தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
ஓபிசி மசோதா மக்களவையில் நிறைவேறியது
இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை மாநில அரசுகளே முடிவு செய்து இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பு கோஷமின்றி நிறைவேறியது.
85% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் -பள்ளிக்கல்வித்துறை
நடப்பு கல்வியாண்டுக்கு 85% கல்விக் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 2022 பிப்ரவரி 1ஆம் தேதிக்குள் 6 தவணை கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என சுற்றரிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிஎம்களில் பணம் இல்லாத வங்கிகளுக்கு அபராதம்
ஏடிஎம் இயந்திரங்களில் சரியாக பணத்தை நிரப்பவில்லை என்றால் வங்கிகளுக்கும், வொயிட் லேபிள் ஏடிஎம் நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்க இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. 10 மணி நேரத்திற்கு மேல் பணம் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்த விதிமுறை அக்டோபர் 1முதல் அமலுக்கு வரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
கட்டிடக் கழிவுகளை கொட்டினால் அபராதம்
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கட்டிடக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டும் நபர்களுக்கு ரூ.2,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வுக்கு 11,236 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மாவட்ட வாரியாக நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை

ஓபிசி இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். “நூற்றாண்டு கால காயங்களுக்குச் சிறு மருந்தாகவும் சமூக நீதிக்கு அடித்தளமாகவும் அமைந்துள்ள இடஒதுக்கீடு வரலாற்றில் இந்நாள் என்றும் நினைவுகூரப்படும். ஓபிசி பட்டியலை மாநிலங்களே தயாரிக்கிற மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு கிடைத்த வெற்றி” என்று தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் நிலக்கரி சாம்பல் எடுத்து செல்லும் லாரி மோதி ஒருவர் இறந்ததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் 5 லாரிகளுக்கு தீ வைத்ததால் அங்கே பதற்றம் ஏற்பட்டது. 30க்கும் மேற்பட்ட லாரிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் இன்று ஒரேநாளில் 1,964 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கொரோனா தொற்றில் இருந்து 1,917 பேருக்கு பேர் குணமடைந்தனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு அரசு உச்சநீடிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை சந்திக்கத் தயார் என கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மாய் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அவை முடக்கத்திற்கு அரசின் பிடிவாதம் தான் காரணம்; அதற்கு எதிர்க்கட்சிகளை எப்படி பெறுப்பாக்க முடியும என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி சு.வெங்கடேசன்: “மக்களின் அடிப்படை சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் சீர்குலைத்துள்ள பெகாசஸ் பற்றி ஒரு நிமிடம்குட விவாதிக்க மறுத்து 19 மசோதாக்களை விவாதமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பே கூட்டத்தொடரை ஒன்றிய அரசு முடித்துவிட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராவது குறித்து சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் ஓபிஎஸ், இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் ஆகஸ்ட் 16ம் தேதி நேரில் ஆஜராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பு நீதிமன்றம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
தன்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார்கள் குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னான் அமைச்சர் வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவருடன் இணைந்து கலந்து பேசி விட்டு விரைவில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பதில் அளிப்பேன். பத்திரிகையாளர் சந்திப்பில் முழு விளக்கமும் கொடுப்பேன் என கூறிுள்ளார்.
தன்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் புகார்கள் குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னான் அமைச்சர் வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் இருவருடன் இணைந்து கலந்து பேசி விட்டு விரைவில் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு குறித்து பதில் அளிப்பேன். பத்திரிகையாளர் சந்திப்பில் முழு விளக்கமும் கொடுப்பேன் என கூறிுள்ளார்.
கும்பகோணத்தில் போக்குவரத்தக்கு இடையூராக இருந்த மின்கம்பங்களை அகற்றும் பணியில் எம்எல்ஏ அன்பழன் ஈடுபட்டுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கும்பகோணத்தில் போக்குவரத்தக்கு இடையூராக இருக்கும் கம்பங்கள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்த அன்பழகன் தற்போது அதனை நிறைவேற்றியுள்ளார்.
பேஸ்புக், ட்விட்டர் கணக்கு தொடங்க அடையாள அட்டை தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற குழுத் தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தி, ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, திமுகவின் டி.ஆர் பாலு உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.
சென்னை எழும்பூர் காவலர் மருத்துவமனையில் புதிதாக ஆக்ஸிஜன் சேமிப்பத்தை திறந்து வைத்த டிஜிபி சைலேந்திரபாபு, கொரோனா 3வது அலை வந்தால் காவல்துறைக்கு அதிக ரிஸ்க் இருக்கிறது என கூறியுள்ளார்.
சென்னை கோம்பாக்கம், நுங்கம்பான்கம், பட்டினம்பாக்கம், தி.நகர், ஆழ்வார்பேட்டை, ராயபேட்டை, சைதாப்பேட்டை, எழும்பூர் ஆகிய பகுதிகளில் மிதமான மழை பெய்துள்ளது.
மேகதாதுவில் அணை கட்டப்படுகிறதா என ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை கலைத்த பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
ஸ்டாலின் தொடுத்த வழக்கால் ஓபிசி பிரிவுக்கு 27% இடஒதுக்கீடு உறுதியானது என்றும் இதன் மூலம் ஒபிசி பிரிவினருக்கு 4000 மருத்துவ இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்றும் திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள 'நமது புரட்சி தலைவி அம்மா' நாளிதழ் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைக்கு அதிமுக தலைமை கண்டனம் தெரிவித்துள்ளது. பத்திரிக்கை சுதந்திரத்திற்கு திமுக அரசு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக தலைமை குற்றம் சாட்டியுள்ளது.
ஹிமாச்சல பிரதேசத்தின், கின்னூர் மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் அரசு பேருந்தில் பயணம் செய்த 40 பேர் சிக்கியிருக்கலாம் என துணை ஆணையர் அபித் ஹூசைன் தெரிவித்துள்ளார். மேலும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முதல் டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. மேலும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தலா 2 புள்ளிகளையும் குறைத்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்குள் உள்ள ரூ. 200 கோடி மூலப்பொருட்களை எடுத்து விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் கூறியுள்ளது. இதற்கு பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
9 முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க திட்டமிட்டுள்ள நிலையில், மாணவர்களை சுழற்சி முறையில் பள்ளிக்கு வர வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ம் தேதிக்குள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் பணிகள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா கூறியுள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநில பட்டியலில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களை பொதுப்பட்டியலுக்கு மத்திய அரசு மாற்றாது என்று மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரெஜ்ஜூ எழுத்துப்பூர்வமாக அறிவித்தார்.
ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தமிழக அரசு அறிவுறுத்தியும் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவில்லை. இப்படி அலட்சியமாக செயல்பட்டால் பலருக்கும் கொரோனா தொற்று அதிக அளவில் பரவும். பூஜிய இலக்கை எட்ட மாநில அரசுடன் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கடந்த சில வாரங்களாக பெகாசஸ் விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அதற்கான சூழல் உருவாகாத நிலையில் தினமும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை நாடாளுமன்ற மேலவை கூடிய போது, வழிபாட்டு தலம் போல் புனிதமான நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் எனக்கு வருத்தம் அளித்துள்ளது. நாடாளுமன்றத்தின் புனிதம் சிதைக்கப்பட்டுவிட்டது என்று நா தழுதழுக்க பேச ஆரம்பித்தார். ஆனால் அப்போதும் எதிர்க்கட்சிகள் குரல் எழுப்ப ஆரம்பித்தனர்.
சென்னைக்கு எம்.எஸ். தோனி வந்த நிலையில் தற்போது சி.எஸ்.கே. அணி வீரர் சுரேஷ் ரெய்னாவும் சென்னை வந்தடைந்தார்.
2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அங்கீகாரம் நீக்கப்பட்டது. மாநிலத்தின் சிறப்பு அங்கீகாரம் நீக்கப்பட்ட பிறகும் இதுவரை 2 வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே அங்கு சொத்து வாங்கியுள்ளனர் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் அளித்துள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை 6 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்வேறு விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடிவரும் நிலையில் இந்திய நாடாளுமன்ற மக்களவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த 17 நாட்களும் எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை முடங்கியது.
திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின்போது நியாயத்தின் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றி என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழி வாங்கும் நடவடிக்கையின் போது, நியாயத்தின் பக்கம் நின்றும், எனக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் எனக்கு ஆதரவாக நின்ற (1/3) pic.twitter.com/9l4PZ2LL5S
— SP Velumani (@SPVelumanicbe) August 11, 2021
மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த ஆடி திருவாதிரை தினம் அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொறியியல் படிப்புகளில் வடிவமைப்பு, ஆராய்ச்சிக்கு தேவையான பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் செயல்முறை பாடத்திட்டத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.
தொழிற்கல்வி மாணவர்களுக்கு ஆலைகளில் பயிற்சி அளிப்பதை பாடத்திட்டமாக அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நெல்லை, தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
பட்டியலின மக்கள் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக நேரில் ஆஜராக நடிகை மீரா மிதுனுக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் நேரில் ஆஜராவதற்கு ஒரு மாதம் அவகாசம் கேட்டு அமலாக்கத்துறைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடிதம் அனுப்பியுள்ளார்.
அதிமுக ஆட்சியின்போது அரசு வேலை வாங்கி தருவதாக 81 பேரிடம் ரூ.1.62கோடி பணம் மோசடி செய்தததாக செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடரப்பட்டது.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள கேசிபி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 2வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் சிறந்த மாநகராட்சிக்கான முதல்வர் சிறப்பு விருதுக்கு தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தஞ்சை மாநகராட்சிக்கான ரூ.25 லட்சம் மற்றும் விருதை சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குவார். சிறந்த நகராட்சிகளாக உதகை, திருச்செங்கோடு, சின்னமனூர் ஆகிய நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,353 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 497 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து 40,013 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் நாளை பூமி கண்காணிப்பு செயற்கைகோளை சுமந்தப்படி விண்ணில் செலுத்தப்படும் என்று விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இயற்கை பேரழிவுகள், விவசாயம், வனவியல், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை, ஆகியவற்றை அறிந்து கொள்வதற்காக 'ஈஓஎஸ்-03' (EOS-3) என்ற பூமி கண்காணிப்பு செயற்கைகோளை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இதையடுத்து விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் இன்று காலை 03:43 மணிக்கு துவங்கியது.
எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை கண்டித்து சென்னை மற்றும் கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட 500க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.