/indian-express-tamil/media/media_files/2025/02/18/9eYN0DKv4wh7sfHuNScu.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 11, 2025 05:47 IST
அ.தி.மு.க திராவிட கட்சி என்ற காலம் மலையேறி விட்டது - செல்வப்பெருந்தகை விமர்சனம்
அ.தி.மு.க திராவிட கட்சி என்ற காலம் மலையேறி விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் இயக்க சீரமைப்பு குறித்து மாவட்ட அளவிலான பயிற்சியாளர்கள் அறிமுகக் கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வப்பெருந்தகை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசிய பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
-
Jul 10, 2025 22:24 IST
இதெல்லாம் ஒரு பேச்சா... வசதிக்கு ஏற்ற மாதிரி பேசக்கூடாது; தமிழிசைக்கு சேகர்பாபு பதில்
இந்து சமய அறநிலையத் துறை சொத்தை ஏன் எடுக்க வேண்டும், வஃபு வாரிய சொத்தை ஏன் எடுப்பதில்லை, கிறிஸ்துவர் சொத்தை ஏன் எடுப்பதில்லை என்ற தமிழிசையின் கருத்து குறித்து செய்தியாளர்கள் அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டபோது, “இதெல்லாம் ஒரு பேச்சா... தினமும் கோயிலுக்கு போகிறார்கள்; வசதிக்கு ஏற்ற மாதிரி பேசக்கூடாது. அவர்கள் எத்தனை நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார், இது இன்றைக்கு தொடங்கப்பட்ட திட்டமா, பக்தவச்சலம் காலத்தில் தொடங்கப்பட்ட திட்டம்” என்று கூறினார்.
-
Jul 10, 2025 21:49 IST
கட்சிக்கு துரோகம் செய்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர் மல்லை சத்யா - வைகோ ஆவேச பேச்சு
ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பேச்சு: “ துரோகம் செய்தவர்களை நீக்கிய போது அவர்களுடன் தொடர்பில் இருந்தவர் மல்லை சத்யா; கடந்த 2 ஆண்டுகளில் 7 முறை மல்லை சத்யா வெளிநாடு சென்றுள்ளார்; ஆனால், ஒருமுறைகூட என்னிடம் சொல்லவில்லை” என்று கூறியுள்ளார்.
-
Jul 10, 2025 21:16 IST
குருகிராமில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக் கொலை; தந்தை கைது
ஹரியானா மாநிலம், குருகிராமில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவை (25), அவரது தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது; ராதிகாவின் தந்தையை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Jul 10, 2025 20:54 IST
போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு - வைகோ
ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் வைகோ பேச்சு: “திருச்சி தி.மு.க மாநாட்டிற்கு செல்லாமல் போயஸ்கார்டன் சென்று ஜெயலலிதாவை சந்தித்தது அரசியல் வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு” என்று கூறினார்.
-
Jul 10, 2025 20:33 IST
ராமதாஸின் தைலாபுரம் இல்லத்திற்கு அன்புமணி வருகை; தாயார் சரஸ்வதியை சந்தித்ததாக தகவல்
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் தைலாபுரத்தில் உள்ள இல்லத்திற்கு, அக்கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று வருகை புரிந்துள்ளார். தனது தாயார் சரஸ்வதியைச் சந்திப்பதற்காகவே அன்புமணி ராமதாஸ் தைலாபுரம் வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
Jul 10, 2025 19:54 IST
இ.பி.எஸ்-சை கண்டித்து தி.மு.க மாணவரணி சார்பில் ஜூலை 14ல் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு
தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டதை கொச்சைப்படுத்தி பேசியதாக கூறி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து, திமுக மாணவரணி சார்பில் ஜூலை 14 ஆம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 10, 2025 19:43 IST
ம.தி.மு.க-வை அழிக்கப் பார்க்கிறார்கள் - வைகோ ஆவேசம்
சென்னை மண்டல செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, “ம.தி.மு.க-வை அழிக்கப் பார்க்கிறார்கள்; ம.தி.மு.க இருக்கக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள்; உயிரைக் கொடுத்து ம.தி.மு.க-வை 31 ஆண்டுகளாக கட்டிக் காப்பாற்றி வருகிறேன்” என்று ஆவேசமாகப் பேசினார்.
-
Jul 10, 2025 18:54 IST
கே.சி.வீரமணி வழக்கு - தேர்தல் ஆணையம் விளக்கம்
தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவல்களை தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கே.சி.வீரமணியின் வேட்புமனுவில் உள்ள சொத்து மதிப்பிற்கும், வருமான வரி கணக்கில் கூறப்பட்ட மதிப்பிற்கும் ரூ.14 கோடி வித்தியாசம் உள்ளது. தவறான தகவல்கள் தெரிவிக்கப்பட்டால் அது குறித்து புகார் மனு தாக்கல் செய்ய தேர்தல் அதிகாரிக்கு அதிகாரம் உள்ளது என்று தேர்தல் ஆணையம் சென்னை ஐகோர்ட்டில் விளக்கம் அளித்தது. வழக்கின் விசாரணை ஜூலை 18-ம் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
-
Jul 10, 2025 18:51 IST
டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் சுட்டுக்கொலை
குருகிராமில் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் தந்தையால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். டென்னிஸ் வீராங்கனை ராதிகாவை சுட்டுக் கொன்ற அவரது தந்தையை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடி வந்தார் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ்.
-
Jul 10, 2025 18:41 IST
மராட்டியத்தில் பள்ளி மாணவிகளுக்கு கொடுமை
மராட்டியத்தில் 5 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளின் ஆடைகளை களைந்து மாதவிடாய் சோதனை செய்ததற்காக பள்ளி முதல்வரும் பணியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கழிவறையில் ரத்தக் கறைகள் தென்பட்டதை அடுத்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Jul 10, 2025 18:20 IST
தமிழகத்தில் 3 வழித்தடங்களில் அதிவேக ரயில் சேவை
பட்ஜெட் அறிவிப்பின்படி, சென்னை - செங்கல்பட்டு- திண்டிவனம் - விழுப்புரம் மற்றும் சென்னை - காஞ்சிபுரம் - வேலூர் மற்றும் கோவை - திருப்பூர்-ஈரோடு-சேலம் ஆகிய 3 வழித்தடங்களில், மித அதிவேக ரயில் சேவையை (RRTS) உருவாக்கிட, விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டது. இந்நிலையில், பிரபல தனியார் நிறுவனத்துக்கு விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை தயார் செய்வதற்கான டெண்டரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கியுள்ளது.
-
Jul 10, 2025 18:15 IST
ரூ.1,066.80 கோடி பேரிடர் நிவாரண நிதி -மத்திய அரசு ஒப்புதல்
வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066.80 கோடியை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதில், உத்தரகாண்ட் மாநிலத்திற்கு ரூ.455.60 கோடியும் அசாம் மாநிலத்திற்கு ரூ.375.60 கோடியும் கேரளாவுக்கு ரூ.153.20 கோடியும் மாநில பேரிடர் மீட்பு நிதியிலிருந்து (SDRF) மத்திய பங்காக வழங்கியுள்ளது. மேலும், மணிப்பூருக்கு ரூ.29.20 கோடியைம், மேகாலயாவுக்கு ரூ.30.40 கோடியும், மிசோரமுக்கு ரூ.22.80 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
-
Jul 10, 2025 18:09 IST
சென்னை மணலி-சடையங்குப்பம் பகுதியில் ராதாகிருஷ்ணன் ஆய்வு
சென்னை மணலி-சடையங்குப்பம் பகுதியில் கூடுதல் தலைமை செயலாளர்/ தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ஜெ. ராதாகிருஷ்ணன், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்குவதில் முக்கிய துணைமின் நிலையமான மணலி 400/230–110 கி.வோ. வலிம காப்பு துணை மின்நிலையம் மற்றும் அதிஉயர் மின்னழுத்த கோபுரங்களில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்பு, மின் பரிமாற்ற முறைகள், அதிஉயர்மின் கோபுரங்களின் விரிவான கள நிலவரம் மற்றும் தடையற்ற மின்சாரம் வழங்குவதில் மின் கட்டமைப்பில் உள்ள சவால்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து நேரில் சென்று மதிப்பாய்வு செய்தார்.
-
Jul 10, 2025 17:55 IST
தமிழ்நாடு காவல்துறைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு
பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த அபுபக்கர் சித்திக்கின் கைது நடவடிக்கைக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், #பயங்கரவாத தடுப்பு பிரிவு புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடு காவல்துறை, மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல்துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் பயங்கரவாதிகளை, அண்மையில் நமது ஏடிஏஸ் ( பயங்கரவாத தடுப்பு பிரிவு ) படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
-
Jul 10, 2025 17:33 IST
தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்கும் பணி
இந்திய தேர்தல் ஆணையம், பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத 345 அரசியல் கட்சிகளை முதற்கட்டமாக பட்டியலிலிருந்து நீக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளது. சென்னையில் 14 கட்சிகள் தற்போது வரை அடையாளம் காணப்பட்டுள்ளன. எந்த கட்சியும் தேவையில்லாமல் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பதற்காக, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அந்த கட்சிகளுக்கு காரணம் கூற நோட்டீஸ் (Show Cause Notice) அனுப்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பின், அவை தலைமை தேர்தல் அதிகாரிகளால் நடத்தப்படும் விசாரணையின் வாயிலாக அவற்றுக்கு விளக்கம் தரும் வாய்ப்பு அளிக்கப்படும். எந்தவொரு பதிவுசெய்யப்பட்ட அங்கீரிக்கப்படாத அரசியல் கட்சிகளை பட்டியலிலிருந்து நீக்குவது தொடர்பான இறுதி முடிவை இந்திய தேர்தல் ஆணையம் எடுக்கும்.
-
Jul 10, 2025 17:31 IST
ஐபிஎல் டிக்கெட் மோசடி - நிர்வாகிகள் 4 பேர் கைது
ஐதராபாத் காவல்துறையீனர் ஐதராபாத் கிரிக்கெட் சங்க உறுப்பினர்கள் 4 பேரை தற்போது கைது செய்திருக்கின்றனர். இதில் மிக முக்கியமாக அந்த சங்கத்தின் தலைவரான ஜெகன்மோகன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 4 பேர் மீது ஏமாற்றுதல் மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் சுமார் ரூ. 2 கோடிக்கு மேலான பணத்தை இவர்கள் கையாடல்செய்ததாக குற்றச்சாட்டு இருந்தது. அதை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-
Jul 10, 2025 17:30 IST
பாலம் உடைந்து விபத்து: பலி 16ஆக உயர்வு
குஜராத்தில் பாலம் உடைந்து வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்த விபத்தில் 16ஆக உயர்வு உயந்துள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் உள்ள முஜ்பூரையும் அருகில் உள்ள ஆனந்த் மாவட்டத்தில் இருக்கும் கம்பீரா என்ற இடத்தையும் இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் மீது மேம்பாலம் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. இந்த பாலத்தின் மீது வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது திடீரென மேம்பாலத்தின் மத்திய பகுதி இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது.
-
Jul 10, 2025 17:28 IST
விவாகரத்து முடிவா? வதந்திகளுக்கு பதிலளித்த நயன்தாரா
கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் விவாகரத்து முடிவில் இருப்பதாக நிறைய வதந்திகள் பரவின. இந்நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நடிகை நயன்தாரா தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார். அதாவது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, "எங்களை பற்றி வரும் வதந்திகளுக்கு ரியாக்ஷன் இதுதான்" என நகைச்சுவையாகப் பதிலளித்துள்ளார். இதன் மூலம், இருவருக்கும் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை நயன்தாரா உறுதிபடுத்தியிருக்கிறார்.
-
Jul 10, 2025 17:17 IST
செங்கல்பட்டு-சென்னை கடற்கரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கபெருமாள்கோவில் பணிமனையில் நாளை காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. செங்கல்பட்டில் இருந்து நாளை காலை 10.40, 11, 11.30, மதியம் 12, 1.10 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 8.31, 9.02, 9.31, 9.51, 10.56, ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் சிங்கபெருமாள் கோவில்-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30-க்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் செங்கல்பட்டு-கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது.
-
Jul 10, 2025 17:12 IST
சென்னை உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இரவு 7 மணி வரை திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, ஈரோடு, கோவை மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும். திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 10, 2025 16:59 IST
முன் ஜாமின் கோரி மதுரை ஆதீனம் மனுத்தாக்கல்
கார் விபத்து விவகாரத்தை மத மோதலாக மாற்றும் வகையில் பேச்சு - முன் ஜாமின் கோரி மதுரை ஆதீனம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். சென்னை சைபர் கிரைம் காவல்துறையினர் அவர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தனர்
-
Jul 10, 2025 16:47 IST
மைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி
Video: Sun News
#WATCH | "400 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள தாம்பரம் மாவட்ட மருத்துவமனை இன்னும் ஒரு மாதத்தில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்" -அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேட்டி#SunNews | #ThaMoAnbarasan | #Tambaram pic.twitter.com/VAU8NbsQPs
— Sun News (@sunnewstamil) July 10, 2025 -
Jul 10, 2025 16:04 IST
அதிவேக ரயில் சேவை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய டெண்டர் வழங்கியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம். 2025-26-ம் ஆண்டு பட்ஜெட்டில் அதிவேக ரயில் சேவை திட்டம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது
-
Jul 10, 2025 16:01 IST
பீகார் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட தடை
பீகார் வரைவு வாக்காளர் இறுதி பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை
வாக்காளர் திருத்தத்துக்கு எதிரான ரிட் மனுக்கள் மீதான விசாரணை ஜூலை 29ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு -
Jul 10, 2025 15:26 IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் ஆஜர்
கடலூரில் கோயில் நில வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 5 ஐஏஎஸ் உள்ளிட்ட 8 அரசு அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜர். அதிகாரிகளின் மன்னிப்பை ஏற்று, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது தலைமை நீதிபதி அமர்வு
- சென்னை உயர்நீதிமன்றம் -
Jul 10, 2025 15:25 IST
வெள்ளத்தில் சிக்கிய நபரை மீட்ட பொதுமக்கள்
Video: Sun News
#WATCH | வயநாட்டில் ஆற்று வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய நபரைக் கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்.#SunNews | #Wayanad pic.twitter.com/idbXQLAKXC
— Sun News (@sunnewstamil) July 10, 2025 -
Jul 10, 2025 15:23 IST
செல்வப்பெருந்தகை விமர்சனம்
பாஜக எழுதிக் கொடுப்பதைத்தான் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
- செல்வப்பெருந்தகை விமர்சனம். -
Jul 10, 2025 14:17 IST
வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமல் - தேர்தல் ஆணையம்
வாக்காளர் பட்டியல் திருத்தம் நாடு முழுவதும் அமலாகும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் நடைமுறையோடு ஏன் குழப்ப வேண்டும்; தேர்தல் இல்லாத காலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்த நடைமுறையை செய்யலாமே?; குறுகிய கால அவகாசத்தில் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டது ஏன்? உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
-
Jul 10, 2025 14:15 IST
சென்னையில் டாக்டர் கைது
சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் மருத்துவர் ஈஸ்வர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் போதைப்பொருள் வைத்திருந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
Jul 10, 2025 12:56 IST
தென் மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவு நிறுத்திவைப்பு
தென் மாவட்டங்களில் 4 சுங்கச்சாவடிகளில் அரசு பேருந்துகளை அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஜூலை 31ம் தேதி வரை நிறுத்தி வைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.276 கோடி சுங்கக் கட்டணம் செலுத்தாததால் கப்பலூர், சாட்டை, புதூர், நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசுப் பேருந்துகள் செல்ல ஐகோர்ட் தடை விதித்திருந்தது. உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி அரசு தரப்பில் முறையிடப்பட்ட நிலையில் தடை உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
-
Jul 10, 2025 12:44 IST
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரியதை அடித்து ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து நீதிமன்றம் ரத்து செய்தது. சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதால் மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
-
Jul 10, 2025 12:40 IST
மீன்பிடி படகுகளில் த.வெ.க சின்னம் - மானியம் வழங்க மறுப்பதா?: ஸ்டாலினுக்கு விஜய் கண்டனம்
த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "மீனவ நண்பர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று குறிப்பிட்டிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்க மறுப்பதா? எதேச்சதிகாரப் போக்கில் நடந்துகொள்ளும் முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்!
திருநெல்வேலி மாவட்டம், கூட்டப்புளி மீனவ கிராமத்தைச் சேர்ந்த எங்கள் கழகத் தோழர்கள், தங்களின் வாழ்வாதாரமாய் விளங்கும் மீன்பிடி தொழிலுக்கான தங்களின் படகுகளைத் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயருடன் பயன்படுத்தி வந்துள்ளனர்.
தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை எழுதியிருந்ததால் அரசு சார்பில் வழங்கப்படக்கூடிய மானியத்தை வழங்க முடியாது என்று, அரசாங்க ஊழியர்கள் படகுகளின் உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளனர். இது போன்ற எதேச்சதிகார அராஜக ஆட்சியின் வாயிலாகத் தமிழக வெற்றிக் கழகத்தை முடக்க நினைத்தால் அது ஒருபோதும் நடக்காது.
ஏற்கெனவே மீனவப் பெருமக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரைத் துச்சமென நினைத்துக் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்கின்றனர். அப்படிச் செல்கையில் அவர்கள் இலங்கை அரச பயங்கரவாதத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். கைது மற்றும் படகுகள் பறிமுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்கு உள்ளாகிறது. மிக மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து வரும் மீனவர்களுக்கு முழு அளவில் பக்க பலமாக இருக்க வேண்டியது ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் கடமை. ஆனால் மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை நோக்கிய, கச்சத்தீவை மீட்பது அல்லது அதைக் குத்தகைக்கு எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக வெற்றிக் கழகம் உள்பட, பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இருந்தபோதிலும் இது தொடர்பாக ஒன்றிய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் அவர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே வாழ்ந்தும் அரசால் புறக்கணிக்கப்படுகிறார்கள். மாநில அரசானது அவர்களை ஏதோ அவர்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லாதவர்கள் போல எதேச்சதிகார அரச பயங்கரவாதத்தோடு நடத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
மீனவர்கள் தங்களின் படகுகளில் தமிழக வெற்றிக் கழகம் என்று எழுதியிருந்தால் அவர்களுக்கு மானியம் வழங்கக் கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர் யார்? படகுகளில் எழுதியுள்ள தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை அழித்தால்தான் மானியம் வழங்கப்படும் என்று மீனவர்களை மிரட்டும் திமுக அரசு, அதே படகுகளில் திமுக என்ற பெயரையோ அல்லது திமுகவின் கொடியையோ பயன்படுத்துபவர்களிடம் இவ்வாறு கூறுமா?
மீனவர்களுக்கு வழங்கப்படும் மானியம் என்பது திமுகவின் பணம் அல்ல, பொதுமக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணம், மீனவர்களின் பணம். மீனவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட வேண்டிய மானியம் என்பது முழுமையாக வழங்கப்பட வேண்டும். அதைத் திமுக தனது சொந்தப் பணத்தை எடுத்து மீனவர்களுக்கு வழங்குவது போல நினைத்துக்கொள்ளக் கூடாது. தமிழ்நாடு அரசு இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மாபெரும் போராட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறேன்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Jul 10, 2025 12:20 IST
துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்ற முயற்சி - மல்லை சத்யா
துரோகி பட்டம் கொடுத்து வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம். துரோகி பட்டம் கொடுத்து மதிமுகவில் இருந்து வெளியேற்ற வைகோ முயற்சி. வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு துணிந்துள்ளார். வாரிசு அரசியலுக்காகத்தான் என வைகோ சொன்ன வார்த்தையை தாங்க முடியவில்லை என்று மதிமுக துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா கூறியுள்ளார்.
-
Jul 10, 2025 12:17 IST
கலைஞர் ஆட்சியின் நீட்சிதான் இந்த ஆட்சி: முதல்வர்
“கலைஞர் கருணாநிதி ஆட்சியின் நீட்சிதான் இந்த திராவிட மாடல் ஆட்சி; திருவாரூர் என்றாலே தேரும், கலைஞரும்தான் நினைவுக்கு வருவார்கள் இம்மண்ணில் பிறந்த கலைஞர் தான் தொட்ட துறைகளில் வெற்றி பெற்று தமிழ்நாட்டை முன்னேற்றினார்” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Jul 10, 2025 11:57 IST
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் தேரோட்டம்
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம பிரம்மோற்சவம் கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வாகன சேவைகள் நடைபெறுகின்றன. 6-ம் தேதி முக்கிய நிகழ்வான கருட சேவை நடைபெற்றது. அதன்பின்னர் சூரிய பிரபை, சந்திர பிரபை வாகன சேவைகள் நடைபெற்றன. 8-ந்தேதி காலை 5.30 மணிக்கு பல்லக்கு நாச்சியார் திருக்கோலம், மாலை 4 மணிக்கு யோக நரசிம்மர் கோலத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். மாட வீதிகளில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், திருத்தேரில் வலம் வந்த பகவானை தரிசனம் செய்தனர்.
-
Jul 10, 2025 11:15 IST
குஜராத் பால விபத்து; பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
குஜராத் மாநிலத்தின் ஆனந்த் மாவட்டத்தில் 45 ஆண்டுகள் பழமையான பாலம் ஒன்று உள்ளது. வதோதரா நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவில் அமைந்த இந்த பாலம், மாவட்டத்தின் முஜ்பூர் மற்றும் கம்பீரா பகுதிகளை இணைக்கிறது. சவுராஷ்டிரா பகுதியையும் கூட இந்த பாலம் இணைக்கிறது. இந்நிலையில், நேற்று காலை 7.30 மணியளவில் இந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது. இதனால், பாலத்தில் சென்று கொண்டிருந்த பைக், கார் உள்ளிட்ட வாகனங்களும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களும் மகிசாகர் ஆற்றில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. காயமடைந்த 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Jul 10, 2025 11:01 IST
திமுகவினரை காப்பாற்ற ஸ்டாலின் முயற்சி: எடப்பாடி பழனிசாமி
எப்போதும் குற்றம் செய்தவர்களைக் காப்பாற்ற முயலும் ஸ்டாலின், குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட திமுக மண்டலக் குழுத் தலைவர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களும் ராஜினாமா செய்துள்ளனர். மதுரை மாநகராட்சி தவிர, ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கோவை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளின் மேயர்களும் ஏற்கெனவே ராஜினாமா செய்துள்ளனர். இதற்குக் காரணம், உள்ளாட்சி பதவிகள் குடும்ப உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, 'கமிஷன்', 'கலக்ஷன்', 'கரப்ஷன்' தங்கு தடையின்றி நடப்பதுதான் என்று அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
-
Jul 10, 2025 10:57 IST
ஆளுநர் மாளிகைக்கு இ-மெயிலில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
சென்னை கிண்டி ஆளுநர் மாளிகைக்கு நேற்று மாலை வந்த இமெயிலில் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாகவும் அது வெடிக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து சென்னை மாநகர போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதும் மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் விரைந்து வந்து சோதனையிட்டனர். 2 மணி நேர சோதனையில் அது புரளி என தெரியவந்தது. இதுகுறித்து கிண்டி போலீசார் வழக்குபதிந்து விசாரிக்கின்றனர்.
-
Jul 10, 2025 10:56 IST
சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது வழக்கு
சட்டவிரோத சூதாட்ட செயலி விளம்பரத்தில் நடித்த 29 நடிகர்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா. சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது ஐதராபாத் போலீசார் புகார் அளித்துள்ளார். அதில், “தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள். இவர்கள் மீது பொது சூதாட்ட சட்டம் 1867ன் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
-
Jul 10, 2025 10:54 IST
1,996 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு அறிவிப்பு
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 1,996 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு அறிவிப்பை அரசு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தேர்வர்கள் இன்று முதல் ஆகஸ்ட் 12-ம் தேதி மாலை 5 மணி வரை www.trb.tn.nic.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இயற்பியலில் 233, கணிதத்தில் 232, தமிழில் 216, ஆங்கிலம் 197, வணிகவியல் 198, வேதியியலில் 217 காலிப் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப செப்டம்பர் 28-ம் தேதி தேர்வு நடைபெறுகிறது. அறிவிப்பு தொடர்பான கோரிக்கை மனுக்களை trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
-
Jul 10, 2025 10:27 IST
தமிழகத்தில் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப தேர்வு
தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணி இடங்களுக்கு இன்று முதல் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிக்கை எண்.02 / 2025. ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் Website: https://www.trb.tn.gov.in வாயிலாக இன்று ( 10.07.2025 ) வெளியிடப்படுகிறது. பாடவாரியான காலிப் பணியிட விவரங்கள் கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் , விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க ஏதுவாக 10.07.2025 முதல் ஆகஸ்ட் 12 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது .
-
Jul 10, 2025 10:25 IST
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வு
இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 10, 2025 10:24 IST
இந்தியா - இங்கிலாந்து மோதும் 3வது டெஸ்ட் இன்று தொடக்கம்
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்- தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து, 2வது டெஸ்ட்டில் இந்தியாவும் வெற்றிபெற்றுள்ளன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் இந்தியா, இங்கிலாந்து இடையேயான 3-வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது.
-
Jul 10, 2025 10:07 IST
தலைநகர் டெல்லியில் மிதமான நிலநடுக்கம் - பொதுமக்கள் அச்சம்
காலை 9.04 மணியளவில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 4.4 அலகுகளாக பதிவானது. டெல்லியை சுற்றியுள்ள காசியாபாத், குருகிராம், நொய்டா உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டது.
-
Jul 10, 2025 10:05 IST
மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
சமய அறநிலைத்துறை கல்வி நிறுவனங்கள் குறித்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
-
Jul 10, 2025 10:04 IST
2026க்குப் பின் அதிமுகவை தேடும் நிலை உருவாகும்” - அமைச்சர் சேகர்பாபு
பாஜக எனும் மலைப்பாம்பு அதிமுகவை விழுங்கி வருகிறது. 2026க்குப் பின் அதிமுகவை தேடும் நிலை உருவாகும் என அமைச்சர் சேகர்பாபு கூறினார்.
-
Jul 10, 2025 09:12 IST
செயற்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க அன்புமணி தரப்பு கோரிக்கை
பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்க கோரி அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தை நாட தயாராகி வருகிறது. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என்று அன்புமணி தரப்பு மின்னஞ்சலில் முறையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
Jul 10, 2025 09:05 IST
சங்கிகள் வைக்கும் கோரிக்கையை இபிஎஸ் வெளிப்படுத்துவது கண்டிக்கத்தக்கது: சேகர்பாபு
"அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் மருதமலை கோயில் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். அதிமுக எம்எல்ஏக்கள் பெரியபுள்ளான், அமுல் கந்தசாமி, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கோயில் சார்பில் கல்லூரி வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளனர். வரலாறு தெரியாமல், சங்கிகள் வைக்கும் கோரிக்கையை இபிஎஸ் வெளிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என கூறியுள்ளார் அமைச்சர் சேகர்பாபு
-
Jul 10, 2025 08:18 IST
பர்னிச்சர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ: புற்றுநோய் மருத்துவமனை நோயாளிகள் பாதிப்பு
ஆந்திர மாநிலம் ஏலூர் பகுதியில் பர்னிச்சர் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து பல கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம்! மின்கசிவு காரணமாக தீ பிடித்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அருகிலேயே புற்றுநோய் மருத்துவமனை இருப்பதால் கரும்புகையால் நோயாளிகள் மூச்சுவிடமுடியாமல் தவிப்பு!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.