/indian-express-tamil/media/media_files/2025/03/14/kdGa2WEveJWlqJ9131eO.jpg)
நெல்லை மாவட்டம், முண்டந்துறை புலிகள் காப்பக பகுதியில் அமைந்துள்ள அகஸ்தியர் அருவியில் நீர்வரத்து சீராக இருப்பதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது.
ராமேஸ்வரம் கச்சத்தீவில் புனித அந்தோணியார் திருவிழா இன்று தொடங்கிய நிலையில், 8,000 பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இந்த திருவிழாவுக்காக 79 விசைப்படகுகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் பயணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
-
Mar 14, 2025 21:21 IST
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை
காரைக்காலில் இரு சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 55 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த 55 வயது முதியவர் முகமது இப்ராஹிம் சுல்தான் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து காரைக்கால் குற்றவியல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
Mar 14, 2025 19:24 IST
நெல்லையில் 25 நாட்களுக்கு ரயில்கள் ரத்து
நெல்லை அருகே ரயில் பாதை சீரமைப்பு பணிகள் காரணமாக நெல்லை - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் பயணிகள் ரயில்கள், வரும் 20.03.2025 முதல் 13.04.2025 வரை 25 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை - திருச்செந்தூர் இடையே மாலை 4.30 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில், திருச்செந்தூர் - நெல்லை இடையே காலை 10.10 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் ரத்து செய்யப்படுகிறது.
-
Mar 14, 2025 18:29 IST
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. 18ம் படி ஏறிய உடன் ஐயப்பனை சென்று தரிசனம் செய்ய சோதனை முறையில் புதிய வழி மேற்கொள்ளப்பட்டுள்ளது
-
Mar 14, 2025 17:22 IST
கோவையில் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக ஹோலி பண்டிகை கொண்டாடிய வடமாநில மக்கள்
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் வடமாநில மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் உற்சாகமாக ஹோலி பண்டிகை கொண்டாடி மகிழ்ந்தனர். ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த கொண்டாட்டத்தில் வட மாநில மக்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பினரும் கலந்து கொண்டனர்.
-
Mar 14, 2025 12:37 IST
சென்னைக்கு கிளம்பிய போது விபரீதம்
கடலூர் முதுநகர் அருகே கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி, சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் சுவர் மீது மோதி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நாகை மாவட்டம், நரிமணத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த அந்த டேங்கர் லாரி, அங்கு நின்று கொண்டிருந்த மீன் லாரி மீது மோதி தீப்பிடித்ததில் இருசக்கர வாகனம், 6 கடைகள் எரிந்து நாசம் அடைந்தன. 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து கடலூர் முதுநகர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 14, 2025 11:13 IST
பெண்ணை தாக்கிய போலீஸ் SI
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே, பெண் ஒருவரை காவல் உதவி ஆய்வாளர் தாக்கியதாக கூறி, போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாசி மகத்தையொட்டி, கீழச்சாவடி கிராம மக்கள் சுவாமி ஊர்வலம் சென்ற போது, காவல் உதவி ஆய்வாளர் மகேஷ் மீது மர்ம நபர்கள் கல் வீசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து உதவி ஆய்வாளர் மற்றும் பிற காவலர்கள் கீழச்சாவடி இளைஞர்களை தாக்கியுள்ளனர். இதில் பெண் ஒருவரின் கையில் பலத்த அடி விழுந்த நிலையில், வலி தாங்க முடியாமல் துடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் போராட்டத்தில் குதித்து, போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
-
Mar 14, 2025 11:11 IST
பாலியல் தொல்லை கொடுத்த நபருக்கு மறக்க முடியாத பாடம் புகட்டிய 10ஆம் வகுப்பு சிறுமி
கரூர் மாவட்டம் குளித்தலையில் 10ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், கூலித்தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். சிறுமி கொடுத்த புகாரின் பேரில், திருச்சி ஜீயபுரத்தை சேர்ந்த, நடராஜ் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.