சமையல் எண்ணெய் மீதான சுங்கவரி குறைப்பு
பண்டிகை காலங்களை கருத்தில் கொண்டு பாமாயில், சோயாபீன்ஸ், சுரியகாந்தி எண்ணெய்க்கான சுங்க வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. சில்லரை விலையில் லிட்டருக்கு ரூ.4 அல்லது ரூ.5 குறையும்.
ஸ்புட்னிக் வி தடுப்பூசி- கூடுதல் தரவுகள் கேட்கும் WHO
ஸ்புட்னிக் - வி தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க மேலும் சில தரவுகளை சமர்பிக்குமாறு அதன் தயாரிப்பு நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கோரி உள்ளது. அனைத்து தரவுகளும் சமர்ப்பிக்கப்பட்ட பின்பே இதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு ரத்து
கொரோனா சூழல் காரணமாக செப்டம்பரில் நடக்கவிருந்த 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை
தமிழகத்தில் மின்வாரியத்தில் 1 லட்சத்து 46 ஆயிரம் பணியிடங்கள் உள்ளன. இதில் 56 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இருக்கும் பணியாளர்களை வைத்துதான் மின்சார வாரியம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் தேவைக்கேற்ப விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
- 23:57 (IST) 12 Sep 2021மெகா தடுப்பூசி முகாம்: தமிழ்நாட்டில் ஒரே நாளில் 28.36 லட்சம் தடுப்பூசி
தமிழ்நாட்டில் மெகா தடுப்பூசி முகாம் மூலம் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணி வரை ஒரே நாளில் 28.36 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
- 21:55 (IST) 12 Sep 2021இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை - முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
இன்று 25 இலட்சம் தடுப்பூசி செலுத்தப்பட்டு இருப்பது இந்தியச் சாதனை என்று முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டியுள்ளார். மாரத்தான் வேகத்தில் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கும் மருத்துவர்கள் செவிலியர்க்கும் எனது நன்றி என்று தெரிவித்துள்ளார்.
- 21:07 (IST) 12 Sep 2021முதல் முறை எம்எல்ஏ பூபேந்திர படேல் குஜராத்தின் அடுத்த முதல்வராகிறார்; திங்கள்கிழமை பதவியேற்பு
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ராஜினாமா செய்ததையடுத்து, குஜராத்தின் அடுத்த முதல்வர் யார் என்று கேள்விகள் எழுந்த நிலையில், மக்களால் தாதா என்று அழைக்கப்படும் முதல்முறைய எம்.எல்.ஏ-வான பூபேந்திர படேல் குஜராத் மாநிலத்தின் அடுத்த முதல்வராக பாஜகவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பூபேந்திர படேல் குஜராத் முதல்வராக திங்கள்கிழமை பதவியேற்கிறார்.
- 20:31 (IST) 12 Sep 2021தமிழகத்தில் மேலும் 1,608 பேருக்கு கொரோனா; 22 பேர் பலி
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,608 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
- 19:48 (IST) 12 Sep 2021மெகா தடுப்பூசி முகாம் - இதுவரை 23.6 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது
மெகா தடுப்பூசி முகாம் மூலம் இன்று ஒரே நாளில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருகு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மெகா தடுப்பூசி முகாமுக்கும் பெரும் ஆதரவு கிடைத்துள்ளதால் தொடர்ந்து நடத்த ஏற்பாடு செய்யப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
- 17:33 (IST) 12 Sep 2021தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினார்கள்
நாடு முழுவதும் இன்று 3,862 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு நிறைவு பெற்றது. தமிழகத்தில் 224 மையங்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 1.10 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதினர். இயற்பியல் தேர்வு சற்று கடினமாக இருந்தது என்று மாணவர்கள் கருத்து தெரிவித்தனர்.
கொரோனா வழிகாட்டு முறைகளை பின்பற்றி நீட் தேர்வு நடைபெற்றது.
- 15:24 (IST) 12 Sep 2021நாடு முழுவதும் இளநிலை நீட் நுழைவுத்தேர்வு தொடங்கியது
நாடு முழுவதும் இளங்கலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வு தொடங்கிது. 3862 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 16.14 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
- 15:20 (IST) 12 Sep 2021டாஸ்மாக் மதுபானங்களை கூடுதலாக விற்றால் நடவடிக்கை - அமைச்சர் செந்தில் பாலாஜி
டாஸ்மாக் மதுபானங்களை ஒரு ரூபாய் கூடுதலாக வைத்து விற்றாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு வாரத்திற்குள் மதுபானங்கள் விலைப்பட்டியல் வைக்க வேண்டும் என்றும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் கடைகள் செயல்படக்கூடாது என்றும், அமைச்சர் செந்தில பாலாஜி கூறியள்ளார்.
- 13:28 (IST) 12 Sep 2021தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை
தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், சென்னை நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- 13:26 (IST) 12 Sep 2021நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நாளை சட்டமன்றத்தில் நிறைவேற உள்ளது. இதனை இந்திய துணைக்கண்டத்தின் பிரச்சினையாக கருதி அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம் என்ற முதல்வர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
- 12:05 (IST) 12 Sep 2021தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்படும் - தலைமை செயலாளர்
தமிழகத்தில் அக்டோபர் மாத இறுதிக்குள் தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்படும் என தலைமை செயலாளர் இறையன்பு தெரிவித்துள்ளார். பொதுமக்களின் வருகையை பொறுத்து வாரந்தோறும் தடுப்பூசி முகாம்கள் நடத்துவது தொடர்பாக முடிவெடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
- 11:39 (IST) 12 Sep 2021நீட் தேர்வு - கமல் கருத்து
ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள் என மக்கள் நீதி மய்யத்தலைவர் கமல்ஹாசன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ஓர் அநீதியான தேர்வை இன்று 1.10 லட்சம் தமிழ்க் குழந்தைகள் எதிர்கொள்கிறார்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம் என மேடைகளில் முழங்கிய நம் அரசியலாளர்களைப் பற்றி இவர்களின் எண்ணம் என்னவாக இருக்கும்?!
— Kamal Haasan (@ikamalhaasan) September 12, 2021 - 10:59 (IST) 12 Sep 2021சென்னையில் பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி
சென்னை திருவல்லிக்கேணியில் பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பாரதியார் இல்லத்தில் நடந்து வரும் நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் அர்ஜூன்ராம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
- 10:56 (IST) 12 Sep 2021உயிரை துறப்பது சரியான முடிவல்ல: மா.சுப்பிரமணியன்
நீட் தேர்வு தொடர்பாக மாணவ, மாணவிகள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்வது சரியான முடிவாக இருக்காது என்றும் குறுகிய காலம் என்பதால் நீட் தேர்வுக்கு விலக்கு பெற முடியவில்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணயின் கூறியுள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழக அரசு செய்து வருவதாகவும் கூறினார்.
- 10:25 (IST) 12 Sep 2021நீட் தேர்வு எழுதவிருந்த மாணவர் தற்கொலை
மேட்டூர் அருகே கூழையூரில் நீட் நுழைவுத் தேர்வு எழுதவிருந்த மாணவர் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 2 முறை தேர்ச்சி பெற முடியாத நிலையில் 3வது முறையாக நீட் எழுதவிருந்தார்.
- 09:45 (IST) 12 Sep 2021நீட் - நாளை தீர்மானம் நிறைவேற்றப்படும்
நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- 09:44 (IST) 12 Sep 20211-8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு எப்போது?
தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளை திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை வரும் 15ஆம் தேதி அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் எனவும் அதன்பிறகு பள்ளிகள் திறப்பு பற்றி முதல்வர் முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
- 09:40 (IST) 12 Sep 2021இந்தியாவில் ஒரே நாளில் 32,191 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32,191 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 338 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 34,848 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
- 07:57 (IST) 12 Sep 2021தமிழகத்தில் மெகா தடுப்பூசி முகாம் தொடக்கம்
தமிழகம் முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கியது. இரவு 7 மணி வரை 40 ஆயிரம் முகாம்களில் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15 மண்டலங்களில் 1,600 சிறப்பு முகாம் மூலம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.