தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.
என்ஜிஓக்களுக்கு ரூ.49,000 கோடி நன்கொடை
இந்தியாவில் செயல்பட்டு வரும் 18,000த்திற்கும் அதிகமான அரசுசாரா தன்னார்வ அமைப்புகள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளிலிருந்து ரூ.49,000 கோடிக்கும் மேல் நன்கொடை பெற்றுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது
பினராயி விஜயனுக்கு நோட்டீஸ்
கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு சுங்கத்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தூதரக அதிகாரிகளாக பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ், சரித் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி வழக்கு - உயர்நீதிமன்றம் உத்தரவு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை, தினசரி விசாரித்து 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் அமைப்புகள், ஏற்பாட்டாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:20 (IST) 12 Aug 2021இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸட் : இந்திய அணி அபார ஆட்டம்
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் ராகுல் இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதில் முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தபோது அரைசதம் கடந்து விளையாடிய ரோகித் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து புஜாரா 9ரன்களில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து ராகுலுடன் இணைந்த கேப்டன் விராட்கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இதில் சிறப்பாக ஆடிய ராகுல் தற்போது சதமடித்துள்ளார். சற்றுமுன்வரை இந்திய அணி 82.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. விராடகோலி 41 ரன்களுடனும், சதமடித்த ராகுல் 113 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- 23:19 (IST) 12 Aug 2021இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸட் : இந்திய அணி அபார ஆட்டம்
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் ராகுல் இருவரும் பொறுப்புடன் விளையாடி ரன்கள் சேர்த்தனர். இதில் முதல் விக்கெட்டுக்கு 126 ரன்கள் சேர்த்தபோது அரைசதம் கடந்து விளையாடிய ரோகித் ஆண்டர்சன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இதனைத் தொடர்ந்து புஜாரா 9ரன்களில் ஏமாற்றம் அளித்தார். அடுத்து ராகுலுடன் இணைந்த கேப்டன் விராட்கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தார். இதில் சிறப்பாக ஆடிய ராகுல் தற்போது சதமடித்துள்ளார். சற்றுமுன்வரை இந்திய அணி 82.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 260 ரன்கள் எடுத்துள்ளது. விராடகோலி 41 ரன்களுடனும், சதமடித்த ராகுல் 113 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
- 19:48 (IST) 12 Aug 2021தமிழகத்தில் மேலும் 1,942 பேருக்கு கொரோனா தொற்று
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் மேலும் 1,942 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் தொற்று பாதிப்புக்கு மேலும் 33 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 34,428 ஆக அதிகரித்துள்ளது.
- 18:58 (IST) 12 Aug 2021ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ஆக்கி வீரரை நேரில் சந்தித்த நடிகர் மம்முட்டி
டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியில் அங்கம் வகித்த கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் வீட்டுற்க்கு பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நேரில் சென்ற நடிகர் மம்முட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். ஸ்ரீஜேஷுக்கு கேரளா மாநில அரசு ரூ .2 கோடி பரிசு தொகை அறிவித்துள்ளது. மேலும் அரசுப்பணியில் பதவி உயர்வும் அளித்துள்ளது.
- 18:46 (IST) 12 Aug 2021சென்னை பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு
ஏப்ரலில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- 17:53 (IST) 12 Aug 202137 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம்
37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடி இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த அனிதா ராணிப்பேட்டைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து மார்ஸ் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்
- 16:51 (IST) 12 Aug 2021பப்ஜி மதன் மீது 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்
பப்ஜி மதன் கொரோனா பாதிப்பு நிவாரண உதவி செய்வதாகக் கூறி 2148 பேரிடம் ரூ.2.89 கோடி பண மோசடி செய்துள்ளார். பப்ஜி மதன் மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 1600 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
- 16:48 (IST) 12 Aug 2021சிறைவாசிகளை சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி அளித்தது தமிழ்நாடு சிறைத்துறை
தமிழ்நாடு சிறையில் உள்ள கைதிகளை வரும் 16ம் தேதி முதல் உறவினர்கள் சந்திக்க அனுமதி அளித்துள்ளது சிறைத்துறை. சிறைவாசிகளை காண விரும்பும் உறவினர்கள் முறையாக முன்பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- 16:21 (IST) 12 Aug 2021தடையின்றி மதிய உணவு கிடைப்பதை கண்காணிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு
மதிய உணவு கிடைக்காததால், பள்ளி மாணவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாறும் அபாயம் உள்ளதால் தீவிர கண்காணிப்பு தேவை என முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
- 15:50 (IST) 12 Aug 2021கொரோனாவால் இறந்த மருத்துவர்கள், செவிலியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி - தமிழக அரசு
கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உயிரிழந்த 34 பேரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க ரூ.8.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- 15:35 (IST) 12 Aug 2021இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு!
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வரும் நிலையில், 2வது டெஸ்ட் போட்டிக்கான ஆட்டம் இன்று முதல் துவங்குகிறது. மழையின் குறுக்கீட்டால் தாமதமாக துவங்கும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
கடந்த 4ம் தேதி முதல் நடந்த முதலாவது டெஸ்ட் ட்ராவில் முடிந்தது குறிப்பிடத்தக்க ஒன்று.
Toss & team news from Lord's!
— BCCI (@BCCI) August 12, 2021
England have elected to bowl against teamindia in the 2⃣nd engvind Test. 🏏
Follow the match 👉 https://t.co/KGM2YELLde
Here's India's Playing XI 🔽 pic.twitter.com/leCpLfUDnG - 15:29 (IST) 12 Aug 2021அரசு திவாலாகியுள்ளதால் வரிகளை உயர்த்த வேண்டும் - நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அரசு திவாலாகியுள்ளதால் வரிகளை கண்டிப்பாக உயர்த்தியே ஆக வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.
- 15:19 (IST) 12 Aug 2021மழையால் தாமதமாகும் 2வது டெஸ்ட்!
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக தாமதமாகி வருகிறது.
- 15:11 (IST) 12 Aug 2021காதலை ஏற்க மறுக்கும் பெண்களை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை - கேரள முதல்வர் எச்சரிக்கை
காதலை ஏற்க மறுக்கும் பெண்களைத் தாக்கினாலோ, துன்புறுத்தினாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரளா முதல்வர் பினராயி விஜயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- 14:53 (IST) 12 Aug 2021மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி கவனம் செலுத்த வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்!
மாற்றுத் திறனாளிகளுக்கான நிவாரண உதவிகள் உரிய முறையில் சென்றடைந்ததாக தெரியவில்லை என்று தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மாற்றுத்திறனாளிகள் நலனில் தனி கவனம் செலுத்த வேண்டும் குறிப்பிட்டுள்ளது
- 14:27 (IST) 12 Aug 2021இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய் - கிரிக்கெட் வீரர் தோனி சந்திப்பு புகைப்படங்கள்!
சென்னை கோகுலம் ஸ்டூயோவில் விளம்பர படப்பிடிப்பிற்காக வந்த கிரிக்கெட் வீரர் எம். எஸ் தோனி அதே ஸ்டூயோவில் பீஸ்ட் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜயை சந்தித்து பேசினார். இவர்களது சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.
viralphoto || வைரலாகும் தல - தளபதி சந்திப்பு!https://t.co/gkgoZMqkWC | vijay | dhoni | msdhoni | msd | @msdhoni | actorvijay | beast | @actorvijay pic.twitter.com/PgNEvPlSeU
— IE Tamil (@IeTamil) August 12, 2021
viralphoto || இணையத்தில் வைரலாகும் நடிகர் விஜய் - கிரிக்கெட் வீரர் தோனி சந்திப்பு புகைப்படங்கள்!https://t.co/gkgoZMqkWC | vijay | dhoni | msdhoni | msd | @msdhoni | actorvijay | beast | @actorvijay pic.twitter.com/ywsVgLUz8E
— IE Tamil (@IeTamil) August 12, 2021
viralphoto || வைரலாகும் தல - தளபதி சந்திப்பு!https://t.co/gkgoZMqkWC | vijay | dhoni | msdhoni | msd | @msdhoni | actorvijay | beast | @actorvijay pic.twitter.com/L4mOrxHjfN
— IE Tamil (@IeTamil) August 12, 2021 - 13:43 (IST) 12 Aug 2021"3 மாதங்களில் தலிபான்கள் கட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்துவிடும்" - அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிக்க ஆயிரக்கணக்கான மக்கள் தலைநகர் காபூல் நோக்கி படை எடுத்து வரும் நிலையில், இன்னும் ஒரு மாதத்தில் காபூலை தவிர பிற பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றிவிடுவார்கள் என்றும், 3 மாதங்களில் ஆப்கானிஸ்தானை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வந்துவிடுவார்கள் என்றும் அமெரிக்க உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
- 13:30 (IST) 12 Aug 2021பொய் வழக்குகளை எதிர்கொள்ள குழு அமைப்பு
அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அதிமுக மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளை சட்டரீதியாக எதிர்கொள்ள, ஜெயக்குமார், தளவாய்சுந்தரம், சி.வி.சண்முகம், மனோஜ் பாண்டியன், இன்பதுரை, பாபுமுருகவேல் ஆகியோர் அடங்கிய சட்ட ஆலோசனை குழு அமைக்கப்படும் என்று ஓபிஎஸ், ஈபிஎஸ் தெரிவித்துள்ளார்.
- 13:26 (IST) 12 Aug 2021சர்வதேச இளைஞர்கள் தினம் குறித்து முதல்வர் ட்வீட்
இளைஞர் எழுச்சியே நாட்டின் வளர்ச்சி என மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
மனிதகுலத்தின் எதிர்கால நம்பிக்கையான இளைய சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் internationalyouthday இன்று!
— M.K.Stalin (@mkstalin) August 12, 2021
இளைஞர்களுக்கு தேவையான உறுதுணையையும், அவர்களின் சிறகுகள் விரிவதற்கான சூழலையும் உருவாக்கித் தரும் அரசாக தி.மு.க. அரசு என்றென்றும் துணை நிற்கும்!
இளைஞர் எழுச்சியே நாட்டின் வளர்ச்சி! - 13:25 (IST) 12 Aug 2021தேசிய நூலக தினம் குறித்து முதல்வர் ட்வீட்
'பொன்னாடைகள், பூங்கொத்துகள் தவிர்த்து புத்தகங்களை வழங்குமாறு நான் கேட்டுக் கொண்டதும் முத்தமிழறிஞர் வழியில்தான்' என மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
தேசிய நூலக நாள் இன்று!
— M.K.Stalin (@mkstalin) August 12, 2021
புத்துலகக் கனவுக்கு வழிகாட்டுபவை புத்தகங்களே! அதனால்தான் முத்தமிழறிஞர் சென்னையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் அமைத்தார்!
பொன்னாடைகள், பூங்கொத்துகள் தவிர்த்து புத்தகங்களை வழங்குமாறு நான் கேட்டுக் கொண்டதும் அவர்வழியில்தான்.
வாசிப்பு நமது சுவாசிப்பாகட்டும்! - 13:23 (IST) 12 Aug 2021வரிகள் உயர்வு குறித்து கூற முடியாது
வரிகள் உயர்வு எப்போது என்பது குறித்து எதுவும் கூற இயலாது என்றும் பொருளாதாரம் குறித்த புரிதல் இன்றி கேள்வி எழுப்ப வேண்டாம் என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
- 13:22 (IST) 12 Aug 2021பாஜக காரணம் இல்லை
ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டதற்கு பாஜக காரணம் இல்லை என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
- 13:21 (IST) 12 Aug 2021கிராம சபை கூட்டம் நடத்த தடை
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வரும் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மேலும், பஞ்சாயத்து தலைவர்களுக்கு இந்த அறிவுறுத்தல்களை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- 13:17 (IST) 12 Aug 2021தீபாவளிக்கு சாலையோர பட்டாசுக் கடைகளுக்கு அனுமதியில்லை
தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரையில் சாலையோர பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி இல்லை என மாநகர காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
- 13:15 (IST) 12 Aug 20213000 நெல் மூட்டைகள் சேதம்
கள்ளக்குறிச்சியில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யாத நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த மழை காரணமாக 3000 நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன.
- 13:13 (IST) 12 Aug 2021இது ஜனநாயக படுகொலை - எதிர்கட்சி எம்பிக்கள் பேரணி
நாடாளுமன்றம் செயல்படாததற்கு ஆளும் பாஜகவே காரணம் என்றும் இது ஜனநாயக படுகொலை என்றும் கூறி ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் எதிர்கட்சி எம்பிக்கள் பேரணியில் ஈடுபட்டனர்.
- 12:50 (IST) 12 Aug 2021திட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை
விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி எஃப்-10 திட்டம் முழுமையாக வெற்றி பெறவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்.
- 12:49 (IST) 12 Aug 2021இமாச்சல பிரதேச நிலச்சரிவில் 13 பேர் உயிரிழப்பு
இமாசல பிரதேச மாநிலம் கின்னாரில் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சிலர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
- 12:21 (IST) 12 Aug 2021152 காவல் அதிகாரிகளுக்கு விருது
நாடு முழுவதும் விசாரணையில் சிறப்பாக செயல்பட்ட 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில், தமிழகத்தில் 8 காவல் அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- 12:13 (IST) 12 Aug 2021தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர வாய்ப்பில்லை - அமைச்சர் ராஜகண்ணப்பன்
தமிழக நிதிநிலை பற்றிய வெள்ளை அறிக்கையில் டீசல் கட்டணம் உயரும் போதெல்லாம் பஸ் கட்டணம் உயர்த்தப்படாததால் போக்குவரத்துக் கழகம் கடும் நஷ்டத்தை சந்தித்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தது. அரசு பேருந்து 1 கிலோ மீட்டர் ஓடினால் சுமார் 60 ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது பேருந்து கட்டணம் உயர வாய்ப்பில்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
- 11:16 (IST) 12 Aug 2021உள்ளாட்சி தேர்தல்- அதிமுக 2வது நாளாக ஆலோசனை
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2வது நாளாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- 11:16 (IST) 12 Aug 2021உள்ளாட்சி தேர்தல்- அதிமுக 2வது நாளாக ஆலோசனை
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2வது நாளாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.
- 10:42 (IST) 12 Aug 2021பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது
தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை புதுப்பொலிவு பெறும் என்றும், பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு 2500 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
- 10:39 (IST) 12 Aug 2021காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கு முடக்கம்
விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி காங்கிரஸ் கட்சியின் கணக்கை ட்விட்டர் நிறுவனம் முடக்கியது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் ராகுல்காந்தி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
- 10:37 (IST) 12 Aug 2021இந்தியாவில் மீண்டும் உயரும் தினசரி பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 39,060 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
- 10:35 (IST) 12 Aug 2021இந்தியாவில் ஒரே நாளில் 41,195 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 490 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 39,060 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
- 10:32 (IST) 12 Aug 2021பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது
தமிழகத்தில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
திமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை புதுப்பொலிவு பெறும் என்றும், பழைய பேருந்துகள் அகற்றப்பட்டு 2500 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.
- 10:30 (IST) 12 Aug 2021முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வங்கி கணக்கு மற்றும் வங்கி லாக்கர்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முடக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- 08:48 (IST) 12 Aug 2021கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் நாள்தோறும் இருந்த கட்டணம் தொகுப்பு கட்டணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
வெண்டிலேட்டருடன் கூடிய சிகிச்சைக்கு தினசரி கட்டணம் ரூ.35,000 என்பது தொகுப்பு கட்டணமாக ரூ. 56,200 ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தீவிரமில்லாத சிகிச்சைக்கு தினமும் ரூ.5,000 என இருந்த நிலையில் தொகுப்பு கட்டணமாக ரூ.3,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆக்சிஜனுடன் கூடிய சிகிச்சைக்கு தினமும் ரூ.15,000 என இருந்த நிலையில் தொகுப்பு கட்டணமாக ரூ.7,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வென்டிலேட்டர் அல்லாத தீவிர சிகிச்சைக்கு தினமும் ரூ.30,000 என இருந்தது தொகுப்பு கட்டணமாக ரூ.27,100 ஆக மாற்றப்பட்டுள்ளது.
- 08:39 (IST) 12 Aug 2021ஜிஎஸ்எல்வி எஃப் -10 ராக்கெட் பயணம் தோல்வி
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி எப்-10 ராக்கெட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணத்திட்டம் தோல்வியை அடைந்துள்ளது.
பூமியை கண்காணிக்கும் Eos-03 செயற்கைகோளுடன் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி எஃப் 10 ராக்கெட் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு இருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்துள்ளார்.
18.39 நிமிடத்தில் செயற்கைகோள் அதன் சுற்றுவட்டப் பாதையை அடையவில்லை என்பதால் இத்திட்டம் தோல்வியை சந்தித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.