பள்ளிகள் திறந்தவுடன் மதிய உணவு- உயர்நீதிமன்றம்
பள்ளிகள் திறந்தவுடன் உடனடியாக மதிய உணவு திட்டத்தை துவங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் டிஜிபிக்களாக அந்தஸ்து உயர்வு
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், முன்னாள் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட 5 மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் டி.ஜி.பி.க்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ படிப்புகளில் 10% இடஒதுக்கீடு- உயர்நீதிமன்ற உத்தரவு தள்ளுபடி
மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழான இடங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்ற அனுமதியை மத்திய அரசு பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குவாட் அமைப்பு உலக நன்மைக்கான சக்தியாக செயல்படும்
இந்தோ பசிபிக் பிராந்தியம் மட்டுமின்றி உலக அளவில் அமைதி மற்றும் வளர்ச்சியை குவாட் அமைப்பு கொண்டு வரும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். குவாட் நாடுகளின் உச்சி மாநாட்டில் பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள், கொரோனாவை எதிர்கொள்வது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
ஐ.நா சபையின் 76-வது அமர்வில் உரையாற்றி வரும் பிரதமர் மோடி தீவிரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும், “எந்தவொரு நாடும் தீவிரவாதத்தை ஆயுதமாக பயன்படுத்த கூடாது ” என்றும் கூறியுள்ள அவர், ஆப்கான் மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவில் UPI மூலம் மாதந்தோறும் ரூ.3.50 லட்சம் கோடிக்கு பணப்பரிவர்த்தனை” செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
உலகிலுள்ள தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்; வாருங்கள், இந்தியா வந்து தடுப்பூசி உற்பத்தி செய்யுங்கள்” என ஐ.நா. சபையில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார்.
மேலும் “மூக்கு வழியாக செலுத்தப்படும் கொரோனா தடுப்பூசி மீதான பரிசோதனையும், இந்தியாவில் நடைபெற்று வருகிறது” எனவும் கூறியுள்ளார்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,724 பேருக்கு கொரோனா பாதிப்பு; 1,635 பேர் டிஸ்சார்ஜ் மற்றும் 14 பேர் உயிரிழப்பு 1.56 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; தற்போது 17,263 பேர் சிகிச்சையில் உள்ளனர்
சிட்லப்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள கட்டுமானம், ஆக்கிரமிப்பு விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை தொண்டாமுத்தூரில் நிலப்பிரச்சனை தொடர்பான புகாரில், பிரபல ஃபார்மூலா கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தனது நிலத்திற்குச் செல்லும் பாதையை நரேன் கார்த்திகேயன் மறித்து தடுப்பு ஏற்படுத்தியதாக, பிரித்வி ராஜ்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில், இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டள்ளது.
அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார். பின்னர் நியூயார்க் சென்றடைந்த மோடி, இன்று மாலை 6.30 மணிக்கு ஐ.நா. சபையின் 76 வது அமர்வில் உரையாற்றுகிறார்.
பின்னர் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு தாயகம் திரும்புகிறார்
கேரளாவில் வரும் நவம்பர் 1-ந் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில, பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதன்படி, பள்ளிகளுக்கு முன்பு அமைந்துள்ள கடைகளில் மதிய உணவு சாப்பிட அனுமதி இல்லை எனவும், ஒரு பெஞ்சில் இரண்டு பேர் மட்டுமே அமர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் நோய் அறிகுறி இருந்தால், பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட மாட்டாது எனவும், அதற்குரிய தொகை வழங்கப்படும் எனவும் கேரள கல்வித்துறை தெரிவித்துள்ளது
திருவள்ளூர் தாமரைபாக்கத்தில் செய்தியளர்களை சந்தித்த பாடகர் எஸ்பிபியின் மகன் சரண், எஸ்பிபிக்கு மணிமண்டபம் கட்ட அரசின் உதவியை நாட இருக்கிறோம் என்றும் யார் வேண்டுமானாலும் இதற்கு உதவலாம் என்றும் இந்த மணி மண்டபம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி முதல் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ 500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அறவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் டாஸ்மாக் மேற்பார்வையாளர்களின் சம்பளம் ரூ12750 ல் இருந்து 13250 ஆக அதிகரிக்க உள்ளது.
தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்ககடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளதாகவும், அடுத்த 6 மணி நேரத்தில் வலுப்பெற்று புயல் சின்னமாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெறுவதால், அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு ஓய்வு தரும் வகையில், திங்கட்கிழமை தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறாது என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்குகள் மீதான விசாரணையை துரிதப்படுத்த காவல் துறையினருக்கு டிஜிபி சைலோந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில், 'ஆப்ரேஷன் டிஸ்ஆர்ம்' சோதனையில் 16,370 நபர்களை விசாரித்துள்ளோம் என தகவல் தெரிவித்துள்ளார்.
மறைந்த பாடகரும் , இசையமைப்பாளருமான எஸ் பி பாலசுப்ரமணியம் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று கடைபிடிக்கப்படுகிறது. அவருக்கு அஞ்சலி செலுத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவரது மகன் சரண், விரைவில் மணிமண்டபம் கட்டப்படும் என தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக, பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு ஐந்தாவது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது
ரூ. 300 கோடி வரி ஏய்ப்பு செய்திருப்பதாக சென்னையில் இரண்டு நிதி நிறுவனங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு நிதி நிறுவனங்களுக்கு சொந்தமான 35 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் வடகிழக்கு பருவமழை காலத்தின் போது அதிக மழை பொழிவு இருக்கும். மழைகாலங்களில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகாத வகையில் இருப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று முன்னெச்சரிக்கை பணிகளை நேரில் ஆய்வு செய்து வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலி. கோட்டூர்புரத்தில் மழைநீர் வடிகால் பணிகளை அவர் பார்வையிட்டார்.
உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீட்டை நீட் அனைத்திந்திய மருத்துவ இட ஒதுக்கீட்டில் வழங்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தது. அந்த தீர்ப்பின் ஒரு பகுதியை ஒரு பகுதியை உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒதுக்கியது.
பாஜக, காங். கட்சிகளுக்கு அடுத்தபடியாக மாநிலங்களவையில் 3வது பலம் மிக்க கட்சியாக உருமாறிய தி.மு.க. கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வாகியுள்ள நிலையில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு. தற்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக சம பலத்தில் உள்ளன.
கடந்த இரண்டு நாட்களில் தமிழகம் முழுவதும் 2512 ரௌடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொலைகள் உள்ள குற்றச்செயல்களை தடுக்க டி.ஜி.பி. சைலேந்திர பாவுவின் த்தரவின் பேரில் நடவடிக்கை
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 98.96க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ. 93.46க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
26/09/2021 அன்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. கொரோனா ஏற்றத்தை தமிழக அரசு கட்டுப்படுத்தி வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.
கோவளம் முட்டுக்காட்டில் இருந்து மாமல்லபுரம் வரை சைக்கிளில் பயிற்சி மேற்கொண்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.