/tamil-ie/media/media_files/uploads/2021/09/Kutralam_Main_Falls.jpg)
உதகை சுற்றுலா தலங்கள் மூடல்: நீலகிரி உதகையில் மழை பெய்து வரும் நிலையில் தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், அவலாஞ்சி, உதகை படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலாத் தலங்கள் இன்று தற்காலிகமாக மூடல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
May 25, 2025 23:24 IST
திருவண்ணாமலையில் ரெயின் கோட் விற்பனை அமோகம்!
தொடர் மழையையும் பொருட்படுத்தாமல் ரெயின் கோட் அணிந்தபடி கிரிவலம் வரும் பக்தர்கள். 1 ரெயின் கோட் ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
May 25, 2025 20:50 IST
மிக கனமழை எச்சரிக்கை: குற்றால அருவிகளில் குளிக்க தடை
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில், மிக கனமழை எச்சரிக்கையால் குளிக்க தடை விதிக்கப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
-
May 25, 2025 18:52 IST
மஞ்சுவிரட்டில் காளை முட்டியதில் சிறுவன் உயிரிழப்பு
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே துவார் கிராமத்தில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளை முட்டி 14 வயது சிறுவன் உயிரிழப்பு
-
May 25, 2025 17:34 IST
வெள்ளியங்கிரி மலையேறிய 2 பக்தர்கள் உயிரிழப்பு
கோவை வெள்ளியங்கிரி மலையேறிய 2 பக்தர்கள் உயிரிழந்தனர். வெள்ளியங்கிரி 7-வது மலையில் பெண் பக்தரும், 5-வது மலையில் ஒருவரும் என 2 பேர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
May 25, 2025 17:14 IST
உதகை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு: காய்கறிகள் மூழ்கின
கப்பத்தொரை ஆற்று தண்ணீர் கரையோரங்களில் உள்ள தோட்டங்களில் புகுந்தது. பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கேரட், பீட்ரூட் மலைக்காய்கறிகள் வெள்ள நீரில் மூழ்கின. 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வெள்ளைப்பூண்டு, உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் மூழ்கின.
-
May 25, 2025 16:43 IST
வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு தற்காலிக தடை
கோவை மாவட்டத்திற்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், வெள்ளியங்கிரி மலையேற பக்தர்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பு கருதி நடவடிக்கை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
-
May 25, 2025 16:06 IST
மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையையொட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் காலை முதலே மக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்தனர். வெண்ணெய் உருண்டைப்பாறை, அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோவில் உள்ளிட்டவற்றையும் கண்டு ரசித்தனர்.
-
May 25, 2025 15:48 IST
நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
நெல்லை, தேனி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை (மே 26) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், திண்டுக்கல்லில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
May 25, 2025 14:14 IST
ஊட்டியில் மரம் முறிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு
கனமழை எதிரொலியாக ஊட்டியில் மரம் முறிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் இருந்து குடும்பத்தினருடன் சுற்றுலாவிற்கு வந்திருந்த இடத்தில் சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
May 25, 2025 12:13 IST
ரெட் அலெர்ட்: ஊட்டியில் சுற்றுலாத் தலங்கள் மூடல்
நீலகிரி மாவட்டத்திற்கு கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஊட்டியின் பாதுகாப்பு கருதி, மே 25, 2025 அன்று முதல் எட்டு முக்கிய சுற்றுலாத் தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சுற்றுலாப் பயணிகள் மாலை 4 மணிக்குள் தங்களது தங்கும் விடுதிகளுக்குத் திரும்ப வேண்டும் என்றும், பொதுமக்கள் அத்தியாவசியத் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
May 25, 2025 11:57 IST
துப்பாக்கியால் சுட்டு பெண் போலீஸ் தற்கொலை
நாகை ஆட்சியர் அலுவலகத்தில், கருவூல பாதுகாப்பு பணியில் இருந்த பெண் போலீஸ் அபிநயா என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து, சம்பவ இடத்தில் நாகை போலீஸார், எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்
-
May 25, 2025 11:26 IST
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
அருவிகளில் நீர்வரத்து சீரானதை தொடர்ந்து, குற்றாலம், மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தென்காசி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது
-
May 25, 2025 10:53 IST
இ.டி சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பு – இ.பி.எஸ்
அமலாக்கத்துறை சோதனைக்கு பயந்து நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்றுள்ளார் என கோவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்
-
May 25, 2025 09:33 IST
குற்றால அருவிகளில் குளிக்க தடை
கனமழை முன்னெச்சரிக்கையாக குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலத்தில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவியில் மட்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளித்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
May 25, 2025 09:32 IST
நீலகிரியில் ஆற்றில் காருடன் சிக்கிய 3 பேர் மீட்பு
நீலகிரி - கூடலூரில் சுண்ணாம்பு பாலம் ஆற்றை கடக்கும் போது வாகனத்தோடு அடித்துச் செல்லப்பட்ட 2 கேரள சுற்றுலா பயணிகள் மீட்க்கப்பட்டுள்ளனர். சுற்றுலா பயணிகளின் சத்தம் கேட்டு காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல், நீண்ட நேரம் போராடி இருவரையும் மீட்ட போலீசார்.
-
May 25, 2025 09:32 IST
உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்
நீலகிரி உதகையில் மழை பெய்து வரும் நிலையில் தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், அவலாஞ்சி, உதகை படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலாத் தலங்கள் இன்று தற்காலிகமாக மூடல் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.