Coimbatore, Madurai, Trichy News Updates: தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Theena

இ பாஸ் சோதனை: நீலகிரியில் 16 இடங்களுக்கு பதிலாக 5 இடங்களில் மட்டும் இ - பாஸ் சோதனை மையம் செயல்படத் தொடங்கியது. இன்று முதல் கல்லாறு, குஞ்சப்பணை, மசினக்குடி, மேல்கூடலூர், கெத்தை ஆகிய 5 இடங்களில் மட்டும் இ - பாஸ் சோதனை மையம் செயல்படுகிறது.

Advertisment

 

  • Apr 22, 2025 18:16 IST

    தேனீக்கள் கொட்டியதில்  20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்

    கள்ளக்குறிச்சி பகுதியில், பள்ளி வளாகத்தில் இருந்த தேன்கூட்டில்  இருந்து வெளியான தேனீக்கள் கொட்டியதில்  20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம்.  காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி



  • Apr 22, 2025 17:29 IST

    நாமக்கலில் பட்டியல் இன மக்களுக்கு எதிர்ப்பு: திருவிழாவை நிறுத்தியதால் பரபரப்பு

    நாமக்கல் அருகே வீசாணத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் திருவிழாவை நடத்த பட்டியலின மக்கள் அனுமதி கோரிய நிலையில், மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவிழாவை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Advertisment
    Advertisements
  • Apr 22, 2025 15:23 IST

    "கடலூர், நாகையில் புதைவட மின் பாதைகள்"

    “இயற்கை பேரிடர்களால் இன்னலுக்கு உட்படும் கடலோர நகரங்களான கடலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் ரூ. 490 கோடி மதிப்பீட்டில் மேல்நிலை மின் பாதைகள், புதைவடங்களாக – மாற்றி அமைக்கப்படும்” என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்துள்ளார். 



  • Apr 22, 2025 14:35 IST

    மின் தடை - செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை

    பல்லடம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மின் தடையால் நோயாளிகள் அவதி விபத்தில் கால் துண்டிக்கப்பட்ட முதியவருக்கு செல்போன் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை நடந்துள்ளது. 



  • Apr 22, 2025 14:32 IST

    சித்ரா பௌர்ணமி - தி.மலையில் கட்டண தரிசனம் மட்டும் ரத்து

    சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விஐபி தரிசனத்திற்கு அனுமதி; கட்டண தரிசனம் மட்டும் ரத்து என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 



  • Apr 22, 2025 11:38 IST

    கல்லூரி பஸ் மோதி குழந்தை பலி

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி குழந்தை உயிரிழந்தது. மேலப்பூடி கிராமத்தில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தையின் மீது மோதிய பேருந்து பேருந்து ஓட்டுநரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



  • Apr 22, 2025 11:38 IST

    கழிவரைக்கு தலைவர்கள் பெயர்

    கோவை மாநகராட்சி பராமரிப்பில் உள்ள பொது கழிப்பிடத்திற்கு மூத்த தலைவர்கள் பெயர் வைக்கப்பட்டுள்ளது. புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் கழிப்பிடத்தின் முன்புறச் சுவரில், அண்ணா மற்றும் கக்கன் பெயர் இடம்பெற்றிருந்ததால் அதிர்ச்சி சர்ச்சையானதை தொடர்ந்து தலைவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.



  • Apr 22, 2025 11:15 IST

    மனைவியை கிண்டல் செய்தவரை தாக்கிய கணவர்

    திருப்பூர் அருகே மனைவியை பின் தொடர்ந்து கேலி செய்த நபரை கொடூரமாக தாக்கிய கணவன் வீடியோ வைரலாகி வருகிறது.  கிண்டல் செய்த இளைஞரை கற்களை கொண்டும் சாலையில் தரதரவென இழுத்து சென்றும் தாக்குதல். 



  • Apr 22, 2025 11:08 IST

    சித்ரா பௌர்ணமி - தி.மலையில் விஐபி தரிசனம் ரத்து

    சித்ரா பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்த ஆண்டும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. போலி நெய் தீபம் விற்பனை செய்யவும் கற்பூரம் ஏற்றவும் தடை செய்யபப்ட்டுள்ளது. அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட பின் திருவண்ணாமலை ஆட்சியர் தர்ப்பகராஜ் பேட்டி அளித்துள்ளார்.



  • Apr 22, 2025 10:43 IST

    சிவகங்கை படமாத்தூர் அருகே டேங்கர் லாரியும் பஸ்ஸும் மோதி விபத்து

    சிவகங்கை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செம்பூர் காலனி என்ற இடத்தில் 2 டேங்கர் லாரி, 1 அரசுப் பேருந்து ஒன்றோடு ஒன்று மோதி விபத்து. நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு. ஒரு லாரியில் கேஸ், மற்றொரு லாரியில் மண்ணெண்ணெய்யும் இருந்துள்ளது.



  • Apr 22, 2025 10:10 IST

    குமரியில் சாலை விபத்து - சிசிடிவி வைரல்

    கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் பகுதியில் சாலையைக் குறுக்கிட்ட ஸ்கூட்டி மீது, அதிவேகமாக வந்த பைக் மோதும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. இந்த விபத்தில் 3 இளைஞர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Apr 22, 2025 10:08 IST

    வீட்டின் முன்பு படுத்து உறங்கிய யானை

    உதகையில் வீட்டின் முன்பு புல் வெளியில் மனிதர்களை போல படுத்து உறங்கிய யானையின் வீடியோ வைரல் ஆகிறது.



  • Apr 22, 2025 09:16 IST

    சாலை விபத்தால் மோதல் - இருதரப்பினர் மீது வழக்கு பதிவு

    திருச்செந்தூர் அருகே சாலை விபத்தில் வாக்குவாதம், இருதரப்பினர் மோதலில் 6 பேருக்கு அரிவாள் வெட்டு - இருதரப்பினர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதலில் ஈடுபட்ட இரு தரப்பைச் சேர்ந்த ஐந்து பேரை பிடித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Apr 22, 2025 09:13 IST

    தவெகவினர் பாதயாத்திரை

    2026ல் நடிகர் விஜய் முதல்வராக வேண்டி 330 கி.மீ தூரம் தவெகவினர் பாதயாத்திரையாக நடந்து சென்று, வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் வழிபாடு செய்தனர்.



  • Apr 22, 2025 09:12 IST

    இ பாஸ் சோதனை

    நீலகிரியில் 16 இடங்களுக்கு பதிலாக 5 இடங்களில் மட்டும் இ - பாஸ் சோதனை மையம் செயல்படத் தொடங்கியது. இன்று முதல் கல்லாறு, குஞ்சப்பணை, மசினக்குடி, மேல்கூடலூர், கெத்தை ஆகிய 5 இடங்களில் மட்டும் இ - பாஸ் சோதனை மையம் செயல்படுகிறது.



news updates Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: