கேரளாவில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க உத்தரவு
கேரளாவில் தொற்று அதிகரித்து வருவதால் கொரோனா கட்டுப்பாடுகளை அதிகப்படுத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பரவல் அதிகமாக பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு -வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
தமிழகத்தில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. வாரத்தில் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும். ஆன்லைன் வகுப்பில் மட்டும் பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவேட்டைப் பயன்படுத்தக் கூடாது. கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பள்ளிகளைத் திறக்கக் கூடாது. பள்ளிகளில் குளிர்சாதன வசதிகளைப் பயன்படுத்தக் கூடாது போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானில் இருந்து இதுவரை 1லட்சம் பேர் மீட்பு: வெள்ளை மாளிகை
ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 1 லட்சத்து 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை மீட்டிருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இன்னும் 3 நாட்களே எஞ்சியுள்ள நிலையில் கூடுதலான விமானங்களை அமெரிக்கா காபூலுக்கு அனுப்பி வைத்துள்ளது. ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு அமெரிக்க ராணுவ வீரர்கள் யாரும் காபூலில் இருக்க மாட்டார்கள் என அதிபரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
அரியானாவில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலவேறு அரசியல் தலைவர்கள் அதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், ஹரியானா போராட்டத்தில் காயமடைந்த ஒரு விவசாயியின் படத்தை பகிர்ந்த ராகுல்காந்தி, “மீண்டும் விவசாயிகளின் இரத்தம் சிந்தியது, இந்தியா வெட்கி தலை குனிகிறது” என்று ட்வீட் செய்தார்.
கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு தேவையாக உதவிகள் செய்து மக்கள் மத்தியில் பெரும் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் அரசியலுக்கு வரவுள்ளதாகவும், மும்பை மேயர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள சோனு சூட் “அரசியலுக்கு வராமலேயே சேவையாற்றுவேன்” என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு கூடுதலாக 9 அட்வகேட் ஜெனரல்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
1. ஹாஜா நசுருதீன்
2. சிலம்பன்னன்
3. வீர கதிரவன்
4. ராம்லால்
5. அருண்
6. பாஸ்கர்
7. குமரேசன்
8. நீலகண்டன்
9. ரவீந்திரன்
ஆகிய 9 பேர் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.
கேரளாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கேரளாவில் நாளை மறுநாள் முதல் இரவு 10 முதல் காலை 6 மணி வரை இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் 1,551 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26.10 லட்சமாக உயர்ந்துள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு இன்று 21 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,856 ஆக அதிகரித்துள்ளது.
போலி சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து்ளளது.
மதுரை பேங்க் காலனி அருகே மேம்பாலம் கட்டுமான பணியின் போது ஏற்பட்ட விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த நிலையில், ஒருவர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இடர்பாடுகளில் சிக்கியவர்களை பொதுமக்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் மீட்டு வருகின்றனர்.
லீட்சில் நடைபெற்று வந்த இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 354 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 278 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட் ஆனது எனவே தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான டேபிள் டென்னிஸ் பிரிவில் களம் கண்ட இந்திய வீராங்கனை பவினாபென் படேல் அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். மேலும், டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
அவருக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், “டோக்கியோ பாரா ஒலிம்பிக்ஸில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்திருக்கும் டேபிள் டென்னிஸ் வீராங்கனை பவினாபென் படேல் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.” என பதிவிட்டுள்ளார்.
“போலி சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும்” என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போலி பள்ளி மாற்றுச்சான்றிதழ் சமர்ப்பித்த அரசு பேருந்து ஓட்டுனர் சீனிவாசன் பணி நீக்கம் செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர், நாகை, சிவகங்கையில் ரூ.30 கோடியில் அரசு வேளாண்மைக் கல்லூரிகள் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் விளையாடி வரும் இந்திய அணி 233 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இந்நிலையில், அரைசதம் கடந்து அசத்திய கேப்டன் விராட் கோலி 125 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
தற்போது 115 ரன்கள் பின்தங்கியுள்ள இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து ரன் தடுமாறி வருகிறது.
சினிமாவில் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட்கார்டு தடையை நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் இது எனக்கு மறுபிறவி எனவும் நடிகர் வடிவேலு தெரிவித்திருக்கிறார்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில், தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை மூன்று மாதங்களில் ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தங்களது கடைகளில் இருக்குமானால் 10 நாட்களுக்குள் அவற்றை அகற்ற வேண்டும் என வணிகர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
'விவசாயிகளுடன் ஒருநாள்' என்ற திட்டம் பேரவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் விவசாயிகளிடம் குறைகளை நேரில் கேட்டறிந்து நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் நெய்தல் பாரம்பரிய பூங்கா ₹2 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், 'இப்பூங்கா இளம் தலைமுறைக்கு பண்டைய தமிழரின் பண்பாட்டை எடுத்துரைக்கும் வகையில் செயல்படும்' என குறிப்பிட்டுள்ளார்.
“கால்நடைகளின் நலனை பாதுகாக்க அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ரூ.7 கோடியே 76 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் 7,760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும்.தர்மபுரி மாவட்டத்தில் திருச்சி கருப்பு செம்மறி ஆட்டின ஆராய்ச்சி நிலையம் ரூ.1 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். தென்மாவட்டங்களுக்கு விலங்கு வழி பரவும் நோயறி ஆய்வகம் மற்றும் சுகாதார தளம் திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரூ.1 கோடியே 61 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும்.” என – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததில் புதுச்சேரி மாநிலத்தில், நல்லவாடு, வீராம்பட்டினம் ஆகிய கிராம மீனவர்கள் இடையே பிரச்சினை ஏற்பட்டது. காவல்துறையினர், வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி, மீனவர்களை கலைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் எனவும், தேனி, திண்டுக்கல், சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீண்டும் சினிமாவில் நான் தோன்றப்போவது முதன் முதலில் நான் வாய்ப்புத் தேடும் போது ஏற்பட்ட உணர்வைப் போன்று உள்ளது. என் ரசிகர்கள் ஒவ்வொரு வீட்டிலும் எனக்கு ரசிகர் மன்றம் வைத்துள்ளார்கள் என வடிவேலு நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்
மைசூரில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் மைசூரில் இருந்து திருப்பூருக்கு செல்லும் போது, மது அருந்துவது அவர்களின் வழக்கம் என்றும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
சட்டமன்றத்தில் பேசும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் நேரத்தின் அருமை கருதி என்னை பற்றி புகழ்ந்து பேசுவதை தவிர்க்க வேண்டும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
வேளான் சட்டங்களை தமிழக விவசாயிகள் வரவேற்றுள்ள நிலையில், அதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது கண் துடைப்பு என தமிழக அரசை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கால்நடை ஒப்பந்த பண்ணைத் தொழில் மற்றும் சேவைகள் சட்டத்தை ரத்து செய்வதற்கான சட்டமுன் வடிவை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்தார் . இதற்கு அறிமுக நிலையிலே அதிமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை தமிழர் அகதிகள் முகாம், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர்மாற்றம் செய்து பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவொற்றியூரில் 200 கோடி ரூபாய் செலவில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என மீன்வளத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான அனைத்து வழக்குகளும் வாபஸ் பெறப்படுவதகா பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு காங்கிரஸ், விசிக, மதிமுக, பாமக, தவாக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தது.
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து அதிமுக வெளிநடப்பு செய்து வருகிறது.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் வெளிநடப்பு
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். மூன்று சட்டங்களும் நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என தீர்மானம்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 509 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 31,374 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
செப்.1ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்திய மாணவர்கள் கல்லூரிக்கு வர வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உயர்கல்வித்துறை உறுதுணையாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36,056க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 உயர்ந்து ரூ.4,507க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.68.70க்கு விற்பனையாகிறது.
சிவகங்கை மாவட்டம் கீழடி அகழ்வாராய்ச்சியில் சிவப்பு நிறத்தால் ஆன கொள்கலன் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஐஎஸ்-கே தீவிரவாதிகள் மீது அமெரிக்க பாதுகாப்பு படை ட்ரோன் தாக்குதலை நடத்தியது. காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்த நிலையில் ஆப்கானில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.