Coimbatore, Madurai, Trichy News Updates: கோவையில், விஜய் தங்கியிருந்த ஹோட்டல் அருகேயுள்ள விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bomb threat issue

கோயில் திருவிழாவில் வெடி விபத்து- பலி 4 ஆக உயர்வு: சேலம் மாவட்டம், ஓமலூா் அருகே கஞ்சநாயக்கன்பட்டி பகுதியில் கோயில் திருவிழாவிற்கு இருசக்கர வாகனத்தில் எடுத்துச்செல்லப்பட்ட பட்டாசு வெடித்ததில் பலியானவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

  • Apr 26, 2025 20:56 IST

    மதுபாட்டில்கள் கடத்தி வந்த 3 பேர் கைது

    புதுச்சேரியில் இருந்து விழுப்புரத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்த சம்பத் குமார், செல்லப்பாண்டியன் மற்றும் லோகநாதன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 251 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.



  • Apr 26, 2025 20:19 IST

    விஜய் தங்கியிருந்த ஹோட்டல் அருகேயுள்ள விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

    கோவையில், விஜய் தங்கியிருந்த ஹோட்டல் அருகேயுள்ள விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் தீவிர சோதனை நடத்திய பின்னர், பெறப்பட்ட தகவல் வதந்தி என்று கண்டறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



  • Advertisment
  • Apr 26, 2025 18:45 IST

    பொய்களை சொல்லி ஆட்சியை பிடிப்பது  இனி நடக்காது: த.வெ.க விஜய்

    பூத் கமிட்டி ஏஜென்டுகள் ஒவ்வொருவரும் போர் வீரருக்கு சமம். பொய்களை சொல்லி ஆட்சியை பிடிப்பது இனி நடக்காது என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.



  • Apr 26, 2025 18:34 IST

    விமர்சனங்களை கண்டு எங்களுக்கு பயமில்லை: ஆதவ் அர்ஜுனா

     

    கோவையில் நடைபெற்று வரும் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் பேசிய ஆதவ் அர்ஜுனா1977-இல் மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிந்தவர் எம்.ஜி.ஆர், இன்று மக்கள் ஆட்சியை கொண்டுவர ஜனநாயகன் தேவை. மற்ற கட்சிகளைப் போல், கூட்டங்களுக்கு காசு கொடுத்து மக்களை அழைத்து வரும் நிலை தவெகவில் இல்லை. விமர்சனங்களை கண்டு எங்களுக்கு பயமில்லை என்று கூறியுள்ளார்.



  • Advertisment
    Advertisements
  • Apr 26, 2025 17:32 IST

    த.வெ.க.வின் முதல் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம் தொடக்கம்

    கோவை: சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தவெகவின் முதல் வாக்குச் சாவடி முகவர்கள் கூட்டம், அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது. 



  • Apr 26, 2025 16:51 IST

    புஸ்ஸி ஆனந்த் காயம்

    கோவையில் தவெக பூத் கமிட்டி கூட்டத்தில் நெரிசலில் சிக்கி  தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் காலில் காயம். சிகிச்சையளிக்க சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ் விரைந்துள்ளது



  • Apr 26, 2025 16:26 IST

    கருத்தரங்கில் பங்கேற்பதற்காக புறப்பட்டார் விஜய்

    தவெக முகவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்பதற்காக அவினாசி சாலையில் உள்ள நட்சரத்திர விடுதியில் இருந்து புறப்பட்டார் விஜய். வழிநெடுகிலும் தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.



  • Apr 26, 2025 13:12 IST

    பூனைக்கடியை அலட்சியம் செய்த இளைஞருக்கு நேர்ந்த துயரம்

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த பாலமுருகனை பூனை கடித்துள்ளது. பூனைக்கடிக்கு உரிய சிகிச்சை பெறாமல் அலட்சியமாக விட்டதால் பெரிய புண்ணாக மாறியுள்ளது. ரேபிஸ் தொற்று முற்றிய நிலையில், அதன் தாக்கத்தை தாங்க இயலாமல் இந்த உயிரை மாய்துகொண்டுள்ளார். 



  • Apr 26, 2025 12:11 IST

    கோவையில் விஜய் "ரோடு ஷோ" - வழிநெடுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

    த.வெ.க தலைவர் விஜய் கோவை விமான நிலையத்தில் வந்த நிலையில், அவருக்கு வழிநெடுக தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். இது விஜய் நடத்திய "ரோடு ஷோ" போல காட்சியளித்து. விஜய்யின் பிரசார வாகனத்தை சூழ்ந்துள்ள கொண்ட தொண்டர்கள் இருசக்கர வாகனங்கள் பின் தொடர்ந்து சென்றனர். 



  • Apr 26, 2025 10:27 IST

    ரயில் முன் பாய்ந்து கணவன், மனைவி தற்கொலை

    திருப்பத்தூர் அருகே கீழ் குறும்பர் தெரு பகுதியில், ரயில் முன் பாய்ந்து கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 17 வயதே ஆன மகளுக்கு திருமணம் நடந்த நிலையில், குழந்தை திருமண வழக்கு பதியப்பட்டதால் விபரீத முடிவை எடுத்துள்ளனர். 

    கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த ஜெகதேவி பகுதியைச் சேர்ந்த குமார், கவிதா தம்பதியின் விபரீத முடிவால் அப்பகுதியில் பெரும் சோகம் நிலவுகிறது. முன் ஜாமின் வாங்க சென்னை உயர்நீதிமன்றத்திற்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற நிலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சிதறி கிடந்த உடல்களை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

     



  • Apr 26, 2025 10:15 IST

    கோவை விமான நிலையத்தில் குவிந்த விஜய் ரசிகர்கள் - போலீசார் தடியடி 

    தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் நடிகர் விஜய் பூத் கமிட்டி மாநாட்டிற்காக இன்று கோவை விமான நிலையம் வருகிறார். அவரைக்காண ஏராளமான ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு திரண்டுள்ளனர்  இதனால் விமான நிலைய வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    விஜய் வருகையை முன்னிட்டு விமான நிலையத்திற்குள் 50 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒலிபெருக்கி மூலம் போலீசார் அவ்வப்போது ரசிகர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், விமான நிலையத்திற்குள் வரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் எச்சரித்தனர்.
    இருப்பினும், ரசிகர்களின் கூட்டம் கலையாமல் தொடர்ந்து ஆரவாரம் செய்து கோஷங்கள் எழுப்பிய வண்ணம் இருந்தது. இதனால், அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியைக்கொண்டு தடுப்புகள் மீது தட்டி எச்சரிக்கை விடுத்தனர்.

    இதற்கிடையே, தவெக பொதுச்செயலாளர் புஜ்ஜி ஆனந்த் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். இதனைக் கண்ட தொண்டர்களும், ரசிகர்களும் மேலும் உற்சாகமடைந்து கோஷங்களை எழுப்பியதோடு, விமான நிலையத்தின் உள்ளே நுழையவும் முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. போலீசார் தொடர்ந்து கூட்டத்தை கலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.



  • Apr 26, 2025 10:07 IST

    கோவையில் த.வெ.க பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கம் 

    கோவையில் இன்று நடைபெறும் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கம் இன்று நடைபெற உள்ளது. இதையடுத்து, சென்னையில் இருந்து தனிவிமானத்தில் விஜய் கோவை செல்ல உள்ள 
    நிலையில் கோவை விமான நிலையத்தில், த.வெ.க தொண்டர்கள் குவிந்து வருகிறார்கள். 

    கோவை விமான நிலையத்தில் குவிந்து வரும் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள். 



  • Apr 26, 2025 09:56 IST

    ரேஷன் கடை பருப்பில் கலப்படம் - 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவிருந்த பருப்பில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது. உணவு வழங்கல் துறை கிடங்கில் ஆட்சியர் ஆய்வு செய்த போது உண்மை தெரியவந்த நிலையில், 2 அதிகாரிகள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். 



  • Apr 26, 2025 09:11 IST

    தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு செல்லத் தடை

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வருகையை ஒட்டி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 முதல் மதியம் 12 மணி வரை வாகன சுற்றுலா செயல்படாது என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிற்பகலில் வாகனச் சுற்றுலா வழக்கம்போல் செயல்படும் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.



  • Apr 26, 2025 09:04 IST

    ஸ்ரீரங்கம் கோயில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

    கோவிந்தா.. கோவிந்தா கோஷத்துடன் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் சித்திரைத் தேரோட்டம் சனிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்து வருகின்றனர்.



  • Apr 26, 2025 09:03 IST

    சேலம்: பிரசவ வார்டில் சுற்றித் திரியும் எலிகள்-புகார்

    சேலம் ஆத்தூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் சுற்றித் திரியும் எலிகளால் நோயாளிகள் அச்சமடைந்துள்ளனர். எலிகளை கட்டுப்படுத்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Apr 26, 2025 08:52 IST

    பழனி கோயிலில் ரூ. 5.42 கோடி உண்டியல் காணிக்கை

    பழனி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. ரூ. 5 கோடியே 42 லட்சத்து 62 ஆயிரத்து 88 ரூபாயும், தங்கம் 1 ஆயிரத்து 131 கிராம், வெள்ளி 21 கிலோ 324 கிராம், 1 ஆயிரத்து 610 வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் காணிக்கையாக கிடைத்துள்ளதாக பழனி முருகன் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • Apr 26, 2025 08:51 IST

    த.வெ.க. பூத் கமிட்டி கருத்தரங்கம் இன்று தொடக்கம்

    நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த த.வெ.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது. கருத்தரங்கில் பங்கேற்பதற்காக த.வெ.க. தலைவரும், நடிகருமான விஜய் சென்னை இன்று கோவை வருகிறார். பின்னர், மதியம் 3 மணிக்கு கருத்தரங்கு நடைபெறும் இடத்துக்கு அவர் செல்கிறார். அங்கு அவர், கருத்தரங்கில் பங்கேற்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார். நாளை (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 3 மணிக்கு நடைபெறும் கருத்தரங்கிலும் த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசுகிறார்.



  • Apr 26, 2025 08:49 IST

    ஓமலூரில் பட்டாசு வெடித்து 4 பேர் பலி - முதல்வர் நிதியுதவி

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கோயில் திருவிழாவில் பட்டாசு வெடித்து 4 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கஞ்சநாயக்கன்பட்டி திரௌபதி அம்மன் கோயிலில், சுவாமி திருக்கல்யாணத்திற்காக சீர்வரிசை எடுத்து சென்றபோது விபத்து நடந்துள்ளது.



  • Apr 26, 2025 08:47 IST

    ரேஷன் பருப்பில் கலப்படம் - 2 பேர் சஸ்பெண்ட்

    திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படவிருந்த பருப்பில் கலப்படம் என புகார் எழுந்துள்ளது. உணவு வழங்கல் துறை கிடங்கில் ஆட்சியர் ஆய்வு செய்தபோது உண்மை தெரியவந்த நிலையில், 2 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.



Trichy Coimbatore Madurai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: