பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. அன்றைய வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.90 காசுக்கும், டீசல் ரூ. 92.48 காசுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரி நிலவரம்: செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20 அடியை எட்டியுள்ளது.ஏரிக்கு நீர்வரத்து 3,675 கன அடியாக இருந்த நிலையில் தற்போது வினாடிக்கு 4,217 கன அடியாக அதிகரித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
-
Dec 02, 2024 04:14 IST
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் டிச. 2-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைப்பு
கனமழை காரணமாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் 2-ம் தேதி நடைபெற இருந்த பருவத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது; ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டாள தெரிவித்துள்ளார்.
-
Dec 01, 2024 22:51 IST
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் சேலம், திருவள்ளூர், சிவகங்கை, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 01, 2024 21:41 IST
திருவண்ணாமலையில் மண்சரிவு: மலை அடிவாரத்தில் புதைந்த வீடுகள்; மீட்பு பணி தீவிரம்
கனமழையால் திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக வ.உ.சி நகரில் மலை அடிவாரத்தில் இருந்த வீடுகள் மண்ணில் புதைந்தன; வ.உ.சி நகர் பகுதிக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை விரைந்தது; ராஜ்குமார் என்பவர் அவரது மனைவி, 5 சிறுவர்கள் என 7 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Dec 01, 2024 20:31 IST
தமிழகத்தில் இந்த 4 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இரவு 10 மணி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 01, 2024 19:44 IST
திருப்பத்தூர் மாவட்டத்தில் டிச. 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
கனமழை காரணமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் க. தர்ப்பகராஜ் அறிவித்துள்ளார்.
-
Dec 01, 2024 19:40 IST
தருமபுரி மாவட்டத்தில் டிச. 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
கனமழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார்.
-
Dec 01, 2024 19:39 IST
ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிச. 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என ஆட்சியர் சந்திரகலா அறிவித்துள்ளார்.
-
Dec 01, 2024 19:36 IST
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிச. 2-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் பிரசாந்த் எம்.எஸ் அறிவித்துள்ளார்.
-
Dec 01, 2024 19:35 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிச. 2-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் சரயு அறிவித்துள்ளார்.
-
Dec 01, 2024 18:52 IST
கனமழை எதிரொலி: திருவண்ணாமலை மாவட்டத்தில் டிச. 2-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.
-
Dec 01, 2024 17:35 IST
விழுப்புரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (டிச 2) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.
-
Dec 01, 2024 16:59 IST
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புதுச்சேரியில் நாளை (டிச 4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
-
Dec 01, 2024 16:44 IST
11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்
தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
Dec 01, 2024 16:33 IST
அ.தி.மு.க ஆட்சியில் தான் மக்கள் தூக்கம் தொலைத்தனர் - ஸ்டாலின்
அ.தி.மு.க ஆட்சியில் தான் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்ததாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "தூங்கி வழிந்த நிர்வாகத்தால் - மனிதத்தவறுகளால் சென்னை மக்கள் தூக்கம் தொலைத்த இரவுகள் அ.தி.மு.க. ஆட்சிக்காலம்! இயற்கைச் சீற்றத்தை எதிர்கொண்டு, ஓரிரவில் இயல்பு நிலைக்குத் திரும்பிடும் காலம், நமது #DravidianModel ஆட்சிக்காலம்! இயல்புநிலை திரும்பிய பகுதிகளைப் பார்வையிட்டபோது, மக்களின் அன்பையும் வாழ்த்துகளையும் பெற்றுக் கொண்டு, விழுப்புரம் - திண்டிவனம் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சீர்செய்யக் களத்தில் பணியாற்றும் மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுடன் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
Dec 01, 2024 16:24 IST
ஆளுநர் நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து நிறுத்தம்
மதுரையில் ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் நிறுத்தப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடிய மாணவிகள் தடுத்து நிறுத்தப்பட்டு, தேசிய கீதம் பாட வைக்கப்பட்டனர். தேசிய கீதம் பாடிய பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
-
Dec 01, 2024 15:58 IST
தி.மு.க ஆட்சியில் பாதுகாப்பு இல்லை - இ.பி.எஸ்
தி.மு.க ஆட்சியில் எங்குமே பாதுகாப்பு இல்லை என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். குறிப்பாக, கோவை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கொலை இதற்கான உதாரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மக்கள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்..
-
Dec 01, 2024 15:38 IST
ஃபீஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது
ஃபீஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மிக மெதுவாக நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 01, 2024 15:07 IST
விஜய் வருகையால் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு - அண்ணாமலை
விஜய்யின் அரசியல் வருகையை பா.ஜ.க சார்பில் வரவேற்கிறோம். தீவிர அரசியலுக்கு விஜய் வரும் போது, பா.ஜ.க தனது கருத்தை தெரிவிக்கும். விஜய்யின் அரசியல் வருகையால் தமிழக மக்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது என தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்
-
Dec 01, 2024 14:36 IST
3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் - வானிலை ஆய்வு மையம்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது
-
Dec 01, 2024 14:26 IST
தமிழகம் திரும்பினார் அண்ணாமலை
சர்வதேச அரசியல் குறித்து பயில்வதற்காக லண்டன் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று தமிழகம் திரும்பினார். தமிழகம் வந்தடைந்த அண்ணாமலைக்கு சென்னை விமான நிலையத்தில் பா.ஜ.க சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
-
Dec 01, 2024 14:00 IST
சுரங்கப் பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது - ஸ்டாலின்
சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை. அம்மா உணவகங்கள் மூலம் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்
-
Dec 01, 2024 13:45 IST
மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் - ஸ்டாலின்
விழுப்புரம், கடலூர் மாவட்ட பாதிப்புகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
-
Dec 01, 2024 13:23 IST
மாமல்லபுரத்தில் உதயநிதி ஆய்வு
மாமல்லபுரத்தில் மழை பாதிப்பு பகுதிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
-
Dec 01, 2024 13:05 IST
தலைநகரம் நிம்மதியாக உள்ளது- ஸ்டாலின்
தலைநகரம் தப்பிக்கவும் இல்லை, தத்தளிக்கவும் இல்லை. பெரிய அளவில் எங்கும் தண்ணீர் தேங்கவில்லை.
விழுப்புரம், திண்டிவனம், மரக்காணத்தில் 60 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது விழுப்புரத்திற்கு அமைச்சர்களை அனுப்பி வைத்துள்ளோம் என கொளத்தூரில் ஆய்வு மேற்கொண்ட ஸ்டாலின் கூறினார்.
-
Dec 01, 2024 13:03 IST
எழிலகத்தில் ஸ்டாலின் ஆய்வு
சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கால அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து அதிகார்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
Dec 01, 2024 12:29 IST
இ.பி.எஸ் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதில்லை- ஸ்டாலின்
"எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டை நாங்கள் மதிப்பதில்லை" - எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்தார். -
Dec 01, 2024 12:02 IST
முழு கொள்ளளவை எட்டிய செண்பகத்தோப்பு அணை
ஆரணியில் பெய்த தொடர் மழையால் செண்பகத்தோப்பு அணை முழு கொள்ளளவை எட்டியது. 7 மதகுகள் வழியாக 3,500 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்களுக்கு வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.
-
Dec 01, 2024 11:44 IST
கொளத்தூரில் ஸ்டாலின் ஆய்வு
மழை பாதிப்புகள் குறித்து சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து வருகிறார்.
-
Dec 01, 2024 11:19 IST
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை
காலை 10.30 மணி நிலவரப்படி சென்னையில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை. அனைத்திலும் போக்குவரத்து சீராக உள்ளது.
#தகவல்பலகை | காலை 10.30 நிலவரப்படி சென்னையில் உள்ள எந்த சுரங்கப்பாதையிலும் தண்ணீர் தேங்கவில்லை.. அனைத்திலும் போக்குவரத்து சீராக உள்ளது#SunNews | #CycloneFengal | #ChennaiCyclone pic.twitter.com/AonVHwuIlq
— Sun News (@sunnewstamil) December 1, 2024 -
Dec 01, 2024 11:17 IST
மீட்பு குழு அனுப்பி வைப்பு
தமிழ்நாடு மாநில மீட்பு படையில் இருந்து திண்டிவனம் மற்றும் விழுப்புரத்திற்கு கூடுதல் குழுவினர் விரைந்துள்ளனர்.
திண்டிவனத்திற்கு 4 குழுக்களும், விழுப்புரத்திற்கு 2 குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
-
Dec 01, 2024 10:53 IST
திண்டிவனம்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை துண்டிப்பு
ஃபீஞ்சல் புயலால் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளதால் திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Dec 01, 2024 10:17 IST
மருத்துவ முகாம் - அமைச்சர் விளக்கம்
சென்னையில் இன்று 200 இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பட்டாளம் பகுதியில் ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு பேட்டி அளித்துள்ளார்.
-
Dec 01, 2024 09:12 IST
துணை முதலமைச்சர் ஆய்வு
சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ளநீர் வெளியேற்றும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். கால்வாய்களில் தங்கு தடையின்றி மழை நீர் செல்வதை உறுதி செய்தார்.
-
Dec 01, 2024 09:09 IST
6 மணிநேரமாக நகராத ஃபெஞ்சல் புயல்
கரையைக் கடந்த ஃபீஞ்சல் புயல் புதுச்சேரி அருகே 6 மணி நேரமாக நகராமல் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 01, 2024 09:07 IST
திருவண்ணாமலையில் கொட்டித் தீர்த்த கனமழை
திருவண்ணாமலையில் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்சமாக 21 செ.மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 01, 2024 09:05 IST
வாகனத்தை எடுக்காத உரிமையாளர்கள்
புயல் கரையை கடந்தும் சென்னையில் மேம்பாலங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை உரிமையாளர்கள் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
-
Dec 01, 2024 09:03 IST
சென்னை பட்டாளத்தில் அமைச்சர் ஆய்வு
சென்னை பட்டாளம் பகுதியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு செய்து தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீரை அகற்றும் பணியினை பார்வையிட்டு வருகின்றனர்.
-
Dec 01, 2024 08:51 IST
தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் என்பதால் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Dec 01, 2024 08:04 IST
பட்டினம்பாக்கம் சாலையில் அடித்துவரப்பட்ட மணல்
ஃபீஞ்சல் புயல் காரணமாக நேற்று வீசிய பலத்த காற்றில் சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் அடித்து வரப்பட்ட மணலை ஜேசிபி இந்திரம் வைத்து மாநகராட்சி பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
-
Dec 01, 2024 07:57 IST
மயிலம் பகுதியில் 50 செ.மீ. மழை பதிவு!
ஃபீஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டம் மயிலம் பகுதியில் 50 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
Dec 01, 2024 07:44 IST
20 வருடங்களில் இல்லாத அளவுக்கு புதுச்சேரியில் கொட்டிய கனமழை
புதுச்சேரியில் இதுவரை பதிவான மழை 20 வருடங்களில் இல்லாத அளவுக்கு கனமழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 46 செ.மீ மழை பதிவாகியுள்ளது என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
-
Dec 01, 2024 07:41 IST
3 மணி நேரமாக நகராமல் இருக்கும் ஃபீஞ்சல் புயல்!
புதுச்சேரி அருகே கரையை கடந்த ஃபீஞ்சல் புயல் சுமார் 3 மணி நேரமாக நகராமல் நீடிப்பதாக இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார்.
-
Dec 01, 2024 07:38 IST
10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என தகவல் வெளியாகி உள்ளது.
-
Dec 01, 2024 07:34 IST
வேளச்சேரி, மடிப்பாக்கத்தில் சில பகுதிகளில் மீண்டும் வெள்ள பாதிப்பு
வேளச்சேரி நெடுஞ்சாலையில் ஓரளவு வெள்ளம் சூழ்ந்தது. பள்ளிக்கரணையில், நாராயணபுரம் ஏரிக்கு அருகில் வசிப்பவர்கள், வீடுகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று அப்பகுதியினர் தெரிவித்தனர். நேற்று மாலை வரை ஜி.எஸ்.டி சாலையின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பல்லாவரம் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் என தெரிவித்தனர்.
-
Dec 01, 2024 07:31 IST
வடசென்னையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின
டெமெல்லோஸ் சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீரும் வியாசர்பாடியில் உள்ள ஸ்டீபன்சன் சாலை, பட்டாளம், காந்திநகர் மற்றும் கணேசபுரம் போன்ற பகுதிகளில் இடுப்பளவு தண்ணீரும் தேங்கியுள்ளது.
-
Dec 01, 2024 07:29 IST
புயலால் வெள்ளத்தில் மூழ்கிய மத்திய சென்னையின் பல பகுதிகள்
ஃபீஞ்சல் புயலால் மத்திய சென்னையில் கொரட்டூர், கோயம்பேடு, விருகம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி.நகர், ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.