/indian-express-tamil/media/media_files/2025/01/05/FgWKzHLHghPyMODVc69S.jpg)
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித் திருவிழா நடைபெற்று வருகிறது. 10ம் நாள் தேரோட்டமான இன்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.
-
Mar 12, 2025 18:46 IST
நிலத்தகராறு; மூதாட்டி எரித்துக் கொலை
திருவண்ணாமலை அருகே 3 சென்ட் இடத்திற்காக விருதாம்பாள் என்ற மூதாட்டி எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக எல்லப்பன், கோபி கிருஷ்ணன், சுப்ரமணி, விவேக் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
Mar 12, 2025 18:16 IST
ஹோலி கொண்டாட சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநில தொழிலாளர்கள்
ஹோலி பண்டிகையை கொண்டாட வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பதால், திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது
-
Mar 12, 2025 17:25 IST
கொட்டும் மழையிலும் அரசுப் பள்ளியில் ஆய்வு; மாணவர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்ட மாவட்ட ஆட்சியர்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கொட்டும் மழையிலும் அரசுப் பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் ரஞ்சித்சிங், மாணவர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். உணவில் உள்ள பருப்பு, காய்கறிகள் ஆகியவற்றின் தரத்தை ஆய்வு மேற்கொண்டதோடு, மாணவர் வருகை பதிவேட்டையும் ஆய்வு செய்தார்.
-
Mar 12, 2025 16:13 IST
தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
விருதுநகரில் சி.பி.ஐ மாநில செயலாளர் முத்தரசன்: “தர்மேந்திர பிரதான் பதவியில் இருந்து விலக வேண்டும் அல்லது பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.
-
Mar 12, 2025 14:46 IST
"யார் மீது வேண்டுமானாலும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்ய முடியுமா?" - மதுரை ஐகோர்ட் கேள்வி
"விசாரணை அதிகாரி பொன் மாணிக்கவேலுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய சி.பி.ஐ முன் அனுமதி பெற்றதா? யார் மீது வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் விபரங்களின்றி சிபிஐ வழக்கு பதிவு செய்ய இயலுமா?" என்று ஓய்வு பெற்ற காவல் அதிகாரி பொன் மாணிக்கவேல் வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Mar 12, 2025 14:00 IST
இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை நீலகிரி, ஈரோடு, திருப்பூர் , திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Mar 12, 2025 13:54 IST
கோவை பொள்ளாச்சியில் போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே போதை ஊசி பயன்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீன்கரை பகுதியில் இளைஞர்கள் சிலர் போதை ஊசி பயன்படுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், அதிரடியாக சோதனை மேற்கொண்ட போலீசார் இளைஞர்கள் 8 பேரை கைது செய்து போதை ஊசிகளை பறிமுதல் செய்துள்ளனர். பல்லடம் பகுதியை சேர்ந்த முரளி குமார் என்பவரிடம் போதை மருந்து நிரப்பப்பட்ட குப்பிகளை வாங்கியது தெரிய வந்துள்ளது
-
Mar 12, 2025 12:55 IST
ரவுடி படுகொலை வழக்கு 10 பேர் கைது
புதுச்சேரியை சேர்ந்த பிரபல ரவுடி வாணரப்பேட்டை ஐயப்பன் படுகொலை செய்யப்பட்ட வழக்கு 10 பேரை கைது செய்து திருவண்ணாமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ள போலீசார்
-
Mar 12, 2025 12:22 IST
12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 12 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு. மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை,ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Mar 12, 2025 12:09 IST
600 மூட்டை நெல்லுடன் கிணற்றுக்குள் விழுந்த லாரி
விழுப்புரம்: அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நெல் மூட்டைகள்; திடீர் மண்சரிவால் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த லாரி
-
Mar 12, 2025 11:44 IST
புனித நீராடிய மக்கள்
மாசி மாதம் மகம் நட்சத்திரத்தையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து புனித நீராடிய மக்கள். தேவனாம்பட்டினம் கடற்கரையில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான மக்கள்
-
Mar 12, 2025 11:43 IST
ஆன்லைன் கேமால் உயிரை மாய்த்துக் கொண்ட சிறுவன்
செல்போனை உடைத்து விட்டு வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை. கடந்த ஓராண்டாக பள்ளிக்கு செல்லாமல் தொடர்ந்து ஆன்லைன் கேம்கள் விளையாடி வந்த நிலையில் விபரீதம்
-
Mar 12, 2025 11:10 IST
சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்
வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரத்தில் இன்று காலை திறக்கப்பட இருந்த சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய பொதுமக்கள். நான்கு வழி சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், சுங்கச்சாவடியை செயல்பாட்டுக்கு கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
-
Mar 12, 2025 11:06 IST
மலை ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்!
மழை காரணமாக ரயில் தண்டவாளத்தில் பாறை விழுந்துள்ளதால், பாறைகளை அகற்றும் வரை குன்னூர் - மேட்டுப்பாளையம் மலை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!
-
Mar 12, 2025 10:54 IST
திறக்கப்பட இருந்த நிலையில் டோல்கேட்டை சூறையாடிய பொதுமக்கள்
திண்டுக்கல் வத்தலகுண்டில் டோல்கேட்டை அடித்து நொறுக்கிய மக்கள் பரபரப்பு இன்று திறக்கப்பட இருந்த நிலையில் பொதுமக்கள் டோல்கேட்டை சூறையாடியுள்ளனர்
-
Mar 12, 2025 09:37 IST
அகஸ்தியர் அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
நெல்லை, அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவிகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Mar 12, 2025 08:49 IST
மதுபோதையில் யானை மீது தூங்கிய பாகன்: வனத்துறை விசாரணை
குமரி மாவட்டம் அருமனை அருகே, மதுபோதையில் யானை மீது படுத்து தூங்கிய பாகன் குறித்து பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து, பாகனை எழுப்பிய வனத்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.