இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில், மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 214 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில், மாற்றம் இல்லாத நிலையில், 215-வது நாளான இன்னும் மாற்றம் இல்லாமல், ஒரு லிட்டர் பெட்ரோல், ரூ100.75க்கும், டீசல் ரூ92.34-க்கும், கேஸ் ரூ88.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் பல்வேறு இடங்களில் மீண்டும் மழை
சென்னையில் மந்தைவெளி, அடையாறு, வடபழனி, ஓஎம்ஆர் சாலை. கிண்டி சோழிங்க நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மிதமான மழை பெய்து வருகிறது. நேற்று வெயில் அடித்த நிலையில், இன்று மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளது.
-
Oct 18, 2024 21:41 ISTதமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும் - கமல்ஹாசன் கண்டனம்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்ட இந்தி விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டு பாடப்பட்டது சர்ச்சையான நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிடம் நாடு தழுவியது.
— Kamal Haasan (@ikamalhaasan) October 18, 2024
தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது.
அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின்…கமல்ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “திராவிடம் நாடு தழுவியது.
தமிழ்த் தாய் வாழ்த்தில் மட்டுமல்ல, தேசிய கீதத்திலும் திராவிடம் இடம் பெற்றிருக்கிறது.அரசியல் செய்வதாக நினைத்து “திராவிட நல்திருநாடு” எனும் வார்த்தைகளை விட்டுவிட்டுப் பாடியது தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையாக விளங்கும் உலகின் தொன்மையான தமிழ்மொழியையும் அவமதிக்கும் செயல்.
நீங்கள் வெறுப்பைக் கக்கினால், தமிழ் நெருப்பைக் கக்கும்!
எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Oct 18, 2024 20:48 ISTஆளுநர் பங்கேற்ற நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநரா? ஆரியரா? - ஸ்டாலின் காட்டம்
மிழக ஆளுநர் கலந்துகொண்ட இந்தி மொழி மாதம் கொண்டாட்ட நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, ‘திராவிட’ என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவியை விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
“ஆளுநரா? ஆரியநரா?
திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்!
சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர்!
திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்!” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Oct 18, 2024 20:42 ISTதமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: மு.க. ஸ்டாலின் விமர்சனத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு
தமிழக ஆளுநர் கலந்துகொண்ட இந்தி மொழி மாதம் கொண்டாட்ட நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, ‘திராவிட’ என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையான நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சனங்களை முன்வைத்தார்.
இதற்கு விளக்கம் அளித்து ஆளுநர் ஆர்.என். ரவி ராஜ்பவன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச்சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும்.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசு பல்வேறு அமைப்புகளை நிறுவி தமிழ் மொழி மற்றும் அதன் பாரம்பரியத்தை தமிழ்நாடு உள்பட இந்தியாவுக்கு உள்ளேயும் உலகின் பல நாடுகளிலும் பரப்புகிறது என்பதையும் முதல்வர் நன்றாக அறிவார். #பிரதமர்மோடி அவர்கள் ஐக்கிய நாடுகள் சபைக்கும் கூட தமிழை கொண்டு சென்றார்.
ஒரு பெருமைமிகு இந்தியன் என்ற முறையில், நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது.
தனது இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை அவசரகதியில் முதலமைச்சர் அவர்கள் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்.” என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
"மாண்புமிகு முதல்வர் திரு. @mkstalin அவர்கள் இன்று மாலையில் வெளியிட்ட வருத்தமளிக்கக் கூடிய பதிவு ஒன்றில், எனக்கு எதிராக இனவாத கருத்தைத் தெரிவித்து, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு நான் அவமரியாதை இழைத்ததாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய்…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 18, 2024 -
Oct 18, 2024 20:37 ISTதமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: ஆளுநரின் பங்கு எதுவுமில்லை - ஆலோசகர் விளக்கம்
தமிழக ஆளுநர் கலந்துகொண்ட இந்தி மொழி மாதம் கொண்டாட்ட நிகழ்வில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, ‘திராவிட’ என்ற வார்த்தை இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஆளுநரின் ஆளுநரின் ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார். மேலும், விழா ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு இந்த விவகாரம் உடனடியாக கொண்டு செல்லப்பட்டது. இந்த விவகாரத்தில், டிடி தமிழ் தவறுக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
-
Oct 18, 2024 19:14 ISTதமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி: தவறுக்கு மன்னிப்பு கோரியது டிடி தமிழ்
டிடி தொலைக்காட்சி பொன்விழா மற்றும் இந்தி தின விழா கொண்டாட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது, தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும் என்ற வரிகள் தவிர்க்கப்பட்டதும், தேசிய கீதம் பாடும்போது, திராவிட என்ற வார்த்தையும் தவிர்க்கப்பட்டது குறித்து சர்ச்சையான நிலையில், டிடி தமிழ் தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளது.
-
Oct 18, 2024 18:32 ISTஇந்தி திணிப்பு கண்டனத்திற்குரியது - இ.பி.எஸ்
அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், "இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் மேதகு ஆளுனர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பெருமைக்குரிய தமிழ்தாய் வாழ்த்து பாடும் பொழுது அஃதில் வரக்கூடிய "தெக்கனமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்" என்ற வரிகள் புறக்கணிக்கப்பட்டது. மாபெரும் தவறாகும். இச்செயல் மிகவும் கண்டனத்திற்குரியது.
திராவிடம் என்ற சொல் அடித்தட்டு மக்கள் வாழ்வின் பேரொளி! #திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி! திராவிடம் என்ற சொல் உலகின் தொன்மையான நாகரீகத்தின் குறியீடு! தமிழக மக்களின் உணர்வை புண்படுத்தும், திராவிட பண்பாட்டை சிறுமைப்படுத்தும் வேலைகளை எவர் செய்து இருந்தாலும் கைவிட வேண்டும்." என்று கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 18:26 ISTஆளுநரை உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ஆளுநரா? ஆரியநரா?, திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்.
இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் இழிவுபடுத்துகிறார் ஆளுநர். திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் அவர்கள், தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?
தமிழ்நாட்டையும் - தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்." என்று அவர் கூறியுள்ளார்.
-
Oct 18, 2024 18:16 ISTஆளுநரா? ஆரியநரா? - முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்
"திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும். சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
Oct 18, 2024 17:55 ISTஅடுத்த சர்ச்சையில் சிக்கிய ஆளுநர்
டிடி தமிழ் தொலைக்காட்சி பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அத்தொலைக்காட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்விழாவில் பங்கேற்ற நிலையில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரிகளை விடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
Oct 18, 2024 17:20 ISTநீட் மையத்தில் மனித உரிமை ஆணையம் விசாரணை
நெல்லையில் நீட் பயிற்சி மையத்திற்கு வரும் மாணவர்கள் அடித்து சித்திரவதை என புகார் எழுந்துள்ளது. மாநில மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது
-
Oct 18, 2024 17:20 IST'தமிழ்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சி நடக்கிறது' - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
"தமிழ்நாட்டை தனிமைப்படுத்தும் முயற்சி நடக்கிறது. இந்தி மொழியை வைத்து, கடந்த 50 ஆண்டுகளாக மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்த முயற்சி" என்று சென்னையில் பொதிகை தொலைக்காட்சியில் நடைபெறும் விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
-
Oct 18, 2024 17:16 ISTநீட் பயிற்சி மையம் மீது 3 பிரிவுகளில் வழக்கு
நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Oct 18, 2024 16:51 ISTலெபனானுக்கு இந்தியா உதவி!
லெபனானுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்தியா உதவி வழங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து 33 டன் மருத்துவ, நிவாரணப் பொருட்கள் லெபனானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
-
Oct 18, 2024 16:47 ISTதமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஓர் நற்செய்தி!
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 50 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 01.07.2024 முதல் 53 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள்.
-
Oct 18, 2024 16:34 IST‘ப்ளடி பெக்கர்’ ட்ரைலர் இன்று வெளியீடு
நடிகர் கவின் நடிக்கும் ‘ப்ளடி பெக்கர்’ திரைப்படத்தின் ட்ரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
-
Oct 18, 2024 16:33 ISTபுதுச்சேரி பாஜக தலைவருக்கு சி.பி.சி.ஐ.டி சம்மன்
தாம்பரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சுமார் ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் புதுச்சேரி மாநில பா.ஜ.க தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான செல்வகணபதிக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
-
Oct 18, 2024 16:31 ISTசத்யேந்திர ஜெயினுக்கு ஜாமின் - சுப்ரீம் கோர்ட் உத்தரவு
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகி 2 ஆண்டுகள் திகார் சிறையில் இருந்த டெல்லி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
Oct 18, 2024 15:55 ISTமத்திய அமைச்சரின் சகோதரர் மீது வழக்கு பதிவு
மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் சகோதரர் கோபால் ஜோஷி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் போட்டியிட இடம் வாங்கி தருவதாக கூறி ரூ. 2 கோடி பெற்று மோசடி செய்ததாக எழுந்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Oct 18, 2024 15:35 ISTஅரசுக்கு ரூ. 16 ஆயிரம் கோடி இழப்பு என தகவல்
முறைகேடான கிரானைட் குவாரிகளால் ரூ. 16 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 18, 2024 14:43 ISTஆவின் நிறுவனம் சார்பில் விளக்கம்
ஆவின் பச்சை பால் விற்பனையை குறைக்கவோ, உற்பத்தியை நிறுத்தவோ எந்த முடிவும் எடுக்கவில்லை என ஆவின் நிறுவனம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வைட்டமின் A மற்றும் D செறிவூட்டப்பட்டு மற்றும் இதர கொழுப்புச் சத்துகளை சற்று உயர்த்தி புதிய வகை பாலை அறிமுகம் செய்ய ஆய்வு மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக ஆவின் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளதாகவும் ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
Oct 18, 2024 14:34 ISTபிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இந்தி மாதம் நிறைவு நாள் கொண்டாடப்படுவது தவிர்க்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
இந்திய அரசியலமைப்புச் சட்டம், எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். -
Oct 18, 2024 14:24 ISTபுதுச்சேரியில் தீபாவளி போனஸ் அறிவிப்பு
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, 23 ஆயிரம் அரசு ஊழியர்கள் இதன் மூலம் பயன்பெறுகின்றனர். குறிப்பாக, உற்பத்தி சாராத அரசு ஊழியர்கள் தலா ரூ. 7000-க்கு மிகாமல் போனஸ் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 18, 2024 14:02 ISTதமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளது, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Oct 18, 2024 13:47 ISTமைசூரில் உள்ள மூடா அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை
கர்நாடகா மாநிலம் மைசூரில் உள்ள மூடா (MUDA) அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அலுவலகத்தில் இருந்து பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. மைசூரு மாநகர வளர்ச்சிக் குழுமம் மூலம் முறைகேடாக நிலம் ஒதுக்கியது தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மைத்துனர் மல்லிகார்ஜுன் சுவாமி மற்றும் நிலத்தை விற்ற தேவராஜு ஆகிய 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து லோக் ஆயுக்தா இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
-
Oct 18, 2024 13:33 ISTகொல்கத்தா இ.எஸ்.ஐ மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனையில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு சிகிச்சை பெற்று வரும் 80 நோயாளிகளை இடமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
-
Oct 18, 2024 13:15 ISTஆவினுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
ஆவின் பச்சை உறை பாலின் பெயரை மாற்றி, லிட்டருக்கு ரூ 11 உயர்த்தி விற்பதா? கிரீன் மேஜிக் பிளஸ் பால் திட்டத்தைக் கைவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
-
Oct 18, 2024 12:53 ISTசீருடை பணியாளர் தேர்வு வாரிய தலைவர் விவகாரம்; மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
-
Oct 18, 2024 12:36 ISTதிருவள்ளுவரில் கலைஞர் நூலகத்தை திறந்து வைத்தார் அன்பில் மகேஸ்
திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ரூ.75 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கலைஞர் நூலகத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத்தார். இந்த நூலகத்தில் சுமார் 3,000 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மக்கள் கூடும் இடங்களில் 100 சிறு நூலகங்கள் அமைக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் அதை செயல்படுத்தும் வகையில், முதல் நூலகம் திருவள்ளுவரில் திறக்கப்பட்டது.
-
Oct 18, 2024 12:27 ISTமுதியவரை தாக்கிய காட்டுப்பன்றி
கோவை மாவட்டம் சிறுமுகை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டுப்பன்றி ஊருக்குள் புகுந்தது. பன்றியை தெரு நாய்கள் துரத்த அதில் ஆக்ரோஷமான காட்டுப்பன்றி முதியவரை தாக்கியது
-
Oct 18, 2024 12:06 ISTஈஷா மையத்திற்கு எதிரான நிலுவை வழக்குகளை விசாரிக்க தடை இல்லை – உச்ச நீதிமன்றம்
கோவை ஈஷா மையத்தில் உள்ள தனது மகள்களை மீட்டுத் தரக்கோரிய தந்தையின் ஆட்கொணர்வு மனு மீதான உச்ச நீதிமன்ற விசாரணையில் அந்த இரு பெண்களும் தங்களின் விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் தங்கியுள்ளதாக போலீசாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது தந்தை மீதும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்று ஈஷா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுத்தரப்பில், ஈஷா விவகாரத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விசாரணை செய்ய தடை விதிக்கக் கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.
அதற்கு நிலுவை வழக்குகளை சட்டப் படி விசாரிக்க எந்த தடையும் விதிக்கப்படவில்லை. இந்த வழக்கு விசாரணை ஆட்கொணர்வு மனு தொடர்பானது என்று நீதிபதிகள் கூறினர்.
2 பெண்களும் தங்களது விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். அங்கு தொடர்ந்து தங்க விருப்பம் தெரிவித்துள்ளதால் இந்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணையை தொடர்வதில் முகாந்திரம் இல்லை. வேறு எந்த புகார்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்க இந்த உத்தரவு குறுக்கீடாக இருக்காது என்று தலைமை நீதிபதி கூறினார்
-
Oct 18, 2024 11:39 ISTஅமலாக்கத்துறை அலுவலகத்தில் தமன்னா ஆஜர்
மஹாதேவ் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தய செயலியின் துணை செயலியில் ஐ.பி.எல் போட்டிகளை அங்கீகரிக்கப்படாத ஸ்ட்ரீமிங் செய்வதை ஊக்குவித்ததாகக் கூறி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்த நிலையில் நேரில் ஆஜராகி நடிகை தமன்னா விளக்கம் அளித்தார்
-
Oct 18, 2024 11:29 ISTபுதுச்சேரியில் பாக்கெட் சாராயம் விற்க தடை
புதுச்சேரி மற்றுமு் காரைக்காலில், சாராய கடைகளில் பாக்கெட்டுகளில் சாராயம் விற்க கலால் துறை தடை விதித்துள்ளது, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை சுட்டிக்காட்டி சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Oct 18, 2024 11:27 ISTஎத்தனை ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க ஆட்சி அமைக்க முடியாது: ஒ.பி.எஸ்
முதலமைச்சர் பதவிக்கு பரிந்துரைத்தவர், அந்த பதவியில் அமர்த்தியவர், அதில் தொடர துணை புரிந்தவர் என அனைவர் முதுகிலும் குத்திய துரோகியை பொதுமக்கள் நம்பவில்லை என்பது தேர்தல் தோல்வியில் தெளிவாகிறது. இதே நிலை நீடித்தால் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க ஆட்சி அமைக்க முடியாது. வெற்றி என்பது எட்டாக்கனியாகிவிடும் என்று ஒ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்துள்ளார்.
-
Oct 18, 2024 11:24 ISTஇந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது: ராமதாஸ் அறிக்கை
"சென்னை தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்ட விழாவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அப்பட்டமான இந்த இந்தித் திணிப்பு முயற்சி கடுமையாக கண்டிக்கத்தக்கது" என பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
-
Oct 18, 2024 11:11 ISTமதிய உணவு கூப்பனில் மோசடி செய்த ஊழியர்கள் பணி நீக்கம்
மெட்டா நிறுவனத்தில் ஊழியர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ2100 மதிப்பிலான மதிய உணவு கூப்பன்கள் வழங்கப்படும். இந்த கூப்பனை பயன்படுத்தி வீட்டுக்கு தேவையான, சோப்பு, பேஸ்ட், ஒயின் கோப்பை போன்ற பொருட்களை வாங்கிய 21 ஊழியர்கள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் சிலர் ஆண்டுக்கு 3 கோடி ஊதியம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Oct 18, 2024 11:06 ISTதென்பென்னை ஆற்றில் காணப்படும் ரசாயன நுரை: விவசாயிகள் அதிர்ச்சி
ஓசூர்: கெலவரப்பள்ளி அணையிலிருந்து, தென்பெண்ணை ஆறு மற்றும் பாசன கால்வாயில் வெளியேறும் தண்ணீரில் காணப்படும் ரசாயன நுரையால் விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கர்நாடகாவின் தென்பெண்ணை ஆற்றின் கரையோர தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை ஆற்றில் கலப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
-
Oct 18, 2024 10:20 ISTஏழுமலையான் கோயில் முன்பு வெள்ளம்
திருப்பதி மலையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால், ஏழுமலையான் கோயில் முன்பு மழை வெள்ளம் தேங்கியது
-
Oct 18, 2024 10:12 ISTஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து குறைவு
தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால் ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 610 கன அடியாக உள்ளது
-
Oct 18, 2024 09:54 ISTகிருஷ்ணகிரியில் வெடித்த மர்ம பொருள்; 2 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி அருகே முருகன் என்பவர் வீட்டில் திடீரென மர்ம பொருள் வெடித்ததில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்
-
Oct 18, 2024 09:53 ISTதங்கம் சவரனுக்கு 640 ரூபாய் உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்துள்ளது ஒரு சவரன் தங்கம் 57 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து 7 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது
-
Oct 18, 2024 09:37 ISTஅம்மன் கோயிலில் உள்ள நாகர் சிலைகள் சேதம்
கன்னியாகுமரி மாவட்டம் காட்டுபுதூர் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான அம்மன் கோயிலில் உள்ள நாகர் சிலைகள் சேதம். சிலைகளை சேதப்படுத்திய மர்மநபர்கள் குறித்து பூதப்பாண்டி போலீசார் தீவிர விசாரணை
-
Oct 18, 2024 08:33 ISTவங்க கடலில், புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
சென்னையில் தற்போது மீண்டும் மழை தொடங்கியுள்ள நிலையில், வரும் ஆம் தேதி மத்திய வங்க கடல் பகுதியில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Oct 18, 2024 08:10 ISTபழைய இரும்பு பொருட்கள் குடோனில் திடீர் தீ விபத்து
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள பழைய இரும்பு பொருட்கள் குடோனில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 8 தீயணைப்பு வாகனங்களின் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், 4 ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டன.
-
Oct 18, 2024 08:09 IST2 நாட்களுக்கு பிறகு ஊட்டி மலை ரயில் சேவை இன்று தொடக்கம்
கனமழை மற்றும் தண்டவாளத்தில் மண் சரிவு காரணமாக 2 நாட்களாக நிறுத்தப்பட்ட ஊட்டி மலை ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது மேட்டுப்பாளையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்ட ரயிலில், சுற்றுலா பயணிகள் உற்சாக பயணம் மேற்கொண்டனர்.
-
Oct 18, 2024 08:03 ISTஒகேனக்கலில் நீர்வரத்து உயர்வு: 6-வது நாளாக சுற்றுலா பயணிகளுக்கு தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் 18,000 கன அடியில் இருந்து 20 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளதால், 6வது நாளாக பரிசல் இயக்க, நீர்வீழ்ச்சிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Oct 18, 2024 08:01 ISTகவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக 20 பேருக்கு சம்மன்
கவரப்பேட்டை ரயில் விபத்து தொடர்பாக மேலும் ரயில்வே பணியாளர்கள் 20 பேருக்கு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்மன் அனுப்பியுள்ளது.
-
Oct 18, 2024 08:00 ISTசென்னை குடிநீர் ஏரிகளில் 40.55% நீர் இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் மற்றும் கண்ணன் கோட்டை ஆகிய 5 ஏரிகளின், மொத்த கொள்ளளவான 11.757 டி.எம்.சி.யில் தற்போது 4.768 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது. இதில் செம்பரம்பாக்கம் - 36.65 சதவீதம், புழல் - 73.24 சதவீதம் பூண்டி - 15.2 சதவீதம், சோழவரம் - 19.52 சதவீதம், கண்ணன்கோட்டை - 62.6சதவீதம் நீர் இருப்பு உள்ளது.
-
Oct 18, 2024 07:57 ISTபள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார். அதேபோல் சென்னை மாவட்டத்திலும், பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 18, 2024 07:21 ISTகோரமண்டல் விரைவு ரயில் 2 மணி நேரம் தாமதம்
சென்னை சென்ட்ரலில் இருந்து ஷாலிமர் செல்லும் கோரமண்டல் விரைவு ரயில் (12842), காலை 7 மணிக்குப் பதிலாக 2 மணி நேரம் தாமதமாக 9 மணிக்குப் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Oct 18, 2024 07:20 ISTபூர்விகா நிறுவனத்தின் உரிமையாளருக்கு சொந்தமான இடங்கில் வருமானவரி சோதனை
சென்னையில் பூர்விகா நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் 2வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை தொடர்கிறது
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.