/indian-express-tamil/media/media_files/2025/02/23/mvkCL9sG82A3nWDKoM6A.jpg)
நாமக்கல்லில் நடைபெற்ற, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், முட்டை விலை மீண்டும் 5 பைசா உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை 4.75 காசுக்கு விற்ற முட்டை விலை, ஐந்து காசு உயர்த்தி, 480 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 500, பர்வாலா 442, பெங்களூர் 485, டெல்லி 460, ஹைதராபாத் 425, மும்பை 490, மைசூர் 485, விஜயவாடா 450, ஹொஸ்பேட் 435, கொல்கத்தா 510.
-
Feb 23, 2025 20:38 IST
மாமல்லபுரத்தில் மே 11-ம் தேதி பா.ம.க-வின் சித்திரை முழு நிலவு மாநாடு - ஜி.கே. மணி அறிவிப்பு
கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் சோழமண்டல சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பா.ம.க-வின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, மாமல்லபுரத்தில் மே 11-ம் தேதி பா.ம.க-வின் சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெறும் என அறிவித்துள்ளார்.
-
Feb 23, 2025 20:32 IST
நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு கேட்கவில்லை, சாதிவாரி சர்வேதான் கேட்கிறோம் - அன்புமணி ராமதாஸ்
வன்னியர் சங்கம் சார்பில் நடைபெற்று வரும் சோழமண்டல சமய-சமுதாய நல்லிணக்க மாநாட்டில் பேசிய பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், “நாங்கள் சாதிவாரி கணக்கெடுப்பு (Census) வேண்டும் எனக் கேட்கவில்லை. சாதிவாரி சர்வே எடுங்கள் என்றுதான் கேட்கின்றோம். பீகார், தெலங்கானாவைப் போல சாதிவாரி சர்வேவை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும்” என்று கூறினார். -
Feb 23, 2025 18:31 IST
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது: விடுவிக்க நடவடிக்கை எடுக்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு ஸ்டாலின் கடிதம்
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்களையும், பறிமுதல் செய்த படகுகளையும் விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் விவகாரத்தில் வலுவான தூதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
-
Feb 23, 2025 18:28 IST
ஈஷா மகா சிவராத்திரி: மகத்தான வெற்றி அடைய மோடி வாழ்த்து
மஹாசிவராத்திரி, ஆன்மீக ரீதியில் நம்மை மேன்மைபடுத்தும் தன்மைக்கான பக்தியையும், மதிப்பையும் ஏற்படுத்துகிறது. மஹாசிவராத்திரி விரதம், தியானம், சுயபரிசோதனைக்கான தருணமாகவும், அறியாமையின் மீதான அறிவின் வெற்றியை குறிக்கிறது. சத்குருவின் தலைமையில் நடைபெற இருக்கும். ஈஷா மஹாசிவராத்திரி விழா மகத்தான வெற்றியடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
Feb 23, 2025 16:06 IST
தகராறில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது
தர்மபுரி பேருந்து நிலையத்தில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தகராறில் ஈடுபட்ட 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். அதன்படி, சென்னையைச் சேர்ந்த ஐஸ்வர்யா மற்றும் கண்மணி ஆகிய இருவரையும் தர்மபுரி நகர காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.
-
Feb 23, 2025 14:23 IST
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது; மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு
இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்
-
Feb 23, 2025 13:09 IST
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு - 5 பேர் மீது வழக்குப் பதிவு
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்ட விவகாரத்தில், தி.மு.க.,வை சேர்ந்த 5 பேர் மீது, 3 பிரிவுகளின் கீழ் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ரயில் நிலைய பெயர் பலகையில், மூன்றரை மணி நேரத்தில் மீண்டும் இந்தியில் பெயர் எழுதப்பட்டது.
-
Feb 23, 2025 12:32 IST
திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகின்றனர்.
-
Feb 23, 2025 11:21 IST
மாணவிக்கு பாலியல் தொல்லை - விடுதி காவலாளி கைது
காரைக்குடி அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் தங்கி 2ஆம் ஆண்டு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விடுதி காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார். விடுதி காவலாளி அழகப்பனை கைது செய்து காரைக்குடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Feb 23, 2025 11:15 IST
முதலமைச்சருக்கு கல்வி நிதி வழங்கிய மழலை
கடலூர்: முதலமைச்சர் உரை கேட்டு நன்முகை என்ற சிறுமி மத்திய அரசு தர மறுத்த ₹2000 கோடி-க்கு, தன் பங்களிப்பாக தனது சேமிப்பிலிருந்து ₹10,000ஐ தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்புத் திட்டத்தில் நிதியளித்துள்ளார்
-
Feb 23, 2025 11:09 IST
லாட்டரி சீட்டு விற்பனை - 2 பேர் கைது
சிவகங்கை: திருப்புவனத்தில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த பாண்டியன், குருசாமி ஆகிய இருவர் கைது. அவர்களிடம் இருந்து 60 லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.
-
Feb 23, 2025 10:50 IST
கழிவுநீர் கலப்பால் கருப்பு நிறத்தில் மாறிய பவானி தண்ணீர்
மேட்டுப்பாளையம் வழியாக செல்லும் பவானி ஆற்றில், கழிவு நீர் கலந்துள்ளதால், தண்ணீர் கருப்பு நிறத்தில் மாறியுள்ளது, இதனால் அப்பகுதி மக்கள் அந்த நீரை பயன்படுத்த முடியாத சூழல் எழுந்துள்ளது. மேலும் ஆற்றின் நீரை பயன்படுத்த வேண்டாம். சுத்திகரிக்கப்பட்ட நீரையே பயன்படுத்துங்கள் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
-
Feb 23, 2025 10:09 IST
பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் மும்மொழிக் கொள்கைக்கு திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், போலீசார் முன்னிலையிலேயே கருப்பு மையால் இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்தனர்.
-
Feb 23, 2025 10:07 IST
கன்னியாகுமரி கடற்கரை பகுதிக்குச் செல்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்
கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை இன்று பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 12 மணி வரை கடல் கொந்தளிப்பாக காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், கடற்கரை பகுதிக்குச் செல்வதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள்
-
Feb 23, 2025 09:31 IST
குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்டம்: பக்தர்கள் நேர்த்திக்கடன்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் உள்ள குழந்தை வேலப்பர் கோயில் தேரோட்ட திருவிழாவில், லட்சக்கணக்கான தேங்காய்கள் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
-
Feb 23, 2025 09:27 IST
கன்னியாகுமரியில் சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்த மனைவி, மகனையும் போலீசார் கைது செய்தனர்.
-
Feb 23, 2025 09:24 IST
திருப்பூரில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேர் கைது
திருப்பூர்: கருமாரம்பாளையம் பகுதியில் சட்ட விரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான ஹுசைன் (45), இப்ராஹிம் (33) இருவரும் திருப்பூரில் 9 ஆண்டுகளாக தங்கி அங்குள்ள பனியன் நிறுவனத்தில் இவர்கள் பணியாற்றி வந்துள்ளனர்
-
Feb 23, 2025 08:20 IST
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் நீக்கம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பொறுப்பிலிருந்து தடங்கம் சுப்பிரமணியை விடுவித்தும், அப்பொறுப்பிற்கு பி.தர்மசெல்வனை நியமித்தும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.