/indian-express-tamil/media/media_files/2025/07/12/ahmedabad-air-india-crash-preliminary-investigation-report-tamil-news-2025-07-12-08-50-08.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jul 12, 2025 18:29 IST
போதைப்பொருள் கடத்தல் -11 மாதங்களில் 1411 வழக்குகள்
போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் தனிப்படை உருவாக்கப்பட்டு கடந்த 11 மாதங்களில் 1411 வழக்குகள் பதிவு வெளிநாட்டவர்கள் உள்பட 3778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2534 கிலோ கஞ்சா , 61,627 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன
129 கொக்கைன், மெத், அம்பட்டமின் போதைப் பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு - 67 கிலோ பறிமுதல். -
Jul 12, 2025 18:04 IST
ஏர் இந்தியா விபத்து அறிக்கை: விமானிகள் சங்கம் கண்டனம்
ஏர் இந்தியா விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கை குறித்து இந்திய விமானிகள் சங்கம் விமர்சனம்
விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை விமானிகள் மீது பழிபோடும் வகையில் உள்ளது. ஏர் இந்தியா விபத்து விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை. அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் இல்லை.
விசாரணை அறிக்கையை திட்டவட்டமாக நிராகரிக்கிறோம், நியாயமான மற்றும் உண்மை விசாரணை தேவை - விமானிகள் சங்கம் -
Jul 12, 2025 17:07 IST
காவல் மரணங்கள்: குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்
கடந்த 4 ஆண்டுகளில் காவல்துறை விசாரணையின் போது உயிரிழந்த 21 பேர் குடும்பத்தினரை பனையூரில் வைத்து சந்திக்கும் விஜய்
-
Jul 12, 2025 16:29 IST
'ப' வடிவில் பள்ளி வகுப்பறைகளை மாற்றி அமைக்க உத்தரவு
'ப' வடிவில் வகுப்பறை இருந்தால் மாணவர்களின் கவனம் ஆசிரியர் மீதும், கற்றல் மீதும் இருக்கும். எனவே 'ப' வடிவில் பள்ளி வகுப்பறைகளை மாற்றி அமைக்க பள்ளிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு
-
Jul 12, 2025 16:27 IST
சென்னை காவல் ஆணையர் பேட்டி
வீடியோ: சன் நியூஸ்
#WATCH |தவெக போராட்டத்திற்கு நாங்கள் எப்போது அனுமதி மறுத்தோம்?
— Sun News (@sunnewstamil) July 12, 2025
-அருண், சென்னை காவல் ஆணையர்#SunNews | #TVKVijay | #Chennai pic.twitter.com/KFpJwcWAyL -
Jul 12, 2025 15:55 IST
போதை பொருள் கடத்தல் வழக்குகளில் 3,778 பேர் கைது
சென்னையில், கடந்த 11 மாதங்களில் போதை பொருள் கடத்தல் வழக்குகளில் 3,778 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தவிர 2,534 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
Jul 12, 2025 14:56 IST
ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி; உரிய விசாரணை செய்ய வேண்டும் - கே. பாலு
தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் தனது இல்லத்தில், ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டிருந்ததாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றச்சாட்டு முன்வைத்தார். இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைத்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என அக்கட்சி செய்தித் தொடர்பாளர் கே. பாலு வலியுறுத்தியுள்ளார்.
-
Jul 12, 2025 14:14 IST
லாக்-அப் மரணமடைந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும் விஜய்; த.வெ.க அலுவலகத்திற்கு வருகை
காவல் நிலைய விசாரணையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், இன்று நேரில் சந்திக்கிறார். அதன்படி, சுமார் 10-க்கும் மேற்பட்டோரின் குடும்பத்தினர் பனையூரில் செயல்பட்டு வரும் அக்கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளனர்.
-
Jul 12, 2025 13:52 IST
திருமலா பால் நிறுவனம் மேலாளர் மரணம் தற்கொலையே: சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம்
திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி மரணம் தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் அளித்துள்ளார். திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் பொல்லினேனி மரணம், தற்கொலை என அறிவியல்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. விசாரணை முடிந்த பிறகு, கொளத்தூர் துணை ஆணையர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கபப்டும். மத்திய குற்றப்பிரிவுக்கு புகார் வந்தால் முகாந்திரம் இருந்தால் மட்டுமே வழக்குப் பதியப்படும். நவீன் பொல்லினேனியை போன் மூலமாக யாரும் மிரட்டியதாக தகவல் வரவில்லை. தற்கொலை தூண்டப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறினார்
-
Jul 12, 2025 13:07 IST
பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் நான்தான் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை
பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்காலம் நான்தான் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ” அரசியல் எதிர்காலம் குறித்த கேள்வியோ, ஐயப்பாடோ உங்களுக்குத் தேவை இல்லை. உங்கள் எதிர்காலம் நான்தான். உங்களின் நிகழ்காலமும் நான்தான். எப்போதும் போல உங்களோடு நான் நிற்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
-
Jul 12, 2025 12:57 IST
அதிமுக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி
அதிமுக வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவிற்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்பதன் மூலம் கூட்டணி ஆட்சி என்ற அமித் ஷா கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தனிக்கட்சி ஆட்சியா?, கூட்டணி ஆட்சியா? என்பதில் அதிமுக-பாஜக இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
-
Jul 12, 2025 12:57 IST
பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிப்பதற்கான சோதனை முயற்சி தொடங்கியது!!
பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணிப்பதற்கான சோதனை முயற்சி தொடங்கியது. அடுத்த மாதம் செல்போன் செயலியை அறிமுகம் செய்யவுள்ள நிலையில் சோதனை முயற்சி தொடங்கப்பட்டது. சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (CUMTA) சோதனை முயற்சியை தொடங்கியுள்ளது. ANNA APP எனும் தற்காலிக பெயரில் செயலி மூலம் சோதனை முயற்சியை CUMTA தொடங்கியது.
-
Jul 12, 2025 12:54 IST
சேராத இடம் சேர்ந்து... இ.பி.எஸ் பேச்சுக்கு பெ.சண்முகம் விமர்சனம்
இதுவரை பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் மட்டுமே பேசி வந்த கொள்கைகளை, சேராத இடம் சேர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமியும் எதிரொலித்து வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சித்துள்ளார். மேலும், “பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி பாஜக ஆளாகவே மாறிவிட்டார் என்பதுதான் பிரச்சனை.போரை நிறுத்தியதாக டிரம்ப் பேசி வருவது போல் கூட்டணி ஆட்சி என அமித் ஷா பேசி வருகிறார்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
Jul 12, 2025 12:52 IST
தி.மு.க-வுடனான கூட்டணியில் அதிருப்தி இல்லை - வைகோ பேச்சு
"திமுக கூட்டணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம்; முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசை தொடர்ந்து நடத்துவார். 2026ல் திமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறும், கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் தி.மு.க ஆட்சி அமைக்கும். கூட்டணி ஆட்சி வேண்டும் என நான் விரும்பவில்லை, தமிழ் மக்கள் ஏற்கவும் மாட்டார்கள். தி.மு.க-வுடனான கூட்டணியில் அதிருப்தி என எந்த ம.தி.மு.க நிர்வாகியும் தெரிவிக்கவில்லை" என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
-
Jul 12, 2025 12:15 IST
தனியார் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : 3 பேர் கைது
வண்டலூர் அருகே தனியார் காப்பக உரிமையாளரின் ஓட்டுநர் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரையடுத்து, காப்பக உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் பிரியா, கார் ஒட்டுநர் பழனி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வண்டலூர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல அலுவலர் புகார் அளித்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
-
Jul 12, 2025 12:15 IST
“சேராத இடம் சேர்ந்து” – எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம்
இதுவரை பாஜக, ஆர்.எஸ்.எஸ் மட்டுமே பேசி வந்த கொள்கைகளை, சேராத இடம் சேர்ந்துள்ள எடப்பாடி பழனிசாமியும் எதிரொலித்து வருகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், “பாஜகவுடன் கூட்டணி வைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி பாஜக ஆளாகவே மாறிவிட்டார் என்பதுதான் பிரச்சனை.போரை நிறுத்தியதாக டிரம்ப் பேசி வருவது போல் கூட்டணி ஆட்சி என அமித் ஷா பேசி வருகிறார்,”இவ்வாறு தெரிவித்தார்.
-
Jul 12, 2025 11:59 IST
பெங்களூரு கோர சம்பவம் - விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு
பெங்களூரு ஆர்.சி.பி வெற்றிப் பேரணி கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதன்படி, கர்நாடக கிரிக்கெட் வாரியம், ஆர்.சி.பி, டி.என்.ஏ நிர்வாகத்தின் கவன குறைவே விபத்திற்கு காரணம் என்றும், "எழுத்துப்பூர்வமான அனுமதி பெறாமலேயே நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களை அழைத்துள்ளனர். நிகழ்ச்சி நடக்கும் வளாகத்திற்கு வெளியே ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படவில்லை. நிகழ்ச்சி வளாகத்திற்கு வெளியே போதுமான அளவு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jul 12, 2025 11:56 IST
வெப்ப அலை - 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் மரணம்
ஐரோப்பியாவின் பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் வெப்ப அலை காரணமாக கடந்த 10 நாட்களில் மட்டும் 2,300 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை வீட்டை விட்டு வெளியேற மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை. அலுவலகங்கள், வணிக வளாகங்கள் ஆகியவை பகுதி நேரமாக செயல்படுகின்றன.
-
Jul 12, 2025 11:55 IST
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு – போயிங் நிறுவனம் அறிக்கை
இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்று போயிங் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் விமான விபத்து புலனாய்வு அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் போயிங் நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது. அதில், “விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள், எங்கள் வாடிக்கையாளருக்கும், அதிகாரிகளுக்கும் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறோம்” என்று கூறியுள்ளது.
-
Jul 12, 2025 11:43 IST
சென்னை வண்டலூரில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - 3 பேர் கைது
சென்னை வண்டலூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊமனாஞ்சேரியில் செயல்பட்டு வந்த குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குழந்தைகள் காப்ப உரிமையாளர் அருள்தாஸ், அவரது மகள் ப்ரியா மற்றும் கார் ஓட்டுநர் பழனி ஆகிய 3 பேரை கூடுவாஞ்சேரி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குழந்தைகள் காப்பகத்தில் 40-க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து காப்பகத்திற்கு ஆய்வுக்கு வந்த குழந்தைகள் நலஅதிகாரிகளிடம் சிறுமிகள் முறையிட்டனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் 18 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது அம்பலமானது.
-
Jul 12, 2025 11:39 IST
அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும் - ஏற்றுமதியாளர்கள் கவலை
இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் ஏற்றுமதி பாதிக்கப்படும் என அமெரிக்க வரி விதிப்பு குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் வேதனை தெரிவித்தார். அமெரிக்கா கூடுதலாக 10% வரி விதித்தால் பின்னலாடை ஏற்றுமதி பாதிக்கும் என்று ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
-
Jul 12, 2025 11:06 IST
குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பேட்டி
குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும் என டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 4,922 மையங்களில், டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெற்று வருகிறது. 3,935 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வை 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் தேர்வு மையத்தில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-4 தேர்வு தமிழ்நாடு முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னையில் 311 மையங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 4,922 மையங்களில் குரூப் 4 போட்டி தேர்வு நடைபெறுகிறது.
தேர்வுத்தாள் தயார் செய்து ரகசியமாக கொண்டு செல்ல வேண்டிய நிலை, மதுரையில் மட்டும் ஒருசில பிரச்சினைகள் இருந்தது, மற்ற இடங்களில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட அலுவலர், வட்டாட்சியர் ஆகியோர் பரிசோதித்த பின் அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு 10,000 பேரும், நடப்பாண்டில் தற்போது வரை 11,000க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 7 தேர்வுகளை அறிவித்து அதில் 5 தேர்வுகளை முடித்துள்ளோம். குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாதத்தில் வெளியிடப்படும். வரும் நாட்களில் 10,000 காலி பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடைபெறும் என்று கூறினார்.
-
Jul 12, 2025 10:36 IST
பாலங்களின் இணைப்புகள் நொறுங்கியதே விபத்துக்கு காரணம் - முதல்கட்ட விசாரணையில் தகவல்
குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் அமைத்த உயர்மட்ட விசாரணைக் குழுவின் முதற்கட்ட அறிக்கையின்படி, வதோதரா மாவட்டத்தின் பத்ரா தாலுகாவின் முஜ்பூர் கிராமத்தில் உள்ள கம்பீரா ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் ‘பெடெஸ்டல், ஆர்டிகுலேஷன்’ என்ற இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் எதிரொலியாக மாநிலத்தில் உள்ள சுமார் 7,000 பாலங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
-
Jul 12, 2025 10:00 IST
அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி: அமித்ஷா
தமிழ் நாட்டில் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றால் கூட்டணி ஆட்சி அமையும் என்று அமித்ஷா திட்டவட்டாக அறிவித்துள்ளார். கூட்டணி ஆட்சி என்று அமித்ஷா கூறவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி வரும் நிலையில், ஆட்சியில் பா.ஜ.க. பங்கேற்குமா என்ற கேள்விக்கு அமித்ஷா ஆம் என்று பதில் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Jul 12, 2025 09:26 IST
சமூகவலைதள கணக்குகளை மீட்டு தரக்கோரி ராமதாஸ் புகார்
தனது சமூகவலைதள கணக்குகளை அன்புமணி ஆதரவாளர்களிடம் இருந்து மீட்டு தரக்கோரி, ராமதாஸ் தரப்பில் டி.ஜி.பியிடம் புகார் அளித்துள்ளர். எக்ஸ் தளத்தில் பாஸ்வேட் மாற்றப்பட்டுள்ளது, அதை மீட்டெடுக்க தேவையான தகவல்கள் வேறொருவரிடம் கொடுக்கப்பட்டுள்ளது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
Jul 12, 2025 07:57 IST
சிகரங்கள் ஏறி சாதனை படைத்த பெண்ணுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
உலகின் 7 கண்டகளில் உயரமான சிகரங்களை குறுகிய காலத்தில் ஏறி இந்திய அளவில் சாதனை படைத்த பெண்மணி முத்தமிழ்செல்வியை, குடும்பத்துடன் வரவழைத்து முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டி வாழ்த்து!
-
Jul 12, 2025 07:15 IST
டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு
தமிழ்நாடு முழுவதும் இன்று 4,922 மையங்களில் டி.என்.பி.எஸ்.சி குருப் 4 தேர்வு நடைபெறுகிறது. 3935 காலி பணியிடங்களுக்காக, 13.89 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகின்றனர்.
-
Jul 12, 2025 07:12 IST
ஏர் இந்தியா விபத்து - வெளியான ரிப்போர்ட்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் 241 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக 15 பக்கங்களை கொண்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட 32 நொடிகளில் 2 எஞ்சின்களும் நின்றுபோனது கண்டுபிடிப்பு. எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்வது தடைபட்டதால்தான் விபத்து ஏற்பட்டதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஞ்சின்களுக்கு எரிபொருள் செல்லாதது குறித்து ஏர் இந்தியா விமான பைலட்கள் பேசிக்கொண்டது குரல் பதிவு மூலம் அம்பலமாகியுள்ளது. ஏன் எரிபொருள் துண்டிக்கப்பட்டது என்று ஒரு பைலட் கேட்டதும், அதற்கு நான் அல்ல என்று மற்றொரு விமானி பதில் குரல் பதிவு வெளியாகியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.