாப்பு; பிரதமர் வருகையையொட்டி மதுரையில் டிரோன்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது; நாளை 3.40 மணிக்கு ராமநாதபுரத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மதுரை வருகிறார்
-
Apr 05, 2025 11:54 IST
ஜிப்லி புகைப்படங்கள் - நெல்லை போலீஸ் எச்சரிக்கை
புகைப்படங்களை ஜிப்லியாக மாற்றும் போது எச்சரிக்கையுடன் இருக்க நெல்லை காவல்துறை அறிவுரை; AI தளங்களில் பதிவேற்றப்படும் புகைப்படங்களை சம்மந்தப்பட்டவரின் அனுமதி இல்லாமல் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது; நம்பகமான AI தளங்களை மட்டுமே பயன்படுத்தி புகைப்படங்களை ஜிப்லியாக மாற்ற அறிவுரை செய்துள்ளது.
-
Apr 05, 2025 11:30 IST
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கருக்கலைப்பு கும்பலைச் சேர்ந்த செவிலியர் கைது
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே கருக்கலைப்பு கும்பலைச் சேர்ந்த செவிலியர் கைது செய்யப்பட்டுள்ளார். வசந்தம் நகர் பகுதியில் வீட்டை வாடகைக்கு எடுத்து கருக்கலைப்பில் ஈடுபட்ட கும்பல்; ஊரக நலப் பணிகள் இணை இயக்குநர் சாந்தி அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளார். செவிலியரை கைது செய்ததையொட்டி தப்பியோடிய கும்பலுக்கு காவல் துறை வலைவீசி தேடி வருகின்றனர்.
-
Apr 05, 2025 11:25 IST
மோடி வருகை - ராமேஸ்வரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு
பிரதமர் மோடி வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளது. மதுரை விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 2,000க்கும் மேற்பட்ட போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன்கள் பறக்க தடை விதித்துள்ளது மாவட்ட நிர்வாகம்
-
Apr 05, 2025 11:17 IST
7 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 7 இடங்களில் மிக கனமழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு. கோபிசெட்டிபாளையம், திருப்பூரில் தலா 15 செ.மீ, திருப்பூர் ஆட்சியர் அலுவலகம், அடையாமடை, பேச்சிபாறையில் தலா 13 செ.மீ, ஊத்துக்குளியில் 12 செ.மீ, திருப்பூர் வடக்கில் 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
-
Apr 05, 2025 10:48 IST
அண்ணா சிலை மீது பாஜக, திமுக கொடி
பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலை மீது பாஜக,திமுக கொடி தொங்கவிடப்பட்டது. மர்மநபர்கள் செய்த செயலால் பரபரப்பு ஏற்பட்டது.
-
Apr 05, 2025 09:31 IST
உயிருடன் இருக்கும்போதே இறந்ததை போல சடங்கு
சேலத்தில் உயிருடன் இருக்கும்போதே இறந்தது போல சடங்கு செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
-
Apr 05, 2025 09:29 IST
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ் பணியிட மாற்றம்
திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி போஸ் சென்னை மாவட்டத்திற்கு கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல பணியிட மாற்றம் செய்யப்பட்ட சதீஷ்குமார் தமிழ்நாடு மருந்து நிர்வாக துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-
Apr 05, 2025 09:28 IST
ராமேஸ்வரத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு
ராமேஸ்வரத்துக்கு பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ளதை ஒட்டி சுமார் 3,500 போலீசார் மூன்றடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
-
Apr 05, 2025 09:27 IST
திருப்பூரில் மழை
திருப்பூரில் நேற்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை பெய்த கன மழையால், அறிவொளி நகர் பகுதியை மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் அவதி அடைந்தனர்.
-
Apr 05, 2025 09:27 IST
குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி
குற்றாலம் அருவியில் நீர்வரத்து சீரானதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.