அமரிக்க நிதியுதவி நிறுத்தம்
ஆப்கானில் உள்ள அமெரிக்க நிதி ஆதாரங்களைப் பயன்படுத்த முடியாதபடி தாலிபன்களுக்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. இதேபோல் ஜெர்மன் உள்ளிட்ட இதர நாடுகளும் ஆப்கானுக்கு அனைத்து நிதியுதவிகளும் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளன.
தூதரகங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும்
ஆப்கானிஸ்தானிஸ்தானில் இருந்து எந்த ஒரு நாட்டுக்கு தீவிரவாத ஆபத்து கிடையாது என தாலிபன்கள் அறிவித்துள்ளனர். காபூலில் உள்ள தூதரகங்கள், தொண்டு நிறுவனங்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் தாலிபன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
கோயில் நில ஆக்கிரமிப்பு மீட்பு – அமைச்சர் விளக்கம்
கோயில் நிலங்களில் கீற்றுக் கொட்டகையில் குடியிருப்பவர்கள் ஒருவர் கூட அப்புறப்படுத்தப்படவில்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுவரை 187 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக சேகர்பாபு தெரிவித்தார்.
7பேர் விடுதலை விவகாரம் -நீதிமன்றம் முடிவெடுக்க முடியாது
எழுவர் விடுதலை விவகாரத்தில் நீதிமன்றம் எத்தகைய முடிவையும் எடுக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முடிவுகள் எடுக்கப்படும் நிலையில், மனுதாரர் அவற்றை எதிர்த்து வழக்கு தொடரலாம் எனக்கூறி வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஆப்கானிஸ்தான் நிலை குறித்து அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட 21 நாடுகள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ஆப்கானில் உள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளின் சுதந்திரம், கல்வி, வேலை உரிமைகள் குறித்து கவலையாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் முழு அதிகாரத்தையும் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நிலையில், தற்போது அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தாயார் கிருஷ்ணவேணியின் இன்று மரணமடைந்த நிலையில், அவரது உடலுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்
உலகளவில் கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியை நெருங்கும் நிலையில், இன்று ஒரே நாளில் தொற்று பாதிப்புக்கு 1,017 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 50% ஒதுக்கீடு கோரும் வழக்கில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது
கே.பி. பார்க் குடியிருப்பு குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளித்துள்ள கட்டுமான நிறுவனம், கட்டடங்கள் தரமாக இருப்பதாக குடிசை மாற்று வாரிய செயற்பொறியாளர்கள் சான்று அளித்துள்ளதாக கூறியுள்ளது.
நாடு முழுவதும் 44 சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில், ஈரோடு மற்றும் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 2 அரசு பள்ளி ஆசிரியைகளுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன், மக்களின் புகாரை அடுத்து கட்டிடங்களை ஆய்வு செய்துள்ளோம் பல்வேறு இடங்களில் கழிவுநீர், குடிநீர் குழாய்கள் உடைந்துள்ளன இதனை சரி செய்து ஆய்வு அறிக்கையை சமர்ப்பிக்க ஐஐடிக்கு உத்தரவிட்டுள்ளோம் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
வன்கொடுமை தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரும் ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
2021ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர்கள் பட்டியல் வெளியீடு – தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் லலிதா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின், “சட்டப்பேரவையில் எனது முதல் உரையின்போது நீட் ஒழிப்பு போராளி தங்கை அனிதாவின் பெயரை அரியலூரில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு சூட்ட வேண்டும் என்றும் நீட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது முந்தைய அதிமுக அரசு பதிந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் அதிமுகவினர் மீது குற்றம் இல்லையெனில், விசாரணையை துணிச்சலோடு எதிர்கொள்ள வேண்டும்; சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்யக்கூடாது என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
50% மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெற வேண்டும். மாணவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை கட்டாயம். அனைத்து வகுப்பறைகளிலும் சானிடைசர், சோப் கலந்த நீர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நோய் அறிகுறிகள் உள்ள மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பள்ளிகளில் அனுமதி இல்லை. வைட்டமின் மாத்திரைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு பள்ளிகள் திறப்பதற்கான நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது
சிலிண்டர் விலை உயர்வால் ஒரு ரூபாய் கூட தமிழக அரசுக்கு கிடைப்பதில்லை. வரிவிதிப்பு அதிகாரமும் இல்லை, வருமானமும் இல்லை என, சிலிண்டர் விலை குறைக்கப்படுமா என பாமக எம்.எல்.ஏ. ஜிகே மணி கேள்விக்கு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.
அனைத்து சாதியினரும் பயன் பெறும் வகையில் தொகுப்பு இடஒதுக்கீடு முறை கொண்டுவர வேண்டும் எனவும், மதுவை ஒழித்து விட்டு வருவாயை பெருக்கும் வழியை அரசு ஏற்படுத்த வேண்டும் என சட்டப்பேரவையில் பாமக தலைவர் ஜிகே மணி கோரிக்கை வைத்துள்ளார்.
சமீபகாலமாக, மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கும் போக்கை பார்க்கிறோம். ரோஜாவை எந்த பெயரிட்டு அழைத்தாலும், அதன் வாசனையை மாற்ற முடியாது. அது போல் மத்திய அரசை எந்த பெயரிட்டு அழைத்தாலும், சட்டத்தில் அதன் அதிகாரத்தை மாற்ற முடியாது என வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
அரசு பள்ளிகள் என்பது வறுமையின் அடையாளம் அல்ல, பெருமையின் அடையாளமாக விரைவில் மாறும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க வேண்டுமென யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர். மீரா மிதுன், வன்முறையை தூண்டும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவினர் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சென்னை, புளியந்தோப்பு கே.பி.பார்க் குடிசைமாற்று வாரியத்தில் தரமற்ற முறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டிருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, சிறப்பு குழு அமைத்து குடியிருப்பு கட்டிடத்தின் தரத்தை சோதனை செய்ய திட்டமிட்டிருக்கிறது.
சோழிங்கநல்லூர் எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் உள்ள சட்டவிரோத கட்டடத்தை இடிக்க உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, சட்டத்தை உருவாக்குபவர்களே அதை கையில் எடுத்து செயல்பட முடியாது என்றும் அராஜக செயலுக்கான முகாந்திரம் உள்ளது என்றும் கண்டித்துள்ளனர்.
கன்னி என்கின்ற வார்த்தை இளம் வயது பெண்மையை குறிக்கும் வார்த்தை. அதனை, ‘அறிமுகப்பேச்சு’ என குறிப்பிட்டால் நாகரீகமாக இருக்கும் என்று சட்டமன்றத்தில் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தன்னுடைய உரையில் குறிப்பிட்டவர், வேளாண் நிதி நிலை அறிக்கைக்கு வாழ்த்துகளை தெரிவித்ததோடு தேங்காய் எண்ணெய் ரேசன் கடை மூலமாக விற்கலாம் என்ற அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு மாணவி அனிதா பெயரை சூட்ட வேண்டும் என்று சட்டப்பேரவையில் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கோரிக்கைவிடுத்துள்ளார்.
பாலியல் வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு டிஜிபிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை கோரிய வழக்கில், சட்டப்படி மட்டுமே விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக சட்ட முன்வடிவு கொண்டு வரப்படும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நீட் தேர்வு தாக்கம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழுவின் அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் நீதிமன்ற அனுமதியுடன் விசாரணை நடைபெற்று வருவதாகவும், உண்மை குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னையும் சிலரையும் சேர்க்க சதி நடப்பதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். நீதிமன்ற உத்தரவு இல்லாமல் மீண்டும் விசாரணை நடத்துவது சட்டப்படி தவறானது என்றும் பொய் வழக்கு போட்டு எங்களை முடக்க நினைப்பது ஒருபோதும் நடக்காது என்றும் கூறியுள்ளார்.
சட்டப்பேரவையை இன்றும், நாளையும் அதிமுக புறக்கணிப்பதாக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச வாய்ப்பு அளிக்கவில்லை எனவும் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதாகவும் ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
கொடநாடு விவகாரம் தொடர்பாக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் வழக்கை மீண்டும் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து சட்டபேரவைக்கு வெளியே இபிஎஸ்-ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவாக்சின் 2வது டோஸ் செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநரும், தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜனின் தாயார் உடல்நலக்குறைவால் காலமானார்.
என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் (1/2) pic.twitter.com/keKjJUp4Sw
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 18, 2021
தலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை என்றும் கனடா நாட்டின் சட்டத்தின்படி தலிபான்கள் பயங்கரவாத அமைப்பாகவே அங்கீகரிக்கப்படுவார்கள் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் 2 முறை சூரியன் உச்சிக்கு வரும் நிழலில்லா நாள் இந்தாண்டில் 2வது முறையாக இன்று நிகழ்கிறது. சென்னை, காஞ்சிபுரம், கடலூர், வேலூர் உள்ளிட்ட பல இடங்களில் நிழலில்லா நாளை காணலாம். சென்னை கோட்டூர்புரம் பிர்லா கோளரங்கத்தில் நிழலில்லா நாளை காட்சிப்படுத்தவும், விளக்கமளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தலிபான்கள், அவரது ஆதரவாளர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தலிபான்களின் ஃபேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.