பெட்ரோலிய பொருட்கள் மீதான வருவாய் அதிகரிப்பு
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் பெட்ரோலிய பொட்கள் மீது மத்திய அரசு விதித்து வரும் கலால் வரியில் இருந்து கிடைக்கும் வருவாய் 48 சதவீதம் அதிகரித்துள்ளது.
10 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்க ஏற்பாடு
தமிழகத்தில் செப்டம்பர் 12 ஆம் தேதி ஒரேநாளில் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தி, 20 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கேரள, தமிழக எல்லையோரம் உள்ள 9 மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர்களுக்கு கூடுதலாக சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி கட்சிகள் போராட்டம்
மத்திய பா.ஜ.க அரசின் செயல்களைக் கண்டித்து தி.மு.க தலைமையிலான அனைத்து கூட்டணிக் கட்சிகளின் சார்பிலும் மாநிலம் முழுவதும் 20-ம் தேதி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்ச்ஷிர் உச்சகட்ட மோதல்
ஆப்கானிஸ்தானில் பஞ்ச்ஷிர் மாகாணத்தில் நடைபெற்ற சண்டையில் சுமார் 700 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் 600 தாலிபான்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் போராளிகள் குழு தெரிவித்துள்ளது.
எல்லையில் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் கொரோனா தொற்று தீவிரமடைந்துவரும் நிலையில், நிபா வைரசும் பரவி வருவதால் தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இரண்டு டோஸ் தடுப்பு ஊசி செலுத்தியவர்கள் மற்றும் கொரோனா பரிசோதனை செய்த சான்றிதழ் வைத்து இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
கொரோனா தடுப்பூசி 1, 2வது தடுப்பூசிக்கான 84 நாள் இடைவெளி என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை நிராகரித்துள்ள கேரளா உயர்நீதி மன்றம் கோவிஷீல்டு தடுப்பூசிக்கான இடைவெளியை குறைத்து, 28 நாட்களுக்குப் பிறகு செலுத்தலாம்என தீர்ப்பளித்துள்ளது
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வந்த இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 368 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி 210 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
லண்டன் ஓவன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் 2-வது இன்னிங்சில் 368 ரன்கள் இலக்குடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணி சற்றுமுன்வரை 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவை என்ற நிலையில், கைவசம் 2 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது. இதனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் 2-வது இன்னிங்சில் 368 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணிசற்றுமுன்வரை 6 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய வீரர் பும்ரா 2விக்கெட்கள் வீழ்த்தியுள்ளார். இவர் ஜானி பேர்ஸ்டோவை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 100 விக்கெட் என்ற மைல் கல்லை எட்டினார்.
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்தார்.
பஞ்சாப் மற்றும் சண்டிகரின் ஆளுநர் பொறுப்பை பன்வாரிலால் புரோஹித், கூடுதலாக ஏற்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் 19 மாணவ, மாணவிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட கல்வித்துறை அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளான அனீஸ், சாஜி ஆகியோரிடம் நடைபெற்ற விசாரணை நிறைவு பெற்ற நிலையில், நீலகிரி மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுளளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், பெங்களூருவில் இதுவரை 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அம்மாநில அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கான் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்டக்குழு இன்று ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் காவல் நிலைய போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா எவ்வளவு? எங்கு வைக்கப்பட்டுள்ளது என உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலியில் 10% மற்றும் அகவிலைப்படி 10% உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் காந்தி சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக – அதிமுக உறுப்பினர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த கால ஆட்சி பற்றி அமைச்சர் காந்தி ஆதாரம் இல்லாமல் குற்றச்சாட்டுகளை வைப்பதாக அதிமுக உறுப்பினர் முனுசாமி கூறியுள்ளார்
பதிவுத்துறை தொடர்பாக திங்கட்கிழமை தோறும் பதிவு குறைதீர்ப்பு முகாம் நடத்தப்படும் என அமைச்சர் மூர்த்தி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
கோவில் நிலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டுவதை எதிர்த்த வழக்கில், வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலை சீரமைக்கவும், கோவில் பராமரிப்புக்கு தொகுப்பு நிதியை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக அரசு மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது
கடந்த காலங்களில் நடந்த பதிவு முறைகேடுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பதிவு துறை அமைச்சர் மூர்த்தி அறிவித்திருக்கிறார்.
வாக்குப்பதிவை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் எடுக்கும் முயற்சிகளுக்கு திமுக முழு ஒத்துழைப்பை தரும் என்று உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு திமுகவின் கிரிராஜன் பேட்டியளித்துள்ளார்.
செப். 8 மற்றும் 9-ம் தேதிகளில் காலை 10 மணி மற்றும் மாலை 5 மணி என இரு வேளைகளிலும் சட்டப்பேரவை நடைபெறும் என்றும் செப்டம்பர் 10,11,12 ஆகிய தேதிகளில் சட்டப்பேரவை விடுமுறை என்றும் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
கொடநாடு எஸ்டேட் மேற்பார்வை அலுவலர் ராமகிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது, தொடர்ந்து 3 நாட்களாக எஸ்டேட் மேல் ட்ரோன் பறந்ததாக போலீசில் புகார் எழுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசுத்தரப்பு சாட்சியான சுனிலின் நண்பர் அனிஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால், பல குழப்பங்கள் இருப்பதால் ஊரக உள்ளாட்சி தேர்தலை எப்படி நடத்துவார்கள் என்ற சந்தேகம் உள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
வடமேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும் அரபிக் கடலில் நிலவி வரும் காலநிலை காரணமாகவும் கேரளா, கர்நாடக கடலோர பகுதி, லட்சத்தீவு மற்றும் தென்மேற்கு, மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மீனவர்கள் 10ம் தேதி வரை மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாமல்லபுரம் நுழைவு வாயிலில் ரூ. 5.61 கோடி மதிப்பில் சுற்றுலா கிராமம் உருவாக்கப்படும் என்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற இருக்கின்ற நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் உறவினர் சாஜியிடம் காவல்துறை விசாரணை, நீலகிரி மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளார் அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது.
அரசின் அனைத்து விண்ணப்பங்கள், சான்றிதழ்கள், உரிமங்கள் மற்றும் ஆவணங்களில் தாயின் பெயரை குறிப்பிடும் வகையில் தனிப்பிரிவை ஏற்படுத்தக் கோரிய மனுவிற்கு பதில் அளிக்குமாறு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் உத்தரவுகளுக்கு ஏற்றவாறே விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் மற்றும் கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்கள் அளித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு வழிகாட்டுதல்கள் பிறப்பிக்க கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
சாமானியன்ம் அரசியலுக்கு வரலாம் என்று அடித்தளம் இட்டவர் பெரியார். எனவே இந்த முடிவை அதிமுகவும் மனப்பூர்வமாக வரவேற்கிறது என்று அதிமுக உறுப்பினர் வைத்தியலிங்கம் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 17ம் தேதி அன்று சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவித்ததை பாஜக வரவேற்றுள்ளது. கடவுள் நம்பிக்கை உள்ள பாஜக இதனை வரவேற்கிறது என்று திருநெல்வேலி எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதி ஆண்டுதோறும் 'சமூக நீதி' நாளாக கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் 38,948 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 38,948 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 219 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் ஒரே நாளில் 43,903 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முள்ளங்குறிச்சியில் ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளி மாணவிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை சுல்தான்பேட்டை அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கிருமிநீக்கம் செய்வதற்காக சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலயத்தில் நாளை நடைபெறும் தேர் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. தேரோட்ட நிகழ்ச்சியை பக்தர்கள் தொலைக்காட்சி, சமூக வலைதளங்களில் காண போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
கொரோனா கட்டுப்பாடால் மக்கள் நாளை பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்கு வாகனத்துடன் வரவும் போலீசார் தடை விதித்துள்ளனர்.
கோவை மேட்டுப்பாளையம் – உதகை மலை ரயில் சேவை நான்கு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது. காலை 7:10 மணிக்கு புறப்பட்ட நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரயிலில் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் ₨98.96-க்கும், டீசல் ₨93.26-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.