Chennai News Live Updates: தி.மு.க அரசு மக்களுக்கு கொடுத்த பரிசு கடன்தான் - இ.பி.எஸ்

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stlain

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

  • Jul 09, 2025 17:36 IST

    திமுக அரசு மக்களுக்கு கொடுத்த பரிசு கடன்தான் - இபிஎஸ்

    திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். தமிழ்நாட்டுக்கு விரைவில் விடிவுகாலம் வரவேண்டும் என்கின்ற மக்களின் கூக்குரலை நானறிவேன்; ஏன் இந்த நாடே அறியும். திமுக ஆட்சிக்கு வந்த 50 மாதங்களில் மக்களுக்கு கொடுத்த பரிசு, கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடி கடனை அவர்கள் தலையில் சுமத்தியதுதான் என இபிஎஸ் கூறியுள்ளார்.



  • Jul 09, 2025 17:11 IST

    ஏமாற்று வேலைதான் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் - அன்புமணி

    தினமும் வழங்கப்பட வேண்டிய உணவை வழங்காமல் பறித்து வைத்துக்கொண்டு ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்குவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலையோ, அதைவிட மோசமான ஏமாற்று வேலைதான் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என அன்புமணி கூறியுள்ளார். வழக்கமான சேவைகளுடன் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பமும் இந்த முகாம்களில் பெறப்படும் என்று கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார்.



  • Advertisment
  • Jul 09, 2025 17:07 IST

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- சபாநாயகர் செல்வம் பேட்டி

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி, முதலமைச்சர் ரங்கசாமியின் அனுமதி பெற்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சபாநாயகர் செல்வம் பேட்டி அளித்துள்ளார். 



  • Jul 09, 2025 16:11 IST

    என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சபாநாயகருடன் சந்திப்பு

    புதுவை துணை நிலை ஆளுநர் கைலாஷ் நாதன் - முதல்வர் ரங்கசாமி இடையே கருத்து வேறுபாடு. என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் தனியார் விடுதியில் ஆலோசனை, அதன்பின் சபாநாயகர் செல்வத்துடன் சந்திப்பு



  • Advertisment
    Advertisements
  • Jul 09, 2025 16:10 IST

    நாம் தமிழர் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

    கண்டதேவி கோயில் தேரோட்டம் நடக்கும் நாளில் போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கவில்லை என்பதற்காக தடையை மீறி போராட்டம் நடத்துவோம் என பொதுவெளியில் ஒரு அரசியல் தலைவர் பேசுவதை நீதிமன்றம் ஏற்காது
     - நாம் தமிழர் வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து

    அஜித்குமார் மரணம் தொடர்பாக போராட்டம் நடத்த அனுமதி கோரி புதிய மனு அளிக்கவும், அதனை போலீசார் 24 மணி நேரத்தில் பரிசீலித்து உரிய முடிவெடுக்கவும் உத்தரவிட்டு வழக்கு முடித்துவைப்பு



  • Jul 09, 2025 15:58 IST

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

    புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தி, முதலமைச்சர் ரங்கசாமியின் அனுமதி பெற்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என சபாநாயகர் செல்வம் பேட்டி



  • Jul 09, 2025 15:41 IST

    இணைய சேவை விழிப்புணர்வு: மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி

    Parentel window மென்பொருளால் குழுந்தைகளுக்கு எதிரான புளூவேல், வெப் புல்லிங் போன்ற விளையாட்டுகளால் ஏற்படும் உயிரிழப்புகள், ஆபாச இணையதளங்களின் பயன்பாடுகள் அதிகரிப்பு. இந்த மென்பொருள் குறித்து ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மத்திய அரசிடம் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி



  • Jul 09, 2025 15:35 IST

    அறியாமை இருளில் எடப்பாடி பழனிச்சாமி: அமைச்சர் சேகர் பாபு

    அறியாமை இருளில் எடப்பாடி பழனிச்சாமி மூழ்கியுள்ளார். வரலாறு தெரியாதவர், வரலாற்றை அறியாதவர். மறைந்த தலைவர்கள் பக்தவச்சலம் தொடங்கி காமராஜர், ஜெயலலிதா என அனைவரும் கல்லூரி கட்டியிருக்கின்றனர்
        
    - கோயில் நிதியில் கல்லூரிகள் நடத்துவதற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்



  • Jul 09, 2025 15:35 IST

    ஆன்லைன் ட்ரேடிங் மூலம் ரூ.1.62 கோடி மோசடி: யூடியூபர் விஷ்ணு கைது

    மனைவி அளித்த புகாரில் யூடியூபர் விஷ்ணு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், ஆன்லைன் ட்ரேடிங் மூலம் ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில் மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.


    விஷ்ணு மற்றும் அவரது மனைவி மீது இந்த மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், விஷ்ணுவை 3 நாட்கள் விசாரணைக் காவலில் போலீசார் எடுத்துள்ளனர்.



  • Jul 09, 2025 15:34 IST

    சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு: நாளை விசாரணை

    நிலுவைத் தொகை விவகாரத்தில் 4 சுங்கச் சாவடிகளில் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுத்த உத்தரவில் திருத்தம் கோரி அரசு முறையீடு. நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்



  • Jul 09, 2025 14:56 IST

    நடிகை ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் கைது

    பாலிவுட்டில் பிரபல நடிகையான ஆலியா பட்டின் முன்னாள் உதவியாளர் வேதிகா ப்ரகாஷ் ஷெட்டியை போலீசார் கைது செய்தனர். ஆலியா பட்டின் நிறுவனத்திலும், அவரின் தனிப்பட்ட கணக்குகளிலும் ரூ. 76.90 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கூறி மும்பை போலீசார் கைது செய்தனர்.



  • Jul 09, 2025 14:32 IST

    போர் விமானம் விழுந்து விபத்து

    ராஜஸ்தான் மாநிலம், சுருவில் விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் விரைந்தனர். 



  • Jul 09, 2025 13:36 IST

    இ.பி.எஸ்-ஐ கண்டித்து சென்னையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் 

    அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து சென்னையில் கபாலீஸ்வரர் கலைக் கல்லூரி முன்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக, கோயில் வருமானத்தில் தி.மு.க அரசு கல்லூரிகளை கட்டுவது நியாயமா? என்று எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு கண்டனம் தெரிவித்து இந்த போராட்டம் நடத்தப்பட்டது.



  • Jul 09, 2025 13:04 IST

    திருவள்ளூரில் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை 2 காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரணை

    திருவள்ளூரில் ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரை 2 காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். கைதானவர்கள், ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமன் இடையே தொடர்பு உள்ளதா என விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆள் கடத்தில் வழக்கில் வனராஜா, மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, சரத்குமார் ஆகியோரிடம் விசாரணை நடைபெறுகிறது.



  • Jul 09, 2025 12:37 IST

    ரயில்வே கேட்களில் தமிழ் பேசக்கூடிய கேட் கீப்பர்கள் இல்லை: சபாநாயகர் அப்பாவு!

    தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய ரயில்வே கேட்களில் தமிழ் பேசக்கூடிய கேட் கீப்பர்கள் இல்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் 17.95 லட்சம் புதிய சிறு குறு தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



  • Jul 09, 2025 12:02 IST

    தமிழக அரசு பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு - ஐகோர்ட்டில் மேல்முறையீடு

    தென் மாவட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள 4 சுங்கச்சாவடிகளுக்கு ரூ.276 கோடி சுங்கக் கட்டணம் பாக்கியால் அரசுப் பேருந்துகளுக்கு அனுமதி மறுப்பு. சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசுத்தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 



  • Jul 09, 2025 11:57 IST

    தமிழ்நாட்டின் நலனை காக்க மாணவர்கள் ஓரணியில் தமிழ்நாடு என்று திரள வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாட்டின் நலனை காக்க மாணவர்கள் ஓரணியில் தமிழ்நாடு என்று திரள வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 20 லட்சம் மாணவர்களுக்கு விரைவில் லேப்டாப் வழங்க உள்ளோம். ஓரணியில் தமிழ்நாடு நின்றால் தமிழ்நாட்டை யாராலும் வீழ்த்த முடியாது என முதல்வர் கூறினார்.



  • Jul 09, 2025 11:28 IST

    ஹெல்மெட் அணிந்து பேருந்து இயக்கம்

    பந்த் காரணமாக பாதுகாப்பு கருதி கேரளாவில் ஹெல்மெட் அணிந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்கினர்.



  • Jul 09, 2025 10:50 IST

    சென்னையில் தொழிற்சங்கத்தினர் போராட்டம்

    சென்னை அண்ணாசாலை அருகே பல்வேறு தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



  • Jul 09, 2025 10:10 IST

    சென்னை - திருச்சி ஸ்டாலின் பயணம்

    சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் கள ஆய்வு மேற்கொண்டு, அரசு நிகழ்ச்சியில் புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.



  • Jul 09, 2025 10:09 IST

    பாலம் உடைந்து அந்தரத்தில் தொங்கும் லாரி

    குஜராத் மாநிலம் வதோதரா அருகே பத்ரா பகுதியில் ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் உடைந்து விபத்து ஏற்பட்டது. மஹிசாகர் ஆற்றின் குறுக்கே இருந்த பாலம் திடீரென் உடைந்ததால் அந்தரத்தில் டேங்கர் லாரி தொங்கியது.



