ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு: தாலிபான்கள் அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசு அமைய உள்ளதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர். முல்லா முகம்மது ஹசன் அகண்ட் தலைவராகவும், தலீபான் தலைவர் முல்லா பரதர், துணைத் தலைவர்களில் ஒருவராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் அகவிலைப்படி
பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் அகவிலைப்படி உயர்வு ஏப்ரல் முதல் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜனவரியிலேயே அகவிலைப்படி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இலவசமாக மாற்று வாக்காளர் அடையாள அட்டை
தமிழ்நாட்டில் உள்ள 342 அரசு இ-சேவை மையங்களிலும் மாற்று புகைப்பட வாக்காளர் அடையாள அட்டைகள் தேவைப்படும் வாக்காளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் இத்திட்டம் வரும் அக்டோபர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
டி20 உலககோப்பை தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த அணிக்கு ஆலோசகராக முன்னாள் கேப்டன் தோனி செயல்படுவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
7வது டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும்அக்டேபர் 17-ந் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தொடக்க ஆட்டகார்ர் ஷிகர் தவான் இடம்பெறாத நிலையில், தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் 4 வருடங்களுக்கு பிறகு டி20 அணியில் இடம்பெற்றுள்ளார்.
டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, ராகுல் சாஹர், அஸ்வின், அக்ஸர் படேல், வருண் சக்ரவர்த்தி, பும்ரா, புவனேஷ்வர் குமார், சமி
மாற்று வீரர்கள் :
ஸ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோர் மாற்றுவீரர்களாக அணியில் இடம்பெற்றுள்ளனர்
புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் சிலை வைப்பது தொடர்பாக, அரசு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு போக்குவரத்து நெரிசல், சாலை சந்திப்பில் விநாயகர் சிலைகள் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க கூடாது என்று பள்ளிக்கல்வி ஆணையர் மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 1,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 26,27,365 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பக்கு இன்று 18 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 35073 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வரும் 14ஆம் தேதி ஆலோசனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனையில் பங்கேற்கின்றனர்
அதிமுக முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைபித்தன் உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், அவருக்கு வி.கே.சசிகலா நேரில் அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக அதிகரித்து வரும் கேரளாவில் மேலும் 30,196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,83,494ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு 181 பேர் பலியாகியுள்ளனர்.
எதிர்காலத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொதுப் பேர்ந்து போக்குவரத்தை மேம்படுத்திட ஜெர்மன் மேம்பாட்டு வங்கியின் நிதியுதவியுடன் மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த தமிழக அரசின் அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது என்று போக்குவரத்து துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2011-12ம் ஆண்டில் அரசுப் பேருந்துகளில் தினசரி பயணிகளின் எண்ணிக்கை 2.8 கோடியாக இருந்த நிலையில், 2020-21ல் 73.64 லட்சமாக சரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் 30 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 259 கல்லூரி விடுதிகளில் ரூ.2.59 கோடி செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும். 259 கல்லூரி விடுதிகளுக்கு ரூ.1.44 கோடி செலவில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான வருமான வரம்பு ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்படும். கிராமப்புற மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கான வருமான வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். நரிக்குறவர், சீர்மரபினர் நலவாரிய ஆண் உறுப்பினருக்கான திருமண உதவித்தொகை ரூ.3,000 ஆக உயர்த்தப்படும். பெண்களுக்கு ரூ.5,000 ஆக உயர்த்தப்படும் என்று 30 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
சிறுபான்மை நலத்துறை அமைச்சர் மஸ்தான் 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். ஜெருசலேம் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியம் 60 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும். வக்பு வாரியத்திற்கு வழங்கப்படும் ஆண்டு நிர்வாக மானியம் உயர்த்தப்படும். 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் ரூ.14 லட்சம் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும். சிறுபான்மையினர் நல விடுதிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு வருமான வரம்பு 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார் மற்றும் பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்படும். என்பன உள்ளிட்ட 17 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்து புகார் வழக்கின் விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
31 அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளுக்கும் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் கழிப்பறைகள் கட்டப்படும் என்றும் ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோருக்கு அடைகாப்பக சேவை வழங்கும் திட்டம் ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேரவையில் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பேரவையில் புதிய 23 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில், 150 பள்ளிகளில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள், ஆய்வக கட்டடங்கள் கட்டப்படுவது, ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் 20 சமுதாய கூடங்கள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படுவது, 1000 ஆதிதிராவிடர், பழங்குடியின விவசாயிகளுக்கு துரித மின் இணைப்பு திட்டத்தின் கீழ் ரூ.23.28 கோடி செலவில் 90% மானியம் வழங்குவது உள்ளிட்டவை அடங்கும்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே பையனூர் பகுதியில் அமைந்துள்ள சசிகலாவிற்கு சொந்தமான சொத்துகள் முடக்கம். சொத்துகளை முடக்கி நுழைவாயிலில் நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை.
சசிகலாவிற்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துகள் பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை முடக்கியது.
கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தவில்லை என மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உறுதிமொழி தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபட அனுமதிக்க வேண்டுமென்ற கோரிக்கைய சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம் உருவாக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்து வருகிறது. குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கும் தைரியம் அதிமுகவுக்கு இல்லை என சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் சில கருத்துகளை எடுத்துரைக்க வாய்ப்பு அளிக்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்களை முடக்குவதாக கூறி தமிழக சட்டப்பேரவையில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் இந்தாண்டு 21 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேரவையில் அறிவித்துள்ளார். உயர்கல்வித்துறை சார்பில் 10, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் 1 கல்லூரி என 21 கல்லூரிகள் துவங்கப்பட உள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.35,616க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கவிஞர் புலமைப்பித்தன் (85) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அரசவைக் கவிஞராகவும், அவைத் தலைவராகவும் இருந்தவர் புலமைப்பித்தன்.
வரும் 15-ம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நிறைவடையவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், டி.ஜி.பி உள்ளிட்டோருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தோனேசியாவின் பாண்டன் மாகாணத்தில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி கைதிகள் உள்ளிட்ட 41 பேர் உயிரிழந்தனர். மின்கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி படுகாயமடைந்த மேலும் 40 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார்