Advertisment

கூடுதலாக 200 பயணிகள் ரயில்கள்: முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் கிடையாது

தமிழகம் மற்றும் இந்தியாவில்  இன்று நடக்கும் முக்கிய செய்திகள் அனைத்தையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC, Irctc railways, irctc train booking, irctc advance booking, irctc booking, ஐஆர்சிடிசி புக்கிங், ஐஆர்சிடிசி, ரயில்கள் ரத்து, இந்தியன் ரயில்வே, Indian Railways

ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் (Unreserved) கிடையாது என்றும், காய்ச்சலோடு வரும் பயணி முன்பதிவு செய்து இருந்தாலும் ரயிலில் அனுமதிக்கப்படமாட்டார்கள் ரயில் நிலையங்களுக்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வரவேண்டும் என்று இந்திய ரயில்வே அறிவித்தது.

Advertisment

இந்திய ரயில்வே, நேற்று முதல் நாடு முழுவதும் 200 பயணிகள் ரயில் சேவைகளை இயக்கியது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு கடந்த மே 21 அன்று தொடங்கின. இதுதவிர, தமிழகத்தில் கோவை -காட்பாடி, மதுரை- விழுப்புரம், திருச்சி- நாகர்கோவில், கோவை- காட்பாடி ஆகிய நான்கு வழித்தடங்கள் வழியே சிறப்பு ரயில்கள் நேற்று இயக்கப்பட்டது .

இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் (Unreserved) கிடையாது என்று இந்திய ரயில்வே நிர்வாகம் நேற்று தெளிவுபடுத்தியது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிக்கையின் அடிப்படையிலும், ஐந்தாவது பொது முடக்கநிலை இன்று முதல் அமலாகிறது.

பொருளாதாரத்தின் ஒரு பெரிய பகுதி இப்போது இயங்கத் தொடங்கிய நிலையில், ஒரு மீட்டர் இடைவெளி விடுதல் என்ற விதிமுறையையும், முகக்கவசம் அணிதல் என்ற வழிமுறையையும், எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு வீட்டிலே இருத்தல் என்பதனையும் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான இந்தப் போரை பலவீனமாக விடக்கூடாது. கொரோனாவுக்கு எதிரான போர் இப்போதும் கூட மிகவும் தீவிரமானது. கவனக்குறைவாக இருப்பது, எச்சரிக்கை உணர்வைத் துறப்பது ஆகியவற்றுக்கு இடமே கொடுக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Live Blog

Tamil News Today Live Updates :  தமிழகம் மற்றும் இந்தியாவில்  இன்று நடக்கும் முக்கிய செய்திகள் அனைத்தையும் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.



























Highlights

    21:52 (IST)01 Jun 2020

    கே.என்.லக்ஷ்மணன் மரணம்

    தமிழக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மயிலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. கே.என்.லக்ஷ்மணன் அவர்கள் மறைந்தார். அவருக்கு கட்சி சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    publive-image

    21:39 (IST)01 Jun 2020

    இந்தியாவின் நிலை முன்னேறி இருக்கும் – அமித்ஷா

    கொரோனா பரவலால் உலகத்தில் பொருளாதார பாதிப்பு அடையாத எந்த ஒரு நாடும் இல்லை என்று கூறிய அவர், உலக அளவில் இந்தியாவின் நிலை, கொரோனாவுக்கு முன் இருந்ததை விட, கொரோனாவுக்கு பின்னர் முன்னேற்றமாக இருக்கும் என்று உறுதியாக கூறுகிறேன் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    21:33 (IST)01 Jun 2020

    வழிபாட்டு தலங்கள் திறப்பு எப்போது?

    தமிழகத்தில் மத வழிபாட்டுத்தலங்களை எப்போது திறக்கலாம் என நாளை மறுநாள் (3ம் தேதி) தலைமைச்செயலர் ஆலோசனை நடத்த உள்ளார். மத வழிபாட்டுத்தலங்களை திறக்கும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    21:03 (IST)01 Jun 2020

    கட்டுப்பாடு தேவை – பிரதமர் மோடி

    கொரோனாவுக்கு எதிராக போராட கட்டுப்பாடு தேவை. கொரோனாவுக்கு எதிராக போராட ஒவ்வொருவரிடமும் நல்லிணக்கம், கட்டுப்பாடு, ஒழுக்கம் தேவைப்படுகின்றன. கடினமான சூழ்நிலைகளில் இருந்து மக்கள் வெளியேற திருவிழாக்கள், இசை பெரிதும் உதவியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    20:28 (IST)01 Jun 2020

    822 சிறப்பு ரயில்கள் இயக்கம்

    புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1-ம் தேதி முதல் ஜூன் 1 வரை 822 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. 822 சிறப்பு ரயில்களில் 11,86,212 பேர் சொந்த ஊர் சென்றுள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

    20:15 (IST)01 Jun 2020

    விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

    விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்க விமான நிறுவனங்களுக்கு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவி​ட்டுள்ளது.விமானங்களில் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அறிவுறுத்தியுள்ளார்.

    19:53 (IST)01 Jun 2020

    விமான நிறுவனங்களுக்கு முதல்வர் அழைப்பு

    தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று போயிங், ரோஸ்ல் ராய்ஸ், ஏர்பஸ், லாக்ஹீட் மார்ட்டின் உள்ளிட்ட சர்வதேச விமான நிறுவனங்களுக்கு முதல்வர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

    19:12 (IST)01 Jun 2020

    ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,162 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 23,495 ஆக அதிகரித்துள்ளது.

    18:58 (IST)01 Jun 2020

    காட்மேன் தொடர் வெளியாகாது

    வரும் 12ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த காட்மேன் தொடர் வெளியாகாது என்று ஜீ நிறுவனம் அறிவித்துள்ளது.

    18:45 (IST)01 Jun 2020

    144 தடை உத்தரவு நீட்டிப்பு

    சென்னையில், 144 தடை உத்தரவு, வரும் ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    18:16 (IST)01 Jun 2020

    அதிமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தை கைவிட வேண்டும் - ஆர்.எஸ். பாரதி

    அதிமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தை கைவிட்டு கொரோனாவை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று திமுக எம்பி ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

    18:08 (IST)01 Jun 2020

    ஜூன் 19-ம் தேதி மாநிலங்களவை எம்பி தேர்தல் - தேர்தல் ஆணையம்

    ஆந்திரா, குஜராத் ஜார்க்கண்ட், மத்தியபிரதேசம், மேகாலயா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 19  மாநிலங்களவை இடங்களில் புதிய எம்பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்  ஜூன் 19-ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

    17:39 (IST)01 Jun 2020

    ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

    தமிழக சுகாதாரத்துறை இயக்குநராக அஜய் யாதவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குநராக இருந்த நாகராஜன், தொழில்முனைவோர் வளர்ச்சி கழகத்தின் இயக்குநராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத்துறை அதிகாரியாக சந்திரசேகர் சகாமுரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    17:25 (IST)01 Jun 2020

    ஆர்.எஸ்.பாரதிக்கு ஜாமீன்

    திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்குச் சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

    சென்னையில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் ஆர்.எஸ்.பாரதி பேசிய கருத்துக்கு எதிராக, ஆதித்தமிழர் மக்கள் கட்சித் தலைவர் கல்யாணசுந்தரம் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த மே மாதம் 23ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் மே 31ஆம் தேதி வரை ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இன்று சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாராதி சரணடைந்தார். அவருக்கு மீண்டும் ஜாமீன் வழங்கி கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    16:44 (IST)01 Jun 2020

    ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவிப்பு

    சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.20,000 கோடிக்கு நிவாரண சலுகைகள் அறிவித்துள்ளார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர். சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 கடனுதவி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில் 14 விளை பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிப்பு. விவசாயிகளுக்கு 50 முதல் 83 சதவீதம் வரை குவிண்டாலுக்கு கூடுதலாக விலை கிடைக்கும். ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

    16:21 (IST)01 Jun 2020

    முதல்வர் உருவ பொம்மை எரிப்பு

    கொரோனாவை தடுக்கவில்லை எனக்கூறி முதல்வரின் உருவ பொம்மையை எரித்ததாக தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்த ரகு என்பவர் தேசத்துரோக வழக்கில் கைது

    15:46 (IST)01 Jun 2020

    துணை வட்டாட்சியருக்கு கொரோனா

    திருவள்ளூரில் துணை வட்டாட்சியருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டுள்ளது. 

    15:20 (IST)01 Jun 2020

    டெல்லி அரசு அறிவிப்பு

    டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை, பள்ளி, கல்லூரிகள், உணவகங்கள், தங்குமிடங்கள் செயல்படாது. அரசு, தனியார் அலுவலகங்கள் முழுப் பணியாளர்களுடன் தொடர்ந்து இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. 

    14:44 (IST)01 Jun 2020

    சென்னையில் மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் சென்னை உட்பட 17 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அரபிக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக மாறியுள்ளது எனவும், இது நாளை புயலாக வலுப்பெறும் எனவும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

    13:46 (IST)01 Jun 2020

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் பேருந்துகள் இயக்கப்படும்

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் அரசுப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

    13:31 (IST)01 Jun 2020

    ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளே (Unreserved) கிடையாது

    தற்போது இயக்கப்படும் ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்  (Unreserved) கிடையாது. காய்ச்சலோடு வரும் பயணி முன்பதிவு செய்து இருந்தாலும் ரயிலில் அனுமதிக்கப்படமாட்டார்கள் ரயில் நிலையங்களுக்கு 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வரவேண்டும் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.  

    இந்திய ரயில்வே, இன்று முதல் கூடுதலாக 200 பயணிகள் ரயில் சேவைகளை இயக்க உள்ளது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு கடந்த மே 21 அன்று தொடங்கியது. இதுதவிர, தமிழகத்தில் கோவை -காட்பாடி, மதுரை- விழுப்புரம், திருச்சி- நாகர்கோவில், கோவை- காட்பாடி ஆகிய நான்கு வழித்தடங்கள் வழியே சிறப்பு ரயில்கள் இயங்கப்படுகின்றன. 

    இந்த சிறப்பு ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள்  (Unreserved) கிடையாது என்று இந்திய ரயில்வே நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.  

    12:50 (IST)01 Jun 2020

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்

    தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அடுத்த 24 மணி நேரத்தில், தென் அரேபிய கடல், மாலத்தீவு-கொமொரின் பகுதி, வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு  ஆகிய சில பகுதிகளில் இந்த  பருவமழை மேலும் முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    12:23 (IST)01 Jun 2020

    சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்.

    சென்னையில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 6721 ஆக உள்ளது. குணம் அடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை 7851 ஆக அதிகரித்துள்ளது.      

    இதற்கிடையே, சென்னையில் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தப்படும் என்றும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் முடிக்கு விடப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவத்துள்ளார்.

    11:58 (IST)01 Jun 2020

    மருத்துவ பணியாளர்கள் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள் - நரேந்திர மோடி

    பெங்களூரு ராஜீவ்காந்தி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக 25 ஆம் ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார். அப்போது, கொரோனாவு தொற்றுக்கு எதிரான போரில், நமது மருத்துவ பணியாளர்களின் பங்கு அளப்பரியது. இந்த போரில் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு எதிரான வன்முறையை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்று தெரிவித்தார்.

    11:55 (IST)01 Jun 2020

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைவு

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 6,000 கன அடியிலிருந்து 4,500 கனஅடியாக தற்போது குறைந்துள்ளது.

    11:52 (IST)01 Jun 2020

    ஐசிஎம்ஆர் தலைமையகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளாருக்கு கொரோனா

    டெல்லியில் உள்ள ஐசிஎம்ஆர் தலைமையகத்தில் பணிபுரியும் ஆராய்ச்சியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தலைமையகம் தற்காலிமாக மூடப்பட்டது.     

    11:15 (IST)01 Jun 2020

    சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் நாளை ஆலோசனை

    சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து நாளை ஆலோசனை நடத்த உள்ளார் .

    11:07 (IST)01 Jun 2020

    சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி சரண்

    திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடந்த மே- 23ம் தேதி கைது செய்யப்பட்டர். எழும்பூர் நீதிமன்றம் அவருக்கு ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், வழக்கில் ஜாமீன் பெறுவதற்காக சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி சரணடைந்துள்ளார்.

    10:52 (IST)01 Jun 2020

    இந்தியாவில் உளவு பார்த்த பாகிஸ்தான் அதிகாரிகள்- 24 மணி நேரத்தில் நாட்டைக் காலி செய்ய உத்தரவு

    புதுடில்லியில் செயல்படும் பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தின் பணியாற்றி வந்த இரண்டு அதிகாரிகள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டனர்" என்று வெளிவிவகார அமைச்சகத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அபீத் ஹூசைன், தாஹிர் கான் இருவரும் அடுத்த 24 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேறவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்தியர் ஒருவருக்கு பணம், ஐபோன் ஆகியவற்றை சன்மானமாக கொடுத்து இந்திய பாதுகாப்பு நிறுவனம் தொடர்பான ஆவணங்களைப் பெறும் போது காவல்துறையினரால் கையும் கலவுமாக பிடிபட்டனர். முதலில் போலி ஆதார் அட்டைகள் மூலம் தங்களை இந்தியர்கள் என்று தெரிவித்த அவர்கள், பின்பு குறுக்கு விசாரணையில் பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தின் பணியாற்றும் அதிகாரிகள் என்றும், பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ அமைப்புக்கு பணியாற்றியதையும் ஒப்புக்கொண்டனர்.

    10:36 (IST)01 Jun 2020

    69% இட ஒதுக்கீடுக்கு அனுமதி வழங்கினால் மட்டும் சிறப்பு அந்தஸ்து ஏற்கப்படும் - கே.பி.அன்பழகன்

    69% இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு அனுமதி வழங்காத பட்சத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு சிறப்பு அந்தஸ்தை ஏற்க முடியாது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். அண்ணாப் பல்கலைக்கழகம் சிறப்பு அந்தஸ்து தொடர்பாக மத்திய அரசு நிர்ணயித்த காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.    

    10:21 (IST)01 Jun 2020

    700 இந்திய குடிமக்கள் கொழும்பு துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக தாயகம் திரும்புகின்றனர்,

    வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் நம்நாட்டுக் குடிமக்களை, கடல் வழியாகத் தாயகம் அழைத்து வருவதற்காக இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்தியக் கடற்படை, ஆப்பரேஷன் சமுத்திரசேது என்ற திட்டத்தின்படி இந்தியக் கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல், கொழும்பு துறைமுகத்தில் உள்ள 700 இந்திய குடிமக்களை கப்பலில் ஏற்றிக் கொள்வதற்காக இலங்கை சென்றது.   

    10:18 (IST)01 Jun 2020

    ஊரடங்கு விதிமீறல்

    தமிழகத்தில் ரூ.9.31 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,64,440 பேர் கைதாகி ஜாமீனில் விடுவிப்பு; இதுவரை 4,38,720 வாகனங்கள் பறிமுதல்; 5,28,459 வழக்குகள் பதிவாகின

    09:37 (IST)01 Jun 2020

    89995 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் - மத்திய சுகாதார அமைச்சகம்

    இந்தியாவில் கொரோனா பாதிப்பின் மொத்த எண்ணிக்கை 1,90,535 ஆக அதிகரித்துள்ளது. இதன்மூலம், உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த ஏழாவது தேசமாக இந்தியா உள்ளது. குணம் அடையும் நோயாளிகளின் எண்ணிக்கை  91,819 ஆக அதிகரித்துள்ளது. மொத்த உயிரழப்பு  5,394 ஆக உள்ளது.  

    09:19 (IST)01 Jun 2020

    மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் பாஜகவில் இணைந்தார்.   

    நேற்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய நரேந்திர மோடி, "தமிழ்நாட்டைச் சேர்ந்த சி. மோஹன் அவர்கள். சி. மோஹன் அவர்கள் முடிதிருத்தகம் ஒன்றை மதுரையில் நடத்தி வருகிறார். தன்னுடைய உழைப்பின் ஊதியமான 5 இலட்சம் ரூபாயை இவர் தனது மகளின் படிப்புக்கு என சேமித்து வைத்திருக்கிறார்; ஆனால் இந்த மொத்த சேமிப்பையும், இந்த காலகட்டத்தில் அவர் தேவையால் வாடுபவர்கள், ஏழைகள் ஆகியோரின் சேவையில் செலவு செய்து விட்டார்" என்று தெரிவித்தார். 

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியால்  பாராட்டப்பட்ட மதுரை சலூன் கடைக்காரர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் பாஜகவில் இணைந்தார்.   

    09:11 (IST)01 Jun 2020

    சென்னை விமான நிலையத்தில் இன்றைய விமான வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள்

    சென்னை விமான நிலையத்தில் இன்றைய விமான வருகை மற்றும் புறப்பாடு நேரங்கள்

     

    09:08 (IST)01 Jun 2020

    சென்னையில் திருமிழசை சந்தை கிலோ காய்கறி விலை பட்டியல்:

    சென்னையில் திருமிழசை சந்தை கிலோ காய்கறி விலை பட்டியல்:

    தக்காளி – ரூ 12

    கேரட்- ரூ.20

    பீட்ரூட்- ரூ.28 (விலை ஏற்றம் )

    புடலங்காய்- ரூ.15

    வெண்டைக்காய் – ரூ.10 (விலை வீழ்ச்சி )

    உருளைக்கிழங்கு – ரூ.22

    சின்ன வெங்காயம் – ரூ.60

    பெரிய வெங்காயம் – ரூ.9

    கோஸ் – ரூ.10

    கத்தரிக்காய்- ரூ.15

    கொரோனா பரவல் காரணமாக, கோயம்பேடு காய்கறி சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. இதனையடுத்து, சென்னை உட்பட்ட முக்கிய நகரங்களில் காய்கறியின் விலை கடுமையான ஏற்றம் அடைந்தது. தங்கு தடையின்றி குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்க, திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக மொத்த காய்கறி சந்தையை தமிழக அரசு அமைத்தது.

    09:00 (IST)01 Jun 2020

    தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கியது

    தமிழகத்தில் ஐந்தவாது பொது முடக்கநிலை இன்று முதல் அமலாகிறது. இன்று முதல் பொதுப் போக்குவரத்து இயக்கப்படும் என்றும், போக்குவரத்து வசதிக்காக தமிழகம் 8 மண்டலமாக பிரிக்கப்படுவதாகவும் தமிழக அரசு அறிவித்தது. 

    மண்டலம் 7, 8ல் உள்ள நான்கு மாவட்டங்களைத் தவிர்த்து தமிழகத்தில் இன்று காலை முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கியது.   

     

    Tamil News Today Live Updates : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,149 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,333 -ஆக அதிகரித்துள்ளது.

    நேற்று ஒரே நாளில் 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணம் அடையும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 12,757 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 9,400 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

    Coronavirus Corona Corona Virus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment