/indian-express-tamil/media/media_files/2025/04/15/lhVdlVtcjSTDWo84RzrO.jpg)
முதலமைச்சர் நிவாரணம்: கடலூர் காட்டுமன்னார்கோவில் வெள்ளியங்கால் ஓடையில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
Apr 15, 2025 19:07 IST
காங்கேயத்தில் ரூ.1.94 கோடி கோயில் நிலம் மீட்பு
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ரூ.1.94 கோடி மதிப்புள்ள 4.86 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான 4.86 ஏக்கர் நிலத்தை தனி நபர்கள் 6 பேர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாக புகார் எழுந்தது.
ஆக்கிரமிப்பில் இருந்த கோயில் நிலத்தை மீட்க கடந்த ஜன.22ம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரூ.1.94 கோடி மதிப்புள்ள 4.86 ஏக்கர் நிலத்தை அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர்.
-
Apr 15, 2025 19:04 IST
கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் - மோட்டார் வாகன ஆய்வாளர் கைது
சேலம் ஓமலூர் அருகே பாகலூர் சோதனைச் சாவடியில் கணக்கில் வராத ரூ.1.50 லட்சம் சிக்கியது. இதையடுத்து, மோட்டார் வாகன ஆய்வாளர் லியோ ஆண்டனி கைது செய்யப்பட்டுள்ளார். ஆண்டனி வாகனத்தை தணிக்கை செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
-
Apr 15, 2025 18:57 IST
மாணவனுக்கு அரிவாள் வெட்டு - மாவட்ட நிர்வாகம் விளக்கம்
நெல்லை பாளையங்கோட்டை மாணவர் அரிவாள் வெட்டு சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் விளக்கம்
அளித்துள்ளது. அதில் "மாணவர்களிடையே சமூக நல்லிணக்கத்தை பெருக்கும் வகையில் 'அன்பாடும் முன்றில்' திட்டம் கடந்த 6 மாதங்களாக செயல்படுத்தபட்டு வருகிறது. இதுவரை 177 பள்ளிகளில் 'அன்பாடும் முன்றில்' திட்டத்தின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது"மோதல் போக்கு இருந்த இடங்களில் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட விழிப்புணர்வால் மாணவர்களிடம் நல்லிணக்கம் ஏற்பட்டு மாற்றங்கள். தேர்வு காலம் என்பதால் 'அன்பாடும் முன்றில்' திட்டம் கடந்து பிப்ரவரி முதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 15, 2025 18:24 IST
புதுக்கோட்டையில் போலி முத்திரைத்தாள்: 4 பேரிடம் சி.பி.சி.ஐ.டி விசாரணை
புதுக்கோட்டையில் போலி முத்திரைத்தாள் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது. 2020ல் புதுக்கோட்டை நீதிமன்றத்தில் வங்கிகள் தொடர்பான வழக்குகளில் போலி முத்திரைத்தாள் பயன்படுத்தி மோசடி நடைபெற்றது. போலி முத்திரைத்தாளை பயன்படுத்தி ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் கடந்த 9ம் தேதி 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
Apr 15, 2025 17:50 IST
போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்று மோசடி: கூட்டுறவு சங்க எழுத்தர் தற்கொலை
மதுரை உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்று மோசடி நடைபெற்றுள்ளது. போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்று சங்கச் செயலாளர், பணியாளர்கள் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. மோசடியில் தன்னையும் தொடர்புபடுத்தி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக கூறி எழுத்தர் செல்லாண்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 14 பேரின் பெயர்களில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார.
-
Apr 15, 2025 17:26 IST
விசைத்தறி நெசவாளர்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி
கூலி உயர்வு கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விசைத்தறி நெசவாளர்களுடன், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது
-
Apr 15, 2025 16:31 IST
மாணவர் அரிவாளால் தாக்கப்பட்ட விவகாரம்; முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை
நெல்லையில் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவர் அரிவாளால் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்
-
Apr 15, 2025 16:07 IST
ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து அ.தி.மு.க கண்டன ஆர்ப்பாட்டம்
ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யத் தவறியதாக கூறி, முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி தலைமையில் அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
-
Apr 15, 2025 15:24 IST
மே 8 ஆம் தேதி மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் மே 8-ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறவுள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனைக் காண ரூ. 200 மற்றும் ரூ. 500 என இரு வகையான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன. hrce.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஏப்ரல் 29 முதல் மே 2-ஆம் தேதி வரை இவற்றை முன்பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 15, 2025 14:51 IST
சேலத்தில் தி.மு.க உறுப்பினர் சடலம் மீட்பு - போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தி.மு.க முன்னாள் வார்டு உறுப்பினர் ஆறுமுகம் சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 12-ஆம் தேதியன்று இவர் காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் புகாரளித்த நிலையில், இன்று அவரது சடலம் மீட்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
Apr 15, 2025 14:19 IST
நெல்லை மாணவனுக்கு அரிவாள் வெட்டு - நயினார் நாகேந்திரன் கண்டனம்
நெல்லையில் தனியார் பள்ளி மாணவனை வகுப்பறையில் அரிவாளால் தாக்கிய சம்பவத்திற்கு பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். பள்ளி சிறார்களும் ஆயுதங்களை கையாளும் அளவிற்கு சட்ட ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Apr 15, 2025 13:52 IST
கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி தொடர்பான வழக்கு
புலன் விசாரணை 3 மாதங்களில் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் அளித்துள்ளது. விஷச்சாராயம் அருந்தி மரணம் அடைந்த வழக்கில் குற்றவாளிகள் ஜாமின் கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான தாமோதரன் மற்றும் கோவிந்தராஜுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வழக்கில் எத்தனை பேர் இன்னும் சிறையில் உள்ளனர் என பதிலளிக்க சிபிஐ தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
-
Apr 15, 2025 13:36 IST
நெல்லையப்பர் கோவில் வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு
நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான 7,500 ஏக்கர் நிலங்களை மீட்டு முறையாக பராமரிக்க உத்தரவிட கோரி வழக்கு . உள்துறை, வருவாய் துறை செயலர்கள், அறநிலைய துறை ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
-
Apr 15, 2025 13:31 IST
வக்ஃபு சொத்து எனக்கூறி 150 இந்துக் குடும்பங்களுக்கு நோட்டீஸ்
வேலூர் மாவட்டம் இறைவங்காடு அருகே, வக்ஃபு சொத்து எனக்கூறி 150 இந்துக் குடும்பங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சையத் அலி சுல்தான் ஷா தர்காவின் வக்ஃபு வாரிய சொத்து எனக்கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது; ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பாதிக்கப்பட்ட மக்கள்; 1950 ஆம் ஆண்டில் இருந்து ஆவணங்கள் இருப்பதாக தர்கா நிர்வாகிகள் விளக்கம்
-
Apr 15, 2025 13:15 IST
சமயபுரம் கோயிலில் சித்திரை தேரோட்டம்
திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை தேரோட்டம் விமரிசையாக நடந்தது. அம்மன் எழுந்தருளிய திருத்தேரை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து மனமுருக பிரார்த்தனை செய்தனர்.
-
Apr 15, 2025 11:50 IST
தனியார் பள்ளி வளாகத்தில் மாணவருக்கு வெட்டு
நெல்லை பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி வளாகத்தில் 8-ம் வகுப்பை சேர்ந்த இரு மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. அரிவாளால் வெட்டியதில் படுகாயமடைந்த மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சக மாணவனை வெட்டிய 8-ம் வகுப்பு மாணவன் அரிவாளுடன் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சம்பவத்தின் போது மாணவனை தடுக்கச் சென்ற ஆசிரியருக்கும் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது.
-
Apr 15, 2025 11:00 IST
சனிப்பெயர்ச்சி தேதி அறிவிப்பு
திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் அடுத்தாண்டு மார்ச் 6-ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அன்று காலை 8.24 மணிக்கு சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பிரவேசிக்கிறார் சனி பகவான்.
-
Apr 15, 2025 10:58 IST
அவிநாசி-தெக்கலூரில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
விசைத்தறி உரிமையாளர்களுக்கு கூலி உயர்வு வழங்காததைக் கண்டித்தும், விசைத்தறியாளர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், திருப்பூர் மாவட்டம் அவிநாசி-தெக்கலூரில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
-
Apr 15, 2025 10:52 IST
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம்
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் தொடங்கியது. அலங்கரிக்கப்பட்ட சமயபுரம் மாரியம்மன் தேரை திரளானோர் வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.கோயில் திருவிழாவில் திரளான பக்தர்கள் தீச்சட்டி, பால்குடம் எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். சமயபுரம் கோயில் தேரோட்டத்தை ஒட்டி திருச்சி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது.
-
Apr 15, 2025 10:25 IST
திருச்செந்தூரில் கடல் நீர் 50 அடி தூரம் உள்வாங்கியது
திருச்செந்தூரில் கடல் நீர் 2வது நாளாக சுமார் 50 அடி தூரம் உள்வாங்கியது. கடல் நீர் உள்வாங்கியதால் கடலுக்குள் இருக்கும் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிகின்றன. கடல் நீர் உள்வாங்கிய தூரம் சென்று பக்தர்கள் கடலில் குளித்து வருகின்றனர்.
-
Apr 15, 2025 10:14 IST
மதபோதகர் ஜான் ஜெபராஜை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு
பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கேரள மாநிலம் மூணாறில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பின்னர் கோவை அழைத்து வந்து நீதிபதி முன்னிலையில் அவரை ஆஜர்ப்படுத்தி 25-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
-
Apr 15, 2025 10:12 IST
மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களுக்கு முதல்வர் நிதியுதவி
விருதுநகர், காரிசேரியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்து உள்ளார். மின்சாரம் தாக்கி உயிரிழந்த திருப்பதி, லலிதா, பாக்கியம் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Apr 15, 2025 09:24 IST
தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு..!
பொதுமக்கள் கூட்டத்தை சமாளிக்க தனியார் ஆம்னி ஸ்லீப்பர் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க SETC முடிவு செய்துள்ளது. கோடைகாலத்தில் ஏராளமான மக்கள் வெளியூர் பயணிப்பார்கள் என்பதை கருத்தில் கொண்டு தனியார் ஆம்னி பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க அரசு விரைவு போக்குவர்த்து கழகம் முடிவு செய்துள்ளது.
-
Apr 15, 2025 09:22 IST
காவலரின் தாயை நகைக்காக கொன்ற இளம்பெண் கைது
தூத்துக்குடி சாத்தான்குளத்தில் காவலர் விக்ராந்த் தாயார் கொல்லப்பட்ட வழக்கில் இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளம்பெண் செல்வரதியை போலீசார் கைது செய்தனர். வீட்டில் தனியாக இருந்த காவலரின் தாய் வசந்தாவை கொன்று 8 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
-
Apr 15, 2025 09:20 IST
முதலமைச்சர் நிவாரணம்
கடலூர் காட்டுமன்னார்கோவில் வெள்ளியங்கால் ஓடையில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.