Advertisment

Tamil Breaking News Highlights: ஜி.எஸ்.டி  மிரட்டி பணம் பறிப்பதற்கான ஆயுதம்... அதானி, அம்பானிக்கு ஆதாயம் அளிக்கும்: ராகுல்

Tamil News Updates: அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Rahul Gandhi latest

பெட்ரோல் டீசல் விலை நிலவரம்

Advertisment

சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வரும் நிலையில், இன்று ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ100.75-க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ92.34-க்கும், கேஸ் ரு கிலோகிராம் ரூ88.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கான நிதியை கேட்டு பெறுவதற்காக முதல்வர் ஸ்டாலின் நாளை (செப்டம்பர் 26) தலைநகர் டெல்லிக்கு செல்ல உள்ளார். அந்த பயணத்தில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வலியுறுத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

காஷ்மீர் 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு

10 ஆண்டுகளுக்கு பிறகு, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 26 தொகுதிகளில் நடைபெறும் இந்த வாக்குப்பதிவில், 25 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

  • Sep 25, 2024 22:12 IST
    ஜி.எஸ்.டி  மிரட்டி பணம் பறிப்பதற்கான ஆயுதம்... அதானி, அம்பானிக்கு ஆதாயம் அளிக்கும் - ராகுல் காந்தி

    ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்டெடுக்க காங்கிரஸ்  ‘தேவைப்பட்டால் தெருக்களில் கூட இறங்கிப் போராடும்’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்தை "வெளியாட்களுக்கு பயனளிப்பதற்கு" மற்றும் "உள்ளூர் மக்களின் வளத்தைக் கெடுக்க" மோடி அரசாங்கம் பறித்துள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை குற்றம் சாட்டினார். “உங்கள் மாநில அந்தஸ்தைப் பறிப்பதற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது… ஏனென்றால், ஜம்மு காஷ்மீர் வெளியாட்களால் நிர்வகிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள், உள்ளூர் மக்கள் அல்ல. இங்கு அனைத்து வேலைகளும் துணைநிலை ஆளுநர் மூலம் செய்யப்படுகிறது மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களின் வளம் பாழாகிறது” என்று ஜம்முவில் நடந்த தேர்தல் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஜி.எஸ்.டி வரி தொடர்பாக என்.டி.ஏ அரசாங்கத்தை விமர்சித்தார். ஜி.எஸ்.டி சிறு மற்றும் நடுத்தர வணிகத்தை மூடுவதற்கும், அதானி மற்றும் அம்பானி போன்ற கோடீஸ்வரர்களுக்கு ஆதாயம் அளிக்க வழி வகுக்கும், பணம் பறிப்பிற்கான ஆயுதம்” என்று கூறினார்.



  • Sep 25, 2024 21:01 IST
    செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு

    முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கிறது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையிலுள்ள செந்தில் பாலாஜி ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.



  • Sep 25, 2024 20:29 IST
    வரலாற்றில் சந்தர்ப்பம் ஒன்று கிடைத்துள்ளது - இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக

    இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக: “வரலாற்றில் சந்தர்ப்பமொன்று கிடைத்துள்ளது; அனைவரும் இணைந்து செழிப்பான நாட்டை கட்டியெழுப்புவோம். இலங்கையில் அரசியல் பொருளாதார மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும். இனம், மதம், வர்க்கம், சாதி என நாடு பிரிந்திருந்த காலத்தை முழுமையாக முடிவுக்கு கொண்டுவருவோம். பன்முகத்தன்மையை மதிக்கும் தேசமாக இலங்கையைக் கட்டி எழுப்பும் பணியைத் தொடங்குவோம்” என்று கூறியுள்ளார்.



  • Sep 25, 2024 20:25 IST
    ஹேமா கமிட்டி: மலையாள நடிகர் சித்திக் முன்ஜாமின் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு

    ஹேமா கமிட்டி விவகாரத்தில் மலையாள நடிகர் சித்திக் முன் ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.



  • Sep 25, 2024 19:58 IST
    உளுந்தூர்பேட்டை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.2 லட்சம் நிதி - ஸ்டாலின் அறிவிப்பு

    உளுந்தூர் பேட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதி உதவி அறிவித்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். மேலும், விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.



  • Sep 25, 2024 19:28 IST
    மதுரையில் செப்டம்பரிலும் சதம் அடித்த வெயில்!

    தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக மதுரயில் 107 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சி, ஈரோடு, தஞ்சாவூர், தூத்துக்குடி, கரூர், பாளையங்கோட்டை பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீ வெயில் சுட்டெரித்தது.



  • Sep 25, 2024 18:38 IST
    கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு 

    'பொதுவெளியில் இப்படி அழைத்து வராதீர்கள் என கூறினேன், அதையும் மீறி அழைத்து வருகிறீர்கள்' என்று பெண் காவலரை மிரட்டும் வகையில் சாராய வியாபாரி பேசிய சம்பவத்தால் கள்ளக்குறிச்சி நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. 

     



  • Sep 25, 2024 18:36 IST
    முன்கூட்டியே புறப்பட்டு சென்ற விமானம் - தவிக்கும் 25 பயணிகள் 

    திருச்சி விமான நிலையத்தில் உரிய முன்னறிவிப்பின்றி, முன்கூட்டியே விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு பறந்த நிலையில், 25 பயணிகள் செய்வதறியாது தவித்து வருகிறார்கள். விமானம் மாலை 4.20 மணிக்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்டு சென்றுள்ளது. 



  • Sep 25, 2024 18:34 IST
    மசாஜ் சென்டர்களில் போலீசார் சோதனை - மாடியில் இருந்து குதித்த இளம்பெண்

    சென்னை தி.நகரில்  சட்டவிரோதமாக செயல்பட்ட மசாஜ் சென்டர்களில் போலீசார் அதிரடி சோதனை நடந்திய நிலையில், போலீசாருக்கு பயந்து 2 வது மாடியில் இருந்து இளம்பெண் ஒருவர் குதித்துள்ளார். படுகாயமடைந்த இளம்பெண், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார். 



  • Sep 25, 2024 18:08 IST
    5 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் 

    திருமயம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், தங்களுடைய உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என்றும், தங்கள் இறப்பு குறித்து உறவினர்களுக்கும் தகவல் அளிக்க வேண்டாம் என்று அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 



  • Sep 25, 2024 18:07 IST
    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் - விசாரணை

    கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் தற்கொலை செய்து கொண்ட கொடநாடு எஸ்டேட் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷின் செல்போன் குறித்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 



  • Sep 25, 2024 17:59 IST
    குண்டர் சட்டம் ரத்து: சவுக்கு சங்கரை ஜாமீனில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்  உத்தரவு

    அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரை இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் மீது வேறு வழக்குகள் எதுவும் நிலுவையில் இல்லை என்றால், அவரை ஜாமீனில் விடுவிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Sep 25, 2024 17:53 IST
    ராகுல் காந்தி கேள்வி 

    “இந்திய அரசின் கொள்கைகளை தீர்மானிப்பது யார்?, பாஜக எம்.பி.,யா? அல்லது பிரதமர் நரேந்திர மோடியா?. ஹரியானா, பஞ்சாப் மாநில விவசாயிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பிறகும், பாஜகவினர் அதிருப்தி அடையவில்லை. நமது விவசாயிகளுக்கு எதிரான பாஜகவின் எந்த சதியையும் வெற்றி பெற இந்தியா  கூட்டணி அனுமதிக்காது. விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டால், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் மன்னிப்பு கேட்க நேரிடும்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். 



  • Sep 25, 2024 17:31 IST
     எஸ்.பி.பாலசுப்ரமணியம் 4ம் ஆண்டு நினைவு தினம் 

    மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் 4ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தாமரைப்பாக்கத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் திரளான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். நினைவிட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் முதலில் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று பின்னர் அஞ்சலி செலுத்த அனுமதி அளிக்கப்பட்டது.



  • Sep 25, 2024 17:30 IST
    காஞ்சிபுரத்தில் கனமழை 

    காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, பெரியார் நகர், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக நகரின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்



  • Sep 25, 2024 17:16 IST
    சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - 'விரைந்து தீர்வு காண்க': ஸ்டாலினுக்கு மன்சுக் மாண்டவியா வலியுறுத்தல் 

    சாம்சங் தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தத்திற்கு தீர்வு காணுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    சென்னை அருகே உள்ள தென் கொரியாவின் சாம்சங் குழுமத்தின் ஆலையில் நடைபெற்று வரும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் மூன்றாவது வாரத்தில் நுழைந்துள்ளது. 1,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் செயல்பாடுகளை சீர்குலைத்து ஆலையில் அதிக ஊதியம் மற்றும் தொழிற்சங்க அங்கீகாரம் கோரி உள்ளனர்.

    "விரைவான மற்றும் இணக்கமான" தீர்மானத்திற்கு மாநில அரசு தலையிடுமாறு மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 



  • Sep 25, 2024 16:25 IST
    ஐ.பி.எல் தொடரில் வீரர்களை தக்கவைப்பதற்கான விதிகள் இன்று வெளியாக வாய்ப்பு!

    ஐபிஎல் தொடரில் வீரர்களை தக்கவைப்பதற்கான விதிகள் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது



  • Sep 25, 2024 16:01 IST
    பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை கூடாது; ஐகோர்ட் உத்தரவு

    பள்ளி வளாகங்கள் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது



  • Sep 25, 2024 15:44 IST
    பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வழக்கு தள்ளுபடி

    குற்றவியல் நடவடிக்கை தொடர்பான அரசு உத்தரவை எதிர்த்து பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தாக்கல் செய்த மனுவை, வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Sep 25, 2024 15:23 IST
    பாலியல் புகார்; நடிகர் இடைவேளை பாபு கைது

    கேரளாவில் பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் இடைவேளை பாபு சிறப்பு விசாரணைக் குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்



  • Sep 25, 2024 15:04 IST
    ஓ.டி.டி தளத்திற்கு தணிக்கை கோரிய வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் சினிமா, வெப் சீரியல்கள், தொடர்கள் போன்றவற்றை தணிக்கை செய்து வெளியிட உத்தரவிட கோரிய வழக்கில், மனு தொடர்பாக மத்திய உள்துறைச் செயலர், மத்திய தொலைதொடர்பு துறை செயலர், மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது



  • Sep 25, 2024 14:43 IST
    கலப்பட நெய் சர்ச்சை; ஏ.ஆர் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் போலீசில் புகார்

    திருப்பதி கோயிலுக்கு கலப்பட நெய் விநியோகித்த ஏ.ஆர்.பால் பொருட்கள் நிறுவனம் மீது தேவஸ்தான கொள்முதல் பிரிவு மேலாளர் போலீசில் புகார் அளித்துள்ளார்



  • Sep 25, 2024 14:28 IST
    பச்சையப்பன் கல்லூரியில், மாணவர் அமைப்பினர் - ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு

    சென்னை பச்சையப்பன் கல்லூரியில், மாணவர் அமைப்பினர் - ஆசிரியர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கடந்த 4ஆம் தேதி போராட்டம் நடத்திய மாணவர்கள் சிலரை கல்லூரிக்குள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர்களை அனுமதிக்காதது ஏன் என கேட்க சென்ற இந்திய மாணவர் சங்கத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் மாணவ அமைப்பினருக்கும், பேராசிரியர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கல்லூரி முதல்வர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து கீழ்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்



  • Sep 25, 2024 14:17 IST
    ரீல்ஸ் மோகத்தால் எல்லை மீறும் நெட்டிசன்கள்

    ஆபத்தை உணராமல் சிறுமிகளை ஜீப் ஓட்ட வைத்து ரீல்ஸ் பதிவிட்ட திருப்பூர் பள்ளபாளையத்தை சேர்ந்த காளிமுத்துவுக்கு கண்டனங்கள் வலுக்குகின்றன. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்



  • Sep 25, 2024 14:14 IST
    எஸ்.பி.பி நினைவிடத்தில் பொதுமக்களுக்கு அனுமதி மறுப்பு

    மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி.,யின் நான்காம் ஆண்டு நினைவு நாளையொட்டி, திருவள்ளூரில் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நடப்பதால் ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ரசிகர்கள் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த எஸ்.பி.பி போஸ்டருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நீண்ட தொலைவில் இருந்து வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதாக ரசிகர்கள் வேதனை தெரிவித்தனர்



  • Sep 25, 2024 13:36 IST
    குற்றவியல் சட்ட வழக்கு - மத்திய அரசுக்கு உத்தரவு

    3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு, மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

    குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்படுவதை நிறுத்தி வைக்க கோரிக்கை - ஏற்கனவே நிலுவையில் உள்ள வழக்குகளோடு சேர்த்து பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது. 



  • Sep 25, 2024 12:48 IST
    காலாண்டு விடுமுறை அக்.6 வரை நீட்டிப்பு

    பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

    ஏற்கனவே 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 6ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது 



  • Sep 25, 2024 12:35 IST
    மன்னிப்பு கோரிய கங்கனா

    3 வேளாண் சட்டங்களை திரும்ப கொண்டு வர வேண்டும் என்ற தனது பேச்சுக்கு பாஜக எம்.பி கங்கனா ரனாவத் பகிரங்க மன்னிப்பு கோரினார். அவரின் பேச்சுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது மட்டுமின்றி சொந்த கட்சியினரே கண்டித்த நிலையில் தான் பேசியதை திரும்ப பெறுவதாக அறிவித்தார். 



  • Sep 25, 2024 12:35 IST
    ஹர்ஷா மீது பாலியல் வழக்கு பதிவு

    ஹர்ஷா மீது பாலியல் வழக்கு பதிவு. ஆந்திரா தெலுங்கானாவின் பிரபல யூடியூபர் ஹர்ஷா சாய் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

     திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை, ரூ.2 கோடி பணம் பறித்து ஏமாற்றியதாக நடிகை ஒருவர் போலீசில் புகார் அளித்ததையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



  • Sep 25, 2024 12:00 IST
    சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம்

    சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம்

    உரிய நேரத்தில் பணிக்கு வராதது, அலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களால் மாதவி மாற்றம்.  டபேதார் மாதவியின் இடமாற்றத்துக்கும், லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமில்லை என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார். 



  • Sep 25, 2024 11:59 IST
    திமுக கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை- திருமா

    திமுக, விசிக இடையே எந்த சலசலப்பும் இல்லை, விரிசலும் இல்லை. திமுக, விசிக இடையே எந்த சிக்கலும் எழாது, சிக்கல் எழுவதற்கும் வாய்ப்பு இல்லை என திருமாவளவன் கூறினார். 



  • Sep 25, 2024 11:59 IST
    சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் பணியிட மாற்றம்

    உரிய நேரத்தில் பணிக்கு வராததுஅலுவலக உத்தரவை பின்பற்றாதது ஆகிய காரணங்களால் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதார் மாதவி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், இடமாற்றத்துக்கும்லிப்ஸ்டிக் விவகாரத்துக்கும் சம்பந்தமில்லை என மேயர் பிரியா விளக்கம் அளித்துள்ளார்.



  • Sep 25, 2024 11:55 IST
    தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கு: இ.பி.எஸ் பதில் மனு தாக்கல்

    திமுக எம்.பி. தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிசென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல்அவதூறு வழக்கின் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது வாதங்கள் நிறைவடைந்து வரும் அக்டோபர் ம் தேதிக்கு உத்தரவு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என தயாநிதி மாறன் எம்.பி. தரப்பில் வாதம்விசாரணை அக்டோபர் ம் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.



  • Sep 25, 2024 10:58 IST
    த.வெ.க மாநாட்டிற்கு பாதுகாப்பு அளிப்பதில் புதிய சிக்கல்

    தவெக மாநாட்டிற்கு அனுமதி கிடைக்குமாஅக்டோபர் ஆம் தேதி தவெக மாநாட்டை நடத்த அனுமதி மற்றும் பாதுகாப்பு கோரி மனு அளித்து நாட்கள் ஆகியும்இதுவரை எந்த பதிலும் தெரிவிக்காத விழுப்புரம் மாவட்ட காவல்துறைதேவர் ஜெயந்தி விழாவிற்காக ராமநாதபுரத்திற்கு நாட்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும் என்பதால்விஜய் மாநாட்டிற்கு பாதுகாப்பு பணி மேற்கொள்வதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது.



  • Sep 25, 2024 10:56 IST
    காரில் 5 பேர் மர்ம மரணம்: புதுக்கோட்டை போலீசார் விசாரணை

    புதுக்கோட்டை மாவட்டம் நமனசமுத்திரம் அருகே சாலையோரம் நின்றிருந்த காரில் 5 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். கேஸ் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக உயிரிழப்பா? என போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில்,  உயிரிழந்த 5 பேரின் தகவல்கள் குறித்து நமனசமுத்திரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்



  • Sep 25, 2024 10:46 IST
    பிக்பாஸ் செட்டில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் காயம்

    சென்னை பூந்தமல்லி அருகே பிக்பாஸ் செட் அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில், ஒருவர் காயமடைந்தார்.காயம் அடைந்த தொழிலாளி சாயின்கான் உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர்.தற்போது அவர்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Sep 25, 2024 10:41 IST
    பொய்யான புகார் கொடுத்த மாணவி: உளவியல் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

     காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக நர்சிங் மாணவி அளித்த பொய்யான புகார் குறித்து நடந்த விசாரணையில், அம்மாணவி குடும்ப பிரச்னையால் மன அழுத்த பாதிப்பில்  இருப்பது தெரியவர, உரிய உளவியல் சிகிச்சை வழங்க காவல்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



  • Sep 25, 2024 10:39 IST
    மீன்களை ஏற்றிச்சென்ற, லாரி கவிழ்ந்து விபத்து: சாலையில் துள்ளிய மீன்கள்

    தெலுங்கானாவின் கம்மம் பகுதியில், இந்தியாவில் தடை செய்யப்பட்டள்ள ஆப்பிரிக்க வகை கெளுத்தி வகை மீன்களை ஏற்றிச்சென்ற, லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக மீன்கள் சாலையில் சிதறியதால் பொதுமக்கள் போட்டி போட்டுக்கொண்டு மீன்களை தூக்கிச்சென்றனர். 



  • Sep 25, 2024 10:36 IST
    பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை

    பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத்தேர்வு விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று திருச்சியில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.



  • Sep 25, 2024 10:35 IST
    பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை

    பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகையை வழங்கினார்



  • Sep 25, 2024 09:55 IST
    பள்ளி மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை

    திருவண்ணாமலை : செங்கம் அருகே, ஆடுகளை மேய்க்க சென்ற பள்ளி மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், 3 பேரை போக்சோவில் கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Sep 25, 2024 09:53 IST
    மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு: சென்னையில் மாணவியின் தாய்மாமா கைது

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், அச்சிறுமியின் தாய்மாமா செந்தில் முருகனை சிறப்பு புலனாய்வு போலீசார் சென்னையில் இன்று கைது செய்தனர் விசாரணைக்கு ஆஜராக பலமுறை சம்மன் அனுப்பியும், ஆஜராகாததால் கைது செய்து கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வருகின்றனர்.



  • Sep 25, 2024 09:12 IST
    கடந்த 10 நாட்களில் 36 லட்சம் லட்டுக்கள்: திருப்பதியில் லட்டு விற்பனை தீவிரம்

    திருப்பதி மலையில் லட்டு தொடர்பான சர்ச்சை இருந்தாலும், எதற்கும் அசராமல் லட்டு விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 10 நாட்களில் 36 லட்சம் லட்டுக்கள் திருப்பதி கோவிலில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.



  • Sep 25, 2024 08:43 IST
    ஒரே மாதத்தில் ரூ.5.15 கோடி உண்டியல் காணிக்கை

    திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல்களில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஐந்து கோடியே லட்ச ரூபாய் காணிக்கைகிலோ தங்கம்கிலோ வெள்ளியையும் காணிக்கையாக பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.



  • Sep 25, 2024 08:41 IST
    உரிய ஆவணம் இன்றி திருப்பூர் வந்த வங்கதேசத்தினர் 6 பேர் கைது

    உரிய ஆவணங்கள் இல்லாமல் திருப்பூர் வந்து வேலை தேடி பேருந்து நிலையத்தில் அலைந்துகொண்டிருந்த வங்கதேசத்தை சேர்ந்த, 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வங்கதேச அடையாள அட்டை மட்டுமே அவர்களிடம் உள்ளது தெரியவந்துள்ளது.



  • Sep 25, 2024 08:38 IST
    தெலுங்கான திருப்பதி லட்டில் கலப்பட சந்தேகம்: ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நெய்

    தெலுங்கானாவின் திருப்பதி என்று அழைக்கப்படும் யதாத்ரி கோவில் லட்டு பிரசாதத்திலும் கலப்படம் இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததால், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யை பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளது கோவில் நிர்வாகம்.



  • Sep 25, 2024 08:36 IST
    எமிரெட்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு: புகை கிளம்பியதால் பரபரப்பு

    சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துபாய் செல்லும் எமிரெட்ஸ் விமானத்தில் எரிபொருள் நிரப்புவதில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக விமானத்தில் இருந்து புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பாய்ச்சி புகையை கட்டுப்படுத்தினர். அதன்பிறகு விமானம் முழுவதுமாக ஆய்வு செய்யப்பட்டு இரண்டு மணி நேரம் தாமதாக இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு சென்றுள்ளது. 



  • Sep 25, 2024 08:33 IST
    பைப் லைன்  திடீரென விழுந்ததில் 6 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ சேதம்

    சென்னை பெரம்பூரில் உள்ள பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள S2 Mall PVR திரையரங்கின் வாகன நிறுத்துமிடத்தில் பைப் லைன்  திடீரென விழுந்ததில் உள்ளே நிறுத்தப்பட்டிருந்த 6 கார்கள் மற்றும் ஒரு ஆட்டோ சேதம். படம் பார்க்க வந்தவர்களின் வாகனங்கள் சேதமாகிய நிலையில், அவர்கள் அளித்த புகாரின் பேரில் செம்பியம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.. முறையான பராமரிப்பு இல்லாமல் பாங்க்கிங் வசதி செயல்பட்டு வருவதால், அதனை உடனடியாக மூட திரையரங்கு நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்



  • Sep 25, 2024 08:32 IST
    மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரிப்பு

    மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் மூலம்அணையின் நீர் மட்டம் அடியாக உள்ள நிலையில்நீர் இருப்பு டி.எம்.சி.யாக உள்ளது.டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு இன்று காலை விநாடிக்கு கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது



  • Sep 25, 2024 08:28 IST
    தமிழ்நாட்டில் புதிய ஆலை தொடங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்

    இந்தியாவில் முதல்முறையாக தமிழ்நாட்டில், ஆப்பிள் மற்றும் கூகுள் பிக்ஸல் மொபைல்களுக்கான டிஸ்ப்ளே அசம்பிளிக்கான ஆலையை ரூ8300 கோடி செலவில் ஒரக்கடத்தில் அமைக்க உள்ளது ஃபாக்ஸ்கான் நிறுவனம். இதற்காக ஒரக்கடத்தில் ஏற்கனவே உள்ள ஆலைக்கு அருகிலேயே 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய ஆலைக்கான நிலத்தை தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.



Tamilnadu Live News Udpate
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment