/indian-express-tamil/media/media_files/2025/06/01/XCpEWr29Xz8ZrHn6vJ0E.jpg)
குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்: கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விவேகானந்தர் மண்டபம், கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
-
Jun 01, 2025 18:58 IST
புதுக்கோட்டை: குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் இன்று எதிர்பாராதவிதமாக தீ ஏற்பட்டது. இதனையடுத்து சிறிது நேரத்தில் தீ மளமளவென எரியத்தொடங்கியது. இதனால் கரும்புகை அப்பகுதி முழுவதும் சூழ்ந்தது.
-
Jun 01, 2025 18:27 IST
மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் தகித்தது. வேலூரில் 104, திருச்சியில் 101 , சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 101 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. பருவமழையால் சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது.
-
Jun 01, 2025 18:06 IST
தொடர் வெற்றிக்குக் காரணம் கூட்டணி: ஸ்டாலின்
திமுக தொடர்ந்து வெற்றி பெருவதற்கான காரணங்களில் ஒன்று நம்முடைய கூட்டணி என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வரலாற்றிலேயே ஒரு கூட்டணி இத்தனை தேர்தலுக்கு தொடர்ந்ததாக வரலாறே இல்லை. சூரியன் நிரந்தரமானது. அதேபோன்று திமுகவும் நிரந்தரமானது. திமுக எப்படி நிரந்தரமானதோ, அதேபோன்று திமுக ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். அந்த நிலையை உருவாக்க முடியும். உங்களால்தான் முடியும். நம்மால்தான் முடியும் என்றார்.
-
Jun 01, 2025 18:03 IST
”டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது”
திமுக இருக்கும் வரை, இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கும் வரை, டெல்லி படையெடுப்புக்கு ஒருபோதும் தமிழ்நாடு வீழாது. என்று ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு போராடும். தமிழ்நாடு வெல்லும். பொதுக்குழுவில் தொடங்கியிருக்கும் இந்தப் பயணத்த சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிவிழாப் பொதுக்கூட்டத்தில் நாம் நிறைவு செய்ய வேண்டும். அதில் மீண்டும் ஒன்றாக சந்திப்போம் என்று கூறி விடைபெறுகிறேன் என்றார்.
-
Jun 01, 2025 17:11 IST
நாகை-இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் துவக்கம்
வங்கக்கடலில் அடுத்தடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் கடல் சீற்றம் காரணமாக கடந்த 24ம் தேதி முதல் கப்பல் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து 8 நாட்களுக்கு பிறகு இன்று (1ம் தேதி) முதல் வழக்கம்போல நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் புறப்பட்டு சென்றது. காலை 7.30 மணிக்கு புறப்பட்ட கப்பலில் 112 பேர் பயணம் செய்தனர்.
-
Jun 01, 2025 16:41 IST
7வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்- ஸ்டாலின் உறுதி
அடுத்தாண்டு இதே நேரம், திமுக 7வது முறையாக ஆட்சி அமைத்தது என்பதுதான் தலைப்பு செய்திகளாக இருக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். நான் திமுக தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து, நாம் தொடர்ந்து வெற்றி பெறுவதற்கான காரணங்களில் ஒன்று. நம்முடைய வலுவான கூட்டணிதான். அவர்களோடு நான் எப்படி நட்போடும், பாச உணர்வுடனும் இருக்கிறேனோ, நீங்களும் அதே உணர்வோடு கூட்டணி கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
-
Jun 01, 2025 16:36 IST
”2026 வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும்”
2026-ல் தி.மு.க. பெறவிருக்கும் வரலாறு காணாத வெற்றிக்கு மதுரை பொதுக்குழு அடித்தளமாக அமையட்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கழகத்தின் கொள்கைகள் - திராவிட மாடல் அரசின் சாதனைகளை அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளர்.
-
Jun 01, 2025 16:09 IST
”தி.மு.க உறுப்பினர் விபத்தில் இறந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்”
எதிர்பாராத விதமாக தி.மு.க உறுப்பினர் சாலை விபத்தில் இறந்தால், அக்குடும்பத்தின் வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருந்தால் கட்சியின் சார்பாக ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்
-
Jun 01, 2025 16:04 IST
ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.,வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க - ஸ்டாலின்
ஒட்டுமொத்தமாக பா.ஜ.க.,வின் கண்ட்ரோலுக்கு சென்றிருக்கிறது அ.தி.மு.க. ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பா.ஜ.க.,வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்ல எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்
-
Jun 01, 2025 15:30 IST
இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் - மு.க.ஸ்டாலின்
இளைஞர்களுக்கு வாய்ப்பைக் கொடுங்கள்; எந்தளவுக்கு இளைஞர்களுக்கு இடம் கொடுக்கிறீர்களோ, அந்தளவுக்கு கழகத்தில் புது ரத்தம் பாயும்; செயல்பாடுகள் வேகமாக இருக்கும்; வெற்றி உறுதி செய்யப்படும் என தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்
-
Jun 01, 2025 15:27 IST
தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது - ஸ்டாலின்
தி.மு.க. ஆட்சிக்கு எதிரான அலையைவிட, ஆதரவு அலைதான் அதிகமாக வீசுகிறது. கடந்த அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி ஆட்சியால், அதல பாதாளத்துக்கு சென்ற தமிழ்நாட்டை மீட்டிருக்கிறோம். தி.மு.க அரசு திட்டங்களால், தமிழ்நாடு முழுவதும் இரண்டரை கோடி பேர் பயனடைந்துள்ளனர். மாநில உரிமைகளுக்கு எதிரான பா.ஜ.க அரசின் அத்தனை நடவடிக்கைகளையும் எதிர்த்து போராடி வருகிறோம் என பொதுக்குழுவில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்
-
Jun 01, 2025 15:07 IST
எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது - ஸ்டாலின்
எந்த ஷா வந்தாலும் தமிழ்நாட்டை ஆள முடியாது. டெல்லிக்கு தமிழ்நாடு எப்போதுமே Out of control தான் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்
-
Jun 01, 2025 14:58 IST
7வது முறையாக தி.மு.க ஆட்சி அமைக்க வியூகங்கள் வகுக்க வேண்டும் - ஸ்டாலின்
ஏழாவது முறையாக தி.மு.க ஆட்சி அமைக்க வியூகங்கள் வகுக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். குறிப்பாக, "அடுத்த ஆண்டு இதே நேரம், 7-வது முறையாக தி.மு.க ஆட்சி அமைத்தது என்பது தான் தலைப்பு செய்தியாக இருக்க வேண்டும். அதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.
-
Jun 01, 2025 14:52 IST
மதுரைக்கு அளித்த வாக்குறுதிகள் என்ன ஆனது? - அ.தி.மு.க கேள்வி
மதுரையில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், மதுரைக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் என்ன ஆனது என்று அ.தி.மு.க கேள்வி எழுப்பியுள்ளது. குறிப்பாக, வேளாண் பல்கலைக்கழகம், போட்டித் தேர்வுகள் மையம், தொழில் வழித் தடம், வர்த்தக மையம் உள்ளிட்ட வாக்குறுதிகளின் நிலை என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
-
Jun 01, 2025 14:49 IST
2026-தேர்தல் வெற்றிக்கு முதலிடமாக மதுரை இருக்கும் - அமைச்சர் மூர்த்தி
2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க-வின் வெற்றிக்கு முதலிடமாக மதுரை இருக்கும் என்று அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும், அரசியல் விழிப்புணர்வு கொண்ட மதுரையில் இருந்து கட்சிப் பணிகள் தொடங்கி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 01, 2025 14:40 IST
ஒட்டுமொத்தமாக பா.ஜ.க-வின் கண்ட்ரோலுக்கு சென்ற அ.தி.மு.க; ஸ்டாலின் விமர்சனம்
ஒட்டுமொத்தமாக பா.ஜ.க-வின் கண்ட்ரோலுக்கு அ.தி.மு.க சென்று விட்டது என முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், தமிழ்நாட்டையும் பா.ஜ.க-வின் கண்ட்ரோலுக்கு கொண்டு செல்ல எடப்பாடி பழனிசாமி துடிக்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 01, 2025 14:12 IST
ரூ. 10 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவிப்பு
தி.மு.க உறுப்பினர்கள் யாராவது எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் உயிரிழந்தால், அவர்களது குடும்ப வாரிசுகள் 21 வயதுக்கு குறைவாக இருக்கும்பட்சத்தில் அக்குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
Jun 01, 2025 14:08 IST
தமிழ்நாட்டில் தி.மு.க-விற்கு ஆதரவான அலை வீசுகிறது; ஸ்டாலின் பேச்சு
மதுரையில் நடைபெற்று வரும் தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றி வருகிறார். அப்போது, "தமிழ்நாட்டில் தி.மு.க-விற்கு ஆதரவான அலை வீசுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
Jun 01, 2025 13:55 IST
தி.மு.க கூட்டத்தில் விருந்து
மதுரையில் நடைபெறும் தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளுக்கு பிரம்மாண்ட விருந்து அளிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, சைவம் மற்றும் அசைவம் என இரு வகையான விருந்து பரிமாறப்படுகிறது.
-
Jun 01, 2025 13:26 IST
பொள்ளாச்சி தீர்ப்புக்கு வரவேற்பு அளித்து தீர்மானம்
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு வரவேற்கு அளித்து தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு மறுப்பதாகக் கூறியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
Jun 01, 2025 12:53 IST
கல்வியை மாநில பட்டியலில் இணைக்க தீர்மானம்
மதுரையில் நடைபெறும் தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து கல்வியை மீண்டும் மாநில பட்டியலில் இணைக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
Jun 01, 2025 12:43 IST
கீழடி ஆய்வை மறுக்கும் பா.ஜ.க-விற்கு கண்டனம்; தி.மு.க தீர்மானம்
மதுரையில் நடைபெற்று வரும் தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பா.ஜ.க-விற்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, கீழடி ஆய்வை தொடர பா.ஜ.க மறுப்பதாகவும், ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிப்பதாகவும் குற்றம்சாட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
-
Jun 01, 2025 12:07 IST
இரங்கல் தீர்மானம்; முதல்வருக்கு நன்றி: பிரேமலதா
“விஜயகாந்துக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றிய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார் பிரேமலதா விஜயகாந்த். திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
-
Jun 01, 2025 12:05 IST
உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க திமுக தீர்மானம்
உறுப்பினர் சேர்க்கையை முன்னெடுக்க வேண்டும் என திமுக பொதுக்குழுவில் சிறப்புத் தீர்மானம் “ஓரணியில் தமிழ்நாடு என்ற செயல்பாட்டை நிர்வாகிகள் முன்னெடுக்க வேண்டும்; புதிய உறுப்பினர் சேர்க்கை பணியை நிர்வாகிகள் கண்காணித்து வெற்றிகரமாக்க வேண்டும்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
Jun 01, 2025 11:38 IST
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் அறிவிப்பு
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. இன்பதுரை, வழக்கறிஞர் தனபால் இருவரும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தற்போது தேமுதிகவுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. எனினும், 2026 மாநிலங்களவை தேர்தலில் தேமுதிகவுக்கு ஒரு சீட் ஒதுக்கப்படும் என அதிமுக துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி அறிவித்துள்ளார்.
-
Jun 01, 2025 11:29 IST
மகளிர் வாழ்வை மேம்படுத்தும் அரசு: தீர்மானம்
நாட்டுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்கை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசு. சமூக நலத் திட்டங்கள் மூலம் மகளிர் வாழ்வை மேம்படுத்தும் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விடியல் பயணம், மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட ஏராளமான மகளிர் முன்னேற்ற திட்டங்கள் என்று திமுக பொதுக்குழுவில் தீர்மானம் எடுத்துள்ளது.
-
Jun 01, 2025 10:47 IST
பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல்
தேமுதிக நிறுவனர் விஜயகாந்த், மன்மோகன் சிங், சீதாராம் யெச்சூரி, குமரி அனந்தன் உள்ளிட்டோர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து திமுக பொதுக்குழுவில் தீர்மானம். ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளுக்கும் திமுக பொதுக்குழுவில் இரங்கல்
-
Jun 01, 2025 10:42 IST
திமுக பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்
மதுரையில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல். கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்லும் நோக்கில் முக்கிய மாற்றங்கள் ஏற்படுத்த வாய்ப்பு. திமுக துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படலாம் என்றும் தகவல். மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் காலமான போப் மற்றும் விஜயகாந்த் ஆகியோருக்கும் பகல் கமல் உயிரிழந்தோர்க்கு மவுன அஞ்சலி செலுத்திய பின் பொதுக்குழு தொடங்கியது. திமுகவில் ஆசிரியர்கள் பேராசிரியர்களை கொண்ட கல்வியாளர்கள் அணி புதிதாக உருவாக்கம். திமுகவில் உள்ள சார்பு அணிகளின் எண்ணிக்கை 23 லிருந்து 25 ஆக உயர்வு. திமுகவில் மேலும் இரண்டு புதிய சார்பு அணிகள் உருவாக்கத்திற்கு கட்சி பொது குழு ஒப்புதல்
-
Jun 01, 2025 10:10 IST
குற்றாலம் அருவிகளில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க அனுமதி
அருவிகளில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்தது.
-
Jun 01, 2025 09:37 IST
திமுக கூட்டம் - புறப்பட்ட ஸ்டாலின்
மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழுவில் கலந்துகொள்ள, சுற்றுலா மாளிகையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். பொதுக்குழு கூட்டத்திற்கு செல்வதற்கு முன்பாக புதூர், மூன்றுமாவடி, மாட்டுத்தாவணி, உத்தங்குடி பகுதியில் சாலைப்பேரணியாகவும் முதலமைச்சர் செல்கிறார்.
-
Jun 01, 2025 09:32 IST
குமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கோடை விடுமுறையின் கடைசி நாளான இன்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். விவேகானந்தர் மண்டபம், கடற்கரை பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.