Chennai News Live Updates: அரசு கொடுத்த வேலை, வீட்டு மனை பட்டாவில் திருப்தி இல்லை - அஜித்தின் சகோதரர் நவீன் பேட்டி

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Naveen press meet

Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. tamil

  • Jul 08, 2025 14:45 IST

    அரசு கொடுத்த வேலை, வீட்டு மனை பட்டாவில் திருப்தி இல்லை - அஜித்தின் சகோதரர் நவீன்

    அரசு கொடுத்த வேலை மற்றும் வீட்டு மனை பட்டாவில் திருப்தி இல்லை என்று போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித் குமாரின் சகோதரர் நவீன் தெரிவித்துள்ளார். குறிப்பாக, தான் இருக்கும் இடத்தில் இருந்து 80 கி.மீ தொலைவில் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், காட்டுப் பகுதிக்குள் தண்ணீர் இல்லாத இடத்தில் பட்டா கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார்.



  • Jul 08, 2025 14:14 IST

    ஜூலை 18ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: அமைச்சர் துரைமுருகன்

    திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 18ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். ஜூலை 21ல் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும்.



  • Advertisment
  • Jul 08, 2025 13:58 IST

    தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம்

    தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னையில் 2 நாட்களுக்கு வெயில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் சுட்டெரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



  • Jul 08, 2025 13:58 IST

    அரக்கோணம் – சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு

    அரக்கோணம் – சென்னை வழித்தடத்தில் ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையம் அருகே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரக்கோணம் ரயில் நிலையத்தில் சப்தகிரி விரைவு ரயில், இண்டர்சிட்டி விரைவு ரயில் நிறுத்தப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Jul 08, 2025 13:57 IST

    அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து பாமக செயற்குழு தீர்மானம்

    அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து பாமக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திண்டிவனம் அருகே ஒமந்தூரார் திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் அன்புமணிக்கு கண்டனம் தெரிவித்து பாமக மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைவர் பதவியை மீண்டும் அபகரிக்கும் எண்ணத்தில் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அன்புமணி செயல்படுவதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 08, 2025 13:29 IST

    டிஜிபி அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

    சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கையைச் சேர்ந்த தவசிலிங்கம் (42) என்பவரை மெரினா போலீசார் கைது செய்தனர்.



  • Jul 08, 2025 12:44 IST

    பைக் மீது லாரி மோதி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

    புதுச்சேரியில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் தந்தை கண் முன்னே இரு மகன்கள் உயிரிழந்தனர். பொறையூர் ஊசுட்டேரி அருகே வந்தபோது இருசக்கர வாகனத்தின் பின்புறம் டிப்பர் லாரி மோதியது; விபத்தில் தந்தை நாதன் சபாபதி கண்முன்னே ரூபேஷ் மற்றும் ஜீவா ஆகியோர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.



  • Jul 08, 2025 11:19 IST

    சென்னையில் நாளை முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு

    சென்னையில் நாளை முதல் பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு பணி தொடங்குவதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. சைதாப்பேட்டை, திடீர் நகர், அடையாறு பகுதிகளில் நாளை முதல் பயோ மெட்ரிக் கணக்கெடுப்பு; ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டையை தயாராக வைத்திருக்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளார்.



  • Jul 08, 2025 10:21 IST

    தொழில் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்

    கடந்த ஆட்சியில் இல்லாத அளவுக்கு தமிழ்நாட்டில் தொழில் தொடங்க பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. குஜராத், மராட்டிய மாநிலங்கள் பட்டியலில் 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளன என்று அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார். 



  • Jul 08, 2025 10:19 IST

    அசாமில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டரில் 4.1 ஆக பதிவு

    அசாம் மாநிலம் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் காலை 9.22 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 25 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.

     



  • Jul 08, 2025 09:40 IST

    விராட் கோலிக்கு நன்றி சொன்ன டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்

    விம்பிள்டனில் தனது போட்டியை கண்டுரசித்து, அதுகுறித்து இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டிருந்த விராட் கோலிக்கு, நன்றி தெரிவித்துள்ளார் டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச்!



  • Jul 08, 2025 09:39 IST

    மாமல்லபுரம், திருச்செந்தூர், குமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த தமிழக அரசு டெண்டர்

     மாமல்லபுரம், திருச்செந்தூர், குமரியில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்த  மாஸ்டர் பிளான் தயார் செய்ய டெண்டர் கோரியுள்ளது தமிழக அரசு.சுற்றுலா வசதிகளை மேம்படுத்தவது தொடர்பாக உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுவத்துவது, கடற்கரைகளை மேம்படுத்துவது, பொழுதுபோக்கு சார்ந்த சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பிரிவு வாரியாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட உள்ளது.



  • Jul 08, 2025 07:54 IST

    போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு

    போதைப்பொருள் வழக்கில், ஜாமீன் கோரி நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தாக்கல் செய்த மனுக்கள் மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. இருவரின் ஜாமீன் மனுக்களை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.



  • Jul 08, 2025 07:26 IST

    ரயிலில் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

    ஹரியானாவில் ரயில் நிலையத்தில்  நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில்
    பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், தண்டவாளத்தில் வீசியதால் மற்றொரு ரயில் ஏறி கால் துண்டான சோகம்



  • Jul 08, 2025 07:24 IST

    கோல்டன் விசா - ரூ.23 லட்சம்: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு

     குடும்பத்துடன் நிரந்தரமாக செட்டில் ஆக விரும்பும் இந்தியர்களுக்கு ரூ.23 லட்சம் செலுத்தினால்  கோல்டன் விசா பெற்றுக் கொள்ளலாம் என ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு



Tamilnadu Live News Udpate Taminadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: