/indian-express-tamil/media/media_files/2025/05/01/YjoInLw2BuFBOp0QwZ9I.jpg)
விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள்: தவெக தலைவரும் நடிகருமான விஜயை காண மதுரை விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்தனர். மாலை 4 மணிக்கு விஜய் வருகை தர உள்ள நிலையில் காலை 7 மணிக்கு வருவதாக நினைத்து விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.
-
May 01, 2025 20:36 IST
அய்யம்பாளையம் வழியாக கொடைக்கானல் செல்லும் விஜய்
நடிகரும், தவெக தலைவருமான விஜய் ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக மதுரையில் இருந்து அய்யம்பாளையம் வழியாக கொடைக்கானல் செல்கிறார். கொடக்கானலில் உள்ள தாண்டிக்குடி பகுதிக்கு செல்லும் அவர், இ-பாஸ் சோதனை இல்லாத வழியில் செல்கிறார். மதுரையில் இருந்து வத்தலகுண்டு காட்ரோடு வழியாக கொடைக்கானல் செல்ல இருந்த நிலையில் மாற்றுவழியில் பயணம் செய்வதாக கூறப்பட்டதை தொடர்ந்து, விஜய் பயணிக்கும் மலைசாலையில் சுமார் 30 நிமிடத்திற்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்
-
May 01, 2025 20:34 IST
வயது முதிர்ந்த தம்பதி சடலமாக மீட்பு
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில், பூட்டிய வீட்டில் வயது முதிர்ந்த தம்பதி அழுகிய நிலையில் சடலமாக மீட்பு. பரமக்குடியை சேர்ந்த நாக சுப்ரமணியன் (75), தனலட்சுமி (70) தம்பதி வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர். 4 நாட்களாக வீடு பூட்டிக் கிடந்த நிலையில், மகள் வந்து பார்த்த போது அழுகிய நிலையில் இருவரும் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தம்பதியின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த பரமக்குடி போலீசார் தற்கொலையா? கொலையா? என்ற கோணத்தில் பரமக்குடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 01, 2025 19:40 IST
தஞ்சை பெரியகோயிலில் நடனமாடி ரீல்ஸ்
தஞ்சை பெரியகோயிலில் இரண்டு பெண்கள் நடனமாடி ரீல்ஸ் வீடியோ எடுத்தது சமூகவலைத்தளத்தில் தற்NghJது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
-
May 01, 2025 17:33 IST
சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த சந்தோஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆண்டிபட்டி ஜக்கம்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவரை, தேனி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
-
May 01, 2025 17:25 IST
மதுரை - விமானத்தில் இருந்து குதித்து இறங்கிய விஜய்
மதுரை விமான நிலையத்தில் தனி விமானம் மூலம் வந்தடைந்த த.வெ.க. தலைவர் விஜய், விமானத்தில் இருந்து இறங்கும்போது, உற்சாகமாக குதித்து கால் வைக்கும் காட்சிகள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.
-
May 01, 2025 16:05 IST
மதுரைக்கு வந்தடைந்த விஜய்; த.வெ.க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மதுரைக்கு வந்துள்ள நிலையில், விமான நிலையத்தில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
-
May 01, 2025 15:19 IST
4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்ட கரடி
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர்பேட்டராயன் பகுதியில் ஊருக்குள் புகுந்து 2 பேரை தாக்கிய கரடி - 4 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பிடிபட்டது.
ஒரு வீட்டுக்குள் சென்று பதுங்கிய கரடி மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. பின்னர், வலை வைத்து பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது. ஆந்திர வனப்பகுதியில் திறந்துவிட நடவடிக்கை
-
May 01, 2025 14:42 IST
மதுரை விமான நிலையத்தில் விஜய் ரசிகர்கள் காவல்துறையினரோடு தள்ளு முள்ளு
மதுரை விமான நிலையத்தில் விஜய் ரசிகர்கள் காவல்துறையினரோடு தள்ளுமுள்ளு நடத்தியதால், தற்போது அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
-
May 01, 2025 13:57 IST
மதுரை ஆட்சியரை மாற்றக்கோரி வி.சி.க.வினர் போராட்டம்
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் மதுரை மேலூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வி.சி.க.வினரால் பரபரப்பு துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
-
May 01, 2025 13:06 IST
அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தினால் நடவடிக்கை: ஆணையர்
தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த காவல் துறையிடம் அனுமதி பெறவில்லை மதுரையில் அனுமதியின்றி ரோடு ஷோ நடத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.
-
May 01, 2025 12:15 IST
மதுரையில் சுங்கச்சாவடி முன் விசிக போராட்டம்
மதுரை: மேலூர் அருகே உள்ள சிட்டம்பட்டி சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு விசிகவினர் முழக்கம் - போக்குவரத்து பாதிப்பு. மாவட்ட ஆட்சியர் சங்கீதா விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டு
-
May 01, 2025 11:52 IST
கோவை விமான நிலையத்தில் புதிய கார் பார்க்கிங் மையம்
கோவை விமான நிலையத்தில் 524 கார்களை நிறுத்தும் வகையில் புதிய பார்க்கிங் மையம் அமைக்கப்பட இருக்கிறது. கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் 30 விமானங்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் 10,000 உள்நாட்டுப் பயணிகளும், 1,000 வெளிநாட்டுப் பயணிகளும் பயணம் செய்கிறார்கள்.
-
May 01, 2025 11:08 IST
மாமர இலைகளைத் தாக்கும் பூச்சி - விவசாயிகள் கவலை
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 6,000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மாமரங்களின் இலை மற்றும் காய்களைத் தாக்கும் புதுவகையான பூச்சியினால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 5,000 டன் மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், பூச்சித் தாக்குதலால் விளைச்சல் பாதிகப்பட்டு உள்ளதாகவும், மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
May 01, 2025 11:03 IST
திருப்பத்தூர்: பெண்ணை கடித்து குதறிய கரடி - பரபரப்பு
திருப்பத்தூர் அடுத்த நாட்றம்பள்ளி அருகே கொத்தூர் என்ற பகுதிக்குள் புகுந்து, பெண்ணை கடித்து குதறிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது. பெண்ணைத் தாக்கிவிட்டு, வீட்டிற்குள் பதுங்கி இருக்கும் கரடியை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரம் காட்டி உள்ளனர்.
-
May 01, 2025 10:12 IST
நாகை-இலங்கை பயண கட்டணம் குறைப்பு
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கட்டணம் ரூ.500 குறைக்கப்பட்டுள்ளது. இருவழி பயணக் கட்டணம் ரூ.8,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இனி 22 கிலோ வரை இலவசமாக லக்கேஜ் கொண்டு செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
May 01, 2025 09:51 IST
தங்கம் சவரனுக்கு ரூ.1,640 குறைந்தது
தங்கம் சவரனுக்கு ரூ.1,640 குறைந்து ஒரு பவுன் ரூ 70,200க்கு விற்பனையாகிறது.
-
May 01, 2025 09:24 IST
திருத்தணியில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றம்
திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மே 11 வரை நடைபெறும் பிரம்மோற்சவத்தில் முருகப்பெருமான் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுவார். பிரம்மோற்சவ கொடியேற்றத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.
-
May 01, 2025 09:21 IST
விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள்
தவெக தலைவரும் நடிகருமான விஜயை காண மதுரை விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்தனர். மாலை 4 மணிக்கு விஜய் வருகை தர உள்ள நிலையில் காலை 7 மணிக்கு வருவதாக நினைத்து விமான நிலையத்தில் ரசிகர்கள் குவிந்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.