/indian-express-tamil/media/media_files/2025/03/04/J9Dv7yDGHP2LfD6M0B0i.jpg)
தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ள நிலையில், நாகை நகராட்சியில் உள்ள நடராஜன் தமயந்தி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏற்பாடுகளை பார்வையிட்ட பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், தேர்வெழுதும் மாணவ, மாணவிகளை வாழ்த்தி அனுப்பினார்.
-
Mar 04, 2025 05:35 IST
ராமநாதபுரம்: உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; ரூ.5.60 லட்சம் பறிமுதல்
ராமநாதபுரத்தில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தின் லஞ்ச ஒழிப்புத்துறையினர் மேற்கொண்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.5.60 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
Mar 03, 2025 19:06 IST
மீனவர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் பேச்சுவார்த்தை!
ராமேஸ்வரம், தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எம்.எல்.ஏ காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங், மீன்வளத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தங்கச்சிமடத்தில் 4 நாட்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
-
Mar 03, 2025 18:54 IST
விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் 1 மணி நேரத்திற்கு மேலாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதிக லஞ்சம் பெறப்படுவதாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுகிறது.
-
Mar 03, 2025 18:37 IST
மணப்பாறையில் கோர விபத்து
திருச்சியை அடுத்த மணப்பாறை அருகே ஆத்தூரில் தனியார் பனியன் நிறுவன தொழிலாளர்கள் பயணித்த வேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. ஓட்டுநர் மற்றும் 20 பெண் தொழிலாளர்கள் காயங்களுடன் மருத்துமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து வையம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
-
Mar 03, 2025 18:31 IST
மூதாட்டிக்கு உதவி
பேர்ணாம்பட்டு பகுதியில் சிறிய சிமெண்ட் கூரை கொண்ட வாடகை வீட்டிற்கு வாடகை கூட செலுத்த முடியாத நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மூதாட்டி ஒருவர் ஆதரவின்றி தவித்து வந்துள்ளார். இந்நிலையில், வேலூர் ரங்காபுரத்தை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தினேஷ் சரவணன் முதற்கட்டமாக மருத்துவ செலவுகளுக்கு நிதியுதவி வழங்கினார்.
-
Mar 03, 2025 18:03 IST
வீடூர் அணையில் தண்ணீர் திறப்பு
விழுப்புரம் மாவட்டம் வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை அமைச்சர் பொன்முடி திறந்து வைத்தார். இன்று முதல் 135 நாட்களுக்கு மொத்தம் 0.32 டி.எம்.சி. நீர் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் 3200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
-
Mar 03, 2025 16:52 IST
4 நகரங்களில் சுற்றுச் சாலை அமைக்க திட்டம்
தமிழ்நாட்டில் கோவை, நெல்லை, திருப்பூர் மற்றும் ஓசூர் ஆகிய 4 நகரங்களில் சுற்றுச் சாலை அமைக்க விரிவான சாத்தியக் கூறு அறிக்கையை அரசு தயார் செய்து வருகிறது. வாகன எண்ணிக்கை, இணைப்பு சாலைகள் மற்றும் மேம்பாலங்களின் தேவை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து அறிக்கை தயார் செய்யப்படுகிறது.
-
Mar 03, 2025 16:48 IST
விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் உயிரிழந்த வழக்கில் தீர்ப்பு
கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில், கடந்த 2014ம் ஆண்டு செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட இரு தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த வழக்கில், பங்க் உரிமையாளர் மற்றும் மேலாளர் இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை சாத்தூர் சார்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
-
Mar 03, 2025 15:30 IST
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விசாரணை - 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
திருப்பரங்குன்றம் மலை தொடர்பான விசாரணையை மார்ச் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கில் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
-
Mar 03, 2025 14:19 IST
மதுராந்தகம் அருகே புதிதாக புதிய கல்குவாரிகள் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
மதுராந்தகம் அருகே புதிதாக அமையவுள்ள கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், செங்கல்பட்டு ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நிலையில், பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு, ஏற்பட்டதால் பரபரப்பாகியுள்ளது.
-
Mar 03, 2025 12:40 IST
“தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக பார்க்க வேண்டும்”
கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் 3,656 பேர் கைது தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக ஒன்றிய அரசு பார்க்க வேண்டும். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Mar 03, 2025 12:37 IST
"கச்சத்தீவு விவகாரத்தில் புதிய ஒப்பந்தம் தேவை"
கச்சத்தீவில் மீன்பிடிக்க வழிவகை செய்யும் விதத்தில் இலங்கையுடன் புதிய ஒப்பந்தம் தேவை. மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது; இலங்கையின் வெளிநாட்டு மீனவர் தடை சட்டத்தால் அரங்கேறும் கொடுமைகள்; 2010க்கு பிறகு இலங்கை - இந்தியா இடையிலான மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை என்று நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியபோது கூறியுள்ளார்.
-
Mar 03, 2025 12:22 IST
206 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல்
நாகையில் ரூ.82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பல்வேறு துறைகள் சார்பில் 38,956 பேருக்கு ரூ.200.27 கோடி மதிப்பு நலத்திட்டங்களை வழங்கினார்; ரூ.139 கோடி மதிப்பிலான கட்டடங்களை மக்கள் பயன்பாட்டுக்கு முதல்வர் திறந்து வைத்தார்
-
Mar 03, 2025 11:38 IST
புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்த முதல்வர்
நாகையில் 105 புதிய அரசு பேருந்துகளின் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
-
Mar 03, 2025 11:37 IST
நாகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
“இவன் என்ன அழைப்பது, நாம் என்ன போவது என்று கௌரவம் பார்க்காதீர்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வரமுடியாது என்று சொன்னவர்கள் தயவுகூர்ந்து வரவேண்டும் என அழைப்பு விடுக்கிறேன். அரசியலாக பார்க்காதீர்கள். இது நம்முடைய உரிமை.” என்று நாகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Mar 03, 2025 11:19 IST
கட்டுமானப் பொருட்களின் விலை குறைப்பு
புதுக்கோட்டை: கட்டுமான சங்கம், பொறியாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர் சங்கம் கட்டுமானப் பொருட்களின் விலையை குறைத்தது ஜல்லி பொருட்களின் விலை ரூ.4ஆயிரத்தில் இருந்து ரூ.3,400 ஆக குறைக்கப்பட்டுள்ளது. GSB, Wed மிஸ் உள்ளிட்டவற்றின் விலை ரூ.4,000இல் இருந்து ரூ.3,000ஆக குறைக்கப்பட்டுள்ளது.
-
Mar 03, 2025 11:13 IST
மீனவர்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடம் பகுதியில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து மீனவர்கள் 4ஆவது நாளாக காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கை கடற்படையால் கைதான மீனவர்களை விடுவிப்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தல் செய்து வருகின்றனர்.
-
Mar 03, 2025 11:11 IST
பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசு - அதிமுகவின் புதிய திட்டம்
திருப்பூரில் அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வோருக்கு குலுக்கல் முறையில் பரிசு வழங்கப்படும் என துண்டு பிரசுரம் விநியோகித்த அதிமுகவின் புதிய திட்டம்.
-
Mar 03, 2025 10:50 IST
மீனவர்கள் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து போராட்டம்
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக் கோரி தங்கச்சிமடம் பகுதியில் திருவோடு ஏந்தி பிச்சை எடுத்து மீனவர்கள் 4 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
Mar 03, 2025 10:26 IST
அதிமுகவினர் புதிய யுக்தி
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் வரும் 5 ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்கும் 3 நபர்களுக்கு, குலுக்கல் முறையில் தங்க நாணயமும், 300 பேருக்கு வீட்டு உபயோகப் பொருட்களும் வழங்கப்படும் என துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.
-
Mar 03, 2025 09:47 IST
பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது கடும் குற்றச்சாட்டு
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் தனது ஆதரவு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதாக பல்கலைக்கழக சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். தொழிற்தீர்ப்பாயத்தில் பணி நிரந்தர வழக்கு நிலுவையில் உள்ளதை மேற்கோள்காட்டி முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருக்கு தொழிலாளர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
-
Mar 03, 2025 09:44 IST
குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
தென் மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
Mar 03, 2025 09:43 IST
நாகை அரசு பள்ளியில் பொய்யாமொழி மாணவர்களுக்கு வாழ்த்து
நாகையில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வாழ்த்து தெரிவித்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.