புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தனியார் தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் சௌந்தர்யா அமுதமொழி நேற்று சிசிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல தமிழ் செய்தி தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பாளராக, செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தவர் சௌந்தர்யா அமுதமொழி. கடந்த 6 மாதத்திற்கு முன் ரத்தப் புற்று நோயால் பாதிக்கப்பட்ட இவர் தொடர் சிசிச்சை பெற்று வந்தார்.
சௌந்தர்யாவின் மருத்துவ செலவுக்கு அதிகப் பணம் செலவாகும் எனக் கூறப்பட்ட நிலையில், அவர் பணியாற்றிய நிறுவனங்கள், பொது மக்கள், அரசு சார்பில் நிதியதவி அளிக்கப்பட்டது. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தரப்பில் இருந்து ரூ.5 லட்சம் நிதியதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அவர் சிசிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். இவரது மறைவு செய்தி துறையினர், நண்பர்கள், பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆளுநர் ஆர்.என்.ரவி சௌந்தர்யா மறைவுக்கு ரங்கல் தெரிவித்துள்ளார். ஆளுநர் வெளியிட்டுள்ள பதிவில், "சௌந்தர்யா அவர்களின் மரணத்தால் வேதனையடைந்தேன். அவர் ஒரு இளம், பிரகாசமான மற்றும் சிறந்த செய்தித் தொகுப்பாளராக விளங்கினார். அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி!" என்று பதிவிட்டுள்ளளார்.
அதோடு தமிழக அரசியல் தலைவர்கள் அமைச்சர் மு.பெ. சாமிநாதன், எடப்பாடி பழனிசாமி, சீமான் தமிழிசை சௌந்தரராஜன் எனப் பலரும் சௌந்தர்யா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“