  • Jul 09, 2025 10:08 IST

    மாநில அரசு பணிகளில் 35 சதவீத இடஒதுக்கீடு

    பீகாரில் நிரந்தர குடியுரிமை பெற்ற பெண்களுக்கு மாநில அரசு பணிகளில் 35 சதவீத இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • Jul 09, 2025 10:07 IST

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைவு!

    இன்றைய தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 கிராமுக்கு ரூ.60 குறைந்துள்ளது. ஒரு சவரன் ரூ.72,000க்கும் ஒரு கிராம் ரூ.9000க்கும் விற்பனையாகிறது.



  • Jul 09, 2025 08:55 IST

    போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்

    புதுச்சேரியில் போலீஸ் பாதுகாப்புடன்  பேருந்துகள் இயக்கம், ஆட்டோ உள்ளிட்ட 
    வாகனங்கள் சேவையில் பாதிப்பு. பெரும்பாலான கடைகள் அடைப்பு, பந்த் காரணமாக ஒரு சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை



  • Jul 09, 2025 08:52 IST

    நடிகை அருணா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

    நடிகை அருணாவின் சென்னை நீலாங்கரை வீட்டில் அதிகாரிகள் சோதனை. அருணாவின் கணவர் மோகன் குப்தா, வீடுகளில் உள் கட்டமைப்பு அலங்காரப் பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.  இயக்குநர் பாரதிராஜாவின் `கல்லுக்குள் ஈரம்' படத்தின் முதல் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் அருணா



  • Jul 09, 2025 08:51 IST

    கிராமத்தையே காப்பாற்றிய ஹீரோ

    ஹிமாச்சல் பிரதேசத்தில் பெய்த கனமழையால் மண்டியில் உள்ள சியாதி கிராமம் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டது. இந்த நிலச்சரிவுக்கு முன் நாய் ஒன்று தொடர்ந்து குரைத்து கிராம மக்களை எச்சரித்ததால் அவர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு விரைவாக வெளியேறினர். இதனால் 67 பேர் உயிர் பிழைத்துள்ளனர் 



  • Jul 09, 2025 07:48 IST

    சென்னையில் பேருந்துகள் 100% இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேருந்துகள் சீராக இயங்க நடவடிக்கை, சென்னையில் பேருந்து சேவையில் எந்த பாதிப்பும் இல்லை சென்னையின் 32 பணிமனைகளிலிருந்து வழக்கம்போல் 650க்கு மேற்பட்ட வழித்தடங்களுக்கு பேருந்துகள் இயக்கம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது,



  • Jul 09, 2025 07:47 IST

    160க்கும் மேற்பட்டோர் மாயம்'

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில்  ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி  160க்கும் மேற்பட்டோர் மாயம் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 
    தொடர்ந்து நடைபெறும் மீட்பு பணிகள்



  • Jul 09, 2025 07:47 IST

    1002 பேர் மீது குண்டாஸ்

    சென்னையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும்  1,002 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை. குண்டர் தடுப்பு சட்டப்பிரிவு கண்காணிப்பாளர் மற்றும் அலுவலர்களை நேரில் அழைத்து காவல் ஆணையர் அருண் பாராட்டு



  • Jul 09, 2025 07:22 IST

    பிரிக்ஸ் நாடுகளுக்கு 10 சதவீதம் வரி: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை

    பிரிக்ஸ் நாடுகளுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க பொருளாதாரத்தை சீரழிக்கவே பிரிக்ஸ் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். 



  • Jul 09, 2025 07:19 IST

    நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம்

    17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் இன்று நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் பேருந்துகள், ஆட்டோக்கள்  வழக்கம்போல் இயங்குகின்றன தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., தொ.மு.ச. உள்ளிட்ட  13 தொழிற்சங்கங்கள் பங்கேற்பு



  • Jul 09, 2025 07:15 IST

    பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின்  உயரிய விருது

    பிரதமர் மோடிக்கு பிரேசில் நாட்டின் மிக உயரிய விருதான `Grand Collar of the National Order of the Southern Cross' விருது வழங்கி கௌரவிப்பு. இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கும், இந்தியா-பிரேசில் நட்புறவுக்கும் விருதை அர்ப்பணிப்பதாக பிரதமர் பேச்சு



  • Jul 09, 2025 07:14 IST

    பகுதி நேர ஆசிரியர்கள் 1,900 பேர் மீது வழக்கு

    பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடத்த சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலைக்கு வந்த பகுதி நேர ஆசிரியர்கள் 1,900 பேர் மீது திருவல்லிக்கேணி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு



Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: