/indian-express-tamil/media/media_files/2025/02/26/RJXtLOjjpmEm6MWNwEKE.jpg)
-
May 19, 2025 02:21 IST
2026 தேர்தலில் நா.த.க தனித்து போட்டியிடும் - சீமான்
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், நம் பயணம், நமது கால்களில் தான் என்று விளக்கம் அளித்துள்ளார்.
-
May 18, 2025 18:09 IST
திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை தினமான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் அதிகாலை முதலே கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடினர். இதைத்தொடர்ந்து பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
-
May 18, 2025 17:16 IST
கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் மரணம்
நாகர்கோவில் அருகே கார் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் காரை ஓட்டிய கிறிஸ்டோபர் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாலையில் வேகமாக சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்தது. கால்வாய் சகதியில் கார் சிக்கிக் கொண்டதால் ஓட்டுநர் வெளியே வர முடியாமல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது
-
May 18, 2025 16:48 IST
ஏரியில் குளிக்க சென்ற மாணவன் நீரில் மூழ்கி பலி
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஏரியில் குளிக்க சென்ற +2 மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரியில் சேர இருந்த நிலையில் மாணவன் உயிரிழந்த சோகம். இளைஞர்களுக்குள் நடந்த நீச்சல் போட்டி சோகத்தில் முடிந்தது.
-
May 18, 2025 16:19 IST
சாத்தான்குளம் விபத்து: கனிமொழி நேரில் ஆறுதல்
சாத்தான்குளம் அருகே கிணற்றில் ஆம்னி வேன் விழுந்ததில் பலியானோரின் உறவினர்களைச் சந்தித்து கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்தார். உறவினர்களைச் சந்தித்து கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
-
May 18, 2025 16:04 IST
சாத்தான்குளம் விபத்து - 45 சவரன் நகைகள் மீட்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அவர்களது உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
-
May 18, 2025 16:00 IST
கொடைக்கானலில் மே 24ல் மலர் கண்காட்சி தொடக்கம்
கொடைக்கானலில் வரும் 24-ம் தேதி 62-வது மலர் கண்காட்சி தொடங்குகிறது. ஜூன் 1-ம் தேதி வரை 9 நாட்கள் மலர் கண்காட்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மலர் கண்காட்சியுடன் கோடை விழாவும் தொடங்கி, நாய்கள் கண்காட்சி, படகு போட்டி, மீன்பிடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
May 18, 2025 15:58 IST
திருவாரூரில் லஞ்சம் பெற்ற வருவாய் ஆய்வாளர் கைது
திருவாரூரில் இடத்திற்கான பட்டா அளவில் இருக்கும் பிழையை சரி செய்து கொடுப்பதற்கு ரூ.15,000 லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜான் டைசன், (29) என்பவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 18, 2025 15:21 IST
ஈரோட்டில் முதிய தம்பதி கொலை- விசாரணை தீவிரம்
சிவகிரி அருகே முதிய தம்பதி கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மா்ம நபா்கள் அண்மையில் கொடூரமாகத் தாக்கி நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றனா். 10 தனிப் படைகளை அமைத்து கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா். மேலும், கொலை நடந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் உள்ள வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக போலீஸாா் தெரிவித்தனா். இந்த நிலையில் முதிய தம்பதி கொலை தொடர்பாக 3 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
May 18, 2025 13:48 IST
தஞ்சையில் பட்டாசு குடோனில் வெடி விபத்து: 2 பேர் மரணம்
தஞ்சை நெய்வேலி தென்பாதி அனுமதி இன்றி செயல்பட்டு வந்த, பட்டாசு குடோனில், ஏற்பட்ட வெடி விபத்தில், இருவர் உயிரிழந்தனர்.இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
May 18, 2025 13:43 IST
திருமயம் அருகே உயிருடன் புதைக்கப்பட்ட குழந்தை மீட்பு - கைது
திருமயம் அருகே, திருமணமாகாத நர்சிங் கல்லூரி மாணவி தனக்கு தானே பிரசவம் பார்த்து, பெண் குழந்தையை உயிருடன் வீட்டு வாசலில் புதைத்த கொடூரம். இளம்பெண்ணின் காதலன் சிலம்பரசனை கைது செய்து பனையப்பட்டி போலீசார் விசாரணை
-
May 18, 2025 13:43 IST
கட்டட தொழிலாளி மீது துப்பாக்கிச்சூடு
மதுரை திருமங்கலம் அருகே கட்டட தொழிலாளியை துப்பாக்கியால் சுட்ட முன்னாள் ராணுவ வீரர். இதில் கட்டட தொழிலாளி மற்றும் 14 வயது சிறுவன் மீது குண்டு பாய்ந்து காயம். பணப் பிரச்சினை காரணமாக துப்பாக்கிச்சூடு நிகழ்த்திய முன்னாள் ராணுவ வீரரிடம் போலீசார் விசாரணை
-
May 18, 2025 13:08 IST
விவசாயி வீட்டில் 50 சவரன் கொள்ளை
விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளை. கதவு மற்றும் பீரோவில் உள்ள கைரேகை குறித்து தடயவியல் நிபுணர்கள் ஆய்வு. இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை
-
May 18, 2025 12:08 IST
காதலுக்கு எதிர்ப்பு - இளம்பெண் தற்கொலை
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை. நேற்று காலை வீட்டிலிருந்து மாயமான நிலையில், விவசாய கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது
-
May 18, 2025 12:07 IST
சாத்தான்குளம் சம்பவம் - அதிரடி உத்தரவு
சாத்தான்குளம் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு சாலை ஓரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
-
May 18, 2025 11:25 IST
சாத்தான்குளம் விபத்து: கிணற்றுக்குள் இருக்கும் 20 சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரம்
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கிணற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் மூழ்கி கிடக்கும் 20 சவரன் நகைகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி முத்து குளிக்கும் மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கிணற்றுக்குள் நகைகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
-
May 18, 2025 11:24 IST
ஈரோடு, சிவகிரி இரட்டை கொலை வழக்கு குறித்து போலீஸ் விசாரணை
, தொடர்பாக, அரச்சலூர் பகுதியை சேர்ந்த 3 பேரை பிடித்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை சம்பவம் தொடர்பாக 12 தனிப்படைகள் விசாரிக்கும் நிலையில், நாள்தோறும் 55 இருசக்கர வாகனங்கள், 4 நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து பணிகள் நடைபெற்று வருகிறது. 60 கி.மீ சுற்றளவு பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் 3 நாள் பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 18, 2025 11:23 IST
சமத்துவ மீன்பிடித் திருவிழா
திண்டுக்கல், பூசாரிபட்டியில் நடைபெற்ற சமத்துவ மீன்பிடித் திருவிழாவில் பொதுமக்கள் போட்டி போட்டு மீன்களை அள்ளிச் சென்றனர்.
-
May 18, 2025 10:39 IST
இரும்பு கேட் விழுந்து 2 பேர் பலி - வழக்குபதிவு
பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே தனியார் நிறுவனத்தில் இரும்பு கேட் விழுந்து 2 பேர் பலியாகினர். தனியார் நிறுவன மேலாளர் எபனேசர் கிருபாகரன், உற்பத்தி பிரிவு மேலாளர் சிவபெருமாள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொழிலாளர்களை கவன குறைவாக, அஜாக்கிரதையாக, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்ய அனுமதித்ததாக 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
May 18, 2025 10:00 IST
பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு
தென்காசி பாவூர்சத்திரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் நீலகண்டன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு குடும்ப நண்பர் வீட்டுக்கு வந்தபோது அவரது 15 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். யாரிடமும் சொல்லக் கூடாது என துப்பாக்கியை வைத்து மிரட்டியதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
May 18, 2025 09:21 IST
தருமபுரம் ஆதீனம் பல்லக்கில் எழுந்தருளினார்
மயிலாடுதுறை பெருவிழாவையொட்டி தருமபுரம் ஆதீனம் வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளினார். பக்தர்கள் சுமந்து செல்லும் நிலையில் முந்தைய ஆதீனங்களின் குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
-
May 18, 2025 09:19 IST
நன்னிலம் அரசு அலுவலகத்தில் தீ-ஆவணங்கள் சேதம்
திருவாரூர் நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏற்பட்ட விபத்தில் பொருட்கள் எரிண்நு சேதமடைந்தன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்ட பிரிவு அலுவலகத்தில் கணினி, ஆவணங்கள் சேதம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் போராடி அணைத்தனர்.
-
May 18, 2025 09:17 IST
கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி
தேனி மாவட்டம் கும்பக்கரை அருவியில் காலை 10 மணி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மராமத்து பணிகளுக்காக அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. பணிகள் இன்று காலை 10 மணிக்குள் முடியும் என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.