/indian-express-tamil/media/media_files/2025/05/21/GvVVvJwUZjTH474t2rfb.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) கிலோ ரூ.91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முன்கூட்டியே தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 4 அல்லது 5 நாட்களில் தொடங்க வாய்ப்புள்ளது. இது தமிழகத்தின் சில பகுதிகளில் பரவும். இதேபோல, மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா, வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக் கடலில் இன்று (புதன்கிழமை) வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இது நாளை காற்றத்தழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். பின்னர் இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும். இதனால், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
May 21, 2025 22:17 IST
டாஸ்மாக் டெண்டர், பார் உரிமம் உள்ளிட்ட அனைத்திலும் முறைகேடு - நயினார் நாகேந்திரன்
டாஸ்மாக் டெண்டர், பார் உரிமம் உள்ளிட்ட அனைத்திலும் முறைகேடு நடந்துள்ளதாக தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகவும், டாஸ்மாக் மேலாளர் நியமனமும் முறையாக இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
May 21, 2025 20:39 IST
பாலியல் குற்றங்கள் குறித்து இ.பி.எஸ் விஷமப் பிரசாரம் - அமைச்சர் ரகுபதி
பாலியல் குற்றங்கள் குறித்து இ.பி.எஸ் விஷமப் பிரசாரம் செய்கிறார் என அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். அதன்படி, "பொள்ளாச்சி தொடங்கி அண்ணா நகர் பாலியல் வழக்கு வரை குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து பாதுகாத்த பழனிசாமி, பெண்களுக்கு தற்போது தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை என விஷமப் பிரசாரம் செய்து மடைமாற்றலாம் என்று அரசியல் செய்தால் மக்கள் நம்பி விடுவார்களா?" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
May 21, 2025 20:01 IST
தி.மு.க முன்னாள் நிர்வாகிக்கு முன்ஜாமின்
பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் தி.மு.க நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது அவருக்கு முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அவரது மனைவிக்கும் சேர்த்து முன்ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
May 21, 2025 19:45 IST
டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் இ. டி விசாரணை நிறைவு
அமலாக்கத்துறை அலுவலகத்தில் டாஸ்மாக் துணை பொது மேலாளர் ஜோதி சங்கரிடம் விசாரணை நிறைவு பெற்றது. டாஸ்மாக் பொது மேலாளர் சங்கீதாவிடம் (கொள்முதல் மற்றும் நிர்வாகம்) நடந்த விசாரணையும் நிறைவடைந்தது.
-
May 21, 2025 19:18 IST
துணைவேந்தர் நியமனம் - இடைக்கால தடை
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தொடர்பான சட்டப்பிரிவுகளுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கிய சட்டப்பிரிவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
May 21, 2025 19:04 IST
ராகுல் காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி
மாநிலங்களின் உரிமைகளுக்கான உங்களது குரலுக்கு நன்றி. கூட்டாட்சி தத்துவத்தை காக்க குரல் எழுப்பியமைக்கு ராகுலுக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
May 21, 2025 18:42 IST
“எதிர்கட்சியாக கருப்பு பலூன் - தற்போது வெள்ளை குடை“
கடந்த 3 ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டங்களை புறக்கணித்த முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது பங்கேற்க செல்வது ஏன்? அறிவாலய மாடியில் சிபிஐ ரெய்டு நடந்தபோது, கீழ்மாடியில் காங்கிரஸ் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியது திமுக. எதிர்கட்சியாக இருந்தபோது பாஜகவுக்கு கருப்பு பலூன் காட்டிவிட்டு தற்போது வெள்ளை குடை காட்டுவது ஏன்? 7.5% உள் இட ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதபோது, அரசியலமைப்பு 162ன் படி மாநில உரிமையை மீட்டது நான் என்றெல்லாம் ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
-
May 21, 2025 18:41 IST
சூரை மீன்பிடி துறைமுகத்தை ஆய்வு செய்த அமைச்சர்கள்
சென்னை திருவொற்றியூரில் ரூ.272 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சூரை மீன்பிடி துறைமுகத்தை வரும் 28ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ள நிலையில், அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் சேகர்பாபு அங்கு ஆய்வு செய்தனர். நிர்வாக கட்டடம், வலை பாதுகாப்பு கட்டடம், அலை தடுப்பு வார்ப்புகள் மற்றும் படகு நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
-
May 21, 2025 18:40 IST
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சம் பதிவான வெப்பம்
தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக தொண்டி பகுதியில் 101.48 டிகிரி F வெப்பநிலை பதிவு தூத்துக்குடியில் 100.76 டிகிரி F, மதுரை விமான நிலையம் மற்றும் பாளையங்கோட்டையில் 99.86 டிகிரி F அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளது.
-
May 21, 2025 18:06 IST
கெஜ்ரிவால் அரசுபோல் தமிழக அரசு சிக்கிக் கொண்டது:நயினார்
டெல்லியில் கெஜ்ரிவால் அரசுபோல் தமிழ்நாடு அரசு பெரிய ஊழ்லில் சிக்கிக் கொண்டுள்ளது. டாஸ்மாக் முறைகேட்டில் சிக்கிய ரத்தீஷ் துணை முதல்வருக்கு நெருங்கியவர். டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
-
May 21, 2025 17:36 IST
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?: இபிஎஸ்
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் ஸ்டாலின் அவர்களே? அது கண்ணாடி உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? அறிவாலய மேல்மாடியில் சிபிஐ ரெய்டு வந்த போது கீழ் மாடியில் நீங்கள் என்ன செய்தீர்கள்? 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு அடியில் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
May 21, 2025 17:30 IST
593 குடும்பங்களுக்கு இலவச வீடு, உதவித்தொகை: அரசு
593 குடும்பங்களுக்கு பெரும்பாக்கம், நாவலூர் பகுதிகளில் 390 சதுரடியில் இலவசமாக வீடு கட்டித்தரப்படும்; பயனாளிகள் குடும்பத்திற்கு இடமாற்றுப்படியாக ரூ.5,000; வாழ்வாதார உதவி ரூ.2,500 தரப்படும். ஓராண்டுக்கு ரூ.30,000 மட்டுமின்றி மின் இணைப்புக் கட்டணம் ரூ.2,500 வழங்கப்படுகிறது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
-
May 21, 2025 17:24 IST
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்?: இபிஎஸ்
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம் ஸ்டாலின் அவர்களே?; அது கண்ணாடி; உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? அறிவாலய மேல்மாடியில் சிபிஐ ரெய்டு வந்தபோது கீழ் மாடியில் நீங்கள் என்ன செய்தீர்கள்?; 63 தொகுதிகளை தாரைவார்த்தபோது டேபிளுக்கு அடியில் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
-
May 21, 2025 16:57 IST
அனகாபுத்தூர் ஆக்கிரமிப்பு அகற்றம்- அரசு விளக்கம்
‘அடையாறு நதியை சீரமைக்க அனகாபுத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் அவசியம். அடையாறு கரையோர குடியிருப்புகளை அகற்றி அதன் மூலம் மாசுபடுவதை தடுப்பது அவசியம். கழிவுநீர் கலப்பை தடுக்க ஆற்றங்கரையோர வீடுகள் மறுகுடியமர்வு செய்வது அவசியம்' என்று தமிழ்நாடு அரசு கூறியுள்ளது.
-
May 21, 2025 16:29 IST
விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்?: அரசுக்கு இபிஎஸ் கேள்வி
பெண்கள் பணிபுரியும் கல்வி நிலையங்களில் விசாகா கமிட்டி அமைக்காதது ஏன்?; விசாகா கமிட்டி அமைக்க வேண்டுமென்ற வழிகாட்டுதல் என்னவானது? சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது; பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
-
May 21, 2025 16:17 IST
6வது மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை
சென்னை ஓட்டேரியில், அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து குதித்து மத்திய அரசு ஊழியர் தற்கொலை. தபால் துறையில் வேலை செய்து வந்த தஸ்தகீர், புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள மென்பொருள் பற்றிய புரிதல் இல்லாததால் விபரீத முடிவு எடுத்துள்ளார்.
-
May 21, 2025 16:12 IST
ஆளுநர் விவகாரம்- முதல்வர் கருத்துக்கு ராகுல் ஆதரவு
“இந்தியாவின் பலம் அதன் பன்முகத் தன்மையே; மாநிலங்களின் குரலை மத்திய அரசு ஒடுக்க முயற்சி குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு ஆளுநர்கள் மூலம் மோடி அரசு நெருடிக்கடி தருகிறது; மத்திய அரசின் செயல் கூட்டாட்சி மீதான ஆபத்தான தாக்குதல்; இதை எதிர்க்க வேண்டும்" என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.
-
May 21, 2025 15:38 IST
எண்ணூரில் வெடிகுண்டு கண்டெடுப்பு
எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் பூமிக்கு அடியில் இருந்து வெடிகுண்டு கண்டெடுப்பு வீட்டுக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டியபோது வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டது ராணுவத்தில் பயன்படுத்தக்கூடிய வெடிகுண்டு என்பது காவல் துறையினரின் சோதனையில் தெரியவந்தது
-
May 21, 2025 14:00 IST
துணைவேந்தர் நியமன அதிகார சட்டங்களை எதிர்த்து வழக்கு
துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டங்களை எதிர்த்த வழக்கை,உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உயர் கல்வித்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
May 21, 2025 13:58 IST
எந்நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன், அடிபணிய மாட்டேன்: மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை பெற நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளேன். பாஜகவுடன் கூட்டணி கிடையாது என தீர்க்கமாக சொல்லிவிட்டு தற்போது கூட்டணி வைத்துள்ளார் ஈபிஎஸ். பாஜகவிடம் வெள்ளைக்கொடி காட்டி கூட்டணி வைத்த ஈபிஎஸ் என்னைப் பார்த்து வெள்ளைக்கொடி ஏந்தியதாக பேசக்கூடாது, எந்நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன், அடிபணிய மாட்டேன் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
May 21, 2025 13:56 IST
பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா? மு.க.ஸ்டாலின் கேள்வி
"பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை #NITIAayog கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!
— M.K.Stalin (@mkstalin) May 21, 2025
சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
"பா.ஜ.க.வுடன்… pic.twitter.com/03W1rihtjv -
May 21, 2025 13:29 IST
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு அமலாக்கத் துறை சம்மன்
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இன்று ஆஜராகும்படி சம்மன் அளிக்கப்பட்ட நிலையில் ஆஜர் ஆகவில்லை. எனவே அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. துரைராஜ் செல்வராஜ் என்ற நபரும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இட்லி கடை, பராசக்தி உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
-
May 21, 2025 13:05 IST
ஜீவனாம்சம் கோரிய ஆர்த்தி - ரவி மோகனுக்கு கோர்ட் உத்தரவு
விவாகரத்து வழக்கில் ஜீவனாம்சம் கோரி ஆர்த்தி தாக்கல் செய்த மனு மீது நடிகர் ரவி மோகன் பதிலளிக்க சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் நடிகர் ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து வழக்கின் விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தது
-
May 21, 2025 13:04 IST
தி.மு.க முன்னாள் நிர்வாகி மீதான பாலியல் புகார்; தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை
தி.மு.க முன்னாள் நிர்வாகி தெய்வச்செயல் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. தமிழக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட தேசிய மகளிர் ஆணையம், பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணையை வலியுறுத்தி தமிழக டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளது. 3 நாட்களுக்குள் எஃப்.ஐ.ஆரின் நகலுடன் விரிவான நடவடிக்கை அறிக்கையையும் தேசிய மகளிர் ஆணையம் கோரியுள்ளது
-
May 21, 2025 12:35 IST
ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
நடிகர் ரவி மோகன், ஆர்த்தி விவாகரத்து வழக்கின் விசாரணையை ஜூன் 12ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விவாகரத்து கோரிய வழக்கில் நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி இருவரும் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் ஆஜராகினர்
-
May 21, 2025 12:11 IST
அன்புமணியுடன் மனக்கசப்பு இல்லை – ராமதாஸ்
அன்புமணியுடன் மனக்கசப்பு இல்லை. அவர் வருவார். கூட்டத்தில் கலந்துக் கொள்வார் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்
-
May 21, 2025 12:10 IST
குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதால் வழக்குப்பதிவு - தலைமை காவலர் தற்கொலை
சென்னையில் குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய தலைமை காவலர் செந்தில்குமார் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். குடிபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்
-
May 21, 2025 11:54 IST
ஜி.கே.மணி பேட்டி
Credit: Sun News
#WATCH | “பாமகவில் நிலவிய குழப்பமான சூழல் முடிவு”
— Sun News (@sunnewstamil) May 21, 2025
தைலாபுரத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்த பாமக கெளரவத் தலைவர் ஜி.கே.மணி பேட்டி#SunNews | #PMK | #AnbumaniRamadoss pic.twitter.com/mwU1ixE3hK -
May 21, 2025 11:37 IST
கருணை அடிப்படையில் 115 பேருக்கு பணி நியமன ஆணை
பணிக்காலத்தில் உயிரிழந்த காவலர்களின் வாரிசுதாரர்கள் 115 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
-
May 21, 2025 10:57 IST
ராஜீவ்காந்தி 34-வது நினைவு நாளையொட்டி, பிரதமர் மோடி அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளில் எனது அஞ்சலியை செலுத்துகிறேன்
- எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி பதிவு
-
May 21, 2025 10:53 IST
நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு- செல்வப்பெருந்தகை வரவேற்பு
Credit: Sun News
#WATCH | “தமிழ்நாட்டின் உரிமையை மீட்க, மக்களின் குரலாக நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர்”
— Sun News (@sunnewstamil) May 21, 2025
- காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வரவேற்பு#SunNews | #NITIAayog | #MKStalinCM | @SPK_TNCC pic.twitter.com/UMwytDjUlM -
May 21, 2025 10:32 IST
யானைக் கூட்டம் உல்லாச குளியல்
Credit: Sun News
#WATCH | கேரளா: காந்தலூர் பகுதியில் உள்ள நீரோடையில் உல்லாசமாகக் குளித்து மகிழும் யானைக் கூட்டம்.#SunNews | #Kerala pic.twitter.com/gfMcmHwSvD
— Sun News (@sunnewstamil) May 21, 2025 -
May 21, 2025 10:15 IST
ஒரே தண்டவாளத்தில் 2 ரயில்கள்
கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலின் 6-வது பெட்டியில் புகை வந்ததால் பல்லாவரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி மற்றொரு ரயில் சென்ற தண்டவாளத்தில், புகை பாதிப்பு ஏற்பட்ட ரயில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது
2 ரயில்களும் ஒரே தண்டவாளத்தில் இருப்பதைக் கண்டு பயணிகள் பதற்றம் அடைந்தனர்.
-
May 21, 2025 09:48 IST
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரிப்பு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,760 அதிகரித்து, ரூ.71,440 ரூபாய்க்கும், கிராமுக்கு ரூ.220 அதிகரித்து 8,930 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
-
May 21, 2025 09:01 IST
கல்வி நிதி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு
தமிழகத்திற்கு தர வேண்டிய கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் தான் ரூ.2,291 கோடி கல்வி நிதி வழங்கப்படும் என மத்திய அரசு கூறுவது சட்டவிரோதம் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
May 21, 2025 09:00 IST
ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ராகுல்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 34-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, டெல்லி வீர் பூமியில் ராஜீவ் காந்தி நினைவு மண்டபத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவர்களுடன் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் மரியாதை செலுத்தினர்.
-
May 21, 2025 08:59 IST
சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் விபத்து
சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானது. திருவொற்றியூரில் இருந்து ராமாபுரம் நோக்கிச் சென்ற கார் கத்திப்பாரா மேம்பாலத்தில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மோதியது. காரில் பயணித்த 2 பெண்கள் காயமடைந்த நிலையில், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
-
May 21, 2025 08:01 IST
ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து 14,000 கனஅடியாக உயர்வு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது. காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்ட தொடங்கியது. மேலும் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
-
May 21, 2025 07:26 IST
தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன்
தங்கக் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்கி பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க் கிழமை உத்தரவிட்டுள்ளது. துபாயில் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கத்தை பெங்களூருக்கு கடத்திவந்தபோது நடிகை ரன்யா ராவை மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் மாா்ச் 3 ஆம் தேதி கைதுசெய்து, சிறையில் அடைத்தனா்.
-
May 21, 2025 07:23 IST
வேங்கைவயல் வழக்கு விசாரணை மே 28-க்கு ஒத்திவைப்பு
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பட்டியலினக் குடியிருப்பில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தின் வழக்கு விசாரணை 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை குற்றவியல் நடுவா் மன்றம் 2-ல் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த மே 12-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினா். வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
-
May 21, 2025 07:09 IST
குருவாயூர், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மாற்றம்
திருவனந்தபுரம் கோட்டத்தில் பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர், அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து 24-ந்தேதி காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சாலக்குடி-குருவாயூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சாலக்குடியில் நிறுத்தப்படும். தாம்பரத்தில் இருந்து ஜூன் 10-ந்தேதி இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு நாகர்கோவில் செல்லும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில், நெல்லை-நாகர்கோவில் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் நிறுத்தப்படும். மறுமார்க்கமாக, நாகர்கோவிலில் இருந்து ஜூன் 11-ந்தேதி மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில், நாகர்கோவில்-நெல்லை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, நெல்லையில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